குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

07.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கிரானைட் அரசுடமை வழக்கு ஒத்திவைப்பு

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி பி.ஆர்.பி. நிறுவனத்தின் சார்பில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமை ஆக்கிட கோரி மதுரை கலெக்டர் சுப்ரமணியன், 16 வழக்குகளை தாக்கல் மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தார். முன்னதாக இக்கோர்ட்டில் மொத்தம் 118 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளது.

 

 

இதில் பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது மட்டும் 84 வழக்குகள் உள்ளன.இன்று நடந்த விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி மகேந்திர பூபதி.

 

ஜெ., சிறைக்கு போவது உறுதி: விஜயகாந்த்.

கோவை: தே.மு.தி.க. பொதுக்குழு செயற்குழுக்கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் கூடியது. கூட்டத்திற்கு பின்னர் விஜயகாந்த் பேசியதாவது, சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை யாராலும் மாற்றி எழுத முடியாது. மே மாதத்திற்கு பின் ஜெயலலிதா சிறைக்கு போவது உறுதி என்றார்.

 

ஆந்திர விபத்து: பிரதமர் இரங்கல்

புதுடில்லி : ஆந்திராவில் இன்று காலை நடைபெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கலும், ஆறுதலும் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

அவசர சட்டம்: மம்தா 'யூ டர்ன்'

கோல்கத்தா : கோல்கத்தாவில் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, அரசியல் வேறுபாடுகள் நாட்டின் வளர்ச்சியை அழித்து விடக்கூடாது என பேசினார். இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்திற்கு இதுவரை எதிர்ப்பு எதரிவித்து வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, ஜெட்லி சொல்வதையே தான் நானும் சொல்கிறேன். அரசியல் வேற்றுமைகள் வர்ச்சியை பாதிக்கக் கூடாது. அதனால் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மேற்வங்கத்தில் நிலம் என்பது ஒரு பிரச்னையே அல்ல. அதே சமயம் மக்களிடம் எந்த ஒரு சட்டத்தையும் திணிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

 

சுனந்தா மரணம்: கேரளா வருகிறது டில்லி போலீஸ்

புதுடில்லி: சுனந்தா புஷ்கர் மரணத்தை டில்லி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேல் விசாரணைக்காக டில்லி போலீசார் கேரளா சென்று விசாரிக்கவும், சுனந்தா பிரேத பரிசோதனை குறித்த தடயங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய அறி்க்கையை பெறவும் முடிவு செய்துள்ளனர்.

 

வள்ளுவர் தினத்தில் கட்டுரைப் போட்டி

புதுடில்லி : திருவள்ளுவர் தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அன்பழகன் மனு ஒத்தி வைப்பு

பெங்களூரூ: ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமாரசாமி, விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். முன்னதாக நடந்த வாதத்தில் , வயது முதுமை காரணமாக அன்பழகன் ஆஜராக முடியவில்லை என வக்கீல் நாகேஷ் கூறினார். இதையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

 

ஓட்டல் மாடியில் இறங்கிய ஆளில்லா விமானம்

சென்னை : சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாடியில் ஆளில்லா விமானம் இறங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேமிரா பொருத்தப்பட்ட அந்த ஆளில்லா விமானத்தை அனுப்பியது யார் எனவும், கேமிராவில் வேறு எந்த முக்கிய இடங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளவுத்தறையால் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கேமிராவுடன் ஆளில்லா விமானம் வந்திறங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ. கெடு

திருநெல்வேலி: கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் ஒன்றும் அடிமை சாசனம் எழுதி தரவில்லை என பொன் .ராதாகிருஷ்ணன் கூறினார்.பா.ஜ.விற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் இன்று திருநெல்வேலியில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.வில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பா.ஜ. கூட்டணியில் இருந்து ம.தி.மு.கவை தொடர்ந்து பா.ம.க.வும் வெளியேறுவதாக செய்தி வெளியாகிறது.கூட்டணி கட்சிகள் விலகி போவதால் பா.ஜ.விற்கு எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி கட்சிகள் எங்களை விமர்சிக்கலாம் தவறில்லை அதற்கான கூட்டணி கட்சிகள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி தரவில்லை. என்றார்.

 

விஜயகாந்திற்கு விழுப்புரம் கோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்த் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுககூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் அவதூறாக பேசியதாக விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இன்று நடந்த விசாரணையில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார் .

 

குஜராத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஜான்கெர்ரி பங்கேற்பு

வாஷிங்டன்: உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி கலந்து கொள்கிறார். இதற்காக இந்த வாரம் இந்தியா வருகை தரஉள்ளார். அப்போது நடக்க உள்ள மெகா முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அமெரி்க்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

 

சுனந்தா கொலை: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க முடிவு

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சதிதரூர் மனைவி சுனந்தா மரணம் தொடர்பாக ,கொலை வழக்காக டில்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் பஸ்சி கூறியது, சுனந்தாபுஷ்கர் மரணம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சசிதரூரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் சசி தரூரை விசாரிக்க உள்ளோம் என்றார்.

 

சசி தரூரை சிக்க வைக்க சதி:சுனந்தா உறவினர்கள் நற்சான்று

புதுடில்லி : சுனந்தா கொலை செய்யப்படவில்லை எனவும், அவர் கொலை செய்யப்படுவதற்கான காரணம் ஏதும் கிடையாது எனவும் சுனந்தாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சசிதரூரை இவ்வழக்கில் சிக்க வைப்பதற்காகவும், அவரது நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்காகவும் வேண்டுமென்றே இதனை கொலை வழக்காக மாற்ற முயற்சிக்கிறார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஏர் ஏசியா விமான வால்பகுதி கண்டெடுப்பு

ஜாவா: ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் இந்தோனேஷியா கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் பயணித்த 162 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் சேதமடைந்த பாகங்களை தேடும் பணியும், உடல்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றை மீட்கும்பணி நடக்கிறது. இதன் மூலம் விமானத்தின் கருப்பு பெட்டியும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

 

மின்வாரிய ஊழல்: தலைமை செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை : தமிழக மின்வாரியத்தில் ரூ.ஒரு கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பெஞ்ச், இவ்வழக்கு தொடர்பாக தமிழக தலைமை செயலர், மின்வாரியம், ஒழுங்கு முறை ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நோட்டீஸ் மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

யார் அன்பழகன்? நேரில் வரச்சொல்லுங்க: கொந்தளித்த குமாரசாமி

பெங்களூரூ்: ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில் அப்பீல் மனு மீதான 3-ம் நாள் விசாரணை இன்று கர்நாடக ஐகோர்ட்டில் நடக்கிறது. தி.மு.க.வைச்சேர்ந்த அன்பழகன் சார்பில் வக்கீல் சரவணா தாக்கல் செய்த மனுவில், அரசு வக்கீல் பவானிசிங்கை மாற்ற வேண்டும் என வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி குமாரசாமி , அரசு வக்கீலை மாற்ற வேண்டும் என தொடர்ந்து குறுக்கீடு செய்தால் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும், உங்கள் அரசியலை தமிழகத்தி்ல் வைத்துக்கொள்ளுங்கள் இது கோர்ட், முதலில் அன்பழகன் யார்? அவரை நேரில் வரச்சொல்லுங்கள என உரத்த குரலில் ஆவேசத்துடன் கூறினார்

 

மத்திய பெண் அமைச்சருக்கு வி.ஐ.பி. பாதுகாப்பு

புதுடில்லி: மத்திய பெண் அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, இவர் நடந்து முடிந்து பார்லி. குளிர்கால கூட்டத்தொடரின் போது ராமர் குறித்து சர்ச்சை கருத்துக்களை பார்லி.யில் பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பார்லி.யின் ஸ்தம்பிக்க வைத்தனர். இந்நிலையில் நிரஞ்சன் ஜோதிக்கு வி.ஐ.பி. அந்தஸ்துடன் 'ஓய்' பாகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய 11 பாரா மிலிட்டர் வீரர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

 

தி.மு.க. தலைமை கழக உட்கட்சி தேர்தல்: வேட்பு மனு துவக்கம்

சென்னை: தி.மு.க. உட்கட்சி தேர்தலில் இன்று தலைவர்,பொதுச்செயலர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் துவங்கியது. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனுக்களை வாங்கி சரிபார்த்து வருகிறார்.

 

அன்பழகன் தரப்பு மனு: நீதிபதி எச்சரிக்கை

பெங்களூரூ: ஜெ. மீதான சொத்துகுவிப்பு வழக்கின் அப்பீ்ல் மனு மீதான விசாரணை கர்நாடகா ஐகோர்ட்டில் நடக்கிறது. வழக்கில் பவானிசிங்கை மாற்ற கோரி தி.மு.க.சார்பில் அன்பழகன் தாக்கல் செய்த மனுவிற்கு, தொடர்ந்து குறுக்கீடு செய்தால்குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும், பவானிசிங்கை மாற்ற வேண்டுமானால் கர்நாடக அரசிடம் முறையிடுங்கள் என்றார் நீதிபதி குமாரசாமி.

 

மேகாலயாவிற்கு புதிய கவர்னர்

ஷில்லாங் : மேற்குவங்க கவர்னராக இருந்த கேசரிநாத் திரிபாதி, மேகாலயா கவர்னராக பதவியேற்றிக் கொண்டார். மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதி உமாநாத் சிங், அவருக்கு பதவிபிரமானம் செய்து வைத்தார். இவ்விழாவில் மேகாலயா முதல்வர் முகுல் சங்மா உள்ளிட்ட அமைச்சரவை சகாக்களும், போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

பணத்தகராறில் தம்பி, அக்காவிற்கு கத்திகுத்து

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஜி.எச். ரோட்டைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது முதல் மனைவியின் மகன் நடராஜ் (35) கொடுக்கல் வாங்கல் விஷயமாக தந்தையின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். அங்கிருந்த இரண்டாவது மனைவியின் மகன் ராஜேஷ் கண்ணாவிற்கும் நடராஜிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் நடராஜ் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷ் கண்ணாவை குத்தினார். தடுக்க வந்த அக்கா விஜயலட்சுமியையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். காயமடைந்தவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மயிலாடுதுறை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

விசைதறியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் உள்ளிட்ட 3 ஊர்களைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள், மின் கட்டண உயர்வை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளர். சுமார் ஒரு லட்சம் விசைதறியாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மின் கட்டண உயர்வை பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். விசைதறியாளர்களின் இந்த ஸ்டிரைக்கால் நாள் ஒன்றிற்கு ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

 

அரசு பஸ்- கார் மோதி விபத்து: சாலையில் சிதறிய ரூபாய் நோட்டுகள்

கோவை: கோவை மதுக்கரையில் இருந்து அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து வந்த கார், போடிபாளையம் சந்திப்பு அருகே வந்த போது அரசு பஸ்சும், காரும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த சேதமடைந்த காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறின. உடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தினர். சிதறிய ரூபாய் நோட்டுக்களை சேகரித்து எண்ணி வருகின்றனர்.காரை ஓட்டி வந்த யாசர் (28) என்பவரிடம் விசாரணை நடக்கிறது. எதற்காக பணம் கொண்டு சென்றார் என்பது குறித்தும் வருமானவரித்துறையினர் விசாரிக்கின்றனர். காரில் சிக்கிய பணம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

 

ஆவின் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்:தேமுதிக

கோவை : கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் தேமுதிக.,வின் பொதுக்கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் இன்று, கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆவின் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நடைபெற்ற தாது மணல் கடத்தல் குறித்தும் விசாரிக்க ஐகோர்ட் தானே முன்வந்து உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

 

ஐ.நா பொது செயலாளர் விரைவில் இந்தியா வருகை

நியூயார்க்:ஐ.நா.,பொது செயலாளர் பான்கிமூன் விரைவில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். குஜராத் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விதமாக வரும் 10-ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

 

தேசிய புலனாய்வு அமைப்பு தலைவர் அசாம் பயணம்

கவுகாத்தி :தேசிய புலனாய்வு அமைப்பி்ன் தலைவர் சரத்குமார் இன்று அசாம் மாநிலம். செல்கிறார். அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போடோ இயக்கத்தை சேர்ந்தவர்கள்நடத்திய திடீர் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பழஙகுடியினத்தவர்கள் பலியாயினர்.பலர் காயமடைந்தனர். இந்நிலையில் என்.ஐ.ஏ., அமைப்பின் தலைவர் சரத்குமார் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடுவ.தோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பேசுகிறார். முன்னதாக சரத்குமார் மாநில முதல்வர் தருண் கோகாய், போலீஸ் உயர் அதிகாரி காகென் சர்மா, மாநில தலைமை செயலாளர் ஜித்தேஷ்கோஸ்லா ஆகியோரை சந்தித்து பேசினார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.