குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

26.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

குடியரசு தின விழா துளிகள்

1. வரலாற்றில் முதல் முறையாக அணிவகுப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முப்படை உள்ளிட்ட பல்வேறு இதர துறைகளில் பணியாற்றும் பெண்கள் தனி அணிகளாக வீரநடை போட்டு பங்கேற்றது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

2. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜக்கி வாசுதேவ், கிரண்பேடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

3. இந்திய கலாசாரத்தை பரைசாற்றும் வகையில் தலைபாகையை பிரதமர் மோடி அணிந்து விழாவில் பங்கேற்றார்.

4. மழையிலும் மக்கள் ஆர்வம்: டில்லியில் நேற்று மழை பெய்தபோதும், மக்கள் குடைகள், ரெயின்கோ்ட் அணிந்து விழா நிகழ்வுகளை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

5. மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பிரத்யேக கோட்சூட்டில் அசத்தினார்.

6. அதிபர் ஒபாமா விழா மேடைக்கு வரும் முன், வான்வழி சாகச நிகழ்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பு குறித்த விமானப்படை தளபதியிடம் கேட்டறிந்தார்.

அரூப்ராகா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கரிடம் பிரதமர் மோடி விசாரித்தார்.

7. பா.ஜ., ஆட்சியில் இல்லாத தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ராஜபாதை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்கவில்லை.

 

மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்

கோல்கட்டா: நாட்டின் 66-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.இதில் பல்வேறு கலாச்சாரங்களை விளக்கும் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நடந்து.இது குறித்து மேற்குவங் முதல்வர் மம்தா பானர்ஜி, கூறுகையில், மேற்குவங்க கலாச்சாரத்தையும், திட்டத்தையும் விளக்கும் வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. அமிதாப்பிற்கு பத்ம விபூசண் விருது வழங்கினால் போதுமான அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றார்.

 

கொலம்பியா அழகி மிஸ் யுனிவர்ஸ்

மியாமி: அமெரிக்காவின் மியாமி தீவில் 2014ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி்ப்போட்டி நடந்தது. இந்தியா உள்ளிட்ட 87நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.முதல் 10 இடங்களை பிடித்த அழகிகளில் கொலம்பியாவைச் சேர்ந்த பவுலினா வேகா (24) மிஸ் யுனிவர்ஸாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது.

 

எல்லாமே அம்மாதானா?குடியரசு தின விழா கூத்து

சென்னை: இன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் ரோசையா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த அரசின் திட்டங்களை விளக்கும் வாகனங்களின் அணிவகுப்பில், ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் படம் வைக்கப்பதற்கு பதிலாக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.முன்னதாக அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோர்ட் வரை சென்ற நிலையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் வலம் வந்த எல்லா வாகனங்களிலும் ஜெயலலிதா படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

பார்வையாளர்களை கவர்ந்த புல்லட் ரயில் மாதிரி

புதுடில்லி: குடியரசு தின விழா டில்லியில் கோலாகலமாக நடந்தது.இதில் ரயில்வே துறை சார்பில் ,புல்லட் ரயில் மாதிரி வாகனம் அணிவகுத்து வந்தது. மத்திய அரசு ரூ. 63 ஆயிரம் கோடியில் புல்லட் ரயில் திட்டம், தனியார் பங்களிப்பில் நிறைவேற்ற உள்ளது. அதன் மாதிரி இன்று அலங்கார வாகனத்தில் வந்தது. அதனை பலர் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.

 

குடியரசுதின விழா எல்லையில் பாக்.வீரர்களுக்கு இனிப்பு

புதுடில்லி: நாட்டின் 66-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்தியா-பாக் எல்லையில் நமது ஜவான்கள், எல்லையில் பாக்.வீரர்களுக்கு இனிப்புவழங்கினர். அதனை பாக்.வீரர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கினர். குடியரசு தின வாழ்த்து தெரிவித்தனர்.

 

புதுடில்லி: கெஞ்சியும் கெஜ்ரிவாலுக்கு அழைப்பில்லை; ஆம் ஆத்மி கண்டனம்

இந்திய குடியரசு தின விழாவில் தன்னை அழைத்தால் பங்கேற்க விரும்புவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இருப்பினும் அவருக்கு விழாவில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்க அதிபர் வருகை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு அம்சங்களுடன் இன்று நடந்த இந்திய குடியரசு தின விழா, உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க மறைமுகமாக கெஞ்சியும் அழைப்பு விடுக்காததால் கடும் அதிருப்தியடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

அரசியல் விளையாட்டு : அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி: நாட்டின் 66-வது குடியரசு தின விழா டில்லியில் கோலாகலமாக நடந்தது. பா.ஜ.முதல்வர் வேட்பாளர் கிரண்பேடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், கிரண்பேடிக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் எனக்குஅழைப்புவிடுக்கவில்லையே, எல்லாம் அரசியல் விளையாட்டுதான் காரணம் என்றார்.

 

கருப்பு பணத்தை மீட்காவிட்டால் ஜெட்லி பதவியை பறிக்க வேண்டும்: ராம்ஜெத் மலானி

ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில்நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி(92) பேசியது, இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில் தற்போதைய மத்திய அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது. வெளிநாட்டுவங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வெற்றி பெறாவிட்டால் அவர் பதவியை பிரதமர் மோடி பறிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

2 மணி நேரம் நடந்த அணிவகுப்பு பேரணி

புதுடில்லி: குடியரசு தினவிழாவில் நடந்த அணிவகுப்புக்குபின்னர் நடந்த நடந்த ஜன,கன ,மன கீதம் ஒலிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம்நடந்த விழாவில் அமெரிக்க அதிபர், ஒபாமா கண்கவர் அணிவகுப்பு வாகனங்கள் பார்த்துரசித்தார்.

 

2015 குடிரசு தினவிழா: முதன்முறையாக 5முக்கிய அம்சங்கள்

புதுடில்லி: 66-வது குடியரசு தின விழா இன்று டில்லி ராஜ்பாத் சாலையில் வண்ணமயமாக நடந்து வருகிறது.விழா குறித்த 5 முக்கிய அம்சங்கள் வருமாறு:

1) முதன் முறையாக முப்படையின் பெண் பிரிவினர் தலைமையேற்று பேரணியில் கலந்துகொண்டனர்.

2)முதன்முறையாக இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர் ஒபாமா மனைவி மிட்செல் ஒபாமாவுடன் கலந்து கொண்டார்.

3)முதன்முறையாக ஜனாதிபதி மற்றும் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டவர்கள் தனித்தனியாக வாகனங்களில் பயணித்தது.

4)முதன்முறையாக கோபுரா எனப்படும் நக்சல் எதிர்ப்புபடையினர் அணிவகுப்பு பேரணியில்பங்கேற்றது

5)முதன்முறையாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் மிக்-29 கே ரக ஜெட் விமானம் அணிவகுப்பில் வந்தது.

 

அலங்கார வாகனத்தில் மேக் இந்தியா

புதுடில்லி: குடியரசு தின விழா பேரணியில் இன்று , நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் பிரதமரின் திட்டமான மேக் இந்தியா திட்டம் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றது சிறப்புவாய்ந்ததாக அமைந்தது.

 

மன்மோகன்,சோனியா பங்கேற்பு

புதுடில்லி: இன்று துவங்கிய குடியரசு தின விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவியுடன் பங்கேற்றார். தவிர பா.ஜ.தேசியதலைவர் அமித்ஷா, காங். தலைவர் சோனியா, முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி கிரண்பேடி, ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார வாகனங்கள்

புதுடில்லி: குடியரச தின விழாவையொட்டிநடந்து வரும் அணிவகுப்பில்,நமது நாட்டின் கலாச்சாரத்தை விளக்கும் அலங்கார வாகனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் நடன கலைஞர்கள் ஆடிப்பாடி, நடனமாடி வாகனங்களில் வந்தனர்.

 

விழா முக்கியஅம்சங்கள்:

*முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவியுடன் பங்கேற்றார். தவிர பா.ஜ.தேசியதலைவர் அமித்ஷா, காங். தலைவர் சோனியா, முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி கிரண்பேடி, ஈஷா யோகாவின் ஜக்சி வாசுதேவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

*நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் பிரதமரின் திட்டமான மேக் இந்தியா திட்டம் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றது சிறப்புவாய்ந்ததாக அமைந்தது.

*பெண் படைபிரிவில் தலைமையேற்று வந்தவர்கள்:ராணுவப்படைப்பிரிவில் கேப்டன் திவ்யா அஜித்கப்பற்படை ப்பிரிவில் பிரிவில் லெப்டினட் கேடர், ப்ரியா ஜெயக்குமார்விமானப்படைப்பிரிவில் ஸ்குவாடர்ன் லீடர் ஸ்னேகா ஷெகாவத் ஆகியார் அடங்குவர்.

 

பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிப்பு

புதுடில்லி: இரு ஜவான்களுக்கு அசோக் சக்ரா விருதுகள் தவிர, இன்று நடைபெற்ற வரும் குடியரசு தின விழாவில் 3 கீர்த்தி சக்ரா விருதுகள், 12 சூரிய சக்ரா விருதுகள், 48 சேனா விருதுகள், 2 வீரதீர விருதுகள், 13 இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டன.

 

அசோக் சக்ரா விருது பெற்ற உறவினர்

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு ஏப்ரல், மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பயங்கரவாதிகளுக்குஎதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த மேஜர்,முகுந்த் வரதராஜன், நீரஜ்குமார்சிங் ஆகியஇரு ராணுவ ஜவான்களுக்கு அசோக் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. பயங்கரவாதிகளை ஓட ஒட விரட்டி அவர்களை சுட்டுக்கொன்ற இவர்கள் , எதிர் தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர்.

இன்று நடந்த குடியரசு தின விழாவில் வீரமரணம் அடைந்த இரு ஜவான்களுக்கு அசோக் சக்ரா விருதை அவர்களை சார்பில் உறவினர் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்த பெற்றுக்கொண்டனர்.

 

விழா மேடைக்கு வந்தார் ஜனாதிபதிபிரணாப்

புதுடில்லி:நாட்டின் 66-வது குடியரசு தின விழா கோலாகலமாக துவங்கியது, விழா நடக்கு இடத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, உள்ளிட்ட அமைச்சர்கள்,வரவேற்றனர்.

 

விழா நடக்கும் இடத்தில் ஒபாமா

புதுடில்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மனைவி மிட்செல் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, வரவேற்றார்.

 

டில்லி:ஆர்ப்பாட்டம் நடத்த மாவோயிஸ்ட் திட்டம்

புதுடில்லி : டில்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக டில்லி போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் ஏற்கனவே 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள டில்லியில் போலீசார் அனைவரும் கூடுதல் விழிப்புடன் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

முதல்முறையாக முப்படை மகளிரணி அணிவகுப்பு

புதுடில்லி : டில்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக, முப்படைகளைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவலர் படைகளின் அணிவகுப்பும் இடம்பெற உள்ளது.

 

விமானப்படை சாகசங்கள் நடக்குமா?

புதுடில்லி : டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக குடியரசு தின விழா அணிவகுப்புக்கள் துவங்குவது தாமதமாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விமானப்படையின் விமான சாகசங்கள் நடப்பதும் சந்தேகம் என கூறப்படுகிறது. மோசமான வானிலை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததுமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

 

மகாத்மா உலகிற்கு கிடைத்த பரிசு:ஒபாமா

புதுடில்லி : மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் ஒபாமா, விருந்தினர்களுக்கான புத்தகத்தில் காந்தி பற்றி எழுதிய குறிப்பில், மகாத்மா காந்தி உலகிற்கு கிடைத்த அரிய பரிசு. காந்தியை பற்றி மார்ட்டின் லூதர் கிங் அன்று சொன்னது இன்றும் மாறாமல் தொடர்கிறது. இந்தியா முழுவதும் காந்தியை பற்றிய உணர்வு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

சோனியா, மன்மோகனை சந்திக்கிறார் ஒபாமா

புதுடில்லி : இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாவை, இன்று பகல் 3 மணியளவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் சந்திக்க உள்ளார்.

 

பேரணியில்அக்னி-5 இடம்பெறுமா?

புதுடில்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் பேரணியில் அக்னி -5 ஏவுகணை இடம்பெறாது என மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்துகூறப்படுவதாவது: குடியரசுதின விழாவில் முதன் முறையாக அமெரி்க்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றார். இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் வருகை தந்துள்ளனர். அக்னி -5 ஏவு்கனையை இடம்பெற செய்யும் பட்சத்தில்அவை ஒபாமாவை கவருவதற்காக இடம்பெற்றுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடும் அதனை தவிர்க்கும் விதமாக அக்னி -5 இடம் பெறாது. அது மட்டுமல்லாது பேரணி என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் சமூக அம்சங்களை மட்டுமே எடுத்து காட்டுவதாக உள்ளது. இது ஒன்றும் ராணுவ அணிவகுப்பு அல்ல. என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.