குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பட்டிப் பொங்கலும் நமதுபண்பாடும் - சிலகுறிப்புக்கள்: து. கௌரீசுவரன்

20.01.2015-06.01.2046-நமது சூழலில் சிலவிடயங்கள் பார ம்பரியம் பேணும் நோக்கத்துடனும்,  சமகால வாழ்வியலில் அவைபெறும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வாழ்விய லுக்கான முன்னெடுப்பு என்கின்ற நோக்கத்துடனும்  இரு வேறுவகைகளில் நடத்தப்பட்டு வருவதனைநாம் காண் கின்றோம்.

பாரம்பரியம் பேணுதல் எனும் நோக்கத்தில், ஓர் அடையாளம் நிலைநிறுத்தப்படுவதும் அதனூடாகபெருமைகளைப் பேசுவதும் நடைபெறுவதுடன், இதுமிகப் பெரும்பாலும் வருடாந்தம் நடத்தப்படும் சம்பிரதாய பூர்வமான நிகழ்ச்சியாக நிலைநிறுத்தப் படுவதனையும் காண முடிகின்றது.

சுமகால வாழ்வியலில் பயன்பாட்டிற்காக குறித்த ஓர் விடயம் முன்னெடுக்கப்படும் போது அங்கே அதன் சமகால முக்கியத்துவமும், அவ்விடயம் சமகாலச் சவால்களுக்கு முகங் கொடுக்கும் தன்மைகளும் வலியுறுத்தப்படுவதும், இதனூடாக குறித்தவிடயம் பற்றியபிரக்ஞை பூர்வமான உரையாடல்களுக்கான வெளிகள் திறக்கப்படுவதும், அவை தொடர்ச்சியாக மேற் கொள்ளப்படுவதும் நடைபெறுவதனை அவதானிக்க முடியும்.

சமகால வாழ்வியலுக்கான முன்னெடுப்பு எனும் நோக்கத்தில் குறித்த ஒருவிடயம் சமகாலத்தில் நாம் மனிதர்களாக வாழ்வதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கியமான சவாலை எதிர் கொள்வதற்கான உரையாடல்களமாகவும் செயற்பாட்டு வெளியாகவும் ஆக்கபூர்வமான நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதனை சமகால உலக நிலவரங்க;டாக அறியமுடிகின்றது.

ஊதாரணமாக வங்காள தேசத்தில் வங்காள மொழியை அரசகருமமொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களின் நினைவுதினத்தை சர்வதேசரீதியில் மொழி தொடர்பான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தினமாகவலியுறுத்தக் கோரிகுறித்த நினைவுநாள் தொடர்ச்சியாக நினைவு கூரப்பட்டதன் விளைவாகவே உலகதாய் மொழிகள் தினம் குறித்தநாளான பெப்ரவரி 21 இல் ஐ.நா வால் பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறுஒருவிடயம் வாழ்வியலுக்கானமுன்னெடுப்பாகஆக்கபூர்வமானநோக்கத்துடன் தொடர்ச்சியாகமுன்னெடுக்கப்படும்

போதுஅதுகாத்திரமானஅதிர்வுகளையும்,தாக்கங்களையும் விளைவித்துள்ளமைக்குபலசான்றுகள் கிடைக்கின்றன.

இப்பின்னணியில் நாம் நமது சூழலில் தைப்பொங்கலை அடுத்துவரும் நாளானபட்டிப் பொங்கல் தினத்தைக் கொண்டாடுவது தொடர்பாக காத்திரமான உரையாடல்களை நடத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் விவசாயத்தில் மாட்டுப் பட்டிகளின் வகிபங்கு முக்கியத்துவமுடையதாக விளங்கிவருகின்றது.

மாட்டுப் பட்டிகளுக்குரிய உரிமையாளர்கள், மாட்டுப் பட்டிகளைப் பராமரிப்பவர்கள், இம்மாடுகளின் பாலினைப் பெற்று ஊரூராக விற்றுவாழ்க்கை நடத்தும் பால் வியாபாரிகள், தயிர், நெய் தயாரிப் போர் அவற்றினை வாங்கிவிற்போர், இத்தகைய உள்ளுர் உற்பத்திகளை நுகரும் உள்ளுர், வெளியூர் வாடிக்கையாளர்கள் என பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் வாழ்வியலுடன் பிணைக்கப்பட்ட ஆதாரமாக மட்டக்களப்பின் பாரம்பரியமான மாட்டுப் பட்டிகள் விளங்கிவருகின்றன.

சுருங்கக் கூறினால் மட்டக்களப்பின் தமிழ் பேசும் சமூகங்களின் உள்ளுர் சுய பொருளாதாரத்தினை இன்று வரைக்கும் தற்காத்துக் கொண்டிருக்கும் வளமாக உள்ளுர் மாட்டு வளம் விளங்கிவருகின்றது.

இவ்வாறு மட்டக்களப்பாரின் சுயசார்பான பொருளாதா ரத்தை தக்கவைக்கும் மாட்டுப் பட்டிகளின் பொறிமுறைகள் சமகாலத்தில் பலசவால்களுக்கு முகங்கொடுத்து வருவ தனைக் காண முடிகின்றது. மாட்டுப் பண்ணையாளர்கள் பல்வேறு சவால்களை எதிர் கொண்டே தமது மாட்டுப் பட்டிகளைப் பராமரித்து வருகின்றார்கள்.

2014 ஆம் ஆண்டுகிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத் துறையினால் நடத்தப்பட்டபட்டிப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டபலமாட்டுப் பட்டிக்காரர்கள் தாம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்தார்கள்.

குறிப்பாக உள்;ர் மாடு வளர்ப்பாளர்கள் வங்கிகளில் கடனுதவிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ளசிக்கல்கள், மேய்ச்சல் நிலங்களை உறுதிப்படுத்துவதில் உருவாகும் நெருக்கடிகள், புதிய வெளிநாட்டு மாடுகளின் இறக்குமதியும் இம்மாடுகளுக்கு ஊக்கமருந்துகள் செலுத்தப்பட்டு அம்மாடுகளிலிருந்து அதிகபால் பெறப்படுவதுபற்றிப் பலசாதக மற்றவிடயங்கள் உரையாடப்பட்டன.

அதேபோல் உள்;ர் மாடுகளினால் பல்லாயிரக் கணக்கானமனிதர்கள் நன்மைபெறும் நிலைமைகள் எடுத்துக் காட்டப்பட்டு உள்;ர் மாட்டுப் பட்டிகளின் சமகால முக்கியத்துவம் அனைத்து மட்டத்தினருக்கும் உணர்த்தப்படல் அவசியமானது என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு குறித்தபட்டிப் பொங்கல் விழாவானது வாழ்வியலுக்கான எண்ணக்கருவை முன்வைத்த முன்னெடுப்பாக நுண்கலைத் துறையினால் நடத்தப்பட்டிருந்ததுடன் இவ்விடயம் சார்ந்து ஆக்கபூர்வமான உரையாடல்களையும் ஆரம்பிக்க வழிவகுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒர்உயர் கல்விநிறுவனம் என்றவகையில் கிழக்குப் பல்கலைக் கழகம் அதுசார்ந்த பிராந்தியத்தின் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியின் சமகால முக்கியத்துவத்தினை எண்ணக் கருவாக முன்வைத்து முன்னெடுத்து உள்ளமைமிகவும் சாதகமானது.

பண்பாட்டுப் பீடத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தபட்டிப் பொங்கல் விழாகுறித்த எண்ணக்கருவுடன் விவசாயத்துறை, பொருளியல் துறைஎன்பன இணையும் போது அதுகாத்திரமான நடைமுறைகளின் பரிமாணத்திற்கு இட்டுச் சென்று முழு நாட்டினதும் உள்;ர் மாட்டுப் பட்டிகளைப் பாதுகாத்து சுயசார்பான பொருளாதாரத்தை வலுவாக்கும் கண்டுபிடிப்புக்களுக்கும் முன்மொழிதல்களுக்கும் ஏதுவாக அமையும். இந்தநிலைமைகளுக்கான தொடக்கமாக வேபல்கலைக்கழகத்தின் பட்டிப் பொங்கல் விழாஅமைந்திருந்தது.

இத் தொடக்கத்தைப் பரவலாக்கி கிழக்குப் பல்கலைக் கழகத்தினதும், இத்துறைசார்ந்த அரசதுறைகளினதும் காத்திரமான பங்களிப்புடன் கிழக்குப் பிராந்தியத்தின் உள்;ர் மாட்டுப் பட்டிகளை வலுவாக்கும் பொறிமுறைகளை உருவாக்க சிவில் சமூகநிறுவனங்கள், அமைப்புக்கள் முதலியவற்றின் மாட்டுப் பொங்கல் விழாக்கள் அழுத்தங்களை கொடுக்கவேண்டியது தேவையாகியுள்ளது.

எனவே இன்றையகாலத்தில் சிவில் சமூகங்களில் நடத்தப்படும் மாட்டுப் பொங்கல் அல்லதுபட்டிப் பொங்கல் விழா என்பது மேற்குறித்த வாழ்வியலுக்கான முன்னெடுப்புஎனும் எண்ணக்கருவின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகி உள்ளது.

ஏனெனில் நிலமும் வளமும் பாதுகாக்கப்பட்டால்தான் நமதுபண்பாடும் அடையாளங்களும் அர்த்தம் பெறும்.