குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

13.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தி.மு.க.,வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: கருணாநிதி

சென்னை: தி.மு.க.,வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தோல்விகளை களைந்தெறிந்து வெற்றிப்பாதையில் தி.மு.க., நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

 

 

திராவிட உணர்வு மிக்கவர்களுக்கு பகுத்தறிவு பாடம் புகட்டுவது தி.மு.க., இயக்கம். தி.மு.க.,வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல காட்சி எனவும், தி.மு.க., தோற்றுவித்ததற்கான நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். தி.மு.க., வை அழக்க நினைக்கும் சக்திகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தின் மேன்மையை பாதுகாக்க தி.முக.வை நடத்துகிறோம்.தி.மு.க.,வை நடத்துவது இனம் மற்றும் மொழியின் இனத்தை பாதுகாக்கவே. தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிவார்கள். தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல காட்சி என கூறினார்.

 

ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்க வாய்ப்பு

புதுடில்லி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த டில்லி சென்றுள்ள தமிழக அரசு அதிகாரிகள் குழு, மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, விலங்குகளை காட்சி பொருளாக காட்டும் பட்டியலில் இருந்து காளைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால், மிக விரைவில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அலங்காநல்லூரில் உண்ணாவிரதம்

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அலங்காநல்லூரைச் சேர்ந்த அனைத்து சமுதாய இளைஞர் நல அமைப்பின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர், பழைய போலீஸ் ஸ்டேஷன் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.


ரொனால்டோவுக்கு பிபா சிறந்த வீரர் விருது

ஜூரிச்: 'பிபா' சிறந்த கால்பந்து வீரர் விருதை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றாவது முறையாக வென்றார். நான்கு முறை இந்த விருதை வென்ற மெஸ்சி இம்முறையும் இரண்டாவது இடம் பிடித்தார்.


பீகாரில் மாவோயிஸ்டுகள் கைது

பாட்னா:பீகார் மாநிலம் ரோக்டாஸ் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த நான்கு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

போலி மருத்துவரிடம் விசாரணை?

ஆத்தூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள போலி டாக்டர்களை கைது செய்ய வேண்டும் என்று, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., சக்திவேல் தலைமையில், போலீசார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு கட்டமாக, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், புதுப்பேட்டை பகுதியில், கிளினிக் நடத்தி வரும் ராமநாதன் என்பவரிடம் விசாரித்து வருகின்றார்.

 

பாக்.மீது கெர்ரி குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சென்றுள்ள அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே விளங்குகிறது. எனவே, பயங்கரவாதிகள் மீதான தாக்குதலில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்,' என்று கூறினார்.


ஊட்டியில் கடும் பனிப்பொழிவு

ஊட்டி: ஊட்டியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது.பல இடங்களில் ஜீரோ டிகிரியை நெருங்குவதால்,அங்கே வாழும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தலைகுந்தா, பைகாரா ஆகிய இடங்களில் பனியால் பாதிப்பு அதிகமாக உள்ளது.


இந்தியா, பாக்., பேச்சுவார்த்தை-கெர்ரி

இஸ்லாமாபாத்: இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள வந்துள்ள அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், 'லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாது, அண்டை நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் கூட ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்நிலையில், இந்தியா, பாக்., இடையில் நின்று போயிருக்கும் பேச்சுவார்த்தைகளை துவங்க வேண்டியது அவசியம்,' என்றார்.


இந்தியா வரும் இலங்கை அமைச்சர்

கொழும்பு: இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று, இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா வரும் 18ம் தேதி இந்தியா வருகிறார்.


டில்லி தேர்தல் : காங்., வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு ?

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முதன்முதலாக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் என அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அஜய்மக்கான் ( சர்தார் தொகுதி) , ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா , கிரன்வாலியா ( புதுடில்லி) ஆகியோர் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


அணு ஆயுத தாக்குதல் தடுப்பு: இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்: பான் கி மூன்

புதுடில்லி:தெற்கு ஆசிய பகுதியில் அணு ஆயுத தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அணு ஆயுதங்கள் உற்பத்தி அதிகரிப்பதை தடுப்பதற்கான பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும்.அமைதியை காப்பதில் ஐ.நா.வின் கொள்கைகளை உருவாக்கும் முடிவுகளை எடுப்பதில் இந்தியாவின் தேவையும் உள்ளது. ஐ.நா.வின் அமைதி காக்கும் திட்டங்களில் மிகப்பெரிய பங்களிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இவ்வாறு பான் கி மூன் கூறினார்.இவ்வாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் டில்லியில் சர்வதேச உறவுகள் தொடர்பான இந்திய குழுவினரின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.


ஜான் கெர்ரி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம்

இஸ்லாமாபாத்:அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று பாகிஸ்தானுக்கு சென்றார். இது, முன்கூட்டியே அறிவிக்கப்படாத பயணம் ஆகும்.அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது, தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வார் என தெரிகிறது.


ஏர் இந்தியா பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை

புதுடில்லி:பயணிகளை கவரும் விதமாக சிறப்பு கட்டணச் சலுகையை நேற்று ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடங்கியது.ஜனவரி 16-ம்தேதி முதல் ஏப்ரல் 30-ம்தேதி வரையில் பயணம் செய்வதற்காக நேற்று முதல் ஜனவரி 18-ம் தேதி வரை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, இந்த புதிய சலுகை திட்டத்தின்கீழ் விமான கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தின்கீழ், பரபரப்பான டில்லி-மும்பை வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டண விவரம் ஏர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சராசரியாக ரூ6000 கட்டணம் ரூ3000 வரை குறைந்திருக்கிறது.


பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: அருண் ஜெட்லி

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக, சில மாதங்களில் பொருளாதாரம் விரைவில் மேம்படும் என கூறினார்.

 

இஸ்ரோ தலைவராக கிரண்குமார் நியமனம்; 3 ஆண்டுகள் தலைவராக இருப்பார்

புதுடில்லி: இஸ்ரோ தலைவராக ஏ.எஸ்., கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநராக இருந்த இவரை, இஸ்ரோ தலைவராக பிரதமர் தலைமையிலான நியமனக்குழு நியமித்தது. இவர் மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


என்னை டில்லி முதல்வராக பார்க்க மக்கள் விருப்பம்:கெஜ்ரிவால்

புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், கடந்த 7 மாதங்களில் மோடி என்ன செய்தார். டில்லியில் யார் முதல்வர் என்பதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வில் மோதல் உள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என இரு கட்சிகளுக்கும் சவால் விடுகிறேன். காங்கிரஸ் மற்றும் பா.ஜ., செய்யாததை நான் டில்லியில் செய்துள்ளேன். என்னை டில்லி முதல்வராக பார்க்க மக்கள் ஆசைப்படுகின்றனர். என்னை ஏன் பிரதமர் மோடியுடன் பாஜ.,ஒப்பிட்டு பார்க்கிறது. ஊழல் மற்றும் குற்றங்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என கூறினார்.


டில்லியில் பா.ஜ.,வுக்கு 34 முதல் 40 இடங்கள்: கருத்து கணிப்பு முடிவு

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு 34 முதல் 40 இடங்கள் வரை கிடைக்கும் என ஐ.டி.ஜி., - சிசரோ கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.,வுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி, அக்கட்சி 34 முதல் 40 இடங்களை கைப்பற்றும். தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி 36 சதவீத ஓட்டுகளை பெற்று, 25 முதல் 31 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 16 சதவீத ஓட்டுகளைப் பெற்று, 3 முதல் 5 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்சவர்தன் முதல்வராக 23 சதவீதம் பேரும், ஷீலா தீக்சித் முதல்வராக 6 சதவீதம் பேரும் ஆதரவு. ஆர்விந்தர் சிங் லவ்லி 5 சதவீதம் பேர் ஆதரவு 4 சதவீதம் பேர் அஜய் மாக்கான் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தை காப்பாத்தணும்: அன்பழகன்

சென்னை: சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., ஆட்சியில் நடக்கும் அவலங்களுக்கு ஓட்டளித்த மக்களே பொறுப்பு எனவும், தமிழராக வாழ்ந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் கூறினார்.


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.