குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

18.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அமெரிக்க கோரிக்கை: இந்தியா மறுப்பு

புதுடில்லி: குடியரசு தின கொண்டாட்டங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். இவரின் வருகையின்போது, பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் நான்கு பேர், ஒபாமா பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த டில்லி வந்துள்ளனர்.

இந்திய அதிகாரிகளுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, குடியரசு தினத்தன்று, குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பத் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்திய அதிகாரிகள் இந்த கோரிக்கையை ஏற்ற மறுத்துள்ளனர்.

கூடங்குளத்தில் மீண்டும் மின்உற்பத்தி
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த டிசம்பர் 14ம் தேதி முதல் வணிகரீதியான மின் உற்பத்தி துவங்கியது. இந்நிலையில், ஜனவரி 14ம் தேதி, கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், இன்று முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கி உள்ளது.
ஸ்ரீரங்கம் தேர்தல்: அன்புமணி கருத்து
சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க,வின் அன்புமணி, 'மரியாதை நிமித்தமாகவே பா.ஜ., தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ம.க. தலைமை முடிவெடுக்கும்,' என்றார்..
சோனியாவுக்கு நோட்டீஸ்
புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அளிப்பதை தவிர்த்ததற்காக, மத்திய தகவல் ஆணையம் காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பா.ஜ., முதல்வர் வேட்பாளர்:ராஜ்நாத்சிங்
புதுடில்லி: டில்லி பா.ஜ., முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார். முன்னதாக, பிடிஐ நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், டில்லி முதல்வர் வேட்பாளர் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் ஆட்சி மன்றக்குழு இறுதி முடிவை எடுக்கும்” என்றார்.
ஸ்ரீரங்கம்: நாளை வேட்பு மனு தாக்கல்
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13ம் தேதி நடக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நாளை முதல் அங்கு வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.
கட்காரி, ஜெட்லி இன்று வருகை
சென்னை: சென்னையில் நடைபெறும் ஆடிட்டர் குருமூர்த்தி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். நேற்று நள்ளிரவு சென்னை வந்த அமித்ஷா இன்று மதியம் 1.30 மணியளவில் டில்லி புறப்படுகிறார். முன்னதாக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பா.ஜ., வேட்பாளர் குறித்த அறிவிப்பை வௌியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
ராணுவ ஆள் எடுப்பு முகாமில் நெரிசல்
பெரம்பலூர்: பெரம்பலூர், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் முகாம் இன்று காலை துவங்கியது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலில், அங்கிருந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கி மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
6 மாநிலங்களுக்கு விரைவில் புது கவர்னர்கள்
புதுடில்லி : அடுத்த 15 முதல் 20 நாட்களில் சுமார் 6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பீகார், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கிரண்பேடிக்கு ஆர்.எஸ்.எஸ் ஒப்புதல்
புதுடில்லி : பா.ஜ.,வில் புதிதாக இணைந்துள்ள கிரண் பேடியை டில்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஆர்.எஸ்.எஸ்., ஒப்புதல் தெரிவித்துள்ளது. கிரண்பேடியை பா.ஜ.,வில் சேர்த்ததால் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவலையும் ஆர்.எஸ்.எஸ்., திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பா.ஜ., பார்லி.,குழு அடுத்த வாரம் கூடி, கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து முடிவெடுக்க உள்ளது.
அமெரிக்க கோரிக்கையை ஏற்க இந்தியா மறுப்பு
புதுடில்லி : அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்க உள்ளதால் குடியரசு தின விழா அணிவகுப்பு நடக்கு ராஜ்பாத் பகுதியைச் சுற்றி 5 கி.மீ., சுற்றளவிற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், போதிய அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா கூறுவதை செய்வது சாத்தியமில்லை எனவும், விமானத்திற்கு தடை விதிக்க வேண்டுமானால் அதற்கு ராணுவத்தின் ஒப்புதல் தேவை எனவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரசிற்கு கிரண்பேடி பதிலடி
புதுடில்லி : தனது அரசியல் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக கிரண்பேடியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் அன்னா ஹசாரேவை பயன்படுத்திக் கொண்டதாக காங்கிரசின் அஜய் மக்கான் கூறிய கருத்திற்கு பதிலளித்த கிரண்பேடி, அது எனது பழக்கம் இல்லை. எப்போதும், எதற்காகவும் யாரையும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது தான் எனது சுபாவம். ஒவ்வொரு சந்தர்பத்திலும் என் மனதிற்கு எது சரி எனப்படுகிதோ அதை மட்டும் தான் நான் செய்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
சென்னை:ரூ.14 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
சென்னை:சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு அதிகளவு பணத்தை கொண்டு செல்ல முயன்ற பயணி மீது புகார் எழுந்ததை அடுத்து, பயணியிடமிருந்த ரூ.14 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2014 பூமியின் அதிவெப்பமான ஆண்டு:அமெரிக்கா
வாஷிங்டன்:உலகம் முழுவதும் மக்கள் நிலத்தடி எரிபொருட்களைப் பயன்படுத்தி கிரீன்ஹவுஸ் வாயுக்களை காற்றில் கலக்கச் செய்து சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்ததால் 2014ஆம் ஆண்டு பூமியின் அதிகமான வெப்பமடைந்த ஆண்டாக அமெரிக்க அரசின் இரு அறிவியல் அமைப்புகள் கூறியுள்ளன. இதுகுறித்து நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்., செயல்கள் முறியடிக்கப்படும்: ராஜ்நாத் சிங்
புதுடில்லி:வரும் 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகிறார்.இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானின் செயல்களால் இந்தியா பயப்படவில்லை. இந்தியாவின் அமைதியைச் சீர்குலைக்க பாகிஸ்தான் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்படும். குடியரசு தின விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவிதத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.மேலும் புதிய பெயரில் தீவிரவாதக் குழுக்கள் உருவாவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதித்தால் தடுப்பேன்:ஒபாமா
வாஷிங்டன்:ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டால் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.வெள்ளை மாளிகைக்குவந்திருந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் இணைந்து பேசும் போது இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஒபாமாவை அக்ராவிற்குள் அனுமதிக்க மாட்டோம்: வழக்கறிஞர்கள்.

மதுரா: வடக்கு உத்தர பிரதேச பகுதியில் அலகாபாத் ஐகோர்ட் கிளை அமைக்காவிட்டால், ஆக்ராவுக்குள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அனுமதிக்க மாட்டோம் என உ.பி.,வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: ஜனவரி 26ம் தேதிக்குள் அலகாபாத் ஐகோர்ட் கிளை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி கொடுத்தால், அதிபர் ஒபாமா ஆக்ரா நகருக்குள் வருவதற்கு தடை செய்ய மாட்டோம் என கூறியுள்ளனர். மேலும், அதுவரை கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறியுள்ளனர்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.