குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

11.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடியை சந்திக்க ஆவலாக உள்ளேன்: டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்தில், பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், இதற்குநீண்ட நாட்களாகாது எனவும் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகில் வளர்ந்து வரும் சக்திமிக்க நாடு இந்தியா. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுடனான பொருளாதார உறவு வலுப்படுத்தப்படும். இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். முன்பை விட இந்தியாவுடனான உறவு வலுப்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தில் தான் இந்தியா அதிகளவில் முதலீடு செய்துள்ளது. நான் பிரதமரான பின்பு இங்கிலாந்தில், 5 பில்லியன் பவுண்ட் அளவிற்கு இந்தியா முதலீடு செய்துள்ளது.

அதேபோல், இந்தியாவில், ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் இங்கிலாந்து முதலீடு செய்துள்ளது. இங்கிலாந்தில் அடுத்து அமையும் புதிய அரசு, உள்கட்டமைப்பு, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட முக்கிய பொருளாதார துறைகளில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். பயங்கரவாதம் மற்றும் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய சவால்கள் குறித்த வெளியுறவுக் கொள்கையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இங்கிலாந்தில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக உள்ளேன். இதற்கு நீண்ட நாட்களாகாது என கூறினார்.

 

நக்சல்கள் குறித்து ஆலோசனை

புதுடில்லி: நக்சல்கள் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை வசதி மேம்பாடு ஆகியவை குறித்து முடிவெடுக்கவும் நக்சல்கள் பாதிப்பு உள்ள மாநில முதல்வர்களின் கூட்டத்தை, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூட்டி உள்ளார். நாளை மறுநாள் ராய்பூரில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.

 

கூட்டாட்சியே எங்கள் விருப்பம்-மோடி

காந்திநகர்; திறனுடன். கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சியை ஏற்படுத்தவே நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என, எழுச்சிமிகு குஜராத் மாநாட்டில் பேசிய மோடி கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'காந்திநகர் மாநாடு, குஜராத்திற்கு மட்டுமானதல்ல. ஒட்டு மொத்த நாட்டிற்கும் உரித்ததாகும். இந்த அரசு, வெறும் கொள்கையோடு நிற்காமல், அதை செயல்படுத்தும் ஒரு அரசாகவே திகழ்கிறது. உலக தரத்துடன் கூடியதாக நகரங்களை அமைக்க வேண்டும் என்று நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இதற்காக அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பையும் கோருவோம். ஒவ்வொரு நாட்டின் ஆசைகள், கருத்துக்கள், இதயங்களை இணைப்பதே இந்த மாநாட்டின் உட்கருத்தாக உள்ளது.' என்றார்.

 

யோகா குறித்து மோடி பெருமிதம்

காந்திநகர்: காந்திநகரில், எழுச்சிமிகு குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், 'அனைவருடனும் இணைந்து வளர்ச்சிக்கு செல்ல விரும்புகிறோம். பிற அயல்நாடுகளும் இந்தியாவுடன் இணந்தே செயல்பட விரும்புகிறது.ஐ.நாவின் யோகா தினம் அறிவிப்புக்கு 177 நாடுகள் இந்தியாவின் கலாச்சாரத்திற்கு ஆதரவு அளித்தன. ஐ.நா பொது செயலருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது வே பெரும் சாதனை ஆகும். அறிவியல் மற்றும் கலை கொண்ட இந்த யோகா நமது வாழ்வியல் முன்னேற்றத்திற்கு உதவுகிறது,' என்றார்.

 

ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் தாக்குதல்

பெர்லின்: சார்லி ஹெப்டோ கார்ட்டூனை வௌியிட்ட ஜெர்மன் பத்திரிகை அலுவலகத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. ஒரு மர்ம கும்பல், ஜன்னல் வழியாக வெடிபொருட்களை உள்ளே வீசியது. இதில், வெடிபொருட்கள் வெடித்து சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நேதாஜியை கொன்றது ஸ்டாலின் தானாம்...

புதுடில்லி: நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'சோவியத் சர்வாதிகாரி ஸ்டாலின், சுபாஷ் சந்திர போசை பிடித்து சைபீரிய சிறையில் அடைத்தார். பின், அவரை சி்த்தரவதை செய்து, மூச்சு திணறலை ஏற்படுத்தி கொன்றார். இந்த சம்பவங்கள் அனைத்தும் நேருவுக்கு தெரியும். இருப்பினும், இங்கிலாந்து, ரஷ்யாவை பகைத்துக் கொள்ள அவர் விரும்பாததால் கண்டு கொள்ளவில்லை. இது குறித்த கோப்புக்களை வௌியிட வேண்டும் என நான் பிரதமர் மோடியை வற்புறுத்துவேன்,' என்றார்.

 

மோடிக்கு உலகவங்கி பாராட்டு

காந்திநகர்: எழுச்சிமிகு குஜராத் மாநாடு, குஜராத், காந்திநகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் பேசுகையில், 'நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவராக திகழ்கிறார்,' என்றார்.

 

பிரான்ஸ் தாக்குதலில் பெண் பயங்கரவாதி?

பாரீஸ்: பிரான்சில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதும், தற்போது அவர் சிரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

 

டில்லி புறப்பட்டார் சசிதரூர்

கொச்சி : ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கேரளா சென்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார். இதனையடுத்து இன்று காலை கொச்சி விமான நிலையத்தில் இருந்து டில்லி புறப்பட்டு சென்றார். அவரிடம், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

 

பெங்களூரு குண்டுவெடிப்பு:ஒருவர் கைது

மங்களூரு : சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக மற்றொரு குற்றவாளியை போலீசார் கைது செய்தள்ளனர். மங்களூரு விமான நிலையத்தில், தப்பி ஓட முயன்ற அவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளி கூறிய தகவலின் அடிப்படையிலேயே இவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

பள்ளி பாட புத்தகத்தில் ஆர்.டி.ஐ

டேராடூன் : ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பள்ளி பாட புத்தகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தையும் ஒரு பாடமாக கொண்டு வர உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி பருவத்தில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய அடிப்படை அறிவை குழந்தைகளிடம் வளர்ப்பதற்காகவே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக உயர்கல்வித்துறை இயக்குநர் ஆர்.கே.குன்வர் தெரிவித்துள்ளார்.அடுத்த கல்வி ஆண்டு முதல் இதை நடைமுறைபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

திமுக-காங்., கூட்டணி பரிசீலிக்கப்படும்:காங்

சென்னை : மதசார்பற்ற கட்சிகளின் அணியில் சேர திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரசிற்கு அழைப்பு விடுத்தால் அது குறித்து கட்சி மேலிடம் பரிசீலிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் பலி

மைதுகுரி : நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

இந்தியா வந்தார் பான்-கி-மூன்

வதோதரா:குஜராத்தில் நடைபெறவுள்ள "7-வது எழுச்சிமிகு குஜராத்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நேற்று இந்தியா வந்தார்.இந்த மாநாடு குஜராத் தலைநகர் காந்தி நகரில் இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக டில்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்த அவரை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். அவருடன் இந்தியாவுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்டப் பிரதிநிதி லிசே கிராண்டும் வந்துள்ளார்.

 

இந்தியாவுக்கு அடுத்த மாதம் சிறிசேனா வருகை?

கொழும்பு:இலங்கையின் புதிய அதிபர் சிறீசேனா தனது முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த மாதம் வரலாம் எனத் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

செய்யூர் திட்டம்:கண்டுகொள்ளாத தமிழக கட்சிகள்

புதுடில்லி: சாதாரண பிரச்னைக்கு பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபடும் தமிழக எம்.பி.,க்கள், செய்யூர் மின் திட்டம் குறித்து, சரியான முறையில், பார்லிமென்டில் குரல் எழுப்பவில்லை. மத்திய அரசும் பாராமுகமாக செயல்பட்டதால் தான், 25 ஆயிரம் கோடி ரூபாயில் அமைய இருந்த, 4,000 மெகாவாட் மின் திட்டம், இப்போதைக்கு, தமிழகத்தின் கையை விட்டு போயுள்ளது.தமிழக கட்சிகளும், அரசியல் தலைவர்களும், இந்த விவகாரத்தை தங்கள் கையில் எடுத்து, செய்யூர் மின் திட்டத்தை ஏற்று நடத்தக் கூடிய தனியார் நிறுவனங்களை கண்டறிந்து, திட்டத்தைச் செயல்படுத்த முன்வர வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

என்.டி.பி.சி., நிறுவனத்தை அனுமதித்திருக்கலாம்!

புதுடில்லி: செய்யூர் மின் திட்ட ஏலத்தில் பங்கேற்க, பொதுத்துறை மின் நிறுவனங்களான, என்.டி.பி.சி., மற்றும் என்.எச்.பி.சி., முன்வந்துள்ளன. ஏலத்தில் ஒரு நிறுவனம் பங்கேற்றதால், ஏலத்தை தொடர முடியாமல் போனதாக தெரிவிக்கிறார் மத்திய அமைச்சர். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது; தனியார் நிறுவனம் ஒன்று மட்டும் ஏலத்தில் பங்கேற்றால், அந்த ஏலத்தை ரத்து செய்யலாம். ஆனால், ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தது, பொதுத்துறை நிறுவனமான, என்.டி.பி.சி., என்பதால், அதை அனுமதித்திருக்கலாம்.மத்திய அரசின் இந்த செயல்பாடு, தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், தமிழகத்தில், என்.டி.பி.சி., சார்பில் தனியாக எந்தவொரு மின் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. செய்யூர் திட்டத்தை, என்.டி.பி.சி., செயல்படுத்த முன்வந்து, ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

ஏழைகளை தேடி ஓடும்வங்கி அதிகாரிகள்: மோடி

புதுடில்லி: டில்லி பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: காங்கிரசோ, ஆம் ஆத்மியோ உண்மையில் ஏழைகளின் கட்சி அல்ல. அவர்கள் தாங்கள் ஏழைகளின் கட்சி என, வாயால் ஜாலம் காட்டுகின்றனர். உண்மையில், ஏழைகளின் கட்சி பா.ஜ., தான். இது, எங்களின், 'ஜன் தன்' வங்கிக் கணக்கு திட்டம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதிக்குள் ஏழு கோடி வங்கிக் கணக்குகள் துவங்க வேண்டும் என திட்டமிட்டோம். ஆனால், 10ம் தேதிக்குள்ளேயே, 11 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இது, வேறு எந்த அரசும் செய்யாத சாதனை. இதன் மூலம், வங்கிகளில், 8,500 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஏழைகள் தேடிச் சென்றாலும், வங்கிக் கணக்கு துவங்க மறுத்து வந்த வங்கி அதிகாரிகள், தற்போது, வைப்புத் தொகை இல்லாத, 'ஜீரோ பாலன்ஸ் அக்கவுன்ட்'களுக்காக, ஏழைகளின் குடிசைகளை நோக்கி ஓடத் துவங்கியுள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.

 

பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ள பாக்.,: அமெரிக்கா

வாஷிங்டன்:பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது கவலையளிக்கிறது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடங்கள் கிடைப்பது என்பது உலக நாடுகளுக்குப் பொதுவான அச்சுறுத்தலாகும்.பல்வேறு நாடுகளிடையே ஒத்துழைப்புத் தருவதன் மூலம், அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும்.சில பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடமாக இருப்பது நீண்ட காலமாக கவலையளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

முடக்கிய 32 வலைதளங்கள் மீண்டும் செயல்பட அனுமதி

புதுடில்லி:பயங்கரவாத கருத்துக்களை பரப்பியதால் முடக்கப்பட்ட, 32 வலைதளங்கள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 'பயங்ரவாத கருத்துக்கள் அகற்றப்படும். இந்தியாவிற்கு எதிரான தகவல்கள் இடம்பெறாது; அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும்' என, இந்த வலைதளங்களின் நிர்வாகங்கள், மத்திய அரசுக்கு உறுதிமொழி அளித்தன. இதையடுத்தே, 32 வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படை, மும்பை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், 'இந்தியாவிற்கு எதிராகவும், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆதரவாகவும், கருத்துக்களை பரப்பி வரும் வலைதளங்களை முடக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒருசில வலைதளங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அத்தகைய வலைதளங்களின் செயல்பாட்டிற்கு ஐகோர்ட் தடை விதித்தது. அதன்பின், சில வலைதளங்களின் தடை நீக்கப்பட்டது. தற்போது, மேலும், 32 வலைதளங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கயானாவுக்கு 60 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குகிறது இந்தியா

ஜார்ஜ்டவுன்: பெரிய கப்பல் மற்றும் சாலைகள் அமைக்கவும், தங்களுக்கு இந்தியா 60 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க உள்ளதாக கயானா அதிபர் டோனால்ட் ரமோடர் கூறியுள்ளார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.