குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

பசிலைவழிநடத்தியது இந்தியா வேதாளம் வெளியேவராது வால்மட்டும் பிடிபட்டிருக்கு!

30.06.2011.த.ஆ.2042---விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையப் போவதாக விடுத்திருந்த அறிவித்தல் களமுனைக்குக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அவர்கள் போரின் போது கொல்லப்படக் காரணமாக அமைந்து விட்டதாக அரசாங்கத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. தாருசுமான் அறிக்கை மற்றும் சனல்4 காணொளி என்பவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் தயாரிக்கும் இரண்டு அறிக்கைகளில் ஒன்றிலேயே பிரசுதாப விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடையும் விடயம் மே 17ம் திகதி நண்பகலே அன்றைய காலகட்டத்தில் சனாதிபதியின் சிரேச்ட ஆலோசகராக இருந்த பசில் ராயபட்சவுக்கு கிடைத்திருந்தது.

ஆயினும் களமுனையில் கடுமையான யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால், அத்தகவல் உரிய நேரத்தில் களமுனையின் கட்டளை அதிகாரிகளைச் சென்றடையவில்லை. அதன் காரணமாகவே மோதலின் போது விடுதலைப் புலிகளின் முக்கியசுதர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன் வன்னி போர் காலகட்டத்தில் மருந்துப் பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்கும் பொறுப்பு பசில் ராயபட்சவிடமே இருந்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரசுதாப அறிக்கை மூலம் இதுவரை காலமும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராயபட்சவும், சனாதிபதி மகிந்த ராசபட்சவும் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலைமாறி தற்போது அமைச்சர் பசில் ராசபட்சசவின் பெயரும் அதில் உள்ளடக்கப்படக் கூடிய சூழல்  ஏற்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.