குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

22.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தயாநிதி- ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை , தயாநிதி சந்தித்து பேசினார். பின்னர் தி.மு.க.பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

 

குற்றவாளிகளை பாதுகாக்க ஸ்ரீனிவாசன் முயற்சிக்கவில்லை: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வெளியானது. இதில் சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி நிர்வாகி ராஜ்குந்தா ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனினும் குற்றவாளிகளை பாதுகாக்க ஸ்ரீனிவாசன் முயற்சிக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
மெய்யப்பன்,ராஜ்குந்த மீது குற்றம் நிரூபணம்
துடில்லி: கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இன்று 130 பக்க தீர்ப்பு வெளியானது, இதில் சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனும், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ்குந்தாவும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என நீதிபதிகள் தாகூர், கலிபுல்லா தீர்ப்பளித்தனர்.
கிரிக்கெட் சூதாட்ட வழக்கு: பரபரப்பு தீர்ப்பு
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் கிரிக்கெட் லீக் சூதாட்ட வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில், பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள், டி.எஸ்.தாகூர், கலிபுல்லாஆகியோர் தீர்ப்பளித்தனர், * இந்திய கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகள் சட்டத்திற்குட்பட்டது.* 2013-ம் ஆண்டு 6-வது தொடரின் போது சூதாட்ட வழக்கில்தீர்ப்பு
கெஜ்ரிவால் மீதான புகார் :தேர்தல் கமிஷன் தள்ளுபடி
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சொத்து கணக்கை தவறாக சமர்பித்துள்ளார், தன் மீதான கிரிமினல் வழக்குகளையும் மறைத்துள்ளார். எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் காங். கட்சியைச் சேர்ந்த கிரண் வாலியா புகார் தெரிவித்துள்ளார். இதை தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்தது.
சி.பி.ஐ. கோர்ட்டில் மூவர் ஆஜர்
சென்னை: தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் சென்னை சி.பி.ஐ. சிறப்புகோர்ட்டில் இன்று ஆ ஜராகினர்.
ஹபீஸ் சையத் அமைப்புக்கு பாக். தடை
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையத்தின் ஜமாத் உத்வா அமைப்பை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கோவை வந்தார் கவர்னர் ரோசையா
கோவை: சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.00 மணியளவில் தமிழக கவர்னர் ரோசையா கோவை வந்தார். இங்கு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இரவு 7.10 மணியளவில் மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். கவர்னர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒபாமா மகள்கள் இந்தியா வர வாய்ப்பில்லை
வாஷிங்டன்: இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் 25-ம் தேதி இந்தியா வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.இந்நிலையில் ஒபாமாவுடன் அவரது மனைவி மிட்செல் ஒபாமா மட்டுமே வர உள்ளதாகவும், மகள்கள் மாலியா (16), சாஷா (13) ஆகியோர் இந்தியா வர வாய்ப்பில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஜி கிரிக்கெட் வீரர் கங்குலி பா.ஜ.வில் சேர முடிவு ?
கோல்கட்டா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பா.ஜ.வில் இணைய உள்ளார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சவுரவ் கங்குலி (41), இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பா.ஜ.வின் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாந்திபூஷண் கருத்து: தவறில்லை என்கிறார் கெஜ்ரிவால்
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியை ,ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஷாந்தி பூஷண் புகழ்ந்து பேசியது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது, ஷாந்தி பூஷண் அவ்வாறு புகழ்ந்து பேசியதில் தவறு இல்லை. அவரதுசொந்த கருத்து . அதை பேச அவருக்கு உரிமை உள்ளது. அவருக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் இது போன்று உரிமை உள்ளது என்றார்
ஸ்ரீரங்கம்: தி.மு.க. வேட்பு மனு தாக்கல்
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பிப். 13-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க.வேட்பாளர் வளர்மதி ஏற்கனவே மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தி.மு.க வேட்பாளர் ஆனந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மனோகரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோவை வடக்கு மண்டல தலைவர் தேர்வு
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக இருந்த ராஜ்குமார் ராஜினாமா செய்ததையடுத்து இப்பதவிக்கு கோவை விக்டோரியா ஹாலின் நடந்த மறைமுக தேர்தலில், 41-வது வார்டு அ.தி.மு..க. கவுன்சிலர் நடராஜன், போட்டியின்றி வடக்கு மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 20 கவுன்சிலர்களில், 14 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். எஞ்சியுள்ள தி.மு.க., கம்யூ. கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
திருச்சி துணைமேயர் ஸ்ரீனிவாசன் தேர்வு
திருச்சி: திருச்சி மாவட்டம் ஜெ., பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன், திருச்சி மாநகராட்சி துணைமேயராக இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அரசு கொறடா மனோகரன், எம்.பி. குமார், எம்.எல்.ஏ. பரஞ்சோதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
முடிந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்: குருமூர்த்தி காட்டம்
புதுடில்லி: தொலைபேசி இணைப்புகள் முறைகேடு வழக்கில் மூன்று பேர்கைது தொடர்பாக தயாநிதி கூறிய குற்றச்சாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி கூறியது, இந்த வழக்கு தொடரப்பட்டது முன்னர் ஆட்சி செய்த காங். ஆட்சி தான். இதில் எங்களை எப்படி அவர் குற்றம்சாட்ட முடியும். முடிந்தால் என்மீது வழக்கு தொடரட்டும் சந்திக்கிறேன் என்றார்.
என்னை கைது செய்ய சி.பி.ஐ., துடிக்கிறது: தயாநிதி பேட்டி
சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. மேலும் என்னை கைது செய்ய ஆர்.எஸ்.எஸ்., பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது என்றும், மாஜி மத்திய அமைச்சர் தயாநிதி கூறியுள்ளார். இன்று சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்ட விரோதமாக பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெறப்பட்டதாகவும், ஒரு கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வழக்கு பதிவு செய்துள்ளது. எனது உதவியாளர்கள் கடந்த 18 மாதங்களாக 10 முறைக்கு மேல் சி,பி,ஐ.,விசாரணைக்கு டில்லிக்கு சென்று ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். தற்போது அவசரத்தில் கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி, எனக்கு எதிரான குற்றங்களை ஒப்புக்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.
சி.பி.ஐ., கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது. எனக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதில் சி.பி.ஐ., உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத வேகம் இப்போது எப்படி வந்தது. ஒரு மத்திய அமைச்சர் என்ற முறையில் எனது வீட்டில் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது சிவில் வழக்கு ஆனால் சி.பி.ஐ., கிரிமினல் வழக்காக மாற்ற முயற்சித்து வருகிறது. இதனால் எனது அலுவலக உதவியாளர்கள் 3 பேரை நேற்று கைது செய்துள்ளது. இவர்களை சி.பி.ஐ., மிரட்டி சாட்சியம் ( 3 டிகிரி முறையில் ) பெற்று வருகிறது. தயாநிதிக்கு எதிராக வாக்குமூலங்கள் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறோம் என மிரட்டுகின்றனர். இவர் துன்புறுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக நாங்கள் மனித உரிமை கமிஷனிடம் தெரிவிப்போம். சி.பி.ஐ., இயக்குனருக்கும் கடிதம் எழுதவுள்ளேன்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மீது புகார் : என் மீதான வழக்குகள் சிலரை திருப்தி படுத்துவதற்காக சி.பி.ஐ.,களம் இறங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து தற்போது பா.ஜ.,வில் சேர்ந்துள்ள ஒரு அறிவிஜீவி ( சுப்பிரமணிய சாமி ) இதில் இருக்கிறார்.தன்னை பிரபலப்படுத்தி கொள்ளவும், தன்னை அறிவு ஜீவியாக காண்பிக்க செயல்படுகிறார். தி.மு.க.,வை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு எங்களை கிள்ளி எறிய நினைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு எனக்கு எதிராக சி.பி.ஐ., முடுக்கி விட்டுள்ளது. சி.பி.ஐ ஆர்.எஸ்.எஸ்.,சை திருப்தி படுத்த இவ்வாறு செயல்படுவதாக அச்சம் ஏற்பட்டுளளது.. தமிழகத்தில் உள்ள ஒரு அறிவி ஜீவி (முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்) தன்னையும் , தனது மகனையும் காப்பாற்றும் நோக்கில் தி.மு.க.,வை கொச்சைப்படுத்தினார். அவர் தி.மு.க. பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை. சட்ட ரீதியாக எதையும் எதிர்கொள்வோம். இது தொடர்பாக எங்களின் குடும்ப , அரசியல் தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளேன். இவ்வாறு தயாநிதி கூறினார்.
பேடி, கெஜ்ரிவாலை விட மக்கேன் சொத்து கணக்கு அதிகம்
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் பிப்.7-ம் தேதி நடக்கிறது. பா.ஜ, காங்.,ஆகிய தேசிய கட்சிகளுக்கு இணையாக ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. முதல்வர் வேட்பாளர்களான பா.ஜ,வின் கிரண்பேடி, தனது சொத்து மதிப்பு ரூ. 11.65 கோடி, ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2.1 கோடி என சொத்துக்கணக்கை சமர்பித்துள்ளனர். காங். முதல்வர் வேட்பாளர் அஜெய்மக்கேன் தனது சொத்து மதிப்பு ரூ. 16கோடி என காண்பித்துள்ளார். 2009-ம் ஆண்டு மக்கேனின் சொத்து மதிப்பு ரூ. 6 கோடி தற்போது ரூ. 16 கோடி .
சல்மான் கான் மீதான வழக்கில் முக்கிய சாட்சியிடம் விசாரணை
மும்பை: 2002-ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் (48),போதையில் வேகமாக காரை ஓட்டி ஒருவர் பலியானா வழக்கில், முக்கிய சாட்சியான டாக்டர் பிரதீப் காரத்திடம் செஷன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது. சம்பவத்தன்று தான் காரை ஓட்டவில்லை என சல்மான் வக்கீல் தெரிவித்தார். எனினும் அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு அறிக்கை இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான டாக்டர் பிரதீப் காரத், நீதிபதி தேஷ்பாண்டேயிடம் சாட்சியம் அளிக்கிறார்.
வரலாற்றை சிதைக்காதீர்கள்: திக்விஜய்சிங்
புதுடில்லி : ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசியவாத அமைப்பு என டில்லி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., முதல்வர் வேட்பாளரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான கிரண்பேடி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ்., நாட்டை ஒருமைப்படுத்தியதாக கிரண்பேடி கூறி உள்ளார். ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரியாக அவர் மத கலவரங்கள் தொடர்பான சட்ட கமிஷன் அறிக்கைகளை படித்ததில்லையா? கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ்.,ன் பங்கு என்னவென்று படித்ததில்லையா? சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.,ன் பங்கு என்னவென்று கிரண்பேடியால் சொல்ல முடியுமா? ஆர்.எஸ்.எஸ்.,ஐ சேர்ந்த 5 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை அவரால் சொல்ல முடியுமா? கோட்சேவை அவர் தேசபக்தராக கருதுகிறாரா? இந்துதுவா என்பதற்கு என்ன அர்த்தம் என்று அவர் விளக்குவாரா? கிரண்பேடி அவர்களே..உங்களது சொந்த விருப்பங்களுக்காக வரலாற்றை சிதைக்க வேண்டாம். உங்களது அரசியல் ஆசை என்ன என்பது எனக்கு தெரியும். அதில் தவறேதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மற்றவர்களின் அரசியல் ஆசைகளுக்காக அன்னா ஹசாரேவின் சமூக சேவைகள் பயன்படுத்தப்படுவதற்காக பரிதாபப்படுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட்போட்டி வழக்கு இன்று தீர்ப்பு
புதுடில்லி: 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரி்க்கெட் போட்டி ஊழல் வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 6-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுப்பப்பட்டது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஒபாமா இந்திய வருகை எவ்வாறு சாத்தியமாயிற்று?
புதுடில்லி: * மே, ஜூன் மாதங்களில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கரிடம் பேசிய பிரதமர் மோடி, 'ஜனவரி 26, குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக அதிபர் ஒபாமாவை அழைக்க முடியுமா...' என, கேட்டார்.
* அந்த கேள்வியை ரகசியமாக வைத்துக் கொண்ட ஜெய்சங்கர், இந்த கேள்வியை, தனக்கு நெருக்கமான அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கொண்டு சென்றார்.
* அமெரிக்க அதிகாரிகள், இதுகுறித்து, அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கேட்கவே, விஷயம், ஒபாமாவின் காதுகளுக்கு சென்றது.
* இதற்குள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
* 'இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை' என, ஒபாமா தன் அமைச்சர்களிடம் கூறினார்.
* அந்தத் தகவல், ஜெய்சங்கர் மூலம் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது.
* மகிழ்ச்சி அடைந்த மோடி, அதிபர் ஒபாமாவை முறைப்படி அழைத்தார். அவரும், 'ஓகே' என சொல்ல, அமெரிக்க ஊடகங்களில் தகவல் கசிந்தது.
* செப்டம்பரில், பிரதமர் மோடி, டுவிட்டரில், ஒபாமாவின் வருகை குறித்து செய்தி வெளியிட்டார். அதன் பின், இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்து பேசி, அதிபரின் சுற்றுப்பயண விவரம், பாதுகாப்பு, தேவைகள், வரவேற்பு, நிகழ்ச்சிகள் போன்றவற்றை இறுதி செய்தனர். இதோ... இன்னும் மூன்று நாட்களில், ஆம், 25ம் தேதி, ஒபாமா டில்லியில் வந்திறங்குகிறார்; 27ம் தேதி வரை, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தூய்மை இந்தியா திட்டத்தில் ஒபாமா பங்கேற்பு
புதுடில்லி: பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, 'தூய்மை இந்தியா' திட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்பையும் உணர்ந்துள்ள ஒபாமா, டில்லி நகர வீதி ஒன்றை சுத்தப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்தின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சசிதரூருடன் பா.ஜ., எம்.பி., வருண் சந்திப்பு
புதுடில்லி: சுனந்தா கொலை தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரை, அவரது இல்லத்தில் பா.ஜ.,எம்.பி., வருண் சந்தித்து பேசினார். சில மணி நேரம் அங்கிருந்த வருண், இந்த சந்திப்பு பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இதன் பின்னர் ட்வீட்டர் இணையதளத்தில், வெளியுறவு அமைச்சக குழுவின் அடுத்த கூட்டம் குறித்து 10 நிமிடங்கள் சசிதரூருடன் ஆலோசனை நடத்தியதாக வருண் கூறியுள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக சுனந்தாவின் நடவடிக்கை இருக்கும்: குடும்ப நண்பர் பேட்டி
புதுடில்லி: சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக, அவரது நண்பர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், சுனந்தாவின் நடவடிக்கை சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். எங்களுடன் அவர் தங்கியிருந்த போது, இரண்டு முறை திடீரென மயக்கமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்த போது, அவர் ஆர்வம் காட்டவில்லை. தனக்கு உள்ள பிரச்னை பற்றி அனைவருக்கும் தெரியும் என அவர் கூறுவார் என கூறினார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.