குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

17.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

திருவள்ளுவருக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி: திருக்குறளின் குஜராத்தி மொழி பெயர்ப்பை நேற்று வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் புகழாரம் சூட்டினார்.இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: திருக்குறள், சாதாரணமானது அல்ல; இந்த பிரபஞ்சத்துக்கான வேதம். எளிமையான வரிகளில் ஏராளமான அர்த்தங்களை கொண்டது.

 

 

மனிதநேயத்தை வலியுறுத்தும் முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எப்போதோ எழுதப்பட்ட இந்த திருக்குறள், இப்போதைய காலத்துக்கும் பொருத்தமானதாக உள்ளது. திருக்குறள், எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையோ, தலைவரையோ, மொழியையோ, மதத்தையோ, ஜாதியையோ குறிப்பிடவில்லை. அனைத்து நாடுகளுக்கும், அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமானதாக உள்ளது. இதனால் தான், திருக்குறளை பிரபஞ்ச வேதம் என்கிறேன். திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு, அந்த அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

கெஜ்ரிவாலை விட கிரண்பேடி மேல்:ராம்தேவ்

புதுடில்லி : டில்லி முதல்வராவதற்கு ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட பா.ஜ.,வின் கிரண்பேடி அந்த பதவிக்கு தகுதியானவர் என யோகாகுரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் கிரண்பேடியிடம் இருப்பதாகவும், அவர் தெளிவான வலுவான முடிவு எடுக்கக் கூடியவர் எனவும் ராம்தேவ் தெரிவித்துள்ளார்.


ஆக்ராவில் பலத்த பாதுகாப்பு

ஆக்ரா : குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வருவதையொட்டி ஆக்ராவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக டில்லி-ஆக்ரா சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒபாமா, தாஜ்மஹாலை பார்வையிட செல்வார் என எதிர்பார்க்கப்படுவதால் தாஜ்மஹாலை சுற்றி உள்ள ஹோட்டல்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை : ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள் குறித்த பட்டியலை தமிழக தேர்தல் கமிஷனுக்கும், தலைமை தேர்தல் கமிஷனுக்கும் அரசியல் கட்சிகள் அனுப்ப வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பட்டியலை அளித்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பிரசாரம் செய்பவர்களின் பயண செலவுகளை வேட்பாளரின் தேர்தல் செலவுடன் சேர்ப்பதி்ல் இருந்து விலக்கு அளிக்கப்படும். பட்டியலில் இல்லாத நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சார பயண செலவு வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.


நேரு தலைமையில் திமுக பொறுப்பாளர் குழு

சென்னை : ஸ்ரீரங்கம் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக திமுக சார்பில் கே.என்.நேரு தலைமையில் பொறுப்பாளர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 63 பேர் கொண்ட இந்த குழுவின் எ.வ.வேலு, அன்பழகன், ஆ.ராசா, பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


20 ஆண்டுகளுக்கு மம்தா தான் முதல்வர்:மித்ரா

கோல்கட்டா : சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேற்குவங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா அளித்த பேட்டியில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மம்தா பானர்ஜி தான் முதல்வர் பதவியில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.


எஸ்.ஐ.,யை தாக்கி 6 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை : மயிலாடுதுறையை அடுத்த கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் மணிகண்ட கணேஷ். இவர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சாலையில் அமர்ந்து சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்ட மணிகண்ட கணேஷ், அவர்களை எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசாரை தாக்கியும், தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். காயமடைந்த எஸ்.ஐ., மணிகண்ட கணேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


வலைதள ஊடுருவலாளர்களால் உலகப் போர்

வாஷிங்டன் : நியூயார்க் போஸ்ட் மற்றும் யுனைடெட் பிரஸ் இன்டர்நேஷனல் போன்ற அமெரிக்க பத்திரிக்கைகளின் டுவிட்டர் வலைதளத்திற்குள் ஊடுருவிய மர்ம நபர்கள் சிலர் போலியான தகவல்கள் சிவற்றை பதிவு செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா-சீனா இடையேயான உறவை சிதைக்கும் வகையில் அந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக யு.பி.ஐ.,யின் டுவிட்டர் பகுதியில் போப் பிரான்சிஸ், மூன்றாம் உலகப்போர் துவங்கி விட்டதாக கூறியதாக தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல போலி தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உலக நாடுகளிடையே சண்டையை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை மர்ம நபர்கள் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.


மும்பை மெட்ரோவில் பலத்த பாதுகாப்பு

மும்பை : ஜனவரி 26ம் தேதியன்று தாக்குதல் நடத்தப்படும் என மும்பை விமான நிலையத்தின் கழிவறை சுவற்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நேற்று எச்சரிக்கை வாசகத்தை எழுதி இருந்ததை அடுத்து மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையும் எச்சரித்துள்ளதால் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


முழுவீச்சில் சீரமைப்புக்கள்:மோடி உறுதி

துடில்லி : நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பது, ஊக்குவிப்பதற்கான உள்கட்டமைப்புக்களின் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இதனை சரிசெய்து வளர்ச்சியை ஏற்படுத்தினால் மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விதிமுறைகள், வரி விதிப்பு முறைகள், தேவையானவர்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்டவைகள் அரசின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்:வைகோ

கலிங்கபட்டி : ஜல்லிக்கட்டிற்கு விதித்துள்ள தடையை சுப்ரீம் கோர்ட் நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். கலிங்கப்பட்டியில் ரத்த தான முகாமை துவக்கி வைத்து பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துள்ள துரோகங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.


டில்லி தேர்தலில் சிவசேனா போட்டி ?

மும்பை : டில்லி சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து யாருடனும் பேசவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனக்கு பாதிப்பு கிடையாது:ஹசாரே

புதுடில்லி : கிரண்பேடி பா.ஜ.,வில் இணைந்துள்ளது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது என சமூகஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும், நான் எனது போராட்டத்தை துவங்கும் போது யாரும் என்னுடன் இல்லை. இப்போதும் நான் தனியாகத் தான் உள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு எனது போராட்டத்தை தொடர்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


போயஸ்கார்டனில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்; ஜெ., மரியாதை;

சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெ., போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் 8 பேர் கூண்டோடு ராஜினாமா

புதுடில்லி: திரைப்பட தணிக்கை குழு தலைவர் லீலாசாம்சன் நேற்று அரசியல் தலையீடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக , உறுப்பினர்கள் 8 பேர் இன்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இவர்கள் கூட்டாக தங்களின் கடிதத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.


டி.ஆர்.டி.ஓ., புதிய தலைவர் சேகர்பாசு?

புதுடில்லி:மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் புதிய தலைவராக சேகர் பாசு நியமிக்கப்பட உள்ளார். முன்னதாக இந்த ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த அவினாஷ் சந்தர் என்பவரை மத்திய அரசு நீக்கம் செய்தது. தொடர்ந்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனக்கமிட்டி சேகர்பாசுவை தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது இவர் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குனராக இருந்து வருகிறார்.


மாளவியாவிற்கான விருது பெறுவதில் குழப்பம்

லக்னோ: பனாரஸ் இந்து பல்கலைகழகம் உருவாக்கிய மதன்மோகன் மாளவியாவிற்கு மத்திய அரசு சமீபத்தில் பாரத்ரத்னா விருதை அறிவித்தது.தற்போது இந்த விருதை யார் பெறுவது என்று குடும்பத்தின் மூத்த உறுப்பினர் களிடையே குழப்ப நிலை நிலவிவருவதாக கூறப்படுகிறது. மதன் மோகன் மாளவியாவின் மருமகளும் கடைசி மகனின் மனைவியான சரஸ்வதி மாளவியா (92) தனது குடும்ப பந்தம் குறித்த கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குழப்ப நிலை நிலவி வருவதை மறுத்துள்ள மதன் மோகன் மாளவியாவின் பேரனும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரிதர் மாளவியா விருது வழங்கும் விழா வாரணாசியில் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிட வேண்டுமென முன்மொழி்ந்தவர்களில் இவரும் ஒருவராவார். இந்நிலையில் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான மதன் மோகன் மாளவியாவி்ன பேத்தி ஹேம் சர்மா (95)வும் விருது பெறும் பெயர் பட்டியலில் உள்ளார் என கூறப்படுகிறது.


2014-ல் தேர்தல் செலவு பா.ஜ முதலிடம்

புதுடில்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்ளவை மற்றும் மாநில சட்டசபை தேர்தலில் தேசிய கட்சிகளான பா.ஜ., காங்., மற்றும் கம்யூ., செலவு செய்த தொகைகைள தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் பா.ஜ., 714 கோடியும், காங்., 516 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது. முன்னதாக தேர்தல் செலவு செய்தது குறித்த கணக்கை பல்வேறு கட்சிகள் தாக்கல் செய்யாமல் இருந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் கட்சியின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதங்களில் 12-ம் தேதி தாக்கல் செய்த கணக்கில் பா.ஜ.,714 கோடியே28 லட்சத்து 57 ஆயிரத்து 813 ரூபாயும்,22 -ம் தேதி காங்., 516 கோடியே 2 லட்சத்து, 36 ஆயிரத்து785 ரூபாய் என தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


இந்தியாவிற்கான நேபாள தூதர் நியமனம்

காத்மாண்டு: மூன்றாண்டு காலஇடைவெளிக்கு பின்னர்இந்தியாவிற்கான நேபாள தூதர் நியமனம் செய்யப்பட்டார். நேபாள நாட்டில் வெள்ளி்க்கிழமை பிரதமர் சுஷில் கொய்ராலா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம் முடிவு குறித்து அறிவிக்கப்பட்டது. இதன்படி நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்நத மூத்த தலைவர் தீ்ப்குமார் உபாத்யாய் இந்தாவிற்கான தூதராக நியமி்க்கப்பட்டுள்ளார். முன்னதாக தூதராக பணிபுரிந்து வந்த ருக்மா சுக்ஸ்ரீரானா மாற்றப்பட்ட நிலையில் தூதர் பணியிடம் மூன்றாண்டுகள் வரை நிரப்பப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.


மாஜி முதல்வர் கொலை: குற்றவாளியை இந்தியா கொண்டு வர முடிவு

டில்லி: பஞ்சாப் முன்னள் முதல்வர் பியாந்த்சிங், 1995-ம் ஆண்டு கார் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டர் பாபர்கல்சா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இதில்கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான ஜக்தர்சிங் தாரா, 2005-ம் ஆண்டு பஞ்சாப் சிறையில் இருந்து தப்பியோடினார்.பஞ்சாப்- தாய்லாந்து போலீசார் நடத்திய ரகசிய வேட்டையில்தாய்லாந்தில் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கினை சி.பி.ஐ.விசாரிக்கிறது. தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தி இந்தியா கொண்டுவர முடிவு செய்துள்ளது.


அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்பேன்: வளர்மதி

சென்னை :'தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்துக் கூறி, ஓட்டு கேட்பேன்' என, அ.தி.மு.க., பெண் வேட்பாளர் வளர்மதி தெரிவித்தார்.திருச்சி மாநகர் மாவட்ட இணைச் செயலரும், வழக்கறிஞருமான வளர்மதி, முதன் முறையாக, சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.இது குறித்து, அவர் கூறியதாவது:ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில், எனக்கு போட்டியிட வாய்ப்பளித்த, ஜெயலலிதாவிற்கு நன்றி. கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகளை, மக்களிடம் எடுத்துக் கூறி, ஓட்டு கேட்பேன்; இதுவே, நான் வெற்றி பெறுவதற்கு போதுமானது. வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


ஜெ.,யை சந்தித்து ஆசி பெற்றார் அ.தி.மு.க., வேட்பாளர்

சென்னை: ஸ்ரீரங்கம் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, ஆசி பெற்றார்.வளர்மதி நேற்று, சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதாவை சந்தித்து, ஆசி பெற்றார். அவரை அருகில் இழுத்து அணைத்தபடி, ஜெயலலிதா நின்ற வீடியோ காட்சி, 'டிவி'க்களுக்கு அனுப்பப்பட்டது. அதேபோல், புகைப்படம் பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளி வந்த பின், ஜெயலலிதா உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் என்பதால், வளர்மதி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.