குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

27.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஒபாமா பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்.

* இந்து மதத்தின் பெருமைகளை பறைசாற்றுவதற்காக அமெரிக்கா வந்த சுவாமி விவேகானந்தா மனித குளத்தின் பெருமைகள், வாழ்வியல் முறை குறித்து பேசியது அனைவரையும் கவர்ந்தது. அவரை 100 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா வரவேற்றது.

* விவேகானந்தர், எனது சகோதர, சகோதிரிகளே என உரையை துவக்கினார்; அது அமெரிக்கர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது பானியை நானும் இன்று பின்பற்றுகிறேன் என கூறி இந்திய சகோதர, சகோதிரிகளே என கூறினார்.

* ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள்; சர்வ வல்லமை கொண்டுள்ளனர். உலகளவில் இன்று அனைத்துதுறைகளிலும் பெண்கள் பல்துறைகளில் சாதனைகள் நிகழ்த்தி வருவதே இதற்கு சான்றாகும்.

*எனது மனைவி மிச்சல் திறமைமிக்கவர். தைரியமானவர். வெள்ளைமாளிகையில் தனித்துவத்துடன் செயல்படும் முதல் பெண் என கூறுவதில் பெருமைகொள்கிறேன். எனது மனைவி, மற்றும் எனது இரு பெண் குழந்தைகள் எனது பாதுகாப்பு அரண்கள்.

* இந்தியாவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சுத்தமான காற்று, தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும். இன்று உள்ள நவீன தொழில்நுட்பத்தால் இதை சாத்தியப்படுத்த முடியும். இருநாடுகளும் இணைந்து செயல்படுவோம்.

* மகாத்மா காந்தியின் அறவழி போராட்டம் தான் உலகளவில் பிரசித்தி பெற்றது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

* முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என்றும் இந்திய அரசு கொடுத்த விருந்தோம்பலுக்கு மிகவும் நன்றி என்றும் இந்தியில் கூறினார். இதற்கு அரங்கு முழுவதும் இருந்த பார்வையாளர்கள் கைத்தட்டி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* ஒபாமா பேசுகையில் இந்தியா, அமெரிக்கா சிறந்த நட்பு நாடுகள் என்று குறிப்பிட்டார்.

* டில்லி ஸ்ரீபோர்ட் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மொத்தம் 2,000 பேர் பங்கேற்றனர்.

*ஐ.நா வின் நிரந்தர உறுப்பு நாடாக உருவாக்குவதில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு.

 

ஒபாமா பயணம்: டுவிட்டரில் மோடி கருத்து

புதுடில்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா,இன்று மதியம் சவூதி புறப்பட்டார். ஒபாமாவின் இந்திய பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் கூறியது, ஒபாமாவின் இந்திய பயணம்,அமெரிக்க, இந்திய இடையேயான நட்புறவில் , புதிய அத்தியாயம் படைத்துள்ளது.

 

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி? இந்தியா வருகிறார் சிறிசேனா

புதுடில்லி: வரும் மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இலங்கை கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ,இலங்கையில் நடக்க உள்ள சார்க் அமைப்புகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார் என்றார்.

சிறிசேனா இந்தியா வருகை

இந்நிலையில் இலங்கையில் நடந்த முடிந்த அதிபர் தேர்தலில் புதிய அதிபராக தேர்வு பெற்ற மைத்ரிபால சிறிசேனா , அடுத்த மாதம் இந்தியா வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பயணிக்கு திடீர் நெஞ்சுவலி : விமானம் தரையிறக்கம்

சென்னை: துபாயில் இருந்து இந்தோனேஷியா சென்ற விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவசரமாக சென்னை விமானநிலைத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விசாரணையில் அந்த பயணி சிரியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

மூன்று நாள் பயணம் முடிந்தது: சவூதி புறப்பட்டார் ஒபாமா:

புதுடில்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா. குடியரசு தினவிழாவில் பங்கேற்றார். இன்று மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசினார்.இதையடுத்து தனது பயணத்தை வெற்றி கரமாக முடித்துவிட்டு இன்று மதியம் பாலம் விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் சவூதி புறப்பட்டார். அவரை அரசு உயரதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

 

இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி

சென்னை: என் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காங்., தலைவர் இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இவருக்கு வந்துள்ள நோட்டீஸ் குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் என்ன பேசினேன் என்று தெரியாமல் அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். என் மீது நடவடிக்கை எடுக்க காங்., மேலிடத்திற்கு அதிகாரம் உள்ளது என்றார்.

 

ஜெ., வழக்கு: வக்கீலுக்கும் கோர்ட் உத்தரவு

பெங்களூரூ: ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் அப்பீல் மனு மீதான விசாரணை கர்நாடகா சிறப்பு ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடந்தது. ஏற்கனவே ஐகோர்ட்டில் வக்கீல் நாகேஸ்வரராவ் வாதம் முடிந்தது. ஜெ., சார்பில் வக்கீல் குமார் இன்று விடுபட்ட வாதங்களை எடுத்து கூறி வாதிட்டார். அதற்கு நீதிபதி, ஏற்கனவே நாகேஸ்வரராவ் வாதிட்டார். நீங்கள் கோர்ட் நேரத்தை வீணடிக்க வேண்டாம். எனவே புதிய வாதங்களை முன்வையுங்கள் என , நீதிபதி ,வக்கீல் குமாருக்கு உத்தரவிட்டார்.

 

ஒபாமா பேச்சு துளிகள்...

நமஸ்தே என ஹிந்தியில் பேசி தனது உரையை ஆரம்பித்தார் ஒபாமா.உலகை ஈர்த்துள்ளது இரு நாட்டுகளின் உறவு.காந்தியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.அணு ஆயதம் இல்லாத உலகம் தேவைஐ.நா வின் நிரந்தர உறுப்பு நாடாக உருவாக்குவதில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு

 

உலகம் பாதுகாப்பானதாக இருக்கும்:ஒபாமா

புதுடில்லி: டில்லியில் மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடையே, அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது, இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும் போது உலகமே பாதுகாப்பாக இருக்கும் ; இந்தியா-அமெரிக்கா என்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும் போது இந்த உலகமே பாதுகாப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

 

விவேகானந்தருக்கு ஒபாமா புகழாரம்

புதுடில்லி: டில்லி டவுன் ஹாலில் ஸ்ரீ போர்ட் அரங்கில் , மாணவர்கள்,மற்றும் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியது, இந்துமதம், யோகாவை அமெரிக்காவிற்கு கொண்டுவந்தவர் விவேகானந்தர். அவரை 100 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா வரவேற்றது என்று கூறினார்.

 

அணையை திறக்க உத்தரவு

சென்னை.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாñவட்டம் கெவலரப்பள்ளி புண்செய் 8000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு. அரசின் இந்த உத்தரவால் விவசாய்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

அமைச்சரவை செயலகத்தின் பாதுகாப்பு செயலர் நியமனம்

புதுடில்லி: மத்திய அமைச்சரவை செயலகத்தின் பாதுகாப்பு செயலராக டி.பி. சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி வகித்த யஷோவர்த்தன் ஆசாத் கடந்த ஆண்டு 2013-ம் ஆண்டு நவம்பரில் தகவல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.ஒரு ஆண்டுக்கு மேல்காலியாக உள்ள இப்பதவிக்கு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த டி.பி. சின்ஹா நியமிக்கப்பட்டார். இவர் 1979-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார்.

 

2-ஜி வழக்கு:விசாரணை நாளை ஒத்தி வைப்பு

புதுடில்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதில்நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இதில் சி.பி.ஐ. தரப்பு சாட்சிகளாக 5 பேரை விசாரிக்க அனுமதியளித்தது சிறப்பு கோர்ட். இன்று முக்கிய சாட்சிகள் வராததையடுத்து விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

 

நிலக்கரி ஊழல்: சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்

புதுடில்லி: நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில் ஹின்டல்கோ நிறுவனம் மீதான நிலக்கரி சுரங்க ஊழல்தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை சீல் வைக்கப்பட்டு டில்லி சிறப்பு கோர்ட்டில்தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.. பலரின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை விசாரணையை முடியும் வரை சீல் வைக்கப்பட்ட அறிக்கையைவெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

 

வனக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வனக்கல்லூரியில் இன்று காலை முதல் மாணவ,மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரேஞ்சர், பாரஸ்டர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இப்போராட்டத்தில்63 மாணவியர், 150 மாணவர்கள் உள்ளிட்ட 200க்கம் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

பாக்., எங்களது நிரந்தர நண்பன்:சீனா

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் எங்களது நிரந்தர நண்பன் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, தெரிவித்துள்ளார். நேற்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியை சந்தித்து பாதுகாப்பு குறித்து ஒப்பந்தம் செய்த பின் இவ்வாறு தெரிவித்தார்.

 

அமிதாப்புக்கு 'பாரத ரத்னா' விருதுதான் ஏற்றது: மம்தா பானர்ஜி

கோல்கட்டா:பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு நாட்டின் 2வது உயரிய விருதான 'பத்ம விபூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளதாவது:அமிதாப்பச்சன், ஒரு ஜாம்பவான். அவருக்கு பத்ம விபூஷண் விருது போதாது. அவரது அந்தஸ்துக்கு 'பாரத ரத்னா' விருதுதான் ஏற்றது. அந்த விருதைத்தான் வழங்கி இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

 

வெள்ளை மாளிகையில் விழுந்த ஆளில்லா விமானம்

வாஷிங்டன்:வெள்ளை மாளிகை வளாகத்தில் சிறிய ரக ஆளில்லா விமானமொன்று நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், வெள்ளை மாளிகை வளாகத்தில் சிறிய ரக ஆளில்லா விமானம் பாதுகாப்புப்படையினரால் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிறு விமானத்தால் எந்த ஆபத்தும் இல்லையெனத் தெரிய வருகிறது. அதிபரின் காவல் படையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

 

கூடங்குளம்: மம்தாவிடம் விசாரணைநடத்த பா.ஜ., கோரிக்கை

மேற்கு வங்கத்தில் இருந்து, தென் மாநில வளர்ச்சித் திட்டங்களை, எதிர்க்க பணம் வருகிறது என்றால், அம்மாநில முதல்வரையும், விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, அக்கட்சியின் தேசிய செயலர், எச்.ராஜா கூறியதாவது: அணு உலை போன்ற வளர்ச்சித் திட்டங்களை, சில தொண்டு நிறுவனங்களும், நக்சலைட்டுகளுமே, எதிர்த்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்டுகளை எதிர்க்க, நக்சலைட்டுகளின் ஆதரவை அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி நாடினார். இப்போது, நக்சலைட்டுகளை திருப்திபடுத்த, அவர்கள் எதிர்க்கும் அணுஉலை திட்டங்களுக்கு, நிதி அளிக்க முன்வந்திருக்கலாம். மேலும், சாரதா சிட்பண்ட்ஸ், வெளிநாட்டு பணத்தை, இந்தியாவுக்குள் கொண்டு வரும் கருவியாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுகிறது.எனவே, அணு உலை எதிர்ப்புக்கு, சாரதா சிட்பண்ட்ஸ் நிதி அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியையும் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

கூடங்குளம்: விசாரணை குறித்து பா.ஜ., அரசு தான் தெரிவிக்க வேண்டும்:நாராயணசாமி

புதுடில்லி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு, மேற்கு வங்கத்தில் செயல்பட்ட, சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனம் நிதி உதவி அளித்ததாக, வருமான வரித்துறையினர், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுகுறித்து, அப்போதைய பிரதமர் அலுவலக, இணை அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:அணு உலைக்கு எதிரான போராட்டங்களை நடத்துவோருக்கு, வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம், பணம் வருவதாக புகார் வந்தது. இதுகுறித்து, உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டோம். விசாரணையில், சில தொண்டு நிறுவனங்களின், வரவு, செலவு குறித்து உரிய ஆவணங்கள் இல்லை. இதைத் தொடர்ந்து, அந்நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கினோம். வெளிநாடுகளிலிருந்து, நிதி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக, நாட்டின் மின் உற்பத்திக்கு, முக்கியமாக இருக்கும், அணுமின் நிலையங்களை எதிர்ப்பது, வளர்ச்சியைத் தடுப்பதாகும். இதைத் தான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களும் செய்கின்றனர்.சாரதா நிதி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு, நிதியுதவி அளித்தது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்கிறது. அதுகுறித்த தகவலை, பா.ஜ., அரசு தான் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

புதுடில்லி: குடியரசு தின விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, 'சல்யூட்' அடிக்காதது குறித்து சமூக வலை தளங்களில், பரபரப்பாக தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.இது தொடர்பாக, துணை ஜனாதிபதி அலுவலக கூடுதல் செயலர் குர்தீப் சப்பல் வெளியிட்டுள்ள அறிக்கை:'தேசிய கீதம் ஒலிக்கும்போது, சீருடை அணிந்தவர்கள் சல்யூட் அடிக்க வேண்டும்; சீருடை அணியாதவர்கள், அருகில் நிற்போர் அசையாமல் நிற்க வேண்டும்; சல்யூட் அடிக்க வேண்டிய அவசியமில்லை' என்பது, அரசு மரபு.இதன்படி, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சல்யூட் அடித்தார். அவருக்கு பக்கத்தில், சாதாரண உடையில் இருந்த ஹமீத் அன்சாரி, அசையாமல் நின்று, மரபை பின்பற்றினார். இதில், அரசு மரபு எதுவும் மீறப்படவில்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மரபை மீறி 'பீஸ்ட்' காரில் வந்த ஒபாமா

புதுடில்லி :குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்கள் விழாவுக்கு வரும் போது, ஜனாதிபதியின் பிரத்யேக காரில், அவருடன் வருவதே வழக்கம். ஆனால், நேற்று இந்த நடைமுறை மீறப்பட்டது. சிறப்பு விருந்தினரான அதிபர் ஒபாமா, ஜனாதிபதி பிரணாப் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட, அதி நவீன பாதுகாப்பு வசதியுடைய, 'பீஸ்ட்' காரில் தான், குடியரசு தின விழா நடக்கும் இடத்துக்கு வந்தார்.

 

குடியரசு தின விழாவில் சூயிங்கம் மென்ற அமெரிக்க அதிபர்

புதுடில்லி: குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒபாமா, மேடையில் அமர்ந்தபடி அணிவகுப்பை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். பிரதமர் மோடி, அவரிடம், அணிவகுப்பு பற்றிய விவரங்களை தெரிவித்து கொண்டிருந்தார்.ராணுவ வீரர்கள் இசைத்த, 'பேண்டு' இசைக்கு ஏற்ப, ஒபாமா தலையை ஆட்டிய படி நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார்.தூர்தர்ஷன் கேமரா, ராணுவ வீரர்களின் அணிவகுப்பையும், ஒபாமாவையும் மாறிமாறி காண்பித்து கொண்டிருந்தது. அப்போது ஒபாமா, வாயில் சூயிங்கத்தை சுவைத்துக் கொண்டிருந்தார். ஒருமுறை, அந்த சூயிங்கத்தை வாயில் இருந்து வெளியில் எடுத்து, மீண்டும் அதை வாயில் போட்டதையும் கேமரா படம் பிடித்தது.இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, சூயிங்கம் சுவைப்பதை ஒபாமா வழக்கமாக வைத்துள்ளார். இது, தவறு' என, சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.இதற்கிடையே, 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில், 'ஒபாமா, சிகரெட் வழக்கத்தை விடுவதற்காக, நிகோடின் கலந்த ஒரு பொருளை சாப்பிடுகிறார். குடியரசு தின விழாவின் போது, அவரின் உதவியாளர்கள் அந்த பொருளை கொடுத்திருக்கலாம்' என, செய்தி வெளியாகியுள்ளது.இது முதல் முறையல்ல: முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, ஒபாமா, சூயிங்கம் சுவைப்பது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே, சீனாவின் பீஜிங்கில் நடந்த பொருளாதார மாநாட்டு; இரண்டாம் உலகப் போர் தொடர்பாக பிரான்சில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும், ஒபாமா சூயிங்கம் மென்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்தி இல்லை

புதுடில்லி: இந்திய 66வது குடியரசு தினம் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. டில்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இந்தாண்டு தமிழக அரசின் ஊர்தி பங்கு பெறவில்லை. 16 மாநிலங்கள் பங்கு கொண்ட இந்த ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் இரண்டாம் பரிசு தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிற்பல காரணங்களால் இந்தாண்டு தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 

லஷ்மணை இந்தியா இழந்துவிட்டது: பிரதமர் மோடி இரங்கல்

புதுடில்லி: பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர் கே லஷ்மண் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஷ்மணை இந்தியா இழந்துவிட்டது. நமக்கு நகைச்சுவையையும் புன்னகையையும் வழங்கியதற்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம். அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என கூறியுள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.