குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

12.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

டில்லி தேர்தல்: சனாதிபதி மகள் போட்டி

புதுடில்லி: டில்லியில் சட்டசபை தேர்தலில், போட்டியிட சனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி முடிவு செய்துள்ளார். இவர், கைலாஷ் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ.,வக்கீல் வாதம்
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர், கர்நாடகா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதில், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதம் துவங்கி உள்ளது. இன்று 6வது நாள் விசாரணையில், ஜெயலலிதா தரப்பு வக்கீலான நாகேஸ்வரராவ் வாதிடுகையில், 'ஜெயலலிதா தனது வருமானத்துக்கு, கணக்கு காட்டி வரி செலுத்தி வருகிறார். வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கீழ் கோர்ட்டில் வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான ஆவணங்கள் முறையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதை இந்த கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்,' என்றார்.
பணத்தை வீசி எரிந்த ஆம்ஆத்மி கட்சியினர்
புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டு வரும் நிலையில், டில்லியில் 5வது வார்டில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக கூறி, அக்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் பண நோட்டுக்களை வீசி எரிந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை:சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: வௌிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஓட்டு அளிக்க வசதியாக இ-ஓட்டிங் முறையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இ பேலட் மூலம் அவர்கள் வாக்களிக்க தேவையான வசதிகளை 8 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
சேவல் சண்டை மனுக்கள் தள்ளுபடி
மதுரை: சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கோரி இரண்டு மனுக்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த கோர்ட், அவற்றை தள்ளுபடி செய்தது.
ஒபாமா உற்சாகம்: ஜான் கெர்ரி
குஜராத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், 'வைபரண்ட் குஜராத்' முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இதில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, 'அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆவலாக இருக்கிறார்' என்று கூறியுள்ளார்.
மம்தாவை நெருங்குகிறது சி.பி.ஐ.,?
டில்லி: சாரதா சிட் பண்ட் மோசடி விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் முகுல் ராய்க்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. திரிணாமுல் காங்., கட்சியை சேர்ந்த போஸ் மற்றும் மித்ராவுக்கு அடுத்தபடியாக, இவர் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில், 'முடிந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும்' என்று, மத்திய அரசுக்கு, மம்தா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்துக்கள் 4 குழந்தைகள் பெறணும்
புதுடில்லி: இந்துக்கள் நான்கு குழந்தைகளை அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும் என, பா.ஜ., எம்.பி., சாக்ஷி மகராஜ் கூறியிருந்தார். இதற்கு, காங்., உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், சாக்ஷி மகராஜின் கருத்துக்கு பா.ஜ.,வின் மற்றொரு எம்.பி.யான சாத்வி பிராச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.என்.எல்., தனியார் மயமாகுமா?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தனியார் மயமாக்கப்படாது,' என்று திட்டவட்டமாக கூறினார்.
காஷ்மீரில் மீண்டும் பாக்.,. தாக்குதல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், சம்பா பகுதியில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு, இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
அஜய் மக்கானுக்கு கூடுதல் பொறுப்பு
டில்லி; டில்லியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், காங்., பிரசார குழு தலைவராக அஜய் மக்கான் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மாஜி முதல்வர் ஷீலா தீட்சித், இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு குழு டில்லி சென்றது
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசின் சார்பில், மூவர் குழு டில்லி சென்றுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார், அயூப்கான், ஆப்ரகாம் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், தமிழகத்தில் ஜல்லி கட்டு நடத்துவதற்கு தேவையான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு அதிகாரிகளுடன் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு
மதுரை : கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையிலான குழு மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆளில்லா விமானம் மூலம் கிரானைட் குவாரிகளை சகாயம் குழு ஆய்வு செய்தது.
சுனந்தா வழக்கு:அதிகாரி அதிர்ச்சி தகவல்
புதுடில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அதிகாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுனந்தாவிற்கு நெருக்கமானவர்கள் தான் அவருக்கு விஷம் கொடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் உயிரிழப்பதற்கு முன் ஓட்டல் அறையில் அடிதடி நடைபெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.
டில்லி காங்., தலைவர் அதிரடி முடிவு
புதுடில்லி : டில்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கிரன் வாலியா, கட்சி தலைவர் சோனியாவிற்கு எழுதி உள்ள கடிதத்தில், தான் டில்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். டில்லி காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாகவே கிரன் வாலியா இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
திமுக எரிகிற வீடு: பொன்.ராதா
சென்னை : திமுக எரிந்து கொண்டிருக்கும் வீடு. அதனால் அதிலிருந்து தொண்டர்கள் பலர் வெளியேறிக் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி மீது நாடு வைத்துள்ள நம்பிக்கை தமிழகத்திலும் உருவாகி வருவதால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே திமுக தலைவர் கருணாநிதி பா.ஜ.,வை குறைகூறி வருவதாக என தெரிவித்துள்ளார்.
விடுமுறை நாளில் வேலைசெய்தால் சம்பளம்
மும்பை : போலீஸ்காரர்கள் தங்களின் வார விடுமுறை நாளன்று வேலை செய்தால், அவர்களுக்கு அன்றைய நாளுக்கான முழு சம்பளம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். வார விடுமுறை நாட்களில் வேலை செய்தால் தங்களுக்கு ரூ.68 மட்டுமே ஊதியப்படியாக வழங்கப்படுவதாக போலீஸ் கான்ஸ்டபிள்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியதை அடுத்து, அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
ஆசாராம் பாபுவின் வேலைக்காரர் சுட்டுக்கொலை
முஷாபர்நகர் : சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் மாஜி சமையல்காரர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தின் முஷாபர்நகரில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இவர், ஆசாராம் பாபு மீதான பாலியல் குற்றம் தொடர்பான வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை மிகவும் கவர்ந்தவர் விவேகானந்தர்:மோடி
புதுடில்லி : சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இது குறித்து அவர் டுவிட் செய்கையில், சுவாமி விவகானந்தரின் பிறந்தநாளில் அவரை தலைவணங்குகிறேன். அவர் தனிப்பட்ட வகையில் என்னை மிகவும் கவர்ந்தனர். அவரின் எண்ணங்களும், கொள்கைகளும் என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுவாமி விவேகானந்தர் ஒரு மதிப்புமிக்க நிறைவான சிந்தனையாளர்களில் ஒருவர். இந்தியாவின் கருத்துக்களை உலகத்திற்கு எடுத்துச் செல்வதில் வழிகாட்டியாக திகழ்ந்தவர். இந்தியாவின் வளர்ச்சிக்காக இளைஞர்களை ஒருங்கிணைத்து, இளைஞர்கள் மூலம் நாடு முழுவதும் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
டில்லி சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
டில்லி:டில்லி சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கமிஷன் இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை கலந்து ஆலோசனை செய்தது. அன்றே அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து இன்று அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது இடங்களில் துப்பினால் கடும் நடவடிக்கை: மந்திரி தீபக் சாவந்த் தகவல்
மும்பை:பொது இடங்களில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில் சுகாதாரத்துறை அமைச்சர் மும்பையில் தெரிவித்தார்.வகையில் சட்டம் உள்ளது. ஆனால், காசநோயின் தாக்கம் உயர்வதை பார்க்கும்போது அந்த சட்டம் பயனுள்ள முடிவை தரவில்லை என்று தோன்றுகிறது. எனவே, பொது இடங்களில் துப்பினால் இனி கடுமையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வர இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.இல்லை எனில், ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சாலைகளில் துப்பும் டாக்சி, ஆட்டோ டிரைவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம். இந்த சட்டத்தை திறமைகரமாக நடைமுறைப்படுத்தி தவறு இழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவோம்.இவ்வாறு அமைச்சர் தீபக் சாவந்த் தெரிவித்தார்
சபரிமலையில் 130 கிலோ தங்கத்தில் புதிய கொடிமரம் அமைக்க முடிவு
சபரிமலை:சபரிமலையில் 130 கிலோ தங்கத்தில் புதிய கொடிமரம் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றதும் தொடங்கும்.சபரிமலையில் அண்மையில் நடைபெற்ற தேவபிரஸ்னத்தில், தற்போதைய கொடிமரம் பழுதாகியுள்ளதால் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து கொடிமரம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. தற்போது ஐம்பொன்னிலான கொடிமரம் உள்ளது. புதிய கொடிமரத்தை தங்கத்தில் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மொத்தம் 130 கிலோ தங்கத்தில் எஸ்டிமேட் தயாரிக்கப்பட்டுள்ளது.சில பக்தர்கள் நன்கொடையாக தங்கம் தர முன்வந்துள்ளதாகவும், மீதத்திற்கு தேவசம்போர்டின் கையிருப்பில் உள்ள தங்கம் பயன்படுத்தப்படும் என்றும் தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ்வாசு கூறினார். கொடிமரத்துக்கான தேக்குமரம் ஐயப்பா சேவா சங்கம் தருவதாக தெரிவித்துள்ளது. பாலக்காடு வனப்பகுதியில் இருந்து சரியான அளவுள்ள தேக்குமரம், ஆசாரவிதிகளுக்கு உட்பட்டு வெட்டப்பட்டு சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும் என்று ஐயப்பா சேவாசங்கம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வரும் மார்ச் இறுதியில் தொடங்கும். இந்த விழா முடிந்ததும் புதிய கொடிமரம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் 'போலி போலீஸ்' நடமாட்டம்
திருப்பூர்: அறிவுரை கூறும் தொனியில் மிரட்டி, நகை, பணத்தை மோசடி செய்த போலி போலீசை, நிஜ போலீசார் தேடி வருகின்றனர்.தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் நடராஜ், 63. திருப்பூரில் கார்பென்டராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, தென்னம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே, நடந்து சென்றபோது, 25 வயதுள்ளவர், அவரை வழி மறித்தார். சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் என, அறிமுகப்படுத்தி, திருப்பூரில் திருட்டு அதிகமாக நடப்பதாக எச்சரித்து அறிவுரை கூறியுள்ளார். பின், நடராஜ் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகைகள், ௨0 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வாங்கி, ஒரு தாளில் சுற்றி, பாக்கெட்டில் வைக்க சொல்லி கொடுத்து சென்றுள்ளார்.சிறிது நேரத்துக்குப்பின், நகையை மோசடியாக ஏமாற்றி பறித்து சென்றதை அறிந்து, போலீசில் புகார் செய்தார்.இதே போல், திருப்பூர் கணக்கம்பாளையத்திலும் மூர்த்தி, 53, என்பவரிடம் மோசடி நடந்தது. இவர், அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.இது போல், ஒரே மாதத்தில், ஐந்து இடங்களில், போலீசாக நடித்து பணம், நகையை பறித்து சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன. போலீசார், போலி போலீசை தேடி வருகின்றனர்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.