குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கையை எச்சரிக்கும் நவிபிள்ளை புலிகளின் பணம்1800 கோடி இலங்கைப்பணம் கொலைக்களம் பார்க்க நேரமில்லாத

01 ஆடி2011 08:01போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை அரசாங்கம் அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை, நம்பகமான விசாரணையை முன்னெடுக்கத் தவறினால் அனைத்துலக நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் முன்னர் நடத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் முழுமை பெறாமல் தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய விசாரணை அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும், ஒருவருக்கேனும் தண்டனையை கொடுக்கப்படவில்லை என்றும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுபோன்றே மீண்டும் நடந்தால், அனைத்துலக சமூகத்தின் தலையீட்டின் மூலம் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நவி பிள்ளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயற்படும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை விரைவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கடந்த செவ்வாயன்று அமெரிக்கா
வலியுறுத்தியிருந்த நிலையிலேயே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.Share 0

பொறுப்புள்ள பான் கீ மூன்: சனல் 4 காணொளியை பார்க்க நேரமில்லையாம்

வெள்ளி, 01ஆடி 2011 07:38    .

பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் கொலைக்களங்கள்”  என்ற ஆவணப்படத்தை நேரம் கிடைக்கும் போது ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் பார்வையிடுவார் என்று அவரது பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டாரா என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தை ஐ.நா பொதுசெயலாளர் பான் கீ மூனுடன் பகிர்ந்து கொண்டதாகவும், நேரம் கிடைக்கும் போது அவர் அதனைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அமெரிக்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 5 ஆம் திகதி பான் கீ மூனை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அரசாங்கம்!
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள விடுதலைப்புலிகளின் 1800 கோடிக்கு குறி வைக்கும் அரசாங்கம்!
வெள்ளி, 01 ஆடி 2011 07:52    .

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் உலகின் முக்கிய வங்கிகளில் வைப்புத் தொகையாக உள்ளதென நம்பப்படுகின்ற ஆயிரத்து 800  கோடி ரூபாவைக் கைப்பற்றுவதில் அரசாங்கம் குறியாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மூலமும், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தியதன் மூலமும் நிதி சேர்த்து வந்தது.

இந்தப் பணத்தில் ஒரு பகுதியான சுமார்  ஆயிரத்து 800  கோடி ரூபா வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு நிதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகை உலகின் 5 முக்கிய நாடுகளின் 8 முன்னணி வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் அதிகளவு பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில்தான் உள்ளது. அண்மையில் கனடா பொலிசார் அங்குள்ள வங்கிகளில் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து, 4 பெரிய வங்கிகளில் விடுதலைப் புலிகளுக்கு கணக்கு உள்ளமையை கண்டுபிடித்தனர்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தமிழ் அமைப்புகளை சேர்ந்த 21 முக்கிய பிரமுகர்கள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

இதுபோன்று நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையின் போதும் வங்கி கணக்குகள் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த தகவல்களை தற்போது இலங்கை அரசின் தடுப்புக் காவலில் உள்ள கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனே வழங்கியுள்ளார்.Share 0

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.