குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழர்களின் சணக்கியம் எதுவாக இருக்கவேண்டும் -உலக தமிழ்க்குருவி

05.08.2014-அண்மைக்கால இலங்கை இந்திய  சர்வதேச அரசியல்  சூழ்நிலைகளை அவதானிக்கும் போதும், நியுயோகில் உலகத்தலைவரிகளின்  மாநாடு நடைபெற  இருக்கும் நிலையிலும்  அங்கு இந்தியப்பிரதமர் திரு.மோடி அவர்களும் இலங்கைத்தலைவர் அவர்களும் இலங்கை விவகாரங்கள் குறித்து சந்தித்து பேசவாய்புகள் உள்ள  சூழ்நிலையில்   தமிழர் தரப்பு இன்றைய இக்கட்டான  சூழ்நிலையை  கையாழ  எத்தகைய உபாயங்களை யிட்டு  யோசிக்கலாம் என்றநிலையில் தனிநபர் பார்வையாக சிலவைற்றை அலசிக் கொள்வதே   இப்பதிவின் நோக்கமாகும்

.1 மேற்குலகம் சர்வதேச  விசாரணை  என்ற   திசையில் பயணிக்கின்றது   அதை மெல்லமெல்ல  நகர்த்தி வந்து இலங்கை அரச தரப்பை தமது எண்ணப்பாட்டிற்குள் கொண்டு வரும் உள்நோக்கம்  கொண்டதாகவே அது எம்மால் உணரப்படுகிறது. அம்முயற்சியில் தமிழர்தரப்புக்கான  தீர்வுக்கு   எந்த வரையறைகளையும்  அவர்கள் முன்வைத்து நகர்த்துவதாகத் தெரியவில்லை.  அதில் எதிரி தண்டிக்கப்படலாம் அல்லது குற்றப்பத்திரம் பெறலாம் என்பதே  தமிழர்தரப்பின் நப்பாசையே தவிர   தீர்வு என்பது அதில் எங்கேயும் தென்படவில்லை. குற்ம்செய்தோரை அறிதல் அல்லது குற்றங்களை அறிதல் நிரூபித்தல் பொறுப்புக் கூறல் என்றவிடயங்களே அங்கு தொனிக்கின்றன.

 

2. இலங்கையின் நிலைப்பாடு என்ன?   இங்கு பயங்கரவாதம் இருந்தது அதனை அழித்து விட்டோம்  அது  மீண்டும் தலை துாக்காது பார்த்துக் கொண்டு இலங்கையை   அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்கின்றோம்  நல்லிணக்க முயற்சிகள் நன்றாக செயற்படுத்தப் படுகின்றன இந்த இரண்டும் நிறைவு பெற்றால் இங்கே  எல்லாம் சரி வெளியா ருக்கு இங்கு என்ன வேலை  என்பதாக இருக்கிறது.

3 இந்தியா தனது நாட்டு நலன் பேணும் பொருட்டு பிராந்தியஅ நலன் என்ற பதத்தோடு விளையாடி இலங்கையில் சிறு பான்மை மக்களுக்கு நிர்வாகப்பங்கீடு செய்ய வேண்டும்  எல்லாத்தரப்பினரும்   ஏற்றுக் கொள்வதாகவும் அது  இருக்கவேண்டும் என்ற  வேடிக்கையான கருத்தோடு  செயல்படுகின்றது.  ஒரு தரப்பினரும் மாற்றுத்தரப்பினரை  ஏற்றுக் கொள்ளாமை தான்  பிரச்சனை  ஆகையால் அதைப்பயன்படுத்தி  இலங்கையை  தமது   கைக்குள்  வைத்திருப்பதே   இந்தியாவின் அடிப்படைத்திட்டம்   இது தான்  ஆயுதப்போரின்  ஆரம்பம், அது தன் கைமீறிப் போனதும் தானும் தமிழர் தரப்பும் பாதிக்கப்ட்டதையும், இலங்கை எந்தப்பாதிப்புகளையும் சந்திக்காது  இன்று இலங்கை ரசுசியா   சீனாவின்  கையுக்குள் இருப்பதை கழற்றுவதும் , இலங்கை விவகாரத்தை  சர்வதேசத்திடமி ருந்து பிடுங்கி  தான் வைத்து பிசைவதையே  இந்தியா  உள்நோக்கமாக்கொண்டு  நகரும் நிலையியில் இங்கு அடுத்த கட்டத்தில்  தமிழர்  தரப்பு  வெகுவாகப் பாதிகப்படப் போகும் நிலையும் இருக்கிறது.

4 தமிழர் தரப்பிற்கு இன்று வெளிப்படையாக உதவும் சக்தியாக சர்வதேசம் நடிப்பதையும் உணர முடிகிறது   தீர்வை  இலங்கைக்குள்  தீருங்கள் என்ற இந்தியாவின் கருத்தை மதிப்பதாகவும் தான் அந்தச்சர்வதேசத்தை  தமிழர் தரப்பு எண்ண வேண்டும்.  இந்த கையறு நிலையில் இந்தியாவையும்  கைவிடமுடியாது. சர்வதேசத்தையும் கைவிட முடியாது  இலங்கை தம்மைக்கைவிட்டது தான் இந்தளவிற்கும் காரணம் என்பதே தமிழர் தரப்பு நிலை.

இந்த  நிலையில் எப்படி  முடிச்சை அவிழ்த்து  தமக்கு சாதகமான கட்டத்துள்  நுழையவது  என்ற போட்டியில் மிகவும் பலமாக இலங்கை  அரசே  இருக்கிறது.மிகவும் பவீனமான  நிலையில் தமிழர் தரப்பு இருக்கிறது.

ஒரே ஒரு சாதகம் தமிழ்நாடு மட்டும் தான். இதையும் இலங்கை தமிழ்  அரசியல் தலைவர்கள்  சாணக்கியமாக இன்னம் கையாள அவர்களையும் தமிழகமக்களையும்  சரியாகப் புரிந்த கொள்ளாத குறைபாடுகள் அதிகம்.

5  சீனா  தன்னை  அறிமுகப்படுத்தாமலே   இதனைக் கையாண்டு ஒருகட்ட வெற்றி நிலையில் இருக்கிறது.  அரபு நாடுகளை த்தரணத்தில் சரியாகப்பயன்படுத்த தமிழக அரசியல்வாதிகளம் இலங்கைத் தமிழர்களும் முனைப்புக் காட்டவதாகவும் தெரிய வில்லை.  ஆனால் கக்கீம்  போன்ற இலங்கை இசுலாமியத்தலைவர்கள் பாதிக்கப்பட்டிருக் கும்  தமிழ்தரப்பையும் பயன் படுத்திக்கொண்டு தமக்கு சாதகமான விளைவுகளை  உருவாக்கவதிலும்  குறியாக  இருக்கிறார்கள்.  இதன்பொருட்டு எண்ணுகையில் தமிழர்கள்  முசுலீம் நிர்வாகங்களுக்குள் கட்டுப்பட்டு   முட்டும் படும் நிலையும்  தோன்றும்   ஏனெனின் இலங்கையின் மிகச்சிறுபான்மை  இனம் என்ற கட்டத்திற்குள்ளும் பலம் அற்ற  ஆதரவு அற்ற கட்டத்திற்குள்ளும்  இலங்கைத் தமிழர்கள் நகர்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

 

இந்தநிலையில் தமிழர்கள் நியுயோக்கில்  எத்தகைய  நிலைப்பாட்டை  உருவாக்க வேண்டும் என்ற ஒரு தேவை இருக்கின்றது என்பதைச்சுட்டிகாட்டுவதும்  இப்பதிவின் இரண்டாவது நோக்கமாகும்.

வெற்றி பெற்ற தமிழர்கட்சிகளை மறைமுகமாக செயலற்றதாக்கும் திட்டத்தை இலங்கை அரசு கைவிடவேண்டும் .

நல்லிணக்க முயற்சிகளின் உண்மைத் தன்மையை  விளக்கும் பொருட்டு அண்மைய முசுலீங்கள் மீதான தாக்குதல் நிகழ்வுகளை முன்வைத்து  ஆதாரப்படுத்தி- அதனை இலங்கை இந்திய அரசுகள் வாரக்கணக்கில் தடுக்க முடியாது பெரும் சொத்து இழப்புகள்   நிகழ்ந்து போனதும்  மேலும் இனங்களுக்கிடையில் வரிசலை ஊககுவிப்பதாகவுமே  அது நிகழ்ந்துள்ளது  எனவே இலங்கையில் சிறுபான்மை இனமக்களை இந்த இரு அரசுகளும் எப்படி நடத்துகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு  இது என்பதை விளக்கதல். அதற்கான மாறறீட்டு நடவடிக்கை தயார் நிலையில் இலங்கை இருக்கும் இதனை  அங்கேவைத்து  முறியடிப்பது எப்படி என்ற  திறனைப்பெறுதல்.

உலக நாட்டுத்தலைவர்கள்  இருநாட்டுத்தலைவர்களுக்கும் வெளிப்படையாக  கூறவேண்டும் அழுத்தம்கொடுக்க வேண்டும் இரண்டு அரசுகளும் இலங்கை சிறுபான்மை மக்களின் நலன்களைக் காக்கத்தவறியுள்ளீர்கள்  மனிதப் படுகொலைகள் நிகழ்வதைத் தடுக்காது இருந்துள்ளீர்கள் ஆகையால் நாமம் இணைந்தே குறுகிய காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  தீர்வை வழங்க  நீங்கள் ஒத்தழைக்கவேண்டும்  இக்கருத்தினை இறுக்கமாக சர்வதேசத்தை தமிழர் தரப்பு  முன்வைகச் செய்யுமாயின் இலங்கை இந்தியா  ஒரு முடிவை எடுத்து தீர்வு காலம் நடைமுறைப்படுத்தல்  என்ற நிலைபற்றிச்  சிந்திக்கும் நிலை வரும்

இதற்காக பின்வரும் காரணங்களுடன் தமிழ்தரப்பு முனைய வேண்டும்.

இந்தியா இராணுவத்தை அனுப்பியும் தமிழர்களுக்கான பிரச்சனையை தீர்க்கவில்லை - ஒப்ந்தம் செய்தும் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.

அதற்கு பின்னர்தான் இவ்வளவு பெரிய அழிவுகள் எந்த இனமாக இருந்தாலும் மனிதப்படுகொலைகள் நடந்துள்ளன.

அது போன்றே இன்றைய நல்லிணக்க முகமூடியின்ஆரம்பமும் அடுத்த சிறுபான்மையான இசுலாமிய மக்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகள் இசுலாமிய நாடுகளும் இணைந்து இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கும் மதங்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று நியுயோக்கில் அழுத்தி இருதலைவர்களையும் தீர்வுக்காக விரைவதுடன் சிறுபான்மை மக்களை மீட்டு நின்மதியாக வாழும் சூழலை வேகமாக ஏற்படுத்த ப்படவேண்டும் என்று கடும்பிடியாக வற்புறுத்தவேண்டும். கால எல்லையை குறுகியதாக வழங்கவேண்டும்.

எனவேதான் சர்வதேசப்பிரச்சனையாக மாறியதற்கு காரணமே இந்தியாவும் இலங்கையும் தான். 1987 முதல் இன்று வரை இந்தியா இலங்கைத்தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

நேருகாலம் முதல் மலையக மக்களின் பிரச்சனையை இந்தியா தீர்க்கவில்லை. வாக்குகளுக்கான சலுகைநடவடிக் கைகளைத்தவிரவும் அக்காலம் முதல் அப்பகுதிகளை சிங்கள மயமாக்கலில் ஈடுபட்டு சிங்களக் கிராமங்களாக ஆக்கி மேலும் அங்கு வாழும் தமிழ்மக்களை அச்சச்சூழலில் மறைமுக அழுத்தத்தில் தமிழர்பகுதிகளைச் சுற்றிசிங் களக்குடியேற்றங்களைச் செய்தமைதான் வேகமாகச் செயற்படுத்தப்பட்டு சிறுபான்மைக்கு பாதகமான நடவடிக்கைகளே நிகழ்ந்துள்ளன.

இதனைத் தற்போது வடக்கிலும் கிழக்கிலும் மிகவேகமாகச் செய்கின்றார்கள் போருக்குப்பின் கிடைத்த உதவிகள் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு உரிய முறையில் சேரவில்லை அபிவிருத்தியென விளம்பரப்படுத்தி பெரும்பான்மைச் இனத்திற்குதொழில் வாய்ப்பாக பணம்குவியும் விதமாகவே அரசு பக்கச்சார்பாக  ஐந்தாண்டுகள் செயல்பட்டு தமிழர்களின் மனங்களை  மேலும் புண்படுத்தியிருக்கிறது, ஆட்சியாளரின் செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கே அதிகம் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவர்த்தி நடவடிக்கைகள் தவறாகவே கையாளப்படுகின்றது.

அது அரசியலாக்கப்பட்டு மிகவும் மோசமான நிலை நிலவுகின்றது. போரின் போது கணவன் மார்களை இழந்த பெண்களுக்கு என்ன தொடர் கொடுப்பனவு மருத்துவ உதவித்திட்டம் உடை உணவு வீடுகள் அடிப்படையளவில் கூட வழங்கப்படவில்லை.

கிளிநொச்சி முல்லைத்தீவில் சென்று பாருங்கள். இந்த இரண்டு இடங்களிலும் இராணுவத்தின் வெற்றி நினைவுச் சின்னங்கள் கட்டவும் ஆண்டு ஆண்டு போர் வெற்றிவிழா செய்யவுமே பெருநிதியை அரசு செலவு செய்கிறது.

அதாவது மறைமுகமாக பெரும்பான்மை சிறுபான்மையை போரால் வென்றதை விழாவாக நிகழ்த்தும் ஊக்கம் கூட போரால் பாதிக்கப்ட்ட சிறு பான்மையினருக்கு நன்மை பயக்கும் திட்டங்களாக அன்றிப் பாதகமான திட்டங்களையே நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கான ஆதாரத் திரட்டல்கள் ஆவணங்களைததிரட்டல் சமர்ப்பித்தல் தேவை. அரசு அவ்வாறே உலகை ஏமாற்றகின்று

உலக  தொண்டுநிறவனங்கள் உலகநாடுகள் நிதியைக் கூட அரசு பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு உதவுவ தில் அக்கறை செலுத்தவில்லை. சில பிரதான வீதிகளை அமைத்து பணக்காரவர்க்கம் பணத்தைச் சம்பாதித்து அரசியல் இலாபம் பெறும் குறுகிய இலக்குகளே வெற்றி பெற்று அப்பாவிமக்கள் மென்மேலும் பாதிக்கப்பட்டு வாழ்வு ஆதாரங்கள் இன்றி சிரமப்படுகின்றார்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இவர்களுக்கு உதவுவதை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுத்தடுக்கின்றது. புலிப்பெயர்ப்பட்டியல் தயாரித்து அறிவித்து நடவடிக்கை எடுக்கின்றது. இதனால் உதவும் எண்ணம் உள்ளவர்களையும் அச்சுறுத்தி இருக்கிறது.

கிளிநொச்சி முல்லைத்தீவுக்கிராமங்களுக்கு சுகந்திரமாக உறவுகளிடம் சென்று திரும்ப முடியாது. இருசாராரும் மறைமுகமாக நேரடியாக கண்காணிப்படுகின்றோம் என்ற அச்சஉணர்வின்றி சென்று திரும்ப முடியாதளவு இராணுவ உளவுத்துறைப் பிரசன்னம் இருக்கிறது.

இலங்கைப்பிரச்சனையில் இருந்து தமிழகத்தைபிரிப்பது தவறானது இதற்கு தமிழகமும் உலகத்தமிழர்களும் விட்டுக்கொடுக்க் கூடாது.

இவற்றை நியோக்கில் தலைவர்கள் அழுத்திச் சொல்லவும் இருதலைவர்களையும் தமிழர்களுக்குசுயாட்சி வழங்கு மாறும் அதிகாரமுள்ள நிர்வாக அலகுகள் கொடுக்குமாறும் வற்புறுத்தவேண்டும்.

13 ஆம் திருத்தச்சட்டம் இந்திய மாகாணசபை தோற்று விட்டது எனவே அதற்கு அப்பால் அதிகார முள்ள அர்த்த முள்ள இதுவரைகாலம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களை சுகந்திரமடைந்த காலத்திலிருந்து நடந்து வந்த தவறுகள் நீங்கும் வண்ணம் நேர்மையான தீர்வை உடனடியாக நடை முறைப்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுக்கும் நிலையை உருவாக்குங்கள்.

மறைமுகமான நேரடியான அடக்கு முறைகள் மத மொழி இனக் குரோதங்களை ஏற்படுத்தக் கூடிய புதிய குடியேற்றங்களை தடுத்தல். அமைப்புகளை அனுமதிக்கக்கூடாது.

வடக்கு கிழகிலிருந்து 1970களில் இருந்த இராணுவத்தின் எண்ணிக்கைக்கு கூடாமலும் அன்றைய முகாங்களுக்கு  அதிகப்படாமலும் இருக்கவேண்டும் இதனை இந்தியாவும் சர்வதேசமும் கண்காணிக்கும் நிலைதான் அவசியம் என்பதனை வலியுறுத்தவேண்டும்.

தமிழர் பகுதி இயற்கை வழங்களை அழித்தல்போன்றவற்ரைறத் தடுத்தல் தமிழ்ப் பகுதியில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கல் அதிகாரநிலைச் சுறண்டல்களைத்தடுத்தல் இவற்றைத் தெளிவு படுத்தி இலங்கையின் வட க்கின் இராணுவ ஆட்சிநிலையை அகற்ற உண்மையான சனநாயக கட்சி ஆட்சிகளை நடைபெற அரசு நேர்மையாக இயங்கவேண்டும்.என்பதனை நேரடியாகவும் அழுத்தியும் வலியுறுத்தும் பேச்சுவார்த்தை நிலைகளை இங்கிலாந்து போன்ற காமென் வெல்த்து நாடுகளும் ஆசியநாட்டின் முக்கிய மான நாடுகள் சிலவாயினும் வற்புறுத்தி பேசும் சூழலை உருவாக்க தமிழர்கள் தயாராக இல்லை. அரபு நாடுகள் இலங்கைச் சிறபான்மை மக்களுக்காகப் பேசும் சூழ்நிலைகளை உருவாக்குங்கள்.

தமிழர்களுக்கு பாதகமாக இருக்கும் விடயங்களை உணராது நடந்து முடியும் நிகழ்வுகளை செய்திகளாக அறிவித் துக் கொண்டிருக்கும் செய்தியாளர்களாக அதுவும் தமிழச் செய்தியாளர்களாகவே தமிழ்த்தரப்பு இதுவரை இருக் கிறது.

இன்றைய தமிழக தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிசைவு தொடருமா! தற்காலிகமானது தமிழக கட்சிகள் ஆட்சிப்பங் கிலில்லலை ஆகையால் ஒருங்கிணைந்து நிற்கிறார்கள் பிரதமர் மோடியின் படத்தையும் பெயரையும் இடம்பெறச் செய்தமையால் தான் இவ்வளவு வேகமாற்றம் இல்லையேல் தமிழகக் கட்சிகள் நாற்றமே!

எனவே அண்மைக்கால  நிகழ்வுகள் தமிழர்களுக்கு சாதகமானது என்பதை விட பாதகமானது மீண்டும் இந்தியாவும் இலங்கையும் தமிழர்களை அடியோடு அழிக்க முனையும் காலம் இது.

இதற்கு முன்னர்சர்வதேசப்பயங்கரவாதிகள் தமிழர்கள். தற்போது அன்னித் தலையீடுகளுக்கு காரணமானவர்கள் என்ற நிலையை உருவாக்குகின்றார்கள். இதை அவர்களிடமே திருப்பி விடுங்கள் அதுவே சாணக்கியம்.

உலகக்குருவி - 03..08. 2014