குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

14.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கருணாநிதி பொங்கல் வாழ்த்து

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், 'தமிழர்கள் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திட எனது நல் வாழ்த்துக்கள்.

 

 

தைத் திங்களின் முதல் நாள் தமிழ் புத்தாண்டின் துவக்க நாளும் இது தான்' என கூறி உள்ளார்.

 

அமைச்சர் செந்தூர்பாண்டியன் கவலைக்கிடம்

சென்னை : உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் நேரில் சென்று, அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். செயலிழந்து வரும் செந்தூர்பாண்டியனின் மூளையை மீண்டும் செயல்பட வைப்பதற்கான சிகிச்சைகளை நரம்பியல் டாக்டர் தனராஜ் தலைமையிலான மருத்துவ குழு மேற்கொண்டு வருகிறது. செயற்கை கருவிகள் மூலம் அவரது மூளை இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

பா.ஜ., மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி: டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ' டில்லிக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கும், பா,.ஜ., தலைவர்களுக்கும் இடையில் ரகசிய தொடர்பு உள்ளது,' என குற்றம் சாட்டினார்.


சீனாவை இந்தியா எட்டிப்பிடிக்கும்

வாஷிங்டன்: இந்தியா, சீனாவின் 7சதவீத வளர்ச்சி என்ற இலக்கை வரும் 2016-17ம் ஆண்டில் எட்டிப் பிடித்துவிடும் என உலக வங்கி ஆருடம் கூறி உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் காரணமாக இது சாத்தியமாகும் என ஒரு அறிக்கையில் உலக வங்கி கூறி உள்ளது.


என் சகாப்தம் முடிந்துவிட்டது-ஷீலா

புதுடில்லி: டில்லி தேர்தலில் பிரசாரம் செய்வது குறித்து டில்லி முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் கூறுகையில், 'என்னுடைய சகாப்தம் முடிந்துவிட்டது. இது எனது சொந்த கருத்தாகும்,' என்றார். மேலும், ஒவ்வொருவரும் புகழுடன் செயலாற்றும் ஒரு சகாப்தம் உருவாகும். அது ஒருநாள் முற்றுப் பெறும்' என்று கூறினார்.


டி.ஆர்.டி.ஓ.,வுக்கு சேகர்பாசு தலைவர்?

புதுடில்லி: டி.ஆர்.டி.ஓ., தலைவர் அவினாஷ் சந்தர் நீக்கப்பட்ட விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டி,ஆர்.டி.ஓ,. அமைப்பின் புதிய தலைவராக சேகர் பாசு நியமிக்கப்படலாம் என தெரிகிறது. இவர், பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குனராக தற்போது உள்ளார்.


குறைதீர் கூட்டம் புறக்கணிப்பு

வால்பாறை: வால்பாறை அட்டகட்டியில், சப் கலெக்டர் லட்சுமி சித்தார்த் ஜெகடே தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தங்கள் பகுதியில் நடந்தால் மட்டுமே தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று கூறி, காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராம பழங்குடி மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.


முஷாரப் கொலை குற்றவாளி:பாக்., கோர்ட்

இஸ்லாமாபாத் : 2006ம் ஆண்டு நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது பொலக் பழங்குடியின தலைவர் அக்பர் புக்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப், குற்றவாளி என பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. முஷாரப், ராணுவ தளபதியாக இருந்த போது தான் இந்த ராணுவ தாக்குதல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டதாகவும் கோர்ட் உறுதி செய்துள்ளது.


இம்ரான்கானுக்கு பெற்றோர் எதிர்ப்பு

பெஷாவர்: கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பாகிஸ்தான், பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள், ஈவு இரக்கம் இல்லாமல், காட்டுமிராண்டித்தனமாக 142 மாணவர்களை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மீது பாக். அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பின்னர் தாக்குதலுக்கு உள்ளான பெஷாவர் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று இந்த பள்ளிக்கு பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவரான இம்ரான்கான் சென்றார். ஆனால், ஆவேசம் அடைந்த பெற்றோர், அவரை பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்து, விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

சென்னை : தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக போக்குவரத்து ஊழியர்கள் 1,37,800 பேருக்கு ரூ.7.70 கோடி மதிப்பிலான சாதனை ஊழக்கத்தொகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நுகர்பொருள் வாணிப கழக சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு செயலாக்க ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலையில் இன்று மகரஜோதி

சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மாலை 6.35 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.


காவல் பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவலர் மற்றும் தலைமை காவலர் நிலையில் 1500 பேருக்கு இப்பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


லக்சர் கமாண்டர் சுட்டுக்கொலை

ஜம்மு : காஷ்மீரின் சோபூர் பகுதியில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில், லக்சர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் அபு ஹூசைஃபா இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


பா.ஜ.,விற்கு ஷாஷியா பிரசாரம்

புதுடில்லி : ஆம்ஆத்மி கட்சியில் உறுப்பினராக இருந்து பின்னர் விலகிய ஹாஷியாஅல்மி பா.ஜ.,விற்காக பிரசாரம் செய்து வருகிறார். இவர், மிக விரைவில் பா.ஜ.,வில் இணைவார் என்றும், அவருக்கு டில்லியில் போட்டியிட சீட் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அலங்காநல்லூரில் கறுப்பு கொடி

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளதை கண்டித்து அலங்காநல்லூர் வர்த்தக சங்கத்தின் சார்பில் இன்று கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. இதையடுத்து, நகரின் அனைத்து கடைகளின் முன்பும், கறுப்பு கொடி ஏற்றப்பட்டது.


பா.ஜ., திரிணமூல் மோதல்: பதற்றம்

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், பிர்பும் என்ற இடத்தில் பா.ஜ மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் குண்டு வீச்சும் நடந்தது. இதில், திரிணமூல் காங்., தொண்டர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் காரணமாக பிர்பும் மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

அஜய் மக்கான் அனுபவசாலி:ஷீலா

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அஜய் மக்கான் குறித்து கருத்து தெரிவித்துள்ள டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித், அஜய் மக்கான் அனுபவசாலி. அவருக்கு கட்சியிலும் நல்ல பெயர் உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

திமுக வெற்றி பிரகாசமாக உள்ளது:ஸ்டாலின்

திருபோரூர் : திருப்போரூரில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து

சென்னை : தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று அமைதியுடன் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

ஜன.,22ல் திமுக வேட்பு மனுதாக்கல்

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆனந்த், ஜனவரி 22ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.


பாதுகாப்பு துறை ஆய்வ கழக தலைவர் திடீர் நீக்கம்

புதுடில்லி : பாதுகாப்பு துறையின் ஆய்வு மற்றும் வளர்ச்சி கழக தலைவர் அவினாஷ் சந்தர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பதவி காலம் முடிவடைவதற்கு 16 மாதங்கள் முன்னதாகவே இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


சசிதரூர் மீது சாமி மீண்டும் தாக்கு

புதுடில்லி : பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சசிதரூரின் வேலைக்காரர் அளித்த வாக்குமூலத்தில் சுனந்தாவிற்கும் சசிதரூருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வந்ததாகவும், கேத்தி என்ற பெயரை கூறி அவர்கள் சண்டையிட்டு கொண்டதாகவும் கூறி உள்ளார். கேத்தி என்பது கேத்ரின் என்பதன் சுருக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.


தமிழக மக்களுக்கு மோடி பொங்கல் வாழ்த்து

புதுடில்லி : தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடும் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். வேறுமையில் ஒற்றுமையாக இந்த நாள் திகழ்கிறது.தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கங்கையில் 108 பிணங்கள் மீட்பு

கான்பூர் : கடந்த 3 மாதங்களில் மட்டும் கங்கை நதியில் இருந்து 108க்கும் மேற்பட்ட பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. நதியில் நீரின் அளவு குறைந்திருக்கும் வேளையில் பிணங்கள் அதிக அளவில் வீசப்படுவதால் தேக்கம் ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர் வாசிகள் புகார் அளித்ததன் பேரில் இந்த பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கான்பூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாக்., அரசுக்கு கெர்ரி கோரிக்கை

புதுடில்லி : இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, லக்ஷர் இ தொய்பா உள்ளிட்ட இந்தியாவை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராகவும் பாகிஸ்தான் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். லக்ஷர் இ தொய்பா பாகிஸ்தானிற்கும் மட்டுமல்ல அதன் அண்டை நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


லஞ்சத்தை ஒழிக்க களமிறங்கிய கே.சி.ஆர்.,

ஐதராபாத் : லஞ்சத்தை ஒழிப்பதற்காக, லஞ்சம் கேட்பவர்கள் குறித்து புகார் தர உடனடி அழைப்பு எண் ஒன்றை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட 3 நாட்களில் இதுவரை 2500 மக்களின் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார்களை பெறுவதற்காக துவக்கத்தில் 30 தொலைப்பேசி இணைப்புக்கள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு காரணமாக நேற்று 60 இணைப்புக்களாக விரிவுபடுத்தப்பட்டன. இதற்காக தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.


கறுப்புபணத்தை கணக்கிடவில்லை:அரசு

புதுடில்லி : வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கறுப்பு பணம் எவ்வளவு என இந்திய அரசு இதுவரை கணக்கிட்டுள்ளதா? அப்படி கணக்கீடு செய்யப்பட்டிருந்தால் மதிப்பீட்டு பணியில் எந்தெந்த அரசு துறைகள் பணியாற்றின? என்பது உள்ளிட்ட கறுப்பு பணம் குறித்த பலகேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முன்னாள் மத்திய தகவல்துறை கமிஷ்னர் ஷைலேஷ் காந்தி விபரம் கேட்டிருந்தார். மத்திய அரசிற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் அவர் அனுப்பி இருந்த மனுவிற்கு பதிலளித்த மத்திய அரசு வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தின் மதிப்பு எவ்வளவு என இதுவரை துல்லியமாக கணக்கிடப்படவில்லை என பதிலளித்துள்ளது.

 

ராஜபாளையம்:வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் பூட்டை அறுத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கொள்ளை முயற்சி குறித்து ராஜபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் போலீசார் விசாரணை செய்கின்றனர்.


ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்து விருது

லண்டன்:இங்கிலாந்து பத்திரிகையான சென்டிரல் பேங்கிங், 2015-ம் ஆண்டுக்கான விருதுகளில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு சிறந்த கவர்னர் விருது அறிவித்துள்ளது. இந்த விருது லண்டனில் மார்ச் மாதம் 12-ந்தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.


தி.மு.க., வேட்பாளர் கடந்த 2011ல் ஜெ.,விடம் தோற்றவர்

சென்னை: கடந்த 2011ம் ஆண்டு, நடந்த சட்ட சபைத் தேர்தலில், ஜெயலலிதாவை எதிர்த்து ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த அதே வேட்பாளர், தி.மு.க., சார்பில் மீண்டும் களம் இறக்கப்பட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க., சார்பில், என்.ஆனந்த் போட்டியிடுகிறார் என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி, நேற்று அறிவித்தார். முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த ஆனந்திற்கு, தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுடன், வேட்பாளர் ஆனந்த், நேற்று கோபாலபுரம் வீட்டிற்கு வந்து, கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, அங்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் வந்தார். தி.மு.க., தலைவராக, 11வது முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, திருமாவளவன் வாழ்த்துதெரிவித்தார். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றி வியூகம் குறித்து, கருணாநிதியும், திருமாவளவனும் ஆலோசனை நடத்தினர்.


ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பு போட்டி!

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவை களம்இறக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைவர் இளங்கோவனிடம் தெரிவித்து வருகின்றனர். அவர் பிரபலமான நடிகை என்பதால், குஷ்பு தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், கட்சி குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு ஓட்டுகளை பெறும் என, நம்புகின்றனர். இந்நிலையில், 'தி.மு.க., வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது' என சிலர், இளங்கோவனை வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் நேற்று, இளங்கோவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கோஷ்டி தலைவர்களிடமும் இளங்கோவன், தொலைபேசி மூலமாக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் பின், நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், போட்டியிடலாமா என்பது குறித்து, ஆலோசனை நடத்தியிருக்கிறோம். வேறு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது, பொது வேட்பாளருக்கான முயற்சி எடுப்பது என, பல விஷயங்கள் குறித்தும் கருத்து பரிமாற்றம் நடந்திருக்கிறது. அதை, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்துவோம். மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.


மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்ல மோடிதடை: கட்காரியும் தப்பவில்லை

புதுடில்லி: மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயண திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதில், அதிகம் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீபத் யசோ நாயக் தான். இதுமட்டுமின்றி, பிரதமருக்கு மிகவும் வேண்டியவர்கள், முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் என, நம்பப்படும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, வர்த்தக துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு இந்தியர் விவகாரத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் போன்றவர்களின் சில பயண திட்டங்களும் ரத்தாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.