குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கைத் தமிழர்களுக்காக பாரளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - சுஷ்மா ஸ்வராஜ்.

26.06.2011--இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு.. தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரும் பிஜேபியின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் வரை நீடித்தது.பின்னர் சுஷ்மா செய்தியாளர்களிடம் கூறியது:
 
அதிமுக வெற்றிபெற்றதற்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்தச் சந்திப்பு சிறப்பாக அமைந்தது.
 
 இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவது பற்றி பேசினோம்.இலங்கைத் தமிழர்  பிரச்னைக்காகவும், தமிழக மீனவர் பிரச்னைக்காகவும் நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
 
 தமிழக சட்டப்பேரவையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் நகலை அனுப்புமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக்கொண்டேன். இந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
 
 
அதேவேளை இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் இடம்பெயர் மற்றும் மீள் குடியேற்ற மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு கிழக்கு தமிழ் இடம்பெயர் மக்கள் குறித்த பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா விஜயம் செய்திருந்த போது இடம் பெயர் மக்கள் குறித்த கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி இடம்பெயர் மக்களை விரைவில் மீள் குடியேற்றுவதாக உறுதிமொழி வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.