குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

குமரிநாடு.நெற்றின் பார்வையில் இந்த தேர்தல். இலங்கை என்ற படத்தின் முக்கிய கதாபாத்திரம்யார்?

03.12.2014-தமிழர்கள் அரசியல் நுணுக்கம் அற்றவர்கள்  என்பதை க்காண்கின்றோம்.இந்தத்தேர்தல் பல உள்நோக்கங் களுடன் நடக் கின்றது. மாற்றம்தான் மூவினத்திற்கும் தேவை. மகிந்தவின் தவறுகளைக்களை தவறான முறைகளைப் பின்பற்றி வெல்வதுநடக்கின்றது.மகிந்த ஆடைகள்  இல்லாது வீதியில் நடந்தால் மைத்திரி நீயும்  ஆடைகளைக்கழற்று என்பதே தற்போதைய நிலை.இது  கொள்கைகள் அல்ல நீண்டு நிலையானதும் அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

சிங்களபௌத்த காப்பாளன் என்றே  புலிகளை  அழித்து  மார்தட்ல்களை  வெற்றியாக்கி  போர் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துபவரை அதே இனத்தைச் சேர்ந்தவர்களே  கடும் முயற்சியால் பெருமளவான  ஒன்றிணைவால்தான் வெல்ல முயற்சிக்கின்றார்கள்.

அத்துடன் த.தே.கூ. சென்ற முறை ரணில்-சரத் பக்கம்  அதாவது கக்கீம் உட்பட சிறுபான்மைகள்  எதிரணியில் இணைந்தமையால்  சிங்களமக்களின் அதிக வாக்கு  மகிந்தவிற்கு கிடைத்தது என்பது  ஒரு கணிப்பு இதை இம்முறை கருத்தில் கொண்டே த.தே.கூ.  மறைமுக ஆதரவைப்பெறவே எதிரணி  முனையும் என்ற சாணக்கியத்தை தமிர்கள் உணரவில்லை.

அதனால்  மீட்சியில்லை. மனோகணேசன் வெளிப்படையாகச் சொன்னார் தமிழர்நிலை அது தான்.

நிறைவு இல்லாத ஒப்பந்தத்தில் எதிர்பார்ப்புகளுடன் கையொப்பம் இடுகின்றேன் என்றார்  உண்மைதான்.

அதன்பின்னரே கட்சிகள் தமது கொள்கை வழி பாராளுமன்ற தேர்தலைச் சந்திக்க வாய்ப்புவரும்.

இல்லையேல் இலங்கையில் ஒன்றமே இல்லை என்ற நிலைதான் மிஞ்சும்.

இதுவரை கண்டுகொண்ட அடாவடித்தனம்,குள்ளத்தனம்,நையாண்டித்தனங்களை அறிந்தும் அவர்களுடன் பேரம்  பேசுவது ஏமாளித்தனம்.

மாற்றத்திற்கான வாக்களிப்பிற்கு  ஊக்கமளித்துவிட்டு மௌனமாக இருப்பது தான் சரி.

சனாதிபதித்தேர்தலை தனித்தனியே சந்திக்க முடியாது என்ற நிலைதான் நாட்டில்  இருந்தது அதனை  திறமையாக சிங்களவர்கள் நல்ல அரசியல் திறனுடன் நகர்த்தியுள்ளார்கள்.

வெற்றிதோல்வி வேறு இது ஒரு திறன் என்பதை தமிழராகிய நாம் உணரவேண்டும்.

ஐ.தே.கட்சி மக்கள் சோர்வுற்று படுத்திருந்தார்கள். யேயார், பிரேமதாச  போன்ற மக்களைக்கவரும் தலைவர்கள் இப்போ  ஐ.தே.கட்சியில் இல்லை என்பதே உண்மை.

அடுத்து மக்களின் மனதில் இருப்பவர் சந்திரிக்கா.

இவர்  மகிந்தவால் ஓரங்கட்டப்பட்டதால் மிகவும் வேகமாகவுள்ளார்,மகிந்தவிடமிருந்து பிரிந்துவந்த மைத்திரி கறைபடியாத அரசியல்வாதி அவரைவைத்து சிறிலங்காசுகந்திரக்கட்சியின் வாக்குகளை உடைத்து மகிந்தவை சற்று தடுமாற வைக்கும் திட்டம்  தற்காலிக வெற்றியில் உள்ளது.

அதற்கு கூட இன்னும் நகரவேண்டியுள்ளது.

இத்தேர்தல் மூலம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தம்மைத்தயார்படுத்தும் தந்திரங்களை முன்னெடுக்கின்றன.

இதில் மகிந்த  மைத்திரி போட்டியைவிட சந்திரிக்காவுடனான எதிரிகளின் போட்டி தொக்கு நிற்கின்றது.

எனவே  கதாநாயகி  சந்திரிக்கா கதாநாயகன்  ரணில்.

உபபாத்திரங்கள் ஏனையவை இலங்கை என்ற படத்தில் வெற்றி தோல்விக் கதாநாயகர்களைவிட இந்த இருகட்சியின் பெருந்தலைவர்களைக் கதாநாயகர்களாக் கொண்டே கதை நகர்வதை யாரும்கண்டு கொள்ளவில்லை.

இதில் தற்போதே ரணில் கட்சிகளின்  கூட்டிணைவை வலுப்படுத்துகின்றார்.

சந்திரிக்கா மைத்திரியை வைத்து தன்ளை  மீளெளுகை கொள்கின்றார்.

அடுத்த  கடும் போட்டியில் சிறிலங்காக்கட்சி இரண்டாக இருக்க ஐ.தே.க  அடுத்ததேர்தலைச்சந்திக்கும் நிலையிருக்கு அப்பொதும் சந்திரிக்கா மக்களிடம் குறிப்பிட்டளவு மதிப்பபை பெற்றிருக்கின்றார்.

இந்தளவு செய்யக்கூடியவர் என்பதை  மகிந்த கணக்கிட்டுள்ளதால் சந்திரிக்காவிற்கு  சிறிலங்காகட்சியின் தலைவர்பதவி  கொவரவநிலை கொடுக்கப்படலாம் கருணா பிள்ளையானுக்கு கே.பீ க்கு போன்று  அதனால் சிறிலங்கா சுகந்திரக்கட்சி மீண்டும் பலமாகலாம்.

சந்திரிக்கா பதவியில் இல்லாவிட்டாலும்  பண்டாரநாயக்கமாதிரி ஆட்சியைக்கலைக்கவும் கட்சியை  உருவாக்கவும்  உகந்தவர் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை மிக்கவர் என்பதைக் காண்பித்துவிட்டார்.

ஆகையால்  மகிந்த எவைரையும் எதிரணியாக வைத்திருப்பவர் அல்லர். தனது நலனுக்காக  எவரையும் இணைக் கக்கூடியவர் எனவே இவற்றைக்கருத்தில் கொண்டுதான் தமிழர்கள் யோசிக்கவேண்டும்.

தமிழர்களின் பிரச்சனையை மகிந்தவோ -மைத்திரியோ-சந்திரிக்காவோ-ரணிலோ தீர்க்கப்போவதில்லை.

இலங்கைச்கசூழல் இந்திய-சர்வதேச கசூழல் தான் தீர்மானிக்கும் அதுவரை ஆரை ஆதரிப்பது ஆரை அகற்றுவது என்ற நிலையைத்தான்  த.தே.கூ. கடைப்பிடிக்கவேண்டும்.

தற்போது பலவழியிலும் தமிழர்களுக்கு இடர்-முட்டுக்கட்டை எவர் என்பதை மக்களைத்தீர்மானிக்கவிட்டு  அதை உணர்ந்து  த.தே.கூ. முடிவெடுப்பது சரி.

பணத்தை வைத்து 2005 இல் சனாதிபதித் தேர்தலை கணக் கெடுக்காது  புலிகள் நடந்தமையால் அவர்கள் இல்லை . அது போன்று இந்தத்தேர்தலை சரியாக   வழிநடத்தாவிட்டால் இலங்கையில் தமிழர் இரந்ததற்கான அடையாளமில்லை.