குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

28.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தவறு செய்தால் தட்டிக்கேட்பார் மிச்சேல்! ஒபாமா பேச்சு

புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் ஒபாமா பேச்சின் சில துளிகள்:

* அணுஆயுதம் இல்லாத உலகே, நம் லட்சியமாக இருக்க வேண்டும்.

 

 

* இந்தியர்கள் அதிகம் பேர் அமெரிக்கா வருவதை விட, அமெரிக்கர்கள் நிறையப் பேர், இந்தியா வரவேண்டும் என்பதே என் விருப்பம்.

* சமீபத்திய சில ஆண்டு களில், மற்ற நாடுகளை விட இந்தியா, ஏராளமான ஏழைகளின் வாழ்வை மேம்படச் செய்துள்ளது.

* அமெரிக்காவில் சாதாரண வேலைகளில் இருப்பவர்கள் கூட, எங்களைப் போல நிலைமைக்கு வர வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நாட்டைச் சேர்ந்தவன் என்பது எனக்கு பெருமையே.

* இந்த உலகில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் நிலவினாலும், டீ விற்கும் ஒருவரும் பிரதமராக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு உதாரணம், பிரதமர் நரேந்திர மோடியே.

* ஒவ்வொரு பெண்களும் தெருவில் சுதந்திரமாக நடமாட வேண்டும்; பஸ்சில் பயமின்றி செல்ல வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண்களை கவுரவமாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும்.

* நான் ஒரு பலமான, புத்திசாலியான பெண்ணை மணந்துள்ளேன். நான் தவறாக செயல்படும் போது, என் மனைவி மிச்சேல், பயப்படாமல் தட்டிக் கேட்பார். எங்களுக்கு இரு அழகான குழந்தைகள் உள்ளன. எனக்கு அருகில் ஒரு பலமான, மதிநுட்பமான பெண் உள்ளார் என்பதில் பெருமையே.

* இந்தியாவின் குடியரசு தின நிகழ்ச்சியில், எல்லை பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய, பைக் சாகச நிகழ்ச்சி கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஆனால், எங்கள் நாட்டு பாதுகாப்பு படையினர், என்னை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க மாட்டார். அத்துடன், என் தலை மீது யாரும் நிற்க அனுமதிக்கவும் மாட்டார்கள்.

* 100 ஆண்டுகளுக்கு முன், இந்திய மண்ணின் மைந்தரான சுவாமி விவேகானந்தரை அமெரிக்கா வரவேற்றது. எங்கள் நாட்டில் யோகா கலை அறிமுகமாக அவரே காரணம்.

 

மால்டாவில் கலவரம்: 4 போலீசார் காயம்

கோல்கட்டா : மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இந்த கலவரத்தின் போது கையெறி குண்டுகளும் வீசப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அதிக அளவிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 

ஏழைகள் அனைவருக்கும் வீடு: காங்.வாக்குறுதி

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு பிப். 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ., காங்., ஆம் ஆத்மி என முன்முனைப்போட்டி நிலவுகிறது. நேற்று காங். துணை தலைவர் மெகா பேரணி நடத்தினார். இந்நிலையில் இன்று காங். இரண்டாம் கட்ட தேர்தல் அறிக்கையை அஜெய் மக்கேன் வெளியிட்டார். அதில் ஏழைகள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும், ஆட்சிக்கு வந்ததும் ஒருவருடத்திற்குள் இதற்கான சட்டம் இயற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

 

ஸ்ரீரங்கம்:பா.ஜ., வேட்புமனு ஏற்பு

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் சுப்ரமணியத்தின் வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் அதிகாரி மனோகரன் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் மீத வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என காங்கிரசும், அதிமுக.,வும் புகார் அளித்திருந்ததால், சுப்ரமணியனின் வேட்புமனு தொடர்பான முடிவு பிற்பகலில் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

 

பெண் சமூக ஆர்வலர் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: பெண் சமூக ஆர்வலர் ப்ரியா பிள்ளை, கடந்த 11-ம் தேதி லண்டனில் நடக்க உள்ள கருத்தரங்கில் பங்கேற்க டில்லி விமான நிலையம் சென்றார். திடீரென அவர் பாதியில் இறக்கிவிடப்பட்டார்.இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மனு செய்தார், அதில்இது தனக்கு ஏற்பட்ட அவமானம் எனவும், பிரிட்டன் பார்லி.குழு அழைப்பின் பேரிலேயே முறையாக வர்த்தக விசா மூலம் சென்றதாக கூறினார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜிவ் ஷக்தர் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

ராம்தேவ்விற்கு ரேணுகா வக்காலத்து

புதுடில்லி : ராம்தேவ் ஒரு சிறந்த மனிதர். அவருக்கு பத்ம விருது வழங்குவதில் எந்த தவறும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு விருது வழங்குவது தொடர்பாக அரசு அவரிடம் பேசவில்லை எனவும், இதில் நடுநிலையாக இருந்து ராம்தேவ் விருது பெற ஒரு தாய் போல் செயல்படுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிமுக.,விற்கு கொ.மு.க., ஆதரவு

ஈரோடு : ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக.,விற்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஆதரவு தர உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவித்துள்ளார். அதிமுக.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள அவர், அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை : விருப்பப்படும் இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பான கூட்டத்தை ஒத்திவைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

 

புது இயக்கம்: கார்த்தி சிதம்பரம் முடிவு

அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூரில் காங். கட்சியின் கார்த்தி சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்தபேட்டி, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 1967-க்கு பின்னர் பிறந்தவர்களை கொண்டு மக்கள் இயக்கம் நடத்த உள்ளேன். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் காங்.போட்டியிட்டிருக்க வேண்டும் என்றார்.

 

பாக்.,ஆசிரியர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

பெஷாவர் : கடந்த மாதம் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் ராணுவ பள்ளிக்குள் நுழைந்த தாலிபன்கள் 132 குழந்தைகள் உள்ளிட்ட 150 பேரை கொடூரமாக தாக்கி கொன்று குவித்தனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பினால் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அடிஃப் கான் தெரிவித்துள்ளார். இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தங்களையும், தங்கள் பொறுப்பில் இருக்கும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு இத்தகைய பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

என்.சி.சி., நிறைய கற்றுக் கொடுத்தது:மோடி

புதுடில்லி : டில்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட என்.சி.சி., முகாமின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்த அணிவகுப்பை பார்கையில் எனது என்.சி.சி., காலங்கள் நினைவுக்கு வருகிறது. என்.சி.சி., எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது. எனது மனதுமுழுவதும் என்.சி.சி., கழகம் பற்றிய நினைவுகள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

பா.ஜ., வேட்புமனு குறித்த 2 மணிக்கு முடிவு:

திருச்சி : ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில், பா.ஜ., வேட்பாளர் சுப்ரமணியன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காங்கிரசும், அதிமுக.,வும் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளன. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி மனோகரன், பா.ஜ., வேட்பாளரின் வேட்புமனு குறித்த முடிவு பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

தி.மு.க., அ.தி.மு.க. வேட்புமனுக்கள் ஏற்பு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பிப்.13-ல் நடக்கிறது .வேட்பு மனுதாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி,மற்றும் தி.மு.க.வேட்பாளர் ஆனந்த் ஆகியோர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். தொடர்ந்து மற்ற வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

 

சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா தரப்பு வக்கீல் வாதம்

பெங்களூரூ: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்புவழக்கின் அப்பீல் மனு விசாரணை கர்நாடகா சிறப்பு ஐகோர்ட்டில் இன்று நடக்கிறது. இதில் சசிகலா தரப்புவக்கீல் வாதிடுகிறார். முன்னதாக ஜெ.,தரப்புவாதம் முடிந்த நிலையில் இன்று சசிகலா தரப்பு வாதம் துவங்கியுள்ளது.

 

சீனாவிற்கு தலாய்லாமா புகழாரம்

காஸியாபாத்: இந்தியாவும்-சீனாவும் பரஸ்பரம் நம்பிக்கை மிக்க நாடு என திபெத் மத தலைவர் தலாய்லாமா கூறினார்.உபி.மாநிலம் காஸியாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலாய்லாமா பேசியது, கலாச்சாரத்திலும், நீண்ட வரலாற்றிலும் சீனா மிகப்பெரிய நாடு, சீன மக்கள் கடும் உழைப்பாளிகள், திபெத், மட்டுமின்றி ஆசிய பிராந்தியத்தில், பக்கத்து நாடான இந்தியாவும் ,சீனாவும், பரஸ்பரம் நம்பிக்கைமிக்க நட்புறவு நாடுகள் என்றார்.

 

2ஜி வழக்கு:சிபிஐ சாட்சிகளிடம் விசாரணை

புதுடில்லி : 2ஜி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை டில்லி சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று சிபிஐ தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி, சரத் குமார் ரெட்டி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி உள்ளனர். தற்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை துணை செயலாளர் நவீன் கபூரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

சீனா செல்கிறார் சுஷ்மா

புதுடில்லி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 3 நாள் பயணமாக பிப்ரவரி 1ம் தேதி சீனா செல்ல உள்ளார். சீனாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், அந்நாட்டு தலைவர்கள் பலரையும் சந்தித்து பேச உள்ளார்.

 

பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீதான வழக்கு: தினசரி விசாரிக்க உத்தரவு

மும்பை: 2002-ம் ஆண்டு மும்பை பந்தரா பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான்கான் (49) போதையில் வேகமாக காரை ஓட்டி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் நடக்கிறது. சம்பவத்தன்று காரை ஓட்டவில்லை என சல்மான்கான் வக்கீல் வாதிட்டார். எனினும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு,முக்கிய சாட்சியான டாக்டரிடம் விசாரணை நடக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கினை பிப். 12-ம் தேதி முதல் தினசரி விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

காஷ்மீரில் பா.ஜ.,-பிடிபி கூட்டணி ஆட்சி?

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையே நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமானதை அடுத்து அங்கு இருகட்சிகளும் இணைந்து கூட்டாக ஆட்சி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வராக அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிடிபி.,யின் முஃப்தி முகம்மது சையது இருப்பார் எனவும் கூறப்படுகிறது. பிப்ரவரி 7ம் தேதி காஷ்மீரில் உள்ள 4 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதிலும் பா.ஜ.,-பிடிபி இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நாளான பிப்ரவரி 7ம் தேதி அன்றே பா.ஜ.,-பிடிபி இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருகட்சிகளும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

பதக்கம் பெற்ற மறுநாளே உயிர்விட்ட வீரர்

புதுடில்லி : காஷ்மீரில் குடியரசு தின விழாவின் போது சிறந்த வீரர் என பதக்கம் பெற்ற கர்னல் முனிந்திர நாத் ராய், நேற்று பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இவரது சகோதரர்கள் இருவரும் குடியரசு தின விழாவில் பதக்கம் பெற்றனர். உயிரிழந்த முனிந்திரநாத் ராய்க்கு பிரியங்கா என்ற மனைவியும், அல்கா, ரிச்சா என்ற 2 மகள்களும், ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.

 

இந்தியாவை காப்பி அடிக்கும் சீனா

பீஜிங் : குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்தியா அழைத்ததை போன்று தங்கள் நாட்டு விழாவிற்கு ரஷ்ய அதிபர் விளாமிர் புடினை அழைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் சீனா வெற்றி பெற்றதன் 70ம் ஆண்டை கொண்டாடும் தினத்தில் மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்த திட்டமிட்டுள்ள சீனா, அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஷ்ய அதிபரை அழைக்க உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

குமரி மாவட்டத்தில் கோஷ்டி மோதல்: போலீசார் குவிப்பு

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த மோதலை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ளது ராமன்துறை மீனவ கிராமம். இக்கிராமத்தி்ல இரு பிரிவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10 நாட்டு வெடிகுண்டுகள், 15 பெட்ரோல் வெடிகுண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து புதுக்கடைபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,.

 

தொலை தொடர்பு அலைகற்றை ஏலம் ஒத்திவைப்பு

புதுடில்லி: 2ஜி மற்றும் 3ஜி்க்கான அலைக்கற்றை ஏலம் மார்ச் மாதம் 4-ம் தேதி நடைபெறும் என தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை தெரிவித்தருப்பதாவது: அடுத்த மாதம் 25-ம் தேதி இதற்கான ஏலம் நடைபெறும் எனவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்.,6-ம் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ஏலத் தேதி மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதையடுத்து ஏலத்திற்கான விண்ணப்பிக்கும் தேதியும் பிப்.,16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏலம் மூலம் கடந்தாண்டு அரசுக்கு ரூ.62 ஆயிரத்து 162 கோடி கிடைத்தது. தற்போது அவை ரூ.64 ஆயிரத்து 840 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

என்.எஸ்.ஜி.,யிடம் உத்தரவாதம் கொடுத்த இந்தியா

புதுடில்லி: 'அணு எரிபொருட்கள் சப்ளை நாடுகள் அமைப்பான என்.எஸ்.ஜி.,யில், இந்தியாவை சேர்க்கக் கூடாது. தீவிரமான பரிசீலனைக்கு பின், தர விதிமுறைகளை இந்தியா பூர்த்தி செய்த பின்னரே சேர்க்க வேண்டும்' என, சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த, 1975ல் துவக்கப்பட்ட என்.எஸ்.ஜி.,யில், தற்போது, 48 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பின் தலைவராக, தற்போது, அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ரபேல் மரியானோ குரேஷி உள்ளார்.

* இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள, 2006 ஜூலையில், அமெரிக்க பார்லிமென்டில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதால், இந்திய - அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

* இதையடுத்து, 2008 டிசம்பரில் என்.எஸ்.ஜி., உறுப்பு நாடுகளின் கூட்டத்தில், அமைப்பின் விதிமுறையான, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதில் இருந்து, இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அமெரிக்கா மேற்கொண்ட தீவிர முயற்சியால் தான் இது நடந்தது.

* அதேநேரத்தில் இந்தியாவும், 'முக்கியத்துவம் வாய்ந்த அணு தொழில்நுட்பத்தை அல்லது அணு பொருட்களை, மற்ற எந்த நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். அணு ஆயுத சோதனை நடத்த மாட்டோம்' என, தானாக முன்வந்து உத்தரவாதம் அளித்தது.

 

என்.எஸ்.ஜி.,யில் இந்தியா சேருவதில் உள்ள சிக்கல் என்ன?

புதுடில்லி: நியூக்ளியர் சப்ளையர் குரூப்(என்.எஸ்.ஜி.,)யானது, 1975ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், இந்தியா உறுப்பினராக, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட, சில நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திடாததால், சில நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தமானது, 40 ஆண்டுகளுக்கு முன், 189 நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. அணு ஆயுதங்களை நாடுகள் வாங்குவதை தவிர்ப்பதற்காகவே, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரவுடன், என்.எஸ்.ஜி.,யில் சேர இந்தியா முற்படுவதால், சில நாடுகள் சந்தேகத்தை கிளப்புகின்றன. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், என்.எஸ்.ஜி.,யில், இந்தியா சேர்ந்தால், அது, அந்த ஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கும் என்றும் கூறி வருகின்றன. என்.எஸ்.ஜி.,யில் இந்தியா சேர வேண்டும் எனில், அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர் நாடுகளின் ஆதரவும் தேவை என்பதால், இன்னும் முறைப்படி விண்ணப்பிக்காமல் உள்ளது.

 

'கறுப்பர் என்பதால் பாரபட்சமாக நடத்தப்பட்டேன்'-ஒபாமா

புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து, ஒபாமா கூறியதாவது: அமெரிக்காவில், நான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன். என் வாழ்வில் ஏராளமான வாய்ப்புகள் தேடி வந்தும், நான் கறுப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதால், பாரபட்சமாகவே நடத்தப்பட்டேன். நான் கிறிஸ்தவன் அல்ல; முஸ்லிம் என்றும் பொய் பிரசாரம் செய்யப்பட்டது. என் மத நம்பிக்கை குறித்து, ஏராளமானவர்கள் கேள்வி எழுப்பினர். உலகில் நாம் தேடும் அமைதி என்பது, மனிதனின் இதயத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது. அதை எல்லோரும் உணர வேண்டும். இவ்வாறு, ஒபாமா பேசினார்.

 

அமெரிக்காவை நம்பவில்லை! பிடல் காஸ்ட்ரோ பகீர் தகவல்

மாஸ்கோ: ''நான் அமெரிக்காவை நம்பவில்லை; அந்நாட்டு தலைவர்களுடன் பேசவும் இல்லை,'' என, கியூபா நாட்டின் முன்னாள் அதிபர், பிடல் காஸ்ட்ரோ தெரிவித்து உள்ளார்.கம்யூனிச கொள்கைகளை பின்பற்றும் நாடுகளில் ஒன்றான கியூபாவுக்கும், முதலாளித்துவ நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கும் இடையே, பல ஆண்டுகளாக மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், கியூபா அதிபர், ரால் காஸ்ட்ரோவுக்கும் இடையே, சில மாதங்களுக்கு முன் நடந்த பேச்சில், சுமூக உடன்பாடு ஏற்பட்டததை அடுத்து. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மீண்டும் மலர்ந்தது.இரு நாட்டு உறவு குறித்து, கருத்து தெரிவித்துள்ள, கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, ''நான் அமெரிக்காவை நம்பவில்லை; அந்நாட்டு தலைவர்களுடன் பேசவும் இல்லை,'' என்றார்.காஸ்ட்ரோவின் பேச்சு, இரு நாட்டு உறவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.