குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

04.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதுவே பாலியல் குற்றங்களுக்கு காரணம்:வைகோ

சென்னை: மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியது, நாட்டில் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு காரணம் மதுவால் தான். மாணவர்கள் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தபால் நிலையங்களில் தரிசன டிக்கெட் விற்பனை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை எளிதாகிறது. தரிசன டிக்கெட்டுகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு பதிலாக , விசேஷ காலங்களில் ஏழுமலையான தரிசிக்க தபால் நிலையங்களில் ரூ.300 மற்றும் ரூ.50 ஆகிய தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஆந்திரா,தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில்முதற்கட்டமாக 58 தபால் நிலையங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் சென்னையில் முகாம்
சென்னை: தி.மு.க.,வில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் சீரமைக்கப்பட்ட பின், புதிதாக 65 மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு, 7ம் தேதி மனுத்தாக்கல் நடக்கவுள்ளது. இப்பதவிகளுக்கு கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் மனுத்தாக்கல் செய்ய, மாவட்ட செயலாளர்கள் தலா ஐந்து பேர் முன்மொழிய வேண்டும். அதற்காக, மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், தி.மு.க., கட்சி பதவிகளை ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானதால், கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மகளை அடித்து கொலை செய்துவிட்டார் நித்தியானந்தா: தாய் பரபரப்பு புகார்
பெங்களூரூ: சாமியார் நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் பணியாற்றிய சங்கீதா என்றஇளம் பெண் கடந்த டிசம்பர் 28-ம் தேதி முன் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் இளம் பெண்ணின் தாயார் பெங்களூர் ராம்நகர் போலீசில் பரபரப்புபுகார் கூறியுள்ளார். அதில், சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்தில் நடந்த தகாத சில செயல்களை எனது மகள் பார்த்துவிட்டார் இதையறிந்த நித்தியானந்தா தனது மகள் சங்கீதாவை அடித்துக் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஸ்டாலின் குறித்து அழகிரி கருத்து
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரி அளித்தபேட்டி, ஸ்டாலின் ராஜினாமா குறித்த தகவல் எல்லாம் எனக்கு தெரியாது, முகவரி இல்லாத ஸ்டாலினை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை என்றார்.
தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர்: அழகிரி குற்றச்சாட்டு
சென்னை: தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்துகின்றனர்.எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும் என சென்னை விமான நிலையத்தில் மு.க. அழகிரி பேட்டியளித்தார்.
கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்:ஸ்டாலின்
சென்னை: தி.மு.க. தலைமை கழகத்தின் பொதுத்தேர்தலுக்கு பின்னர் எனக்கு வரப்போகும் எந்த பொறுப்புக்களையும் எதிர்ப்பின்றி ஏற்று கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றார் மு.க.ஸ்டாலின்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவேன்: ஸ்டாலின்
சென்னை: தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தவே பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச்செயலாளர் பதவிக்கு அன்பழகனும் போட்டியிடுகின்றனர்.நான் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றார்.
ஸ்டாலின் வீட்டில் குவிந்த தொண்டர்கள்
சென்னை: தி.மு.க. பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவலையடுத்துஇன்று ஸ்டாலின் வீட்டில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பின்னர் ஸ்டாலின் செய்தியளார்களுக்கு பேட்டியளித்தார். இதனால் ஸ்டாலின் வீட்டில் பரபரப்பு காணப்பட்டது.
ஆட்சி செய்ய தகுதியில்லாதவர் மம்தா: புத்தாதேவ் குற்றச்சாட்டு
கோல்கட்டா: மேற்குவங்க மாநில மார்க்.கம்யூ.மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான புத்தாதேவ்பட்டார்ஜி, கட்சி பத்திரிகையில் வெளியிட்டுள்ள அறிக்கை, மேற்குவங்க மாநிலத்தில் நடந்த சாராத சிட்பண்ட் மோசடி வழக்கில் ஆளும் திரிணாமுல் காங். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,அமைச்சர்கள் என வரிசையாக சிக்சி சிறைக்கு செல்கின்றனர். இவ்வளவு ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்த மம்தா பானர்ஜிக்கு சிறிதும் தகுதியில்லை. ஊழலில் ஊறிப்போய்விட்டது திரிணாமுல் காங். ஆட்சி.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
டில்லி-ஆப்கான் விமானத்தை கடத்த சதி:உளவுத்துறை எச்சரிக்கை
டில்லி: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா விமான நிலையத்தில் உள்ள ஏர்இந்தியா விமான அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம தொலைபேசி வாயிலாக ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து விமான நிலையத்திற்கும், ஏர்இந்தியா அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே டில்லி-ஆப்கான் செல்லும் ஏர் இந்தியா விமானத்தை பயங்கரவாதிகள் கடத்த சதி நடப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் சல்மான்கான் வீடு முற்றுகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
மும்பை: இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவை ஆதரித்து பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த வாரம் இலங்கை சென்று பிரசாரம் செய்தார். இதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் மும்பையில் சல்மான்கான் வீட்டை தமிழ் அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ். பிடியில் பிரிட்டன் நிருபர்: வீடியே வெளியீடு
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் பிரிட்டன் நிருபர் பிணைக்கைதியாக சிக்கியுள்ளார்.இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த நிருபர் ஜான் கென்டைல், இவரைஈராக்கில் மெசூல் நகரில் ஷாப்பிங் மால் ஒன்றிற்குவந்திருந்த போது அவரை பிணைக்கைதியாக ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பிடித்து சென்றுள்ளதும், பின்னர் அதன் வீடியோ நேற்றுவெளியானது.
விண்வெளிக்கு மனிதனை அனுப்ப தயாராகி வரும் இஸ்ரோ
மும்பை:விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை (இஸ்ரோ) உருவாக்கி வருகிறது என்று அதன் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.மும்பையில் நேற்று தொடங்கியுள்ள இந்திய அறிவியல் மாநாட்டில் அவர் கூறியதாவது: விண்வெளிக்கு ரோபோக்களை அனுப்பும் அளவுக்கு நம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அங்கு மனிதர்களை அனுப்புவதற்கு கூடுதலாக தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படுகின்றன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்போது, அவர்கள் உயிர் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இஸ்ரோ தயாராகி வருகிறது என்றார்.
ஐ.என்.எஸ்., நிர்வாகிகள் தேர்வு
புதுடில்லி:ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய நியூஸ் பேப்பர் சொசைட்டியின் தலைவராக, 'சம்பாவ் மெட்ரோ' பத்திரிகையின், கிரண் பி வதோதாரியாவும், செயற்குழு உறுப்பினர்களாக, 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் இரா.லட்சுமிபதி, 'ஹெல்த் அண்ட் தி ஆன்டிசெப்டிக்' பத்திரிகையின், ல.ஆதிமூலம் உட்பட பலர் தேர்வாகியுள்ளனர். இந்த அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தர்மபுரியில் நக்சல் வேட்டை
தர்மபுரி : தமிழக - கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள அட்டப்பாடி வன அலுவலகம் மீது, சமீபத்தில், மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.இதில், வனத்துறைக்கு சொந்தமான வாகனம் சேதமானது. தமிழக எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்கள், கடந்த காலத்தில் தங்களுக்கு புகலிடமாக திகழ்ந்த, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்குள் பதுங்க வாய்ப்பு உள்ளதாக, கியூ பிரிவு போலீசார் கருதுகின்றனர்.எனவே, தருமபுரி மாவட்ட எஸ்.பி., லோகநாதன் மற்றும் அரூர் ஏ.எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில், அதிரடிப்படை போலீசார், ஆயுதப்படை போலீசார் என, 50 பேர் குழுவினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு
ஐதராபாத்: காந்தி பெயரில் அவரது படத்துடன் பீர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது.
இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். .அதில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மாகாந்தி, உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலைவர் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க மதுபான தயாரிப்புநிறுவனம் அவரது படத்தினையும்,பெயரையும் பீர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 1971-ம் ஆண்டு இந்திய தேசியத்தின் மதிப்பையும்,மாண்பையும் தடுக்கும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 124-ஏ -ன் படி தேசத்தந்தை காந்தியை அவமரியாதை செய்வதாகும். இது கண்டனத்திற்குரியது.எனவே அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி மன்னிப்புகோர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் யுவராஜ்?
மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தேச அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த ரவீந்தர ஜடேஜாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு பதில் யுவராஜ் சிங் அணியில் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.