குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

20.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா: கிரண்பேடிக்கு கெய்ரிவால் சவால்

புதுடில்லி:டில்லி சட்டசபை தேர்தல் பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது.பா.,ய.வில் இணைந்துள்ள மாஜி. ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடிக்கு ,ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெய்ரிவால் பகிரங்க சவால்விடுத்துள்ளார். அதில் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு கிரண்பேடியும் தயார் என பதிலடி கொடுத்துள்ளார்.

2படகுகள்- மீன்கள் பறிமுதல்: மரைன் போலீஸ் அதிரடி
பாம்பன்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மரைன் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன்பிடித்ததாக 2 படகுகள், ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறிமுதல் செய்தனர்.
மகனின் தண்டனையை குறைக்க போலி வயது சான்று: தந்தைக்கு 3 ஆண்டு சிறை
கோவை: கோவையில் , கடந்த 1991-ம் ஆண்டு கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இதில் உக்கடத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். கோர்ட் இப்ராஹிமிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அப்போது அவரது தந்தை அப்துல் ரசாக் (56) தனது மகன் இப்ராஹிமிற்கு வயது 18 சிறுவன் என்பதால் ,ஆயுள் தண்டனையை குறைக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.அதில் அவர் மகனின் வயது சான்றிதழை சமர்பித்தார். பின்னர் நடந்த விசாரணையில் மகனின் வயது சான்றிதழ் போலியாக சமர்பித்தது தெரியவந்தது. இந்த வழக்கு இன்று கோவை ஜே.எம்.-8 -ல் விசாரணைக்கு வந்தது. இதில் தனது மகனின் போலி வயது சான்றிதழை சமர்பித்த அப்துல் ரசாக்கிற்கு (56), 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
2-ஜி வழக்கு: கலைஞர் டி.வி. மேலாளர் சாட்சியம்
புதுடில்லி: 2-ஜி ஊழல் வழக்கில் , சட்டவிரோதமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வந்தது குறித்து அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.இதில் கலைஞர் டி.வி. நிதிப்பிரிவு பொதுமேலாளர் ராஜேந்திரன் சாட்சியளித்தார். அதில் கலைஞர் டி.வி.க்காக சினியூக் நிறுவனத்திடம் வங்கிப்பணம் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது. பல்வேறு நிறுவனங்களிடம் விளம்பரத்திற்காக முன்பணம் பெற ஒப்பந்தம் செய்யவில்லை.இவ்வாறு சாட்சியம் அளித்தார்.
கண்மாய்களை அழித்த இடத்தில் சகாயம் ஆய்வு
துரை: மேலூர் அருகே நாவினிபட்டி, கீளையூர், கீழவளவு, ரங்கசாமிபுரம் ஆகியபகுதிகளில் அழிக்கப்பட்ட கண்மாய்கள் மற்றும் குளங்கள், ஓடைகளை ஆய்வு செய்தார். ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம். மேலும் முறைகேடு நடந்த போது பணியில் இருந்த வருவாய்த்துறையினரின் பட்டியலை தயார் செய்து அறிக்கை சமர்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
மாஜி மத்திய மந்திரி தினேஷ் திரிவேதி பா.ஜ.வில் ஐக்கியம் ?
புதுடில்லி: காங். உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.வில் ஐக்கியமாவது தொடர்கிறது.நேற்று காங். முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணா திராத், பா.ஜ.வில் இணைந்தார். இந்நிலையில் மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங்.கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி, பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் 2012-ம் ஆண்டு முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு வக்கீல் பவானிசிங் விளக்கம்
பெங்களூரூ: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்புவழக்கின் அப்பீல் மனுவிசாரணை 10-வது நாளாக கர்நாடக ஐகோர்ட்டில் இன்று நடந்தது. இதில் எந்த அடிப்படையில் ஜெ.,வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என நீதிபதி குமாரசாமி கேட்டார், அதற்கு அரசு தரப்பு வக்கீல் பவானிசிங் வாதிடுகையில், ஜெயலலிதா சிறையில் இருந்த போது அவரது வீட்டில் சோதனை நடத்தியது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு தகவல் அளித்தது. அப்போது பாஸ்கர் வீட்டில் இருந்தார். ஜெ.,ஒப்புதல் பெற்ற பின்னரே சோதனை நடந்தது என்றார்.
வளர்ச்சி விகிதம்: 2016-ல் சீனாவை முந்தும் இந்தியா: ஐ.எம்.எப். ஆய்வில் தகவல்
வாஷிங்டன்: வளர்ச்சி விகிதத்தில் 2016-ல் சீனாவை இந்தியா முந்திவிடும் என ஐ.எம்.எப். வெளியிட்டுள்ளஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சர்வதேச நிதியகமான ஐ.எம்.எப். உலக பொருளாதார ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2014-ல் சீனாவின் வளர்ச்சி விகிதம் 7.03 ஆக இருந்த போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.8 ஆக இருந்தது. தற்போது 2015-ம்ஆண்டான இந்தாண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதகம்,6.03 ஆக உள்ளது. 2016-ல் 6.05 சதவீதமாக உயரும். அப்போது சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.03 ஆக குறையும் .இவ்வாறுஅந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு சீனா கண்டனம்
பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசம் மாநிலத்தை இந்தியாவின் ஒருபகுதி என்று ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா கூறியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கடந்த வாரம் டெல்லி வந்த ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஜப்பான் தாயார், ஆனால் அருணாசல பிரதேசத்தில் முதலீடு செய்யும் திட்டம் இல்லை. அதேசமயத்தில் அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றே ஜப்பான் பார்க்கிறது என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெட்லி- ஜெ.,சந்திப்பு: ராமதாஸ் கருத்து
சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் இன்று சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஆஜரானார். பின்னர் அவர் பேசுகையில், வழக்கை எதிர்கொள்ள தயார், என் மீதான அவதூறு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்படும். அருண்ஜெட்லி, ஜெயலலிதா சந்திப்பு குறித்து ஜெட்லிதான் விளக்க வேண்டும் என்றார்.
ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பபடாத பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் நிரப்ப வேண்டும். அரசு அலுவலகங்களில் காலி இடங்களை விரைவில் நிறைவடைய செய்ய வேண்டுமென்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அமராவதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
உடுமலை:அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.வினாடிக்கு 440 கன அடியும், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக வினாடிக்கு, 300 கன அடியும் திறக்கப்பட்டது. இதனால் உடுமலை, திருப்பூர் மற்றும் கரூர் பகுதியிலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
சசிதரூரிடம் 4 மணி நேரம் விசாரணை
புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக சசிதரூரிடம் டில்லி போலீசார் நேற்றிரவு 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்,
நேற்று இரவு 8 மணியளவில் டில்லி, வசந்த விஹார் காவல்நிலையத்தில் சி பிளாக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர், சசிதரூரிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டனர்.
சுனந்தாவுடனான திருமண வாழ்க்கையில் சிக்கல் இருந்ததாக ஒப்புக்கொண்ட சசிதரூர், சுனந்தாவுக்கு பரிந்துரைக்கப்பட்டாத ஆல்பிராக்ஸ் மாத்திரை எப்படி அவரது அறைக்குள் வந்தது? சுனந்தாவின் உடலில் 15 இடங்களில் காயங்கள் ஏற்பட்டது ஏன்? சுனந்தாவிடமிருந்து எந்த தொடர்பும் கிடைக்காத நிலையில் ஏன் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சிக்கவில்லை? ஏன் காவல்துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை? மரணத்திற்கான காரணம் என பரிந்துரைத்து ஏன் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனருக்கு இ-மெயில்கள் அனுப்பப்பட்டன? சுனந்தாவுக்கு தோல் சம்பந்தமான நோய் இல்லாதபோது எதற்காக அவருக்கு அந்நோய் இருப்பதாக கூறினீர்கள்? பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் தராரை உங்களுக்கு எப்படி தெரியும்? துபாயில் அவருடன் நீங்கள் தங்கியிருந்தீர்களா? என பல கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தெரிகிறது.
தாவூதின் நெருங்கிய கூட்டாளி கைது
லக்னோ:மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் நெருங்கிய கூட்டாளியான தாரிக் பர்வீனை மும்பையில் லக்னோ போலீசாரும், உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் இணைந்த கூட்டுக் குழு நேற்று கைது செய்தது.மும்பையில் தாரிக் பர்வீனை போலீசார் நேற்று கைது செய்தனர். மும்பையில் உள்ள தாவூதின் சகோதரி சாராவுக்குச் சொந்தமான வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார்.அங்கு தாரிக் பர்வீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு உத்தரபிரதேச போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்ததாக லக்னோ நகர காவல்துறை மூத்த அதிகாரி யஷஸ்வி தெரிவித்தார்.
பா.ஜ.க.,வில் முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ண தீரத்
புதுடில்லி:காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான கிருஷ்ண தீரத் பாஜகவில் இணைகிறார்.முன்னதாக நேற்று காலை அவர் டில்லியில் உள்ள பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித் ஷாவை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பா.ஜ.க.,வில் இணைகிறேன். கட்சியின் எனது பங்கு என்னவாக இருக்குமென்பது இன்னும் முடிவாகவில்லை" என்றார்.பா.ஜ.க.,வில் இணையும் 4 வது பிரபலர் இவர். முன்னதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ஷாசியா இல்மு, வினோத்குமார் பின்னி ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
அமெரிக்காவின் கோரிக்கைகள் இந்தியா நிராகரிப்பு
புதுடில்லி:குடியரசு தின அணிவகுப்பில், ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது. குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க ரகசிய போலீஸ் உயர் அதிகாரிகள், டில்லியில், இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பதில் அவர்களது ஆட்களே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.மேலும் இந்திய அதிகாரிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திறன் பெற்றவர்கள். எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளில் தலையிடாதீர்கள் என கூறி அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
உக்ரைனில் தீவிரமாகும் சண்டை: பான் கி-மூன் கவலை
நியூயார்க்:உக்ரைனில் டொனெட்ஸ்க் விமான நிலையத்தைச் சுற்றிலும் அரசுப் படையினர், கிளர்ச்சியாளர்களிடையே சண்டை தீவிரமடைந்து வருவது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கவலை தெரிவித்தார்.
லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாக்.,க்கு அமெரிக்கா வலியுறுத்தல்
புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவும், இங்கிலாந்தும் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் மேம்படுத்த வேண்டும் என்றால் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.