குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

21.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடி புதிய சகாப்தத்தை துவக்கியுள்ளார்:

டில்லி: இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி, மோடி புதிய சகாப்தத்தை துவக்கியுள்ளதாகவும், தேர்தலில் மோடியின் வெற்றி, இந்தியர்களின் வெற்றி என கூறியிருந்தார். இந்த தகவல் வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த தகவலை ஜனார்த்தன் திவேதி மறுத்துள்ளார். தனது கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிமீயர் லீக் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

புதுடில்லி: கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநில அரசின் கட்டுப்பாட்டில் சர்க்கரை விலை: மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலைகளை மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து சர்க்கரை விலையை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம். விலையை ஏற்றவோ குறைக்கவோ மாநில அரசுகளின் முடிவுகளில் உள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக ரேசனில் சர்க்கரை விலை ரூ.13.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஏமன் அதிபர் கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிப்பு

சனா: ஏமனில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பிரதமர் தப்பியோடினார். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஹாடியை கிளர்ச்சியாளர்கள், வீட்டினுள் சிறைபிடித்து வைத்துள்ளனர். ராணுவம் அலங்கோல நிலையில் உள்ளதாக அதிபரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

விதிகளுக்கு புறம்பாக பல பொருட்கள் சொத்துப்பட்டியலில் சேர்ப்பு: ஜெ., வழக்கறிஞர் வாதம்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதாடுகையில், விதிகளுக்கு புறம்பாக பல பொருட்கள் சொத்துப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜெ., வீட்டில் இருந்த 7 கடிகாரங்களின் மதிப்பு ரூ.9 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 91 கடிகாரங்களின் மதிப்பு ரூ.19,90,350 என கணக்கிடப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி, கடிகாரங்களை சொத்துப்பட்டியலில் சேர்க்கக்கூடாது. ஜெ.,க்கு வந்த பரிசு பொருட்களும் வருமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என கூறினார். அப்போது குறுக்கிட்ட அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ், அரசு பதவியில் இருப்பவர் பரிசு பொருளை பயன்படுத்துவது தவறு. பரிசு பொருளை கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். பதவியில் இருப்பவர் பயன்படுத்துவதோ, கட்சி அலுவலகத்தில் வைப்பதோ தவறு என கூறினார்.

 

15 உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு இளைஞருக்கு பிரான்ஸ் கவுரவம்

பாரீஸ்: பிரான்சின் தலைநகர் பாரீசில் கிழக்குபகுதியில் கோஸ்ஹர் மார்க்கெட்டில் ஒன்றிற்குள் கடந்த 9-ம் தேதி காலிபெலி என்ற பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் இருவர் பலியாயினர்.அப்போது மார்க்கெட் மேல் தளத்தில் மாலி நாட்டைச்சேர்ந்த லசானா பைத்லி என்ற 24 வயது இளைஞர் பணியாற்றிக்கொண்டிருந்தார். துப்பாக்கியுடன் மேல்தள அறையை நோக்கி பயங்கரவாதி வருவதையறிந்து சமயோசிதமாக மேல் தள அறையின் ஷாட்டரை மூடி அறைக்குள் இருந்த 15-ம் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் உயிரை காப்பற்றினார்.இவரின் வீரதீர செயலை பாராட்டி பிரான்ஸ் அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கி கவுரவித்தது. இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எரிமலை வெடித்ததில் உருவான புதிய தீவு

நிகோபோலோ: டோங்கோ நாட்டில் எரிமலை வெடித்து சிதறியதில் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது. தெற்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடுகளில் மிகப்பெரிய தீவு நாடு டோங்கோ இங்குள்ள நிகோபோலோ வடமேற்கே உள்ள எரிமலை கடந்த ஒரு மாதமாக புகையத்துவங்கி வெடித்து சிதறியது. இதனால் கடல்மட்டத்தில் இருந்து 100 மீ. உயரத்தில், 2கி.மீ. சுற்றளவில் புதிய தீவு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

விபத்து வழக்கில்: தே.மு.தி.க. பேச்சாளருக்கு சிறை

ஆத்தூர்: தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளர் ஜெயசங்கர் (39) . இவர் கடந்த 2007-ம் தனது நண்பர்கள் இருவருடன் பைக்கில் சென்றார். ஆணையம்பட்டி அருகே வந்த போது ஏற்பட்ட விபத்தில் நண்பர்கள் இருவர் இறந்தனர். இவர் காயமடைந்தார். இது தொடர்பான வழக்கில் ஜெயசங்கர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக தொடர்ப்பட்ட வழக்கு ஜே.எம்.-2 கோர்ட்டில் இன்று நீதிபதி முகமது அன்சாரி முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயசங்கருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும்,ரூ. 3,500 அபராதம் விதிக்கப்பட்டது.

 

கிரண்பேடி பற்றி பேச விரும்பவில்லை:ஹசாரே

புதுடில்லி : கிரண் பேடி டில்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கிரண் பேடி பற்றியும் அவரது அழுக்கு படிந்த அரசியல் பற்றியும் பேச நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

 

பெண் போலீஸ் தற்கொலை: கணவன் சரண்

மதுரை : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நாகையாபுரத்தில் பெண் போலீஸ் கருப்பாயி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் இருப்பதாக கூறி அப்பகுதி கிராம மக்கள் திருமங்கலம் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். கருப்பாயியின் உடலையும் அவரது உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆய்வாளரிடம் இருக்க வேண்டிய துப்பாக்கி எவ்வாறு போலீஸ் காவலரிடம் வந்தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் கருப்பாயியின் கணவர், திருச்சி கன்டோன்மென்ட் போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

கம்யூ.,-திரிணாமுல் இடையே மோதல்

கோல்கட்டா : மேற்குவங்கத்தின் துர்காபூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

ஸ்ரீரங்கத்தில் அரசு திட்டங்களுக்கு தடை

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான காவல் பார்வையாளராக பினோத்குமாரும், பொது பார்வையாளராக உ.பி.,யைச் சேர்ந்த பல்கார் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் இலவச வேஷ்டி சேலை வழங்கவோ, அம்மா திட்ட முகாம் நடத்தவோ கூடாது. அதே சமயம், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தவோ, குடியரசு தின விழாக்கள் நடத்தவோ தடையில்லை. தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

 

இலங்கை அதிபருக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதிஅளித்த பேட்டி, இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் அந்நாட்டுஅதிபர் ஸ்ரீபால சிறிசேன தீர்க்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். 13 -வது சட்ட திருத்தத்தினை அமல்படுத்த போவதாக வெளியான அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

13-வது திருத்தம் தமிழர்களுக்கு நிவாரணம்: வாசன்

சென்னை: தமிழ் மாநில காங்.தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி, இலங்கையில் 13-வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தினை தாமதம் செய்யாமல் அந்நாட்டு அரசு அமல்படுத்த வேண்டும். இந்த சட்ட திருத்தம் அங்கு வாழும் தமிழர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என்றார்.

 

சினிமாவில் ஜெ., ஈட்டியது எவ்வளவு?: கோர்ட்டில் வாதம்

பெங்களூரூ: ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கின் அப்பீல் மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் 11-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஜெ., தரப்பில், திரைபடத்துறையில் அவர் ஈட்டிய வருமானம் குறித்து விவாதங்கள் நடந்தன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.