குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

19.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சிறிரங்கம் இடைத்தேர்தல்: யெ., பிரசாரம் செய்வாரா?

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலர் யெயலலிதா தண்டனை பெற்றதால் சிறிரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.பதவி பறிபோனது.இத்தொகுதிக்கு பிப். 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கட்சிவேட்பாளராக வளர்மதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலராக ஜெயலலிதா பிரசாரம் செய்ய செல்வாரா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் பிரசாரம் செய்யும் வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டு அதனை பிரசாரத்தில் பயன்படுத்திட திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கினறன.

யாருக்கு ஆதரவு?: ராமதாஸ் பேட்டி
சேலம்: சேலத்தில் பா.ம.க.நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என கூறியுள்ளார். கருணாநிதி கூறியுள்ளதை பா.ம.க. கருத்தில் கொண்டுள்ளது என்றார்.
மீண்டும் தீ குழந்தையால் பரபரப்பு
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் கருணா, ராஜேஸ்வரி தம்பதியினரின் கைக்குழந்தை , உடல் தீப்பற்றி எரிவதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு, ராகுல் என்ற ஆண் குழந்தை உடல் தீப்பற்றி எரிவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவாலின் முதல்வர் நாடகம்: காங்.புத்தகமாக வெளியிட்டது
புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. மும்முனைப் போட்டி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங். கட்சி சார்பில் மூத்த தலைவர் அஜெய் மக்கான் இன்று புத்தகம் ஒன்று வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்கள் முதல்வராக இருந்து நாடகமாடியதையும், , தேர்தலுக்கு முன் 16 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து அதை நிறைவேற்றாமல் இருந்தையும் , லஞ்சத்தை ஒழிப்பதாக கூறி பிசாரம் செய்து விட்டு, லஞ்சத்தை காங்.கிற்கு கொடுங்கள், ஓட்டினை எனக்கு அளியுங்கள் என பேசியதையும், முதல்வருக்குரிய சகல சலுகைகளையும் அனுபவித்ததையும்அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கு: லக்வி கோர்ட் காவல் நீட்டிப்பு
இஸ்லாமாபாத்: 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கரே தொய்பா பயங்கரவாதி ஜாகி ஊர் ரஹ்மான் லக்வி மீது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்துவருகிறது.ஏற்கனவே ஜாமினில் இருந்த நிலையில் ஜாமின் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அடிலா சிறையிலடைக்கப்பட்டார். இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இதில்அவரது கோர்ட் காவல் ஒரு மாதம் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
விஜயகாந்திற்கு எதிரான வழக்கிற்கு இடைக்காலை தடை
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை குறித்து தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. ஏற்கனவே சுப்ரமணியசுவாமி மீதான வழக்கிற்கு அவர் தடை வாங்கியிருந்தை சுட்டிகாட்டி, இந்த வழக்கிற்கும் தடை கோரி விஜயகாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர், இடைக்கால தடை விதித்து 6 வாரத்திற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஜெட்லி- ஜெ., சந்திப்பு: கருணாநிதி சந்தேகம்
சென்னை: மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, அ.தி.மு.க.பொதுச்செயலர் ஜெயலலிதாவை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார். இது தொடர்பாக தி.மு.க.தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அதில், கோர்ட்டில் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவரை (ஜெயலலிதாவை ) வீட்டுக்கே சென்று சந்தித்தது முறையா? ஜெ., மீதான வருமானவரி வழக்கினை திரும்ப பெற்றதில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்பழகன் மனு : நீதிபதி உத்தரவு
பெங்களூரூ: ஜெ.,மீதான சொத்து குவிப்புவழக்கின் அப்பீல் விசாரணையில் அரசு வக்கீல் பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வைச் சேர்ந்த அன்பழகன் சார்பில் தாக்கலான மனுவை நீதிபதி ஆனந்தபைரவ ரெட்டி விசாரிக்க உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு: 9-வது நாளாக விசாரணை
பெங்களூரூ: சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான அப்பீல் விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் இன்று 9-வது நாளாக விசாரணை நடக்கிறது. ஜெ.,தரப்பு வக்கீல் ஆஜராகி வாதாடி வருகிறார். அப்போது ஜெ., போயஸ் தோட்டம், திராட்சை தோட்டம் ஆகியவை குறித்து தவறான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வாதாடினார்.
லஷ்கர் ஊடுருவல்: உளவு துறை எச்சரிக்கை
புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த வாரம் இந்திய வருகிறார். குடியரசு தின விழாவில்பங்கேற்கிறார்.இந்நிலையில் லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பினர் எல்லையில் ஊடுருவி தாக்குதல்நடத்திட திட்டமிட்டுள்ளதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓபாமா இந்தியா வருகை: எல்லையில் வரலாறு காணாத பாதுகாப்பு
புதுடில்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஓபாமா வருகையையொட்டி புதுடில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய, பாக் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளதால், அங்கு கூடுதலாக பத்து கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர்( பி.எஸ்.எப்.) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை:மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு
மதுரை: மதுரை, முனிச்சாலை பகுதியில் திடீரென மர்மபொருள் வெடித்ததால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். வெடித்தது நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் சக்தி வாய்ந்த குண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தினால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பூமிக்குள் இறங்கிய வீடு
சென்னை : சென்னை அடுத்த ஷெனாய் நகர் 8-வது குறுக்குத் தெருவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனருகே வீடு ஒன்று இரண்டரை அடிக்குக் கீழே பூமிக்கடியில் திடீரென இறங்கியது கட்டடத்தில் விரிசலும் ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை வீட்டு உரிமையாளர் முருகன எனதெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர்.
தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை
வேலூர் : வேலூர் பள்ளிகொண்டா அருகே கீழெச்சூர் பகுதியில் நள்ளிரவில் விவசாயி இளங்கோ (35) என்பவரை மர்மநபர்கள் கழுத்தை நெறித்தும், தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இவருக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள்
சென்னை: கரூர், திருச்சி பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடிக்க அதிகாரிகள் மறுத்ததால், அமைச்சர் செந்தில்பாலாஜியின், சென்னை, வீட்டை, லாரி உரிமையாளர்கள் 300 பேர் முற்றுகையிட்டு கைதாயினர். இதனால் அங்குபரபரப்பு நிலவுகிறது.
உயர் நீதிமன்றங்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்ற மத்திய அரசு திட்டம்
மும்பை, சென்னை உயர் நீதிமன்றங்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்ற மத்திய அரசு திட்டம்புது டில்லி:சென்னை, மும்பை உயர் நீதிமன்றங்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்றி, அவை அமைந்துள்ள நகரங்களுக்கு ஏற்றவாறு பெயரிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து, மத்திய அரசு இந்த இரு உயர் நீதிமன்றங்களின் பெயர்களையும் மாற்றத் திட்டமிட்டுள்ளது.இதற்காக ஒரு மசோதாவைக் கொண்டுவர மத்திய சட்ட அமைச்சகம் உத்தேசித்துள்ளது.
எந்த முறையற்ற செயலிலும் ஈடுபட்டதில்லை: முகுல் ராய்
போங்கான்:அரசியலிலும், தமது சொந்த வாழ்விலும் எந்த முறையற்ற செயலிலும் ஈடுபட்டதில்லை என, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் ராய் கூறினார்.சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முகுல் ராய்க்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.கட்சியிலும், பொதுவாழ்விலும் நான் இதுவரை எந்த முறையற்ற செயலிலும் ஈடுபட்டதில்லை என்றார் அவர்.
1,000 அமெரிக்க வல்லுனர்கள் ஐ.ஐ.டி.,யில் கற்றுத்தர ஏற்பாடு
புதுடில்லி:இம்மாதம் 25ல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வரும் போது, இந்திய உயர்கல்வி நிலையங்களில், அமெரிக்க வல்லுனர்கள் பாடம் நடத்துவது குறித்த உடன்பாடு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில், 15 நாட்கள் அல்லது 20 நாட்கள், அமெரிக்க வல்லுனர்களை உரையாற்றச் செய்வது, அதற்காக, அதிகபட்சம் ஏழு லட்சம் ரூபாய் வரை வழங்குவது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, 1,000 அமெரிக்க வல்லுனர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இறுதி
முடிவு, இம்மாதம் 25ல், எடுக்கப்படும். குடியரசு தின விழாவில் பங்கேற்க டில்லி வரும் அமெரிக்க அதிபர், பராக் ஒபாமாவுடன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடத்த உள்ள பேச்சில் இறுதி செய்யப்படும்.
மாஜி எம்.எல்.ஏ.,தொந்தரவால் தப்பி ஓடிய ஆம் ஆத்மி தலைவர்
புதுடில்லி:மாஜி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., தொந்தரவு தாங்கமுடியாமல், சுவர் ஏறி தப்பி ஓடினார் ஆம் ஆத்மி தலைவர். முன்னாள் ஆம்.ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.,வான ராஜேஷ் கார்ஹ்ஹின் தொந்தரவு தாங்க முடியாமல் அக்கட்சியின் தலைவரான அசுதோஷ் ஹெக்கல்டு சுவர் ஏறி தப்பி ஓடிவிட்டார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.