குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 28 ம் திகதி திங்கட் கிழமை .

200000 இடம்பெயர் மீள் குடியேற்றப்படவில்லை – UNHCR தமிழக முதல்வரும் மலேசிய எதிர்க்கட்சி போல் செயல்பட

03 ஆடி2011  - தமிழக முதல்வரும் மலேசிய எதிர்க்கட்சி போல் செயல்படுவாரா மனோன்சிங்கின் மந்திரத்தில் வீழ்வாரா? வடக்கில் சுமார் 200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்பகரமான தரவு மூலங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அதிகாரி எலினா பெர்ட்டெரி தெரிவித்துள்ளார்.
 
புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டால் இந்த எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் 102000 பேரும், புத்தளத்தில் 55400 பேரும், வவுனியாவில் 37000 பேரும் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
 
மீள்குடியேறுவோருக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தலா 25000 ரூபா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுமானால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும் - மாவை :
03 ஆடி2011  தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு மறுக்குமானால் அல்லது தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுமானால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார்.
 
 
இந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஆதரவை வழங்கும் என்ற முழு நம்பிக்கையும் எமக்கு உண்டு எனவும் அவர் கூறியுள்ளார். ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
 
தமிழ் மக்களின் நிலங்கள் எழுந்தமானமாக ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ முகாம்களும் இராணுவ குடியிருப்புகளும் ஆங்காங்கே அமைக்கப்படுகின்றன.  தமிழ் மக்கள் பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்த பிரதேசம், விவசாயம் செய்து வந்த நிலங்கள் இன்று சிங்கள மீனவர்களினதும் சிங்கள விவசாயிகளினதும் தொழில் செய்யும் இடங்களாக மாறி வருகின்றன.
 
புத்தர் சிலைகளும் சின்னங்களும் இந்து கிறிஸ்தவ மக்கள் வாழும் தமிழ்ப் பிரதேசங்களில் எழுந்தமானமாக நிறுவப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவ சிங்கள மயமாக்கப்பட்டு வருவது மட்டுமல்ல தமிழர்களின் மொழி மத கலாசாரங்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றன.
 
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தொடர்ச்சியான நிலப்பரப்புகள் இக் காரணங்களால் துண்டாடப்படுகின்றன. தமிழ் மக்கள் செறிந்து பெரும்பான்மை பலத்துடன் வாழுகின்ற இடங்கள் இத்தகைய நடவடிக்கையினால் அவர்கள் தமது சொந்த நிலத்திலேயே சிறுபான்மையினராக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
 
இத்தகைய செயல்கள் தமிழர்களது அரசியல் வேட்கையை அபிலாஷைகளை மழுங்கடித்தும் சீரழிக்கும் செயல்களாக அமைகின்றன. தனித்தமிழ் பிரதேசங்களை கலப்பினப் பிரதேசங்களாக மாற்றியமைப்பதே அரசின் இந்த சூழ்ச்சித் திட்டமாகும். இதை நாம் விரைந்து தடுத்து நிறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம் என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை வலியுறுததி மலேசிய மக்கள் சக்தி கட்சி ஐ.நா விற்கு மனு!

இலங்கையிலும் பாலஸ்தீனத்திலும் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மலேசிய மக்கள் சக்தி கட்சி ஐக்கிய நாடுகள் சபையிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளது.

கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு நேற்றுச் (01ம் திகதி) சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.கண்ணன் தலைமையிலான பிரதிநிதிகள் மலேசியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலக பாதுகாப்பு அதிகாரி தேவேந்திர பட்டேலிடம் இம்மனுவைக் கையளித்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் குறித்து இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கண்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டிய அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களை நியாயமாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு மலேசியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மலேசியா எடுக்க வேண்டும் எனவும் கண்ணன் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதித் தலைவர் வனெசன் மைக்கல், இளைஞர் அணி தலைவர் ராமு உள்ளிட்ட சுமார் 80க்கும் மேற்பட்டோர் இம்மனுவைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது


 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.