நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா தலைமை தாங்குகிறார். முனைவர் இரா.திருமுருகனார் தொடக்கவுரையாற்றவும், முனைவர் தமிழப்பன் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர்.
தமிழ்க்காவல் இதழை வடிவமைத்த பொறிஞர் வே.முருகையன் வடிவமைப்பு விளக்கம் சொல்ல உள்ளார். நா.நந்திவர்மன், முனைவர் மு.இளங்கோவன், ஏ.வெங்கடேசு ஆகியோர் இணைய வளர்ச்சி பற்றி உரையாற்ற உள்ளனர்.
தி.பா.சாந்தசீலன், இரா.செம்பியன், முவ.பரணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். நன்றியுரை இரா.இளமுருகன்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் உறுப்பினர்கள் அரங்கில் செயல் விளக்கம் வழித் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்க உள்ளனர். தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.