குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

06.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சுனந்தா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்; டில்லி போலீஸ் தகவல்

டில்லி: காங். கட்சியைச் சேர்ந்த சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கைக்கு மாறானது என போலீசார் கூறியுள்ளனர். காங்.கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் (52), இவரது மனைவி சுனந்தா புஷ்கர். கடந்த ஆண்டு டில்லி ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார்.

 

உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இயற்கைக்கு மாறான மரணம்என வழக்குப்பதியப்பட்டது டில்லி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்..இந்நிலையில் டில்லி போலீஸ் கமிஷனர் கூறுகையில், சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார். என தெரிவித்துள்ளார்.

 

பாக்.கில்மீண்டும் பயங்கர தாக்குதல்: தலிபான் தலைவர் வீடியோ மூலம் மிரட்டல்

காபூல்: பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ல் பயங்கரவாதிகள் பள்ளி மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 130-க்கும். மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர்.தக்ரீக் இ- தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் தலைவர் மௌலானா ஃபசுல்லாஹ் பேசும வீடியோ ஒன்று இன்று வெளியானது, அதில் பெஷாவர் தாக்குதலை விட அதிபயங்கரமான, மோசமான மற்றொரு தாக்குதலை பாகிஸ்தானில் நடத்துவோம் என பேசியுள்ளார்.

 

நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வைகோ எதிர்ப்பு

சென்னை: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் நடத்திட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.இது தொடர்பாக ம.தி.மு.க.பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை, நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் தேனி மாவட்டத்தில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும். அந்த மலைப்பகுதியே நாசமாகிவிடும்.இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

 

சங்கரராமன் கொலை வழக்கு: தீர்ப்பு நகல் கேட்ட மனு ஏற்பு

புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன்கொலை வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்திட கோரியும், தீர்ப்பின் நகலை வழங்கிட கோரி வராகி என்பவர் தாக்கல் செய்த மனுவை புதுச்சேரி குற்றவியல் கோர்ட் ஏற்றுக்கொண்டது.

 

பயங்கரவாதிகளை ஒடுக்க பாக். புதிய சட்டம்

இஸ்லாமாபாத்:பயங்கரவாத வழக்குகளை விரைந்து முடித்திட ராணுவ கோர்ட்டை அமைத்திட வசதியாக புதிய சட்டம் ஒன்றினை பாகிஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.

 

சுப்ரமணிய சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

புதுடில்லி: அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கர்நாடக ஐகோர்ட்டில் சுப்ரமணியசுவாமி நேற்று மனு தாக்கல் செய்தார்.இந்நிலையில் ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் வாதிட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட் நகலை சமர்ப்பித்தார். இந்த மனுஇன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தத்து, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில்தான் முதலில் அனுமதி பெற வேண்டும்.என நீதிபதி அறிவுறுத்தினார்.

 

சட்டவிரோத பணிபரிமாற்ற வழக்கு: செல்வி விடுவிப்பு

புதுடில்லி:சட்டவிரோத பணி பரிமாற்ற வழக்கில் அரசு தரப்பு சாட்சி பட்டியலில் இருந்து செல்வி விடுவிக்கப்பட்டதாக டில்லி சிறப்பு கோர்ட் நீதிபதி தெரிவித்தார். மேலும் ஆடிட்டர் சிவ சுப்ரமணியனும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

சுதாகரன் திருமண செலவு: ஜெ. வக்கீல் விளக்கம்

பெங்களூர்:சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.,தரப்பு வக்கீல் குமார் வாதிட்டதாவது, ஜெயலலிதா செய்த செலவுகள் அனைத்தும காசோலை மூலமாக செய்யப்பட்டது. மேலும் சுதாகரன் திருமணச்செலவுகளை சிவாஜி குடும்பத்தினர் தான் செய்தனர்.இவ்வாறு வாதிட்டார்.

 

எனக்கும் பத்ம பூஷண்: விஜேந்தர் கோரிக்கை

குர்காவுன்: இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர், பீய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றார். சமீபத்தில் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா தனக்கு பத்ம பூஷண் விருது வழங்கவில்லை என ஆதங்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அவரது. பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் விஜேந்தர் ,சாய்னா ..நேவல் போன்று தனக்கும் பத்ம பூஷண் விருது தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பிடம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கோர்ட்டில் ஆஜராக ராகுலுக்கு விலக்கு

மும்பை: கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலையொட்டி, தானே நகரில் நடந்த காங். பிரசார கூட்டத்தில் காங். துணை தலைவர் ராகுல் பேசும், .ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் தான் காந்தியை சுட்டுக்.கொன்றனர் என்றார். பிகிவாண்டி கோர்ட்டில் ராகுல் மீது வழக்கு தொடரப்பட்டது. அக்டேபர் 7-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆஜராவதில் விலக்கு கோரி ராகுல் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ராகுல் ஆஜராவதில்இருந்து விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

மயிலாடுதுறை: ரேஷன் கடை முற்றுகை

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழி நகராட்சி 23, 24வது வார்டுக்கான ரேஷன் கடை, சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ளது. ரேஷன் கடையில், கடந்த மூன்று மாதங்களாக அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. வேறு பொருட்கள் விநியோகம் செய்யவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கோவில்பத்து கிராம மக்கள், ரேஷன்கடையில் இருந்து விற்பனையாளர் மரியான் அகஸ்டின் என்பவரையும், கடையையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கிரானைட் கற்களை அரசுடமையாக்கும் வழக்கு, 27க்கு ஒத்திவைப்பு

மேலுார்: பட்டா நிலங்களில், பி.ஆர்.பி., நிறுவனத்தினர், அரசு அனுமதியின்றி, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, அடுக்கி வைத்திருந்தனர். கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி, முன்னாள் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார். மேலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து, மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.

 

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதல்

கோவை: கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், பி.இ., மெக்கானிக் இறுதியாண்டு படிக்கும் மாணவன் கார்த்தி, 21. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர். கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கிறார். அருகிலுள்ள ஓட்டலில் இருந்து, விடுதிக்கு பைக்கில் சென்ற கார்த்திக்கை மர்ம கும்பல் தாக்கியது. தலையில் பலத்த காயமடைந்த, கார்த்திக்கை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவன் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கல்லுாரி மாணவர்களுக்குள் இருந்து வந்த முன்விரோதம் காரணமாக, இத்தாக்குதல் நடந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், தனியார் கல்லுாரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

நீதிபதிகள் நியமன பொது நல வழக்கு: சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: நீதிபதிகள் நியமன ஆணை தொடர்பான சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், சட்டத்தை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் 3 பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி இன்று நடந்த விசாரணையில் அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

 

மாவோயிஸ்ட்களை ஒடுக்க அறிவுரை முன்னாள் டி.ஜி.பி., தகவல்

மேட்டூர்: கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரம் மலைக்கோவிலுக்கு சென்ற, மத்திய உள்துறை ஆலோசகரும், முன்னாள் டி.ஜி.பி.,யுமான விஜயகுமார், மேட்டூர் சிறப்பு அதிரடிப்படை முகாமுக்கு இன்று விசிட் செய்தார். நிருபர்களிடம் பேசிய அவர், ''மேற்கு தொடர்ச்சி மலையில், கர்நாடகா, தமிழகம், கேரள மாநிலத்திற்குள் உட்பட்ட பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டமும், செயல்பாடும் அதிகம் உள்ளது. மாவோயிஸ்ட்களின் நடவடிக்கைகளை கண்டறிந்து, அவர்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதால், மூன்று மாநிலத்திலுள்ள சிறப்பு அதிரடிப்படை தலைமைக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

 

சொத்து குவிப்பு வழக்கு: 2-ம் நாள் விசாரணை

பெங்களூரூ: அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அப்பீல் மனு விசாரணை கர்நாடகா ஐகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி முன் நேற்று விசாரணை துவங்கியது. இன்று இரண்டாம் நாள் விசாரணை இன்றும் துவங்கியது.

 

மாஜி முதல்வர் கொலை: குற்றவாளி தாய்லாந்தில் கைது

கடந்த 1995-ம் ஆண்டு பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் , காலிஸ்தான் பயங்கவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் . இந்த கொலை வழக்கு சம்பவத்தி்ல் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜக்தர்சி்ங், 2004-ம் ஆண்டு சண்டிகார் சிறையில் இருந்து தப்பியோடினார். சமீபத்தில் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பஞ்சாப் போலீசார், தாய்லாந்து போலீசார் நடத்திய ரகசிய கூட்டுபடை வேட்டையில் அவர் தாய்லாந்தில்ர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாதுகாப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

பா.ம.க. வெளியேறுவதால் பின்னடைவு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி, கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறினாலும் பா.ஜ.விற்கு எந்த பின்னடைவும் கிடையாது.மீத்தேன் திட்டத்தில் தமிழகத்தின் நலன் கருதி மத்திய அரசு செயல்படும். சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வேலையின்றி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் பலாத்காரம்

முசாபர்பூர்: பீகாரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 30வயது இளம் பெண் பீகாரில் தனது உறவினரை பார்க்க வந்துள்ளார். முசாபர்பூர் ரயில்நிலையத்தில் 5 பேர் கொண்ட கும்பலிடம் முகவரியை கேட்டு்ள்ளார். அவர்கள் அந்த பெண்ணை ஏமாற்றி கலெக்டர் அலுவலக வளாத்தில் வைத்தே பலாத்காரம் செய்துள்ளனர். இதில் 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவன் கலெகட்ரின் கார் டிரைவர் என தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

தந்தை, மகள்கள் கழுத்து அறுப்பு

காரைக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி நெடுங்குடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 45. வெளியே சென்றிருந்த, மனைவி, மாமியார் வீடு திரும்பிய போது, பன்னீர்செல்வம், மகள்கள் கலைவாணி,9, கனிமொழி,7, ஆகியோர் கழுத்து அறுபட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டனர். காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், கனிமொழி இறந்தார். பன்னீர்செல்வம், கலைவாணி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களாக கழுத்தை அறுத்துக்கொண்டார்களா? முன்விரோதம் காரணமாக வேறு யாராவது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்களா? என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.

 

நித்தியானந்தா ஆசிரம பெண் மரணம்: போலீஸ் விசாரணை

பெங்களூரூ: சாமியார் நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இளம் பெண் சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் இறந்த சம்பவம் தொடர்பாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார். போலீசார் திருச்சி விசாரணையை துவக்கியுளளனர். இளம் பெண் சங்கீதா .கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தாயிடம் விசாரிக்க உள்ளனர்.

 

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கேன்டர்பரி:நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 6.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் சேதம் குறித்த முதற்கட்ட தகவல் ஏதும் இல்லை.கடந்த 2011-பிப்ரவரியில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் இது இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என சொல்லப்படுகிறது. 2011ல் நடந்த நிலநடுக்கத்தில் 185 பேர் பலியாகி விட்டனர்.

 

மகாராஷ்டிரம்: 9 ஆண்டு வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு

மும்பை:மகாராஷ்டிரத்தில் கடந்த 9 ஆண்டுகள் வரையிலான அரசியல், சமூகப் போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது.மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.

 

தொண்டர்களிடையே மோதல்: வங்கதேசத்தில் 2 பேர் பலி

டாக்கா:வங்கதேசத்தில், ஆளும் அவாமி லீக் கட்சித் தொண்டர்களுடன் நேற்று நிகழ்ந்த மோதலில் தேசியவாதக் கட்சித் தொண்டர்கள் இருவர் உயிரிழந்தனர்.இதையடுத்து, நாடு முழுவதும் காலவரையற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு தேசியவாதக் கட்சி அழைப்பு விடுத்திருப்பதால் அங்கு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

 

தியாகராஜ ஆராதனை விழா இன்று துவக்கம்: ஜன.,10ல் பஞ்சரத்தின கீர்த்தனை

தஞ்சாவூர்:திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகளின், 168வது மஹோத்ஸவம் விழா, இன்று மாலை துவங்குகிறது. தொடர்ந்து, 10ம் தேதியன்று, பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிக்கு, ஆண்டுதோறும், தஞ்சை மாவட்டம் திருவையாறில், மஹோத்ஸவம் விழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 168வது மஹோத்ஸவம் விழா, இன்று மாலை, 6 மணிக்கு துவங்குகிறது.விழாவுக்கு, தியாக பிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ரங்கசாமி மூப்பனார் தலைமை வகிக்கிறார். அறங்காவலர் குழு தலைவரும், த.மா.கா தலைவருமான வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, 7 மணிக்கு டி.என்.சேஷகோபாலன் பாடுகிறார். 7.20 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பாடுகிறார். 7.40 மணிக்கு கணேஷ், குமரேஷ் குழுவினரின் வயலின் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்தின கீர்த்தனை, 10ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 8.30 மணிக்கு, திருவையாறில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்ச விருத்தி பஜனை ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலம், விழா பந்தலை அடைந்தவுடன், ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள், ஒரே குரலில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி, தியாகராஜ ஸ்வாமிக்கு, இசை அஞ்சலி செலுத்துகின்றனர். விழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களும், நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

 

நமது 'பிதாகரஸ்' தேற்றத்திற்கு உரிமை கொண்டாடும் கிரீஸ் நாடு

மும்பை: மும்பையில் நடந்த அறிவியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், 'மாநாட்டில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகள், சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களை, மனித சமூகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்' என்றார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பேசியதாவது: பிதாகரஸ் தேற்றத்தை கண்டுபிடித்தவர்கள், நம் விஞ்ஞானிகள். ஆனால் தற்போது, கிரீஸ் நாட்டவர்களான கிரேக்கர்கள், அதற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதேபோல், நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட, 'அல்ஜீப்ரா'வுக்கு, அரபு நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன.சூரியசக்தி மின்சாரம், மருத்துவம், ரசாயனம் மற்றும் புவி அறிவியல் என, பல விஷயங்களில் நம்முடைய விஞ்ஞானிகளின் அறிவுத் திறனை, நாம் தன்னலமற்ற முறையில் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.இவ்வாறு, ஹர்ஷ் வர்த்தன் கூறினார்.

 

புரியாத சந்தேகங்களுக்கு விளக்கமும் இல்லை; ஆதாரமும் இல்லை!

மும்பை: இந்திய அறிவியல் மாநாட்டில், அறிவியல் வல்லுனர்கள் அல்லாதோர் கூறிய கருத்துகள் யாவும், ஏற்றுக் கொள்ளத்தக்கவை என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியவையே. 'முற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை எனக் கூறப்படுபவற்றுக்கு, அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் நம்மிடையே இல்லாதபோது, வெறும் வார்த்தைகளாக அவற்றைக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?' என, அறிவியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.அவர்கள் எழுப்பும் கேள்விகள்:*ஆதாரம் என்று காட்டப்படுபவை, எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்தும், தற்போதைய நிலையில் சந்தேகம் எழுகிறது.*இப்படி தர்க்க ரீதியான வாதம் ஏன் எழுகிறது என்றால், கடந்த, 300 ஆண்டுகால கண்டுபிடிப்புகள் அனைத்துக்கும், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. அணு முதல், அண்டம் வரை, அனைத்தையும் பகுப்பாய்ந்து, அவற்றுக்கான விளக்கங்களைப் பதிவு செய்து, அதை வல்லுனர்களிடையே பகிர்ந்து கொண்டு, தொடர் பகுப்பாய்வு செய்து, அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்ட பின், ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டது.*இது போன்ற எந்த பகுப்பாய்வும், தர்க்க ரீதியாக கேள்விகளும், அதற்குரிய சந்தேகங்களும், முற்காலத்தில் எழுப்பப்பட்டனவா, அதற்கான பதில்கள் பெறப்பட்டனவா என்பதற்கும், முடிவுகள் பதிவு செய்யப்பட்டதா என்பதற்கும், எந்த ஆதாரமும் இல்லை.*ஒரு முனிவர் சொல்லி இருக்கிறார் என்பதை வைத்து மட்டும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

 

காஷ்மீரில் ஆட்சியமைப்பது குறித்து குழு அமைத்தது பா.ஜ.,

புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக பி.டி.பி., கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.