குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

25.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பேச்சுவார்த்தையில் யார் யார்?

புதுடில்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பல்வேறு விஷயங்கள் குறித்து இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

 

 

ஒபாமாவுடன், பென்னி பிரிட்ஸ்கர் (வணிக செயலர்),சூசன் ரைஸ் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்),ஜான் பொடெஸ்டா (அதிபருக்கான ஆலோசகர்), நான்சி பெலோசி (சிறுபான்மை தலைவர்), மார்க் வார்னர் (செனட் சபை எம்.பி.,), அமி பேரா ( இந்திய வம்சாவளி செனட் சபை எம்.பி.,), ஜோ குரோலி (செனட் சபை எம்.பி., ) முன்னணி நிறுவன சி.இ.ஓ., க்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் வந்துள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட துறை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

 

நன்றி...! நன்றி...! நன்றி...!-ஒபாமா

புதுடில்லி: எனக்கு அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்பிற்கும், கவனிப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், உணர்ச்சிமயமான நிலையில் இருந்த ஒபாமா, செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, ஜனாதிபதி மாளிகையில் காத்திருந்த பிரபலங்களுக்கு இருகரம் கூப்பி, இந்திய முறைப்படி வணக்கம் தெரிவித்தார்.

 

ஒபாமா:நாளைய நிகழ்ச்சிகள்

புதுடில்லி: நாளை, ஜன., 26ல், இந்திய குடியரசு தின அணி வகுப்பில் ஒபாமா மற்றும் அவரது மனைவி பங்கேற்கின்றனர். அணிவகுப்பை முழுவதுமாக பார்வையிடுகிறார். இது 2 மணி நேரம் நீடிக்கும். வழக்கமாக அமெரிக்க அதிபர்கள், வெளிநாடுகளில் பொது இடங்களில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் 45 நிமிடம் மட்டுமே பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், பிரதமர் மோடி மற்றும் ஒபாமா இணைந்து இருநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களைச் சந்திக்கின்றனர். தொடர்ந்து, மாலையில் ராஷ்ட்ரபதி பவனில் "அட் ஹோம்' நிகழ்ச்சியில் ஒபாமா பங்கேற்கிறார். பிரதமர் மோடியும் இதில் கலந்து கொள்கிறார்.

 

தேசிய வாக்காளர் தின பேரணி

சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணிகள் நடந்தன. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர்.

 

அசத்திய வௌ்ளை மாளிகை டுவிட்டர்

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது மனைவி மிட்செல் மற்றும் குழுவினருடன் இந்தியா வந்தார். அவர் பயணம் செய்த ஏர்போர்ஸ் 1 விமானம் டில்லி பாலம் விமான நிலையத்தின் தரையை தொட்ட உடன், வௌ்ளை மாளிகையில் இருந்து ஒரு டுவிட்டர் செய்தி வௌியானது. அதில், ஜெய்ஹிந்த் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்த டுவிட்டர் செய்தியில், 'இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு பெற்றதன் மூலமாக, அதிபர் ஒபாமா பெருமையடைந்துள்ளார். இதன் மூலம் இந்திய அமெரிக்க உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகி உள்ளது. ஜெய்ஹிந்த்,' என்று கூறப்பட்டுள்ளது.

 

வங்கி கொள்ளை: 10 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி அருகே நடந்த வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் மினி லாரியில் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆந்திராவில் நடந்த வங்கி கொள்ளையைப் போல இங்கும் நடந்துள்ளதால், ஆந்திர கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

 

ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை

புதுடில்லி: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, அணு ஆயுத இழப்பீடு சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், எரிவாயு விநியோகம், திரவ இயற்கை வாயு, எரிசக்தி தொடர்பாகவும், இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சி போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே போன்ற துறைகளில் அமெரிக்க முதலீட்டை அதிகரிப்பது, ஐ.எஸ்.ஐ.எஸ்., மற்றும் பாக்., - ஆப்கன் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை, ஒருங்கிணைந்த பயற்சி, பருவநிலை மாற்றம், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு, வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் கூட்டம் ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ராஜ்காட்டில் ஒபாமா அஞ்சலி

புதுடில்லி: டில்லி, ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அங்கு காந்தி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஒபாமா ராஜ்காட் வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு

புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு, பாரம்பரிய முறையிலான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஒபாமா ஏற்றுக் கொண்டார். ஒபாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

 

அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் 1: ஒரு "பறக்கும் வெள்ளை மாளிகை'

புதுடில்லி: அமெரிக்க அதிபரின் அலுவல் விமானத்தின் பெயர் "ஏர்போர்ஸ் 1". போயிங் 747 ரக விமானமான இதில் தான் அவர் டில்லிக்கு வந்துள்ளார். அணு ஆயுதங்களால் கூட இந்த விமானம் பாதிக்கப்படாது. 1580 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானம், ஒரு "பறக்கும் வெள்ளை மாளிகை'யாக செயல்படும். அதாவது, இதிலேயே அதிபர் அலுவலகமே இயங்கும். அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு அவர் "மெரைன் ஒன்' என்ற ஹெலிகாப்டரை பயன்படுத்துவார். இதுவும் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்படும்.

 

அடேங்கப்பா...! இவ்வளவு ஏற்பாடா,,,?

புதுடில்லி: ஒரு அமெரிக்க அதிபர் வருகிறார் என்றால், ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்க்க வேண்டி உள்ளது. அவர் வந்துவிட்டு, மீண்டும் செல்வது வரை மத்திய அரசுக்கு "டென்ஷன்' தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து செய்ய வேண்டும். இப்போது கூட ஒபாமாவின் பாதுகாப்பு படையினர் மட்டும் அரை டஜன் விமானங்களில் இந்தியா வருகிறார்கள். அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு தொடர்பானவர்கள் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 30. இந்த படையின் நடுவில் தான் அதிபரின் "கெடிலாக்' கார் செல்லும். உலகில் உள்ள அதிநவீன கார்களில் இதுவும் ஒன்று.

 

ராகவன் மறைவு: ஜெ., இரங்கல்

சென்னை: பிரபல நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார். இது குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'அனைவரிடமும் அன்புடன் பழகும் குணம் கொண்ட வி.எஸ்.ராகவனின் இழப்பு திரைப்படத் துறைக்கும், கலைத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய விஷயங்கள் முடிவாகும்

புதுடில்லி: பிரதமர் நரேந்திமோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் நடத்த உள்ள பேச்சுவார்த்தையின்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதம், வர்த்தகம், அணுசக்தி உடன்பாடு, பருவநிலை மாறுபாடு, ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரம், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரம் என பல முக்கிய விஷயங்களில் முடிவு ஏற்படும் என தெரிகிறது.

 

இந்தியா வரும் ஆறாவது அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வரும் 6வது அமெரிக்க அதிபர் ஆவார். இவர் ஏற்கனவே 2010ல் இந்தியா வந்திருக்கிறார். தற்போது 2வது முறையாக இந்தியா வருகிறார்.

* 1959 டிசம்பரில் அமெரிக்க அதிபராக இருந்த டிவைட் ஈசென்ஹவர், முதன் முதலாக இந்தியா வந்தார். இந்திய பார்லிமென்ட்டில் உரை நிகழ்த்தினார்.

* இதன் பின் 10 ஆண்டுகள் கழித்து 1969 ஜூலையில் அமெரிக்க அதிபர் ரிக்ஷர்டு நிக்சன் இந்தியா வந்தார். இவர் அதிபராக பதவியேற்ற 6 மாதங்களில் இந்தியா வந்தார். "வியட்நாம் நிலவரம் மற்றும் ஆசியாவின் பங்கு' பற்றி பேசினார்.

* ஒன்பது ஆண்டுகள் கழித்து மூன்றாவது அதிபராக 1978ல், ஜிம்மி கார்டர் இந்தியா வந்தார். 3 நாள் பயணமாக இந்தியா வந்த அவர், அணு ஆயத தயாரிப்பு குறிக்கோள் பற்றி பேசினார். அரியானாவின் தல்தாபூர் கிராமத்துக்கும் அவர் பயணம் செய்தார். ஏனெனில் அங்கு அவரது தாய் பணியாற்றியுள்ளார்.

* 22 ஆண்டுகள் கழித்து 2000 மார்ச்சில் ஐந்து நாள் பயணமாக, அதிபர் பில் கிளின்டன் இந்தியா வந்தார். அவரது மகள் ஷெல்சா கிளன்டனும் உடன் வந்தார். டில்லி மட்டுமல்லாமல் ஆக்ரா, ஜெய்ப்பூர், ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். நீண்டநாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் என்ற பெருமை பெற்றார்.

* 6 ஆண்டுகளுக்குப் பின் 2006ல், ஐந்தாவது அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் இந்தியா வந்தார். இவர் டில்லியை தவிர, ஐதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது பயணத்தில் தான் இந்தியா - அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

* பின் நான்கு ஆண்டு இடைவெளியில் ஆறாவது அதிபராக ஒபாமா 2010 நவம்பரில், இந்தியா வந்தார். அதிபர் நிக்சனுக்கு பிறகு, முதல் முறை அதிபராக இருந்த போது இந்தியா வந்தவர் என்ற பெருமை பெற்றார். இந்தியா பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

* தற்போது நான்காண்டு இடைவெளியில் இன்று அதிபர் ஒபாமா மீண்டும் இந்தியா வந்துள்ளார். இம்முறை குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

 

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?

புதுடில்லி: மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசு தின விழாவிற்கு பின்னர் இந்த விரிவாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

ஒபாமா: முதல் அமெரிக்க அதிபர்

புதுடில்லி: இந்திய குடியரசு தின விழாவில் உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளனர். ஆனால், இதுவரை, அமெரிக்க அதிபர் ஒருவர் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டதில்லை. இந்நிலையில், இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார். நாளை நடக்க உள்ள விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

 

வரலாறு காணாத பாதுகாப்பு

புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை முன்னிட்டு, டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாலம் விமான நிலையம் துவங்கி, அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் பாதைகள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. ராஜ்காட், காந்திசமாதி பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

தூதரை நலம் விசாரித்த ஒபாமா

புதுடில்லி: டில்லி பாலம் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்து சேர்ந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ஜெய்சங்கரும் ஒபாமாவை வரவேற்றார். அப்போது அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த ஒபாமா, ஜெய்சங்கரிடம் நலம் விசாரித்தார்.

 

அரசு மீது பா.ஜ.,ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

புதுடில்லி: குடியரசு தின விழாவிற்கு அழைப்பு விடுக்காததற்காக மத்திய அரசு மீது ஆம்ஆத்மியும், காங்கிரசும் கடுமையாக விமர்சித்துள்ளன. இது பா.ஜ.,வின் கீழ்தரமான மனநிலையை காட்டுகிறது என காங்கிரசும், மத்திய அரசு எந்த விதிமுறைகளையும் மதிப்பதில்லை என ஆம்ஆத்மியும் குற்ற்மசாட்டி உள்ளன.

 

தாவூத்தின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுங்கள்

வாஷிங்டன்:இந்தியாவால் தேடப்பட்டு வருகிற பயங்கரவாதியும், அமைப்பு ரீதியிலான குற்றச்செயல்களை அரங்கேற்றுபவருமான தாவூத் இப்ராகிம், கராச்சியில் அடிக்கடி காணப்படுகிறார். அவர் மும்பையில் 2008-ம் ஆண்டு தாக்குதல் தொடுத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துக்கு நிதி உதவி செய்வதாக ஐ.நா. கூறுகிறது. அவருக்கு துபாயில் சொத்துக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பெர்சிய வளைகுடா அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, அந்த சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒபாமாவின் இந்திய பயணத்தையொட்டி, அமெரிக்க பத்திரிகை 'தி நியூயார்க் டைம்ஸ்' சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது.

 

ஜெர்மனி வந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா

பெர்லின்:குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று மாலையில் புறப்பட்டார்.இந்தியா வரும் வழியில் ஜெர்மனி வந்தார்.அங்கு சில மணி நேரம் தங்கியபின்பு இந்தியா புறப்படுவார். ஒபாமா,இன்று காலை 10 மணிக்கு டில்லிக்கு வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

டாக்சி டிரைவரை காதல் திருமணம் செய்த பட்டதாரி இளம்பெண் கவுரவக்கொலை? போலீசார் விசாரணை

ராமநாதபுரம்:டாக்சி டிரைவரை காதல் திருமணம் செய்த பட்டதாரி இளம்பெண், ராமநாதபுரம் அருகே கவுரவக்கொலை செய்யப்பட்டாரா, என போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் அருகே உச்சிப்புள்ளி வெள்ளரிஓடையை சேர்ந்தவர் பீமராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மகள் சுபாஸ்ரீ23, எம்.காம்.,பட்டதாரி. சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்த சுபாஸ்ரீவும் , அங்கு டாக்சி ஓட்டிவந்த சுரேஷ்குமார் மகன் பிரகாஷ், 22, என்பவரும் காதலித்தனர்.ஒரே சமூகத்தை சேர்ந்த இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஜன., 1ல் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு, சில நாட்கள் கழித்து சுபாஸ்ரீ பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அவருக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். திருமணத்திற்கு சுபா மறுத்ததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் சுபாஸ்ரீ இறந்து கிடந்தார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக வி.ஏ.ஓ., நாகராஜன் உச்சிப்புளி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சுபாஸ்ரீ உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அவர் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டரா, அல்லது திட்டமிட்டு யாரேனும் கொலை செய்துவிட்டு, நாடகமாடியுள்ளனரா என போலீசார், சுபாஸ்ரீ யின் பெற்றோர் மற்றும் டாக்சி டிரைவர் பிரகாஷ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

 

பா.ஜ., நிலையில் மாற்றமில்லை: தமிழிசை

சென்னை: தனியார் டிவிக்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்ததால், தமிழகத்தில் பா.ஜ., நிலையில் மாற்றமில்லை. ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.,வை எதிர்த்துதான் போட்டியிடுகிறோம். கடந்த முறை, ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழியுடன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்தார். மக்கள் நலனுக்காக தான், ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்தார் என கூறினார்.

 

ஓட்டுக்கு பணம் பெறுவதை தடுக்கவே அப்படி பேசினேன்: கெஜ்ரிவால் பதில்

புதுடில்லி: தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஆம் ஆத்மிக்கு ஓட்டுப்போட வேண்டும் என கூறினார். இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளித்துள்ள கெஜ்ரிவால், பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுப்போடுவதை தடுக்கவே அப்படி பேசினேன். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள போது, மீண்டும் நான் அப்படி பேச மாட்டேன் என கூறியுள்ளார்.

 

பத்ம விருது வேண்டாம்: உள்துறை அமைச்சகத்துக்கு ராம்தேவ் கடிதம்

புதுடில்லி: கடந்த சில நாட்களுக்கு முன், பத்ம விருது பரிசீலனையில், யோகா குரு பாபா ராம்தேவின் பெயர் உள்ளதாக செய்திகள் வெளியாகின. ராம்தேவிற்கு விருது வழங்க காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ராம்தேவிற்கு தனக்கு விருது வேண்டாம் என கூறியுள்ளார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.