குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

23.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஜெ., வழக்கு: சுப்ரமணியசாமி மனு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை , பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தன்னை மூன்றாவது தரப்பாக சேர்க்க உத்தரவிடுமாறு கோரி, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒபாமா ஆக்ரா யபணம் ரத்து: புதுத்தகவல்
லக்னோ: மூன்று நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 27-ம் தேதி ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிட உள்ளதாக திட்டமிடப்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டது.இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், டில்லியில் இருந்து, ஜன. 27ம் தேதியன்று, ஆக்ரா செல்வதற்கு பதிலாக அப்பயணத்தை ரத்து செய்துவிட்டு, நேற்று முன்தினம் சவூதி மன்னர் அப்துல்லா மறைந்ததையடுத்து அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சவூதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒபாமா வருகையை கண்டித்து தர்ணா
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலர் பிரகாஷ் காரத் பேசியது, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை கண்டித்து தர்ணா செய்யப்படும். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.
மதுரை போலீஸ் கமிஷனர் திருச்சிக்கு மாற்றம்
மதுரை: மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த சஞ்சய் மாத்தூர், திருச்சி போலீஸ் கமிஷனராக இடமாற்றம்செய்யப்பட்டார். திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்த சைலேஷ் குமார் யாதவ்,மதுரை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பா.ஜ. வேட்பாளரை ஆதரிக்க தே.மு.தி.க. முடிவு ?
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ. வேட்டாளராக , சுப்ரமணியம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. பா.ஜ.வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனை தே.மு.தி.க. செயலர் விஜயராஜன் தெரிவித்தார்.
காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டம் ?
ஜம்மு : ஒபாமா வருகையின்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
முன் கூட்டியே இந்திய பயணம் முடிக்கிறார் ஒபாமா
வாஷிங்டன்: 3 நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா முன் கூட்டியே இந்திய பயணத்தை முடித்து அமெரிக்கா கிளம்புகிறார். இறுதி நாளான 27ம் தேதி தாஜ்மகால் பார்வை ரத்து ஆகும் பட்சத்தில் அவர் முன்னதாக அமெரிக்கா கிளம்புவார். மேலும் சவுதி மன்னர் காலமானதால் அவருக்கு அஞ்சலி செலுத்தவும் அவர் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
ஆந்திர கொள்ளையர்கள் கைவரிசை?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாராப்பள்ளியில் உள்ள வங்கி ஒன்றில் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள், அங்கு லாக்கரில் இருந்த 2 ஆயிரம் பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது: குந்தாரப்பள்ளியை அடுத்த ராமாபுரத்தில், பாங்க் ஆப் பரோடாவின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, வேப்பனபள்ளி, நெடுமருதி, சிப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, திப்பம்பட்டி, பண்டப்பள்ளி என பல்வேறு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள், தங்கள் நகைகளை இங்கு அடமானம் வைத்து, நகை கடன் பெற்றுள்ளனர். விவசாயிகள் அடமானம் வைத்த நகைகள், வங்கியின் மூன்று லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்தன. தனியார் வீட்டின் ஒரு பகுதியில் செயல்படும் இந்த வங்கியின் பின்பகுதியில் ஒரு பாழடைந்த கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் வழியாக நேற்று நள்ளிரவு வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், மூன்று லாக்கர்களில் ஒன்றை உடைத்து, அதில் இருந்த 1150 நகை பொட்டலங்களை கொள்ளையடித்து சென்றனர். கண்காணிப்பு கேமராக்களை திசை திருப்பிவிட்டு தப்பியுள்ளனர். சம்பவம் அறிந்த எஸ்.பி., கண்ணம்மாள் நேரில் விசாரணை நடத்தினர். இந்த கொள்ளையை ஆந்திர கொள்ளையர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆளும் கட்சிக்கு பாடம்-ஸ்டாலின்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க.. பொருளாளர் ஸ்டாலின், 'ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டவே, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடுகிறது. தேர்தல் அதிகாரி சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறோம்,' என்றார்.
வங்கியில் 2000 பவுன் நகை கொள்ளை?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள வங்கி ஒன்றில் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள், அங்கு லாக்கரில் இருந்த 2 ஆயிரம் பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினம்: கெஜ்ரிவாலுக்கு அழைப்பில்லை
புதுடில்லி: வரும் 26ம் தேதி குடியரசு தின விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில், டில்லியின் முன்னாள் முதல்வர் என்ற முறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது குறித்து ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ., அரசு பாரம்பரிய நடைமுறைகளை ஒவ்வொன்றாக முறித்து வருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளது.
மோடியின் சுமையை குறைப்பேன்:கிரண்பேடி
புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் கிரண்பேடி, பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் 70 தொகுதிகளுக்கும் சென்று நான் பிரச்சாரம் செய்வேன். பா.ஜ., தலைவர் மட்டுமல்லாது, நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவர் பல பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதனைக் கருத்திக் கொண்டு அவர் சுமையை குறைக்க நானே நேரடியாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
டில்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு
புதுடில்லி : குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு டில்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே டில்லிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. முக்கிய இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் போடோ பயங்கரவாதிகள்
பெங்களூரு : பெங்களூருவில் பதுங்கி இருந்த போடோ பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். போடோ பயங்கரவாதிகள் தொடர்பாக அசாம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வருடன் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வாக்குவாதம்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் துறை மாற்றம் செய்தது தொடர்பாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்தவர் சக்ரபோர்த்தி . இவர் அப்பதவியில் இருந்து நீ்க்கம் செய்யப்பட்டு மற்றொரு துறையின் கூடுதல் தலைமைசெயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் மாநில தலைமை செயலாளராக ராஜிவ் கெப்பா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் துறைமாற்றம் செய்யப்பட்ட சக்ரபோர்த்தி மாநில முதல்வர் ரகுபர் தாசுடன் வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டார். இது குறித்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளில் இலவச வைபை வசதி
புதுடில்லி: இண்டெர்நெட் வசதியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500 நகரங்களில் இலவச வைபை வசதியை செய்து தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கோல்கட்டா, லக்னோ , டேராடூன், ஐதராபாத், வாரணாசி, ஜெய்ப்பூர், போபால், இந்தூர், பாட்னா, சண்டிகர், லூதியானா, உட்பட பல்வேறு நகரங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2015-16-ம் ஆண்டில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,
இந்திய உணவு கழகத்திற்கு மூடுவிழாவா? மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
புதுடில்லி: மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில், 'இந்தியாவின், பொது வினியோக முறையை அழிப்பதற்கான, 'புளுபிரின்ட்' தான், சாந்தகுமார் அறிக்கை. சந்தை சக்திகளுக்குத் தான், இதனால் லாபம் கிடைக்குமே தவிர, ஏழைகளுக்கு கிடைக்காது. விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். இதை எதிர்த்து, நாங்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, தெரிவித்து உள்ளது.
குஜராத்தில் வெளிநாட்டினருக்கு நிபந்தனைகளுடன் மது விற்பனை
ஆமதாபாத்: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள, குஜராத் மாநிலத்திற்கு வரும் வெளிநாட்டினர், மதுபானம் கிடைக்காமல் அவதிப்படுவதை அறிந்த மாநில அரசு, வெளிநாட்டினருக்கு மட்டும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மதுபானத்திற்கான உரிமம் வழங்க முன்வந்து உள்ளது.
வெளிநாட்டினருக்கு, மதுபானங்கள் உரிமம் வழங்க முன்வந்துள்ள குஜராத் அரசு, பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
* இணையம் மூலம், முன்கூட்டியே மதுபானம் வாங்குவதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
* குறிப்பிட்ட அளவு மதுபானம், குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே விற்கப்படும். அதை பெற விரும்பும் வெளிநாட்டினர், ஒவ்வொரு முறையும், உரிமத்தை காட்டி மது பெற்றுக் கொள்ள வேண்டும். அதை உரிமத்தின் பின் பகுதியில் குறித்துக் கொள்ள வேண்டும்.
* வாங்கிய மதுவை, பிறருக்கு ஊற்றிக் கொடுக்கக் கூடாது; தனக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நபர், அளவுக்கு அதிகமாக மது வைத்திருப்பதை அறிந்தால், அந்த மதுவை பறிமுதல் செய்யும் மாவட்ட கலெக்டர், பறிமுதல் செய்த மதுவை ஏலம் விட்டு, கிடைத்த பணத்தில், மதுவுக்கு அந்த வெளிநாட்டினர் செலவழித்த பணத்தை திருப்பிக் கொடுப்பார்.
* மதுபானம் அருந்த வழங்கப்படும் உரிமத்திற்கு, கட்டணம் கிடையாது.
ட்வீட்டரிடம் தகவல் கேட்கிறது மத்திய அரசு
புதுடில்லி: இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் என ட்வீட்டரில் பயங்கரவாதிகளின் மிரட்டல் குறித்த விபரங்களை ட்வீட்டர் இணையதளத்திடம் மத்திய அரசு கேட்டுள்ளது. எங்கிருந்து அந்த செய்தி பதியப்பட்டது, அந்த இணையதளத்தின் ஐ.பி.,எண் வழங்கும்படி மத்திய அரசு கேட்டுள்ளது. இதனிடையே, ஐ.பி., எண்ணை பயங்கரவாதிகள்மறைத்துள்ளதாகவும், மும்பையில் இருந்து ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதிகள் தான் இந்த மிரட்டலை விடுத்திருக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
ஒடிசாவில் ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் கைது
புவனேஸ்வர்: ஒடீசாவின் சந்திப்பூர் பகுதியில், பாதுகாப்பு தொடர்பான அமைப்பில் தற்காலிக கேமரமேனாக பணிபுரிந்த ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
லட்சியங்களை பின்பற்றி நடங்கள்: குழந்தைகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதுடில்லி: வீரதீர சாகசங்கள் புரிந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மற்றவர்களுக்காக வாழும் வாய்ப்பை கடவுள் நமக்கு வழங்கியுள்ளார். மற்றவர்களுக்காக சாக அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மற்றவர்களுக்காக வாழவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த விளைவுகளையும் பற்றி கவலைப்படாமல், சாதனை படைத்துள்ளீர்கள். துணிவுடன் செயலாற்றுவதை யாரும் நிறுத்தக்கூடாது. இதுவே சமுதாயத்திற்கு உங்கள் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் வாழ வேண்டும் என கூறினார்.
ஒபாமாவை வரவேற்க சோனியா தலைமையில் குழு
புதுடில்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை, சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு வரவேற்க உள்ளது. சோனியா தலைமை வகிக்கும் இக்குழுவில், எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர் என்பதை, அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவிக்கவில்லை. குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக பங்கேற்கும் ஒபாமா, மூன்று நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ளும் வகையில், நாளை டில்லி வரவுள்ளார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.