குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கது – சரத்குமார்

29..06. 2011  இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நோக்கில் தமிழக சட்ட மன்றில் முதல்வர் யெயலலிதா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார் தென்னிந்திய திரைப்படக் கலைஞர் பேரவை உறுப்பினர்கள், முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்க சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
நடிகர் சரத் குமார் தென் இந்திய திரைப்படக் கலைஞர் பேரவையின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
 
கச்சத்தீவை மீளவும் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு எதிராக தடை விதிக்கக் கொரியமை மற்றும் கச்சத்தீவை மீட்பதாக அறிவித்தமை ஆகியவற்றுக்காக முதல்வருக்கு நன்றி பாராட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் பாரிய பேரணி ஒன்றை சென்னையில் அல்லது டெல்லியில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பில் முதல்வருக்கு அறிவித்ததாகவும் அதற்கு அவர் இணக்கம் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.வடக்குக்குச் செல்லும் படையினரின் விபச்சார சொர்க்காபுரியாக மாறும் அனுராதபுரம்!
வடக்குக்குச் செல்லும் படையினரின் விபச்சார சொர்க்காபுரியாக மாறும் அனுராதபுரம்!
29.06.2011 16:43    .

ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் கட்டாய வேலைவாங்கல், மற்றும் பாலியலுக்காக கடத்தப்படுவதில் இலங்கை ஒரு மூலமாக இருப்பதாக மனிதக் கடத்தல்கள் தொடர்பான அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல்களை, குறிப்பாக பெண்கள், சிறார்களை கடத்துவதை தடுக்கும் ஐ.நா.வின் 2000 ஆம் ஆண்டு சரத்தை இலங்கை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆண்கள், பெண்கள் சிறார்கள் (16-17 வயதானோர்) குவைத், ஜோர்தான், சவூதி அரேபியா, கட்டார், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், பஹ்ரெய்ன், சிங்கப்பூர், ஆகிய நாடுகளுக்கு நிர்மாணத் தொழிலாளர்களாக, வீட்டுப்பணியாளர்களாக அல்லது தொழிற்சாலை ஊழியர்களாக செல்கின்றனர்.

அத்தொழிலாளர்களில் சிலர், நடமாட்டக் கட்டுப்பாடு, கடவுச்சீட்டை தடுத்துவைத்தல், அச்சுறுத்தல் உடல் ரீதியான அல்லது பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் மூலம் கட்டாய வேலைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இலங்கைப் பெண்களை ஏனைய நாடுகளில் வீட்டுப்பணிப்பெண் வேலைகளுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

ஆனால் அங்கு வந்து சேர்ந்தபின் விபச்சார நிலையங்கள் போன்றவற்றில் (அதிகமாக சிங்கப்பூரில்) பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சொற்ப எண்ணிக்கையான பெண்கள் மாலைதீவில் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இலங்கைக்குள் பெண்களும் சிறார்களும் விபசார விடுதிகளுக்கான பாலியல் கடத்தல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வடக்கிற்குச் செல்லும் இலங்கை படையினரின் முக்கிய இடைத்தங்கல் நிலையமாக விளங்கும் அநுராதபுரம் பகுதியில். சிறுமிகளைவிட சிறுவர்கள் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக இது கரையோரப் பகுதிகளில் பாலியல் சுற்றுலாவுக்காக நடைபெறுகிறது. யுத்தத்தின் பின்னர் வறுமையான கிழக்குக் கரையோரத்தில் அண்மையில் ஏற்பட்ட சுற்றுலா அதிகரிப்பானது சிறுவர் பாலியல் சுற்றுலாவுக்கான கேள்வியை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திகளில் புத்தர் சிலை: அரசின் செயலுக்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு!
செவ்வாய், 29.06.-2011 21:59    .

புத்தர் சிலையை வைத்து வழிபாட்டிடமாக சந்திகளை மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அஸ்கிரிய பீடாதிபதி வண.உடுகம சிறி புத்தரகித்த தேரர் இலங்கை அரசின் இச் செயல்பாடுகள் தொடர்பாக தமது எதிர்ப்பை பிரதம மந்திரி டி.எம்.ஜெயரட்ணவிடம் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என அவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு சந்திகளில் வழிபாட்டு அறைகள அமைத்து புத்தர் சிலைகளை வைப்பது புத்த மதத்தின் கோட்பாடுகளை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலைகள் அதற்குப் பொருத்தமான இடங்களில் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.