குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இனப்படுகொலையான தமிழ் மக்களுக்கு சென்னை மெரீனாவில்இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ

27.ஆனி. 2011 இனப்படுகொலையான தமிழ் மக்களுக்கு சென்னை மெரீனாவில் நேற்றுமாலை பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி.இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா?.சங்கரிகேள்வி.இன்று மாலை தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையில் ஐநாவின் சர்வதேச சித்திரவதைக்குள்ளானோர் தினத்தை ஒட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈழப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்வை மே-17 இயக்கம் பல் வேறு அமைப்புகளின் ஆதரவோடு ஒருங்கிணைத்திருந்தது. மதிமுக, நாம்தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பெரும்பலான அரசியல் கட்சிகள் இந் நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஒட்டி ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு ஈழப் போரில் பலியான மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்வில் கந்து கொண்ட நெடுமாறன் , சீமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றினார்கள். போரில் பலியான மக்களுக்கான நடுகற்களும், மணல் சிற்பங்களும் மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டு அந்த இடம் முழுக்க தீப ஒளியால் அலங்கறிக்கபப்ட்டிருந்தது.
 கட்ச்சிகளையும் கொடிகளையும் தாண்டி தன் இனத்திற்காக இணைந்த மக்கள்...எந்தக்கட்ச்சியையும் சேராத தனி மனிதர்கள் சாதித்துக்காட்டி உள்ளார்கள்...நன்றிகள் உறவுகளே. நன்றிகள் சகோதரன் திருமுருகனுக்கு...ஈழத்தமிழர்களின் விழிகளில் எல்லாம் நன்றிகள்.கிளிநொச்சிக் கந்தசுவாமி கோயில் முருகன் இன்னும் மறியலுக்குள் தான் இருக்கிறார்.
27ஆனி 2011 
பயங்கரமான சூழ்நிலை ஒன்று உருவாகிக் கொண்டு வருகிறது - ஆனந்த சங்கரி:-

இலங்கையில் நடப்பது சனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா? விசேட கலந்துரையாடல் -

25.06.2011 சனிக்கிழமை குருபரன்:- அண்மைக் காலமாக இலங்கையிலே ஒரு சிவில் நிர்வாகத்திற்குப் பதிலாக ஜனநாயகத்திற்குப் பதிலாக இராணுவ ஆட்சி தொடர்வதாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன.

 ஆனந்தசங்கரி:-  இலங்கையின் தற்போதைய நடைமுறைகள் நாடு விரைவில் ஒரு சர்வாதிகார நாடாக போகின்றது என்பதனை உணர்த்துகிறது. ஒரு நீண்ட கேள்வி என்பதனால் ஒரே வார்த்தையில் அதனை நிறுத்தினேன்.

பயங்கரமான சூழ்நிலை  ஒன்று உருவாகிக் கொண்டு வருகிறது. 1 இந்த மக்கள் நின்மதியாகச் சென்று வாழக் கூடிய இந்த இடங்களில் சந்திக்குச் சந்தி முகாம்களைப் போட்டு அவர்களுடைய முன்னேற்றத்திற்கு  இடையூறு செய்வது அதனால் எதனையும் செய்ய முடியாது. 2 சில இடங்களைப் பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் உங்களிட்டை இருந்து எடுக்கவில்லை விடுதலைப் புலிகளிடம் இருந்து பறித்தெடுத்தனாங்கள் எண்டு சொன்னால் இதில் எந்தவிதமான நியாயமும் இல்லை நியாயப்படுத்தவும் முடியாது. அதில பெறுமதியான பலகாணிகள் பெறுமதியான வீடுகளோட எல்லாம் எடுத்து வைத்திருக்கிறார்கள். என்னும் குறிப்பாக கிளிநொச்சியை எடுத்தால் பட்டினப் பகுதியில் உள்ள பல கடைகள், இராணுவத்திற்கு ஒன்று தெரிய வேணும் அல்லது அவர்கள் தெரியாததுபோல் நடிக்கிறார்கள் எண்டு தான் கருத வேண்டி இருக்கிறது. விடுதலைப் புலிகள் எத்தனையோ வீடுகள் கட்டிடங்களை பலாத்காரமாக எடுத்தவர்கள். சிலரிடம் இலவசமாக பணம் கொடுக்காமல் சிலரிடம் கொஞ்சக் காசு கொடுத்து அவர்கள், அவர்களுடைய நிலமையைப் பொறுத்து அது எடுக்கிறவற்ற மூட்டைப் பொறுத்து சில இடங்களில றோக்கிணாக கொஞ்சப் பணம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். உண்மையான பெறுமதி கொடுத்து எந்த வீடுகளையும் வாங்கவில்லை. அது உறுதி நான் அடித்துச் சொல்லுவன். அதனைத் தெரிந்து கொண்டு இந்த அரசாங்கம் செய்யிற கொடூரம் என்னவென்றால் பாவம் அப்பாவி மக்கள் பயத்தின் நிமித்தம் விடுதலைப் புலிகளுக்கு சில கட்டிடங்களை விட்டுக் கொடுத்தவர்கள் சில வீடுகளில் இருந்து பலாத்காரமாக எழுப்பிப் போட்டு உது கொண்ணற்றை வீடு உனக்கு தரமுடியாது எழும்பிப்போ என கூறிவிட்டு எடுத்த எத்தனையோ வீடுகள் இருக்கு. நான் இருந்த வீடு கூட இவர்களால் கடைசிக் காலத்தில இவர்கள் பாவிச்ச வீடாகத்தான் போயிட்டுது. இரணைமடுக் குளத்திற்கு அருகில நான் இருந்தனான். அதைக் கூட இவர்கள் எடுத்திட்டார்கள். அங்க தோட்டம் செய்து கொண்டிருந்த மனிசியை எழுப்பிப் போட்டு. இப்பிடி அவர்கள் செய்யேக்கை விடுதலையை எதிர் நோக்கிய மக்களுக்கு பெரிய சந்தோசமாக இருந்தது. ஆனால் பார்த்தால் இருந்ததிலும் பார்க்க மோசமான நிலமை நான் சொல்லுற மாதிரி எண்ணைச் சட்டிக்குள் இருந்து வெளியில் பாய்ந்து அடுப்பிற்குள் விழுந்த மாதிரித்தான் போயிட்டுது. 

 

ஒருவிதமான நின்மதியும் இல்லை. ஒரு கோவிலில திருவிழா நடந்து கொண்டிருந்தது. அந்தக் கோவிலில் நந்திக் கொடி நாட்டி இருந்தார்கள். அதை வந்து பிடுங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள் தூணோட. யாரோ வாரார்களாம் யாரோ வந்தால் எங்களுக்கென்ன? முருகனுக்கு நாங்கள் கொடிகட்டி நந்திக் கொடியேற்றி திருவிழா நடத்தினால் நந்திக்கொடி சைவ சமயத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கொடி. அதைப் பிடிங்கிக்கொண்டு போறதெண்டால் அங்க திருவிழா நடந்து கொண்டிருக்கு என்ன என்னும் முடியேல்ல. மற்றது கிளிநொச்சிக் கந்தசாமிகோயில் முருகன் இன்னும் மறியலுக்குள் தான் இருக்கிறார். முள்ளுக் கம்பி வேலிக்குப் பின்னுக்குதான் இருக்கிறார்.

 

இரணை மடுக் குளத்திற்கு ஒரு காவற் தெய்வம் இருந்தது. இரணை மடு கனகாம்பிகை அம்மன் எண்டு இந்தக் கிளிநொச்சித் தொகுதியில இரணைமடுக் குளத்தின் தண்ணீரால பிரயோசனம் எடுக்கிற அத்தனை பேரும் வருசத்திற்கு ஒருக்கா வந்து பொங்கிற இடம். அங்க அந்த அம்மன்தான் எங்கட காவற் தெய்வம் குளக்கட்டுக்கு. இப்ப வேறொரு தெய்வத்தைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். தெய்வத்தை வைச்சிருக்கிறதைப் பற்றி பிரச்சினை இல்லை. எங்கட உரிமையை பறித்துப் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்தக் கோவிலில அந்தக் குளத்திலதான் சுவாமி தீர்த்தம் ஆடிறது. ஓன்றா இரண்டா சொல்லுறது 2 மணித்தியாலம் 3 மணித்தியாலம் வேணும் இவர்களுடைய அட்டகாசங்களை சொல்லுறதிற்கு.

 

நேற்று (23.06.11) பிள்ளைகளைக் காணவில்லை என சனம் ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கு.  ஆர்ப்பாட்டம் பண்ணினவன் துவக்கு எடுத்து சுட்டானா? பொம் அடித்தானா? கல்லெறிஞ்சானா? தங்களுடைய வேதனையை கண்ணீரால காட்டினார்கள். அதுக்கு கூட விரட்டி அடித்திருக்கிறார்கள் இராணுவம் என்ன? எங்க போறது நாங்கள்? இதுதான் பிரச்சனை என்னைப் பொறுத்தவரையில் இன்றைக்கு இனப்பிரச்சனை அல்ல முக்கியம் இதுதான் முக்கியம். நாங்கள் கீரையை திண்டுட்டு வேலியில நட்ட முரங்கை மரம் காணும் முருக்கங்காய், முருங்கை இலை இருக்கு மரவள்ளிக் கிழங்கு காட்டுக்குள் இருக்கிறதை சாப்பிட்டு நின்மதியாய் இருக்க. இந்தக் கெடுபிடியை விட்டிட்டு

 

கெடுபிடி என்டா ஒன்றா இரண்டா?  ஒரு கூட்டம் வைக்க இயலாது. நாலுபேர் சேர்ந்து பேச இயலாது. அவருக்கு ணசொல்ல வேணும் என்ன விசயம் என்றாலும் அவையளுக்கு சொல்ல வேணும். கல்யாண வீடென்றாலும் சொல்ல வேணும். செத்த வீடு என்றாலும் சொல்ல வேணும். கோயில் திருவிழா எண்டாலும் சொல்ல வேணும் எண்டால் என்ன இது? இவையள் என்ன பெரிய தெய்வங்களா?

 

இந்த மக்களுடைய உணர்வுகள் முழுக்க இப்ப எப்படி என்டால் எட இவங்கள் விடுதலைப் புலிகள் பறவாயில்லைப் போலிருக்கு. என்ன இவ்வளவு கொடுமைகளை விடுதலைப் புலிகளிடம் இருந்து அனுபவிக்கவில்லை என மக்கள் சொல்ல வேண்டி வந்தால் அப்ப எங்க போய்கொண்டிருக்கிறம் நாங்கள்?

 

இவர்கள் யார் எங்களுக்கு அனுமதி தாறதிற்கு? என்ரை வீட்டில போய் இருக்கிறதிற்கு இவையார் அனுமதி தாறது? நேற்று நான் என்ரை கூட்டத்தில இருக்கேக்க இரண்டு மூன்றுபேர் கதைச்சுக் கொண்டு இருக்கினம் ஒருவர் வந்தார் ஒரு இராணுவத்தினர் என்னோட கதைக்கவில்லை. அருகில் இருந்தவர்களோட கதைச்சவர் என்னென்டு கேட்க மந்திரி வாராராம் மந்திரி வந்தால் எங்களுக்கு என்ன யாராவது மந்திரி வந்தால் நான் என்ரை வீட்டில இருந்து எழும்பி சலூட் அடிக்க வேணுமா? என்ரை வீட்டில நான் இருக்கிறன் என்ன இப்படி எங்களுக்கே இந்தக் கெதி என்றால் நாங்கள் எங்க போய்கொண்டிருக்கிறோம் என்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்கிறதிற்கு ஒரு முற்குறியாக. யானைவரும் பின்னே மணி ஓசைவரும் முன்னே என்பது போல இப்ப மணியோசை கேட்குது யானை வந்து கொண்டிருக்குது. இல்லை வந்திட்டுது. ஆனா எங்களுக்கு தெரியேல்லை பலபேருக்கு. ஏனென்றால் இங்க கொஞ்சப்பேர் வக்காலத்து வாங்கிறதாலதான் வினை கூடியிருக்குது. என்ன வக்காலத்து வேண்டிறது என்றால்?

 

நேற்று முதல்நாள் செய்தி ஒன்று இப்பிடிச் சொல்லுது. நான் சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு நல்ல பிள்ளை எண்டு சொன்னால் அதை மட்டும் ஒரு பத்திரிகை போட்டு இருக்கு. நான் என்னவோ இந்த அரசாங்கத்தை பாராட்டின மாதிரி. அரசாங்கத்தை நான் எப்படி பாராட்டுறது. அரசாங்கம் மக்களிட உரிமைகளை எல்லாம் பறிச்செடுத்து காலால் போட்டு நசிக்குது.

அப்பிடியான நிலமையில இங்க வக்காலத்து வாங்கிறவைபாடு பெரும்பாடு.  இவரோட சேர்ந்தால் தானாம் வெட்டிக் கிழிப்பாராம். ஆர் வந்து இங்க வெட்டிக் கிழிக்க வேணும் எங்களுக்கு? எங்களுக்கு தெரியும் வெட்டிக் கிழிக்க. அதுக்கு ஒரு இடையில பூசாரி எங்களுக்கு தேவையில்லை. ஒருதருடைய சேட்டிவிக்கற் தேவையில்லை. ஏதோ ஒரு நிகழ்ச்சி ஒன்று நடக்குது என்றால் அதிலை தான் ஒரு நிபுணர் போல அட்வையிஸ் தருவார் ஒருவர். அது சரிதான் என்பார் இதனை நான் எத்தனை நாளுக்கு கேட்பது?

 

சரித்திரம் திரும்புது. 30 வருடத்திற்கு முன்னர் என்ன நடந்துதோ? அது பழையபடி திரும்புது. எங்க போறம் எண்டுதான் தெரியவில்லை. 30 வருடத்திற்கு முன்னம் நடந்ததை 30 வருடம் சென்றது. விடுதலையாக இப்ப நடக்கிறதை பார்த்தால் 300 வருடம் சென்றாலும் முடியாது. நாங்கள் நிரந்தர அடிமைகள் ஆகிக் கொண்டு வருகிறம்.  எங்களை அறியாமல் கறையான் அரிச்சுக்கொண்டு இருக்குது. நான் கூட்டங்களில் இப்படித் தான் சொல்வேன். பத்து இருபது புத்தகங்கள் நான் அடுக்கி வைச்சிருந்தனான். வெளியிலை பார்த்தால் அது நல்லாத்தானே இருக்குது என்டு கடைசியாக ஒருநாள் ஒவ்வொரு புத்தகமாய் பார்த்தால் அது உள்ளுக்கு கறையான் அரிச்சுக் கிடக்கு. கறையான் சாப்பிட்டுது. அப்பிடியான வாழ்க்கையைத்தான் தமிழ் மக்கள் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 

அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிறவர்கள் தயவு செய்து உள்ளுரிலயாய் இருந்தால் என்ன வெளிநாடுகளில் இருந்தால் என்ன சேட்டிவிக்கட் குடுக்காதையுங்கோ. தெரியாத விடயத்திற்கு சேட்டிவிக்கட் குடுக்காதையுங்கோ. வந்து பாருங்கோ. ஒரு வீட்டில கிளிநொச்சியில நின்மதியா வாழக் கூடியதா இருக்குதோ என்டு பாருங்கோ ஒரு வீடாவது கூரையெல்லாம் மேஞ்சிருக்கா எண்டு பாருங்கோ. கெஸ்ற்றை கூப்பிட்டு ஒருநாளைக்கு வைச்சிருக்கக் கூடிய வீடு ஒன்று இருக்கோ எண்டு பாருங்கோ. இப்படி எல்லாம் மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கயில அரசாங்கம் சும்மா வெளிநாடுகளுக்கு காட்டுறதிற்காக செய்யிறதை பார்த்து இப்ப எல்லாரும் சேட்டிவிக்கற் குடுக்கினம். எல்லாரும் நிண்டவன் வந்தவன் போனவன் சிறியவன் பெரியவன் எல்லாரும் சேட்டிவிக்கட் குடுக்கினம்.

 

முந்தி ஒரு காலத்தில இவர்கள் பெரியவர்கள் சிந்தனையாளர்கள் எண்டு நினைச்சவையள் சிலர் சேட்டிவிக்கட் குடுக்கிறதைப் பார்த்தால் இவையளுக்கெல்லாம் தலை பிழைச்சுப் போட்டுது என்டெல்லே எண்ணத் தோன்றுது. அதிகாரத்திற்கு அடிக்கல் நாட்டேல்ல ஆனால் நாளுக்கு நாள் அதிகாரம் எழும்பிக் கொண்டு போகுது.

 

அதுக்குள்ள தேர்தல் ஒன்று கண் துடைப்புக்காக வருது. தேர்தல் கூட்டம் வைக்க இயலாது. 4 பேர் நிண்டு பேசேலாது. எமேஜன்ஸி லோவை வைச்சுக் கொண்டு எல்லா விதமான ஆட்டத்தையும் ஆடுகிறார்கள். எமேஜன்ஸி இருந்தாலும் இதுதான் நிலமை இல்லாட்டாலும் இதுதான் நிலமை.

 

குருபரன்:- இங்கு நீங்கள சொன்ன மாதிரி சேட்டிவிக்கட் குடுக்கினம் உன்ற விடயத்தில அதாவது முன்பு விடுதலைப் புலிகளில் முக்கிய பங்கு வகித்தவர்களும் அல்லது முன்பு தேசியம் தொடர்பாக அல்லது விடுதலை தொடர்பாக தீவிரமாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்களும் அதேபோல் புத்திஜீவிகள் அறிஞர்கள் என புலம் பெயர் நாடுகளில் இருக்கும் பலரும் இலங்கைக்கு விஜயம் செய்து விட்டு புலம்பெயர் நாடுகளில் வந்து சொல்லுகிறார்கள் அங்கு எல்லாமே சொர்க்க மயம். வடக்கு என்றாலும் தெற்கு என்றாலும் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து கொண்டு வருகிறது. மக்கள் சந்தோசமாக வாழுகிறார்கள். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டால் குறுகிய நேரத்தில் சென்று விடலாம். ஏந்தப் பிரச்சனையும் இல்லை. யாழ்ப்பாணத்தில் வங்கிகள் சுற்றுலா விடுதிகள் கொண்டாட்டங்கள் என்றெல்லாம் நடைபெறுகின்றது. இதை விட மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்றெல்லாம் பரவலாக இப்போது பேசுகிறார்கள். அங்கு இராணுவ ஆட்சியை உடனடியாக நீக்க முடியாது தானே? 30 வருடத்திற்குப் பிறகு நிலங்களை எல்லாம் மீட்டால் அங்கு மீள் நிர்மானங்கள் மீள் கட்டுமானங்கள் புனருத்தாரணங்கள் எல்லாம் மேற்கொள்ளத் தானே வேண்டும். எனவே படையினர் நிலைகொள்ளத்தானே வேண்டும். அது மட்டும் அல்லாம் அங்கே களவு கொலை கொள்ளை என்றெல்hம் பிரச்சனைகள் உண்டு அவற்றைக் கட்டுப்படுத்த படையினர் நிலைகொள்ள வேண்டும் தானே எனக் கூறுகிறார்கள்.  அதற்கும் அப்பால் தமிழ் அதிகாரிகளும் அதனைத் தானே கூறுகிறார்கள். இவை குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

 

ஆனந்தசங்கரி:- இது இவை எல்லாரும் சேர்ந்து அரசாங்கத்தை இவைதான் பழுதாக்கினம் எண்டு நான் சொல்லுறன். உங்களுக்கு அரசாங்கத்தை கண்டிக்கப் பயமாக இருந்தால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருங்கோ. தேவையில்லாம அரசாங்கத்தை புகழ வேண்டாம். அரசாங்கம் புகழக் கூடியமாதிரி இருந்தால் நான் புகழுவேன். அரசாங்கத்தை புகழ்ந்திருக்கிறன். புகழ வேண்டிய தேவை வந்தால் புகழுவன். புகழக் கூடிய செயலில் ஈடுபட்டால் புகழுவேன்.

 

இன்று நடந்ததைப் பாருங்கோ (24.06.11) நேற்றைக்கு பிள்ளைகளைக் காணவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை விரட்டி அடிச்சார்கள். இன்றைக்கு பேப்பரில வந்திருக்கு அங்க அரசாங்கம் குடிசன மதிப்பீட்டிற்கு. இவர்கள் தனிப்பட்ட முறையில் பதிவுகளை மேற்கொள்வதனை ஆட்சேபித்து ஒரு வழக்கைப் போட இராணுவமோ புள்ளிவிபரம் எடுக்குதாம். இராணுவத்திற்கு என்ன தேவையிருக்கு எங்கட குடிசன மதிப்பீடு எடுக்க? மகிந்த சிந்தனை இப்ப நாறுது. எல்லாற்ற சிந்தனையும் கலந்து இப்ப அது மகிந்த சிந்தனையில்லை. இப்ப அது வேறு ஒரு சிந்தனையாய் போச்சு. மகிந்த சிந்தனை சொல்லியிருக்கா இராணுவத்தைப் போய் ஆட்களை கலைக்கச் சொல்லி? மகிந்த சிந்தனை சொல்லியிருக்கா பதிவுகளை செய்யச் சொல்லி?  எடுத்த எல்லாத்துக்கும் மகிந்த சிந்தனை அது இப்ப யோக்காகப் போச்சு. மக்களுக்கு இப்ப மகிந்த சிந்தனை பகிடியாப் போச்சு.

 

யுத்தம் முடிந்தால் இராணுவத்திற்கு என்ன வேலை அங்கே. இராணுவமா செய்ய வேணும்? ஒவ்வொரு மாவட்டங்களுக்கு ஜீஏ, ஏஜீஏ, பிரதேச செயலர்கள்  இருக்கினம் அவையள் புனருத்தாரணம் கட்டிட வேலைகள் என்று எல்லாவற்றையும் பார்ப்பினம். ஆயிரக்கணக்கான விதானைமாரும் இருக்கேக்க இராணுவமும் சில எடுபிடிகளும்தான் செய்ய வேணுமே? யாழ்ப்பாணம் எங்க இருக்குது என்று தெரியாதவன் எல்லாம் வந்து இங்க யாழ்ப்பாணத்தில தொண்டு செய்ய வாறான்.. யாழ்ப்பாண மக்களின்ற மொழியில ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியாதவர் எல்லாம் வந்து எங்களுக்கு சேவை செய்யினமாம். சேவையில்லை இவையள் இந்த மக்களை வதைச்தெடுக்கிறார்கள். இங்கை அவயின்ற சேவை எதும் தேவையில்லை. மக்களை விட்டால் அவை தாமாக செய்வினம். எங்களுக்கு அரசாங்கம் வந்து இப்பிடித்தான் உழுகிறது, இப்பிடித்தான் றோட்டுப் போடுறது, இப்பிடித் தான் கேற் திறக்கிறது என்று காட்டித் தரத் தேவையில்லை. நாங்கள் என்ன சந்திர மண்டலத்தில் இருந்து வந்தனாங்களா? நாகரீகம் தெரியாதவர்களா? நாகரீகத்தை உலகத்திற்கு போதிச்சவன் தமிழன் என்று பெருமையாகப் பேசுகிறவர்களுக்கு இதைக் கேட்கத் தெரியாதா? மக்களை நின்மதியாக வாழ விடுங்களேன். ஏன் போட்டு நசுக்கிறியள். என்னத்திற்கு இராணுவத்திற்கு எங்கட புள்ளி விபரங்கள்? பாக்கிறதிற்கு யார் யார் இருக்கினம் என்று. ஏன் அரசாங்கத்தால எத்தனை பேர் செத்தவையள் என்று புள்ளி விபரம் எடுக்க முடியாதா? அவர் யாரோ சொல்லுறார் அதெல்லாம் முடிஞ்சு போட்டுது என்று. ஏன் எடுக்க முடியாது? தாயை பறிகொடுத்தவர், பிள்ளையை பறிகொடுத்தவர், புருசனை, பெண்டிலைப் பறிகொடுத்தவை எல்லாம் இருக்கினம். அவையளிட்ட போய் யார் யார் இறந்தவர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லுவார்கள்.எத்தனைபேர் செத்தவர்கள், எத்தனைபேர் காணாமல் பொனவர்கள் என்று கூட்டிக் கழிக்க மிகுதி வரும்.

 

இப்ப சொல்லியினம் காணாமல் போனவர்களுடைய விபரம் இரகசியமாக உற்றார் உறவினர்களிடம்தான் குடுப்பினமாம் ஏன்? கோம்பியூட்டரிலை பதிஞ்சு விட்டால் ஒவ்வொருவரும் தட்டிப் பார்ப்பினம் அ வரியில எத்தனைபேர் செத்தவையல் ஆ வரியில எத்தனைபேர் செத்தவையல் என்று. விஞ்ஙானம் வளர்ந்துட்டுது என்று சொல்லுற நாட்டில ஆதிவாசிகளுக்கு சொல்லுற மாதிரி சில கதையல் சொல்லுறார்கள். இது எல்லாம் வெளிநாட்டில இருந்து வருகிறவையலுக்கு தெரியாது.

 

தயவு செய்து நீங்கள் இங்க வந்து நற்சான்றுதழ் கொடுக்கத் தேவையில்லை.

 

அரசாங்கத்தின்ற அழைப்பின் பேரில 15 பேர் வருகினமாம். அரசாங்கத்pன்ற கணக்கில உலகத்தில ஆக 15 பெரிய தமிழ்ர்தான் இருக்கினம். அவையளைக்கூப்பிட்டு கொட்டலில தங்க வைத்து இடங்களை காட்டுவினமாம். அவர்கள் சேட்டிவிக்கற் கொடுப்பினம். இதுவெல்லே ஆட்சி இதுவெல்லோ ஆட்சி என்று. ஒரு 15 பேர் சேர்ந்து அறிக்கை விடுவினம் புத்திஜீவிகள் என்று. ஆக இலங்கையில 15 புத்திஜீவிகள் தான் இருக்கினமோ? உங்களோட சம்பந்தபட்ட விடயங்களுக்கு உங்கட கருத்தை சொல்லுங்கோ. சும்மா 10 பேர் கூடி எங்களை அழித்துக் கொண்டு இருக்கிறவையளுக்கு எண்ணை ஊற்றாமல் ஒதுங்கி இருக்கிறது இந்தப் புத்திஜீவிகளுக்கு நல்லது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.