குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

05.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய கனிமொழி

சென்னை: தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது 47-வது பிறந்த நாளை சென்னை சி.ஐ.டி. காலனியில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கேக் ஊட்டினார். கனிமொழிக்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

அப்போது மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து கனிமொழி வணங்கினார்.

ஜெ., அப்பீல் விசாரணை: நீதிபதி எச்சரிக்கை
பெங்களூரூ: அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெ. மீதான சொத்து குவி்ப்பு வுழக்கில் அப்பீல் மனு மீதான விசாரணை கர்நாடகா ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் தம்மையும் சேர்க்க கோரி தி.மு.க. சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.இது தொடர்பாக நீதிபதி குமாரசாமி கூறுகையில், ஏற்கனவே சுப்ரமணியசுவாமி வழக்கில் வந்துள்ளார். இதில் அன்பழகன் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் அன்பழகன்மனு தேவையில்லை கோர்ட்டை அரசியலாக்க வேண்டாம். பார்லி.யிலும், சட்டசபையிலும் உங்கள் அரசியலை வைத்துக்கொள்ளுங்கள். என கண்டிப்பு காட்டி எச்சரித்தார்.
விமான விபத்திற்கு காரணம்: புது தகவல்
ஜகார்த்தா: ஏர் ஏசியா விமானம் இந்தோனேஷியா கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.இதில் பயணித்த 162 பயணிகள் இறந்தனர். 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிதறிய பாகங்கள் தேடும் பணியும், எஞ்சிய உடல்களை மீ்ட்கும் பணியும் நடக்கிறது. இந்நிலையில் விபத்திற்கு காரணம் குளிர்ந்த காற்றினால் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆவின் பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் காவல் நீட்டிப்பு
விழுப்புரம்: ஆவின்பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் கைதுசெய்யப்பட்டார். வழக்கு ,விழுப்புரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையில் அவரது கோர்ட் காவல் 19-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜான் கெர்ரி பேச்சு: இந்தியா அதிருப்தி
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, 2009-ம் ஆண்டு கெர்ரி- லூகர் சட்டத்தின் படி 532 மில்லியன்டாலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி, லஷ்கரே தொய்பா, ஜெய்ஷி -இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். பயங்கரவாதத்தினை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு ஜான் கெர்ரி நற்சான்று அளித்து பேசியிருப்பதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
மத்திய அரசிற்கு சாய்னா நன்றி
புதுடில்லி: பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல் பெயர், பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. இது குறித்து சாய்னா நேவல் கூறியதாவது, விருதுக்காக நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனினும் மத்தியஅரசின் துரித நடவடிக்கைக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
பாக். மீண்டும் மீண்டும் அத்துமீறல்: எல்லையில் ஓயாத தொல்லை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சம்பா,கத்துவா ஆகிய இடங்களில் இந்திய நிலைகள் மீது பாக். படைகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் எல்லையில் 10 இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திட பாக். திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தியாவும் எதிர் தாக்குதல் நடத்திட தயார் நிலையில் உள்ளது.
கலைஞர் தொலைக்காட்சி வழக்கு தள்ளிவைப்பு
புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் தொலைக்காட்சி மீதான புகார் தொடர்பான வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. வழக்கு நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத மாற்ற விவகாரம்: எம்.பி.எதிர்ப்பு
ஐதராபாத்: ஆந்திராவில் ஐதராபாத் எம்.பி. அசாவுதீன் ஓவாய்சிஸ், கர்வாபஸி முறையை விமர்சித்து பேசினார். அவர் பேசுகையில், உலகில் எல்லா மதங்களுக்கும் பிறப்பிடமே இஸ்லாம் தான். இந்தியாவில் மதமாற்ற விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மோடிக்கு மக்கள் வாக்களித்ததே வளர்ச்சி, வேலைவாய்ப்பினை அதிகரித்தான். அரசின் திட்டங்களை அனுபவிக்கத்தான் .இவ்வாறு அவர் பேசினார்.
ஆசாரம் பாபுவுக்கு ஜாமின் மறுப்பு
டில்லி: ராஜஸ்தானில் ஆசிரமம் நடத்தி வரும் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு (72) இவர் 16 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமின் தர மறுத்த நீதிபதி, மருத்துவ அறிக்கையை ஜோத்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
வேலூர் மேயர் கார்த்திகாயினி பத்திரிக்கையாளர் களிடம் மன்னிப்பு
வேலூர்: சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுசசெயலாளர் ஜெயலலிதாவிற்கு, தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹாவிற்கு வேலூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றிய மேயர் கார்த்திகாயினி கடந்த மாதம் நீதிபதி முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். தற்போது இன்று நடந்த மாமன்ற கூடத்தில் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
சென்னையில் 9-ம் தேதி புத்தக கண்காட்சி
சென்னை: வரும் 9-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னை ஒய்..எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடக்கிறது.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது ?
துடில்லி: தலைநகர் டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடக்கலாம் எனவும், அதோடு சேர்த்து தமிழகத்தில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கலாம் எனவும் தெரிகிறது.
இது குறித்த தவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், வரும் 15-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தலைநகர் டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி இரண்டாம் வராத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்திடவும், அதே நேரத்தில் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் .தொகுதிக்கு இடைத்தேர்தலையும் நடத்திடவும் தேதியை அறிவிக்கலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்டாரி எல்லையில் பதற்றம்
அமிர்தசரஸ்: இந்தியா-பாக். எல்லையில் அதிகரித்து வரும் போதை மருந்து கடத்தலை தடுக்க தவறிய எல்லைபாதுகாப்புபடை வீரர்களை கண்டித்து பஞ்சாப் மாநில ஆளும் கட்சியான சிரோண்மணி அகாலித் கட்சி சார்பில் முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அட்டாரி எல்லையில் தர்ணா நடத்தி வருகிறார். இதையடுத்து அட்டாரி எல்லையில் மக்கள் கூட்டம் அதிகம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.யை அடித்தவன் பொறியியற் கல்லூரி மாணவன்
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் ஆளும் திரிணாமுல் காங்..பொதுக்கூட்டத்தில் அக்கட்சி எம்.பி அபிஷேக் பானர்ஜி உரையாற்றிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவன் எம.பி.யை கன்னத்தில் அறைந்தான். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞன் , திபேஷிஸ் ஆச்சார்யா (25) என்றபொறியியல் கல்லூரி மாணவன் என தெரியவந்தது.ஏன் எம்.பி.யை அடித்தான் என்பதற்கான காரணம் குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.
தி.மு.க. எம்.பி. கனிமொழி பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னை: தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று தனது 47-வது பிறந்த நாளை.கொண்டாடினார். அவருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள்,மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
எம்.பி. மீது தாக்குதல்:கண்டித்து பேரணி
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் ஆளும் திரிணாமுல் காங். கட்சி பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி உரையாற்றிக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவன் திடீரென அவரை தாக்கி கன்னத்தில் அறைந்தான்.இதனை கண்டித்து இன்று திரிணாமுல் காங்.கட்சி தொண்டர்கள் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர்.இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சசிகலா,இளவரசி, சுதாகரன் மனுக்களும் விசாரணை
பெங்களூரூ: அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அவர் தாக்கல் செய்த அப்பீல் மனு கர்நாடகா ஐகோர்ட்டில் இன்று விசாரணை நீதிபதி குமாரசாமிமுன் துவங்கியது. ஜெ.,சார்பில் வழக்கீல் குமார் ஆஜராகி வாதிடுகிறார். இதனுடன் சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோரின் அப்பீல் மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளது.
ஜெ., அப்பீல் மனு விசாரணை துவங்கியது
பெங்களூரூ: சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலர்ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை கர்நாடகா ஐகோர்ட்டில், தனி நீதிபதி குமாரசாமிமுன் இன்று விசாரணை துவங்கியது. பா.ஜ.வைச்சேர்ந்த சுப்ரமணியசுவாமி , தம்மை வழக்கில் இணைத்துக்கொள்ள கோரி , கோர்ட்டில் ஆஜராகி வாதிடுகிறார்.
ஒபாமா வருகையின் போது தாக்குதல் நடத்த சதி?
ஜம்மு: காஷ்மீரின் சியல்காட் பகுதியி்ல் 60 முதல் 70 லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் இந்தியாவிற்கு ஊடுருவி தாக்குதல் நடத்திட தி்டடமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஹபீஸ் சையத் திட்டம் தீட்டி தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 26-ம் தேதி குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள நிலையில் இது போன்று சதி திட்டம் தீ்ட்டப்பட உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
டில்லி சட்டசபைக்கு பிப்ரவரியில் தேர்தல் ?
டில்லி: தலைநகர் டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. தலைநகர் டில்லி சட்டசபையினையும் கைப்பற்றி முனைப்பு காட்டிவருகிறது. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு வரும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜெ., மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
பெங்களூரு : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று துவங்க உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக ஐகோர்ட் அமைத்துள்ள சிறப்பு பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உள்ளது.
ஆபரேஷனால் பார்வை பறிபோன பரிதாபம்
லக்னோ : உத்திர பிரதேசத்தின் மதுராவில் கண் ஆபரேஷன் செய்து கொண்ட 12 பேர் பார்வையிழந்தனர். இதே போன்று ஆக்ரா மாவட்டத்திலும் ஆபரேஷன் செய்து கொண்ட 6 பேர் கண்பார்வையை இழந்துள்ளனர். இதனால் உ.பி.,யில் பதற்றம் நிலவுகிறது.
எல்லையில் பாக்., மீண்டும் அத்துமீறல்
ஜம்மு : எல்லையில், 3 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளன. காஷ்ரீமின் பன்சாரி, கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயில் தாமிரசபையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடராஜர் தாண்டவமாடிய ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
டில்லியில் பா.ஜ., இன்று முக்கிய ஆலோசனை
புதுடில்லி:காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்து பா.ஜனதா கட்சி டில்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.குறிப்பாக மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் ஆட்சி அமைப்பது குறித்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்து இன்று டில்லியில் பா.ஜனதா முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இதற்காக பா.ஜனதாவின் மாநிலக்குழுவுக்கு தேசிய தலைமை அழைப்பு விடுத்து உள்ளது.
அவசரச் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்: கெஜ்ரிவால் எச்சரிக்கை
புது டில்லி:விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல், நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தை டில்லியில் அமல்படுத்த மத்திய அரசை அனுமதிக்கமாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
டில்லி சத்தர்பூரில் நேற்று நடந்த ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசுகையில், "இதில், விவசாயிகள் நலனை அரசு கருத்தில் கொள்ளவில்லை. மாறாக தனியார் நிறுவனங்கள் சிலவற்றுக்காக மத்திய அரசு செயல்படுகிறது' என்றும் அவர் குறிப்பிட்டார்.விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை கட்டாயப்படுத்தி அரசு கைப்பற்றும் முயற்சி என்றும் இச்சட்டத்தை அமல்படுத்துவதால், 70 சதவீத விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தல்: காங்.,வெற்றி
ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. சத்தீஸ்கரில் 10 நகராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 4 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 6 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இரு இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அழகிரி - கனிமொழி இன்று சந்திப்பு?
சென்னை: தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் பிறந்த நாளை, மனிதநேய தினமாக, அவரின் ஆதரவாளர்கள் இன்று கொண்டாடுகின்றனர். நேற்று சென்னை வந்துள்ள அழகிரி, இன்று கனிமொழியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார்.கனிமொழியின் பிறந்த நாளை ஒட்டி, சென்னையில், அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷங்களுடன், நேற்று போஸ்டர் ஒட்டியிருந்தனர். முன்னாள் கவுன்சிலர் ருக்மாங்கதன் ஒட்டியுள்ள போஸ்டரில், 'தமிழ் இன முதல்வரின் காவிய புதல்வி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.இதை ஸ்டாலின் விரும்பவில்லை என, கூறப்படுகிறது. அதனால், அவரின் ஆதரவு மாவட்டச் செயலர் ஒருவரின் உத்தரவுப்படி, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இத்தகவல் அறிந்ததும், கருணாநிதி கடும் கோபம் அடைந்து, அந்த மாவட்டச் செயலரை எச்சரித்துள்ளார்.
நாளை ரோப்கார் நிறுத்தம்

பழநி:பழநி மலைக்கோயில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பிற்காக நாளை நிறுத்தி வைக்கப்படுகிறது.பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் 3 நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில், ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. நாளை(ஜன. 6ல்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதில் ரோப்கார் பெட்டிகள், இரும்பு வடகம்பிகள் கழற்றப்பட்டு, ஆயில், கிரீஸ் இடும்பணி நடக்கிறது. இதையடுத்துஅன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக, பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.