04 ஆடி 2011 சன் டிவியின் தலைமைச் செயல் அதிகாரியும், கலாநிதிமாறனின் கல்லூரி நண்பருமாகிய ஹன்ஸ்குமார் சக்ஸ்ஷேனா மோசடி வழக்கொன்றில் சென்னை விமான நிலையத்தில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சன் தொலைக்காட்சி சினிமாவிலும் கால் பதித்தது. சன் பிக்சர்ஸ் என்னும் பெயரில் திரைப்படங்களை வாங்கி விநியோகித்து வந்தது. சுமார் 600-க்கும் மேற்பட்ட திரையரங்கங்களை சன் தொலைக்காட்சி குழுமம் தன் கட்டுப்பாட்டில் வைத்து வந்ததது, இதனால் இவர்களை மீறி எவரும் சினிமா தயாரிக்கவோ, எடுத்த திரைபப்டங்களை ரிலீஸ் செய்யவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
திரைப்படங்களை எடுத்தால் சன் தொலைக்காட்சி, அல்லது கலைஞர் தொலைக்காட்சி, அல்லது அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் நடத்தும் தயாரிப்பு நிறுவங்களிடம் விற்று விடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். சென்னை கோடம்பாகத்தில் கடந்த ஐந்து வருடமாக கருணாநிதி குடும்பத்தினரின் அதிகாரச் செல்வாக்கால் சினிமாவை வளைத்தன் விளைவாய் பல சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய கதையும் உண்டு.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கலைஞர், சன், அழகிரி, ஸ்டாலின் நிறுவானங்கள் திரைப்படங்களை இப்போதைக்கு வாங்குவதோ தயாரிப்பதோ இல்லை என்று முடிவு எடுத்துள்ளது. காரணம் கடந்த திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்ட பல திரைத்துறையினர் கருணாநிதி குடும்பத்தினரால் எப்படி தாங்கள் பாதிக்கப்பட்டோம் என்று காவல்துறையினரிடம் பட்டியல் இட்டனர்.
தவிறவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களின் அதிகார அடக்குமுறையால் முடங்கிப் போட திரைப்படங்களை வெளியிட முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற முடிவும் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் படத்தின் தயாரிப்பாளர் செல்வராஜ் என்பவர் சன் பிக்சர்ஸ் செயல் அதிகாரியான சக்ஷேனா மீது மிரட்டல்,மோசடி புகார்கள் கொடுத்திருந்தார். தான் தயாரித்த படத்தை ஆளும் கட்சிச் செல்வாக்கில் வாங்கிக் கொண்ட சாக்ஷேனா 90 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக புகார் கொடுத்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார். இன்றூ மாலை சக்சேனாவை சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்பெக்டரம் வழக்கில் சிபிஐ சக்ஷேனாவிடன் விசாரணை நடத்தியது குறிப்பிடத் தக்கது