குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

03.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மேயரை எப்படி அழைப்பது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், மாநகராட்சி மேயர்களை, வணக்கத்துக்குரிய மேயர் என அழைப்பதற்கு பதிலாக மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

காங்., கட்சியும் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும்: சிதம்பரம்
சென்னை: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்க வேண்டும் என நானும், சிலரும் கூறினோம். ஆனால், இதனை கட்சி ஏற்கவில்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தாலும், கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்பது நிச்சயமில்லை. கூடுதலாக 30 இடங்கள் வரை கிடைத்திருக்கலாம். பிரதான எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் என கூறினார்.
ஆட்சி மாற்றம் எதிர்பார்த்தது தான்: சிதம்பரம்
சென்னை: தனியார் டிவிக்கு பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், 10 ஆண்டுகள் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால் ஏற்றமும், இறக்கமும் இருக்கும். மக்கள் எதிர்ப்பு இருக்கும். பொருளாதார மந்த நிலை காரணமாகவும், சில தவறுகள் காரணமாகவும் சரிவு ஏற்பட்டது. இதனை எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி செய்யவில்லை. எனவே மத்தியில் ஆட்சியில் மாற்றம் என்பது எதிர்பார்த்தது தான் என கூறினார்.
நிலத்தில் காலைக்கடன் கழித்த பெண்ணின் நாக்கு துண்டிப்பு
பாட்னா: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் அருகேயுள்ள காயாஸ் கிராமத்தில், பகவத் சிங் என்பவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் குஸ்மாதேவி என்ற பெண், தனது நிலத்தில் காலைக்கடன் கழித்ததாக கூறி அவரது நாக்கை துண்டித்துள்ளார். இது தொடர்பாக குஸ்மாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர்களின் புத்தாண்டு லட்சியம்- காதல் செய்வோம்
நியூயார்க்: இந்த புத்தாண்டில் காதல் செய்ய வேண்டும் என்பதையே பெரும்பாலான இளைஞர்கள் லட்சியமாக கொண்டுள்ளனர் என்பது இணையதளம் மூலம் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அந்த இணையதளம் எடுத்துள்ள ஆய்வில், 39 சதவீதம் பேர் செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் எனவும், 64 சதவீதம் பேர் வாழ்க்கையை அதிகாய் அனுபவித்து வாழ வேண்டும் என கூறியுள்ளனர். 57 சதவீதம் பேர் காதல் செய்தே தங்கள் லட்சியம் என கூறியுள்ளனர்.
நித்யானந்தா ஆசிரமத்தில் இறந்த இளம்பெண்ணின் கடைசி நிமிடங்கள்
பெங்களூரு: நித்யானந்தா ஆசிரமத்தில், திருச்சியை சேர்ந்த இளம் பெண் சங்கீதா மர்மமான முறையில் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பெண்ணின் கடைசி நிமிடங்கள் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், சங்கீதா ஆசிரமத்தில் உள்ள வரவேற்பறையில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த பெண் சிஷ்யைகள் சிலர், சங்கீதாவுக்கு தட்டிப்பார்த்தனர். இருந்தும் சங்கீதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால், அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சங்கீதா இறந்துவிட்டார். ஆனால் திடீரென தலை சரிந்து கீழே விழ காரணம் என்ன என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத கோபத்தில் கட்சி தலைவரை அடித்த தொண்டர்கள்
ராய்ப்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரை, கட்சி தொண்டர்களே அடித்து வெளுத்கு கட்டினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக மார்கண்டேயா உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பலர் விண்ணப்பித்தனர். இதில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், மார்கண்டேயாவை கட்சி அலுவலகத்திலிருந்த வெளியே இழுந்து வந்து சராமாரியாக தாக்கினர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக்கில் அலை மோதும் கூட்டம்
சென்னை: டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றே, மதுபானங்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இன்று அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கடைகள் திறக்கப்பட்டு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
ஐ.பெரியசாமி, ராசாவுக்கு தி.மு.க.,வில் பதவி?
சென்னை: தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல்நடைபெற்று முடிந்துள்ளது. வரும் 9ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. இதில் தி.மு.க., தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில், தி.மு.க., துணைப்பொதுச்செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ஆ.ராஜா, ஆகியோர் துணைப்பொதுச்செயலாளர்களாக நியமிக்க கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி வேட்பாளர் காருக்கு தீவைப்பு
புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பா.ஜ., வேட்பாளர் காருக்கு தீவைக்கப்பட்டது. பா.ஜ.,வின் வன்முறை செயலையே இது காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பாக்.,ல் விரைவில் ராணுவ கோர்ட்
இஸ்லாமாபாத் : பயங்கரவாதம் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு ராணுவ கோர்ட் அமைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா, பாகிஸ்தான் பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மசோதா குறித்த விவாதம் ஏதும் நடத்தப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விரைவில் பாகிஸ்தானில் ராணுவ கோர்ட் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் குளத்தில் 30 வெடிகுண்டுகள்
கிஷன்கன்ஞ் : பீகாரின் கிஷன்கன்ஞ் என்ற கிராமத்தில் உள்ள குளத்தில் இருந்து 30 வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். குளத்தில் மூட்டை ஒன்று கிடப்பதாக உள்ளூர்வாசிகள் போலீசிற்கு அளித்த தகவலின் பேரில் அவர் வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட அனைத்தும் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் தப்பிப்பதற்காக சமூக விரோதிகள் குளத்தில் இவற்றை வீசி விட்டு சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலக்கரி ஊழல்:மன்மோகனிடம் விசாரணை
புதுடில்லி : நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விரைவில் சிபிஐ, விசாரணை நடத்த உள்ளது.
மீண்டும் பிரச்னையை கிளப்புகிறார் மாயாவதி
லக்னோ : லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தாழ்த்தப்பட்ட பிரிவினர் பாரத ரத்னா போன்ற நாட்டின் உயரிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவதில்லை எனவும், திறமையும் தகுதியும் இருந்தாலும் உரிய கவுரவம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.
அமைச்சர்கள் குழுவை சந்திக்கிறார் மோடி
புதுடில்லி : ஜனவரி 5ம் தேதி அனைத்து அமைச்சர்களின் ஆலோசனை குழுக்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
ராமராஜ்யம் ஏன்?: ராஜ்நாத் விளக்கம்
புதுடில்லி : டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அண்டை நாடுகளுடன் நல்லுறவை கையாள தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் பாகிஸ்தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது என தெரியவில்லை. இந்தியாவில் ராமராஜ்யம் அமை வேண்டும் என நான் சொன்னதற்கு அர்த்தம், நிர்வாகம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் உரிமைகள், அந்தஸ்து என எவ்விதத்தில் ஏற்ற தாழ்வு இல்லாத நிலையை ஏற்படுத்துவது தான் என தெரிவித்துள்ளார்.
கட்டபொம்மன் பிறந்த தினம்: ஆய்வாளர் வருத்தம்
திருநெல்வேலி : சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 256வது பிறந்த தினத்தை அரசு சார்பில் யாரும் கண்டுகொள்ளவில்லை. வரலாற்று ஆய்வாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் மாலையணிவித்தனர். திருநெல்வேலி, பாஞ்சாலங்குறிச்சியில் 1760 ஜனவரி 3ல் பிறந்தவர் கட்டபொம்மன். 39 வயது வரையே வாழ்ந்து, இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக அவர்களது வரிவிதிப்பை கண்டித்து முதன்முறையாக போராட்டத்தை துவக்கினார். அவருக்கு துணையாக கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை, தளபதி சுந்தரலிங்கம், தானாபதிப்பிள்ளை உள்ளிட்டோர் சுதந்திர போராட்டத்தில் மறைந்தனர். தமிழக அரசு மாவட்டங்களுக்கு தலைவர் பெயர் சூட்டியபோது, நெல்லை மாவட்டத்திற்கு கட்டபொம்மன் பெயர் சூட்டியது. தற்போதும் நெல்லை விஜயநாராயணத்தில் செயல்படும் இந்திய கப்பற்படையின் வளாகத்திற்கு ஐ.என்.ஸ்.,கட்டபொம்மன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 3ம் தேதி அவரது பிறந்த தினத்தை நெல்லையில் அரசுத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு வரலாற்று ஆய்வாளர் மாணிக்கம், வாஞ்சி இயக்கம் தலைவர் ராமநாதன் உள்ளிட்டோர் மாலையணிவித்தனர்.வரலாற்று பேராசிரியரும் ஆய்வாளரும் கட்டபொம்மன் குறித்த பல்வேறு ஆய்வுநூல்கள் படைத்தவருமான பேரா.மாணிக்கம் கூறுகையில், இந்திய சுதந்திர போராட்டத்தில் வரிவிதிப்பிற்கு எதிராக போரை துவக்கியவர் என்றார். சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பெயரில் இயக்கம் துவக்கி அவருக்கு செங்கோட்டையில் மணிமண்டபம் அமைய தொடர் முயற்சிகளில் ஈடுபட்ட வாஞ்சி இயக்க தலைவர் ராமநாதன் கூறுகையில், சுதந்திரம் குறித்தோ வரலாறு குறித்தோ தமிழர்களுக்கு போதிய ஈடுபாடு கிடையாது. ஒரே காலகட்டத்தில் போராடி உயிர்துறந்தவர்களில் வடநாட்டவர்களுக்கு தரும் மரியாதையும், தியாகத்திற்கான மதிப்பையும் தமிழர்கள் எப்போதும் கண்டுகொண்டதேயில்லை என்றார்.
திமுக தேர்தலுக்கு ஜன.,7ல் வேட்புமனு
சென்னை : திமுக தலைவர், பொது செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தலுக்கு ஜனவரி 7ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளது. வேட்புமனு கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என திமுக அறிவித்துள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்:ராணுவம்
ஜம்மு : எல்லையில் குடியிருப்பு பகுதிகள் மீதும் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ராணுவம் அறிவுறுத்தி உள்ளார்.
பத்ம விருது கிடைக்காதது வேதனை:சாய்னா
புதுடில்லி : பத்மபூஷன் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலின் பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. சாய்னாவிற்கு பத்ம விருதுகள் வழங்குவதற்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாட்மின்டன் கழகம் பரிந்துரை செய்தது. ஆனால் சாய்னாவின் பெயரை நிராகரித்த விளையாட்டு அமைச்சகம், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கு விருதை வழங்கியது. இது குறிதஅது கேட்டதற்கு, விளையாட்டு துறைக்கு வந்து 5 வருடங்களுக்கு மேல் ஆனவர்களுக்கே விருது வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இது தொடர்பாக சாய்னா அளித்த பேட்டியில், சுசில் குமாரின் பெயர் சிறப்பு பிரிவின் கீழ் வழங்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். அவர்கள் கூறி உள்ள காரணத்தின்படி பார்த்தால் நானும் விளையாட்டு துறைக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தும் எனது பெயர் பத்ம விருதுக்கு நிராகரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையை துவக்கிய பா.ஜ.,-பிடிபி
ஸ்ரீநகர் : காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜ.,வும், பிடிபி.,யும் துவக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் அடுத்த வாரம் புதிய அரசு ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
வங்கி திட்டத்தை ஊக்குவிக்க ஜெட்லி முயற்சி
புதுடில்லி : டில்லியில் வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, உற்பத்தி துறையை, வங்கி திட்டங்கள் மூலம் ஊக்குவிக்க வேண்டும். வங்கி திட்டத்தில் சிறந்த திறமைகளை புகுத்துவது அவசியம். இதற்காக தனி அதிகாரத்தை நான் வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகளை பா.ஜ., நிறைவேற்றவில்லை :மாயாவதி
லக்னோ : பா.ஜ., ஆட்சிக்கு வந்த இந்த 7 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மக்கள் நலப்பணிகளும் நிறைவேற்றப்பட வில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.
மோடிக்கு அமித்ஷா நன்றி
புதுடில்லி : நாட்டில் எவ்வித பயங்கரவாத தாக்குதலும் ஏற்படவிடாமல் வெற்றிகரமாக அதனை முறியடிக்க உரிய ஏற்பாடுகளை செய்து வரும் பிரதமர் மோடி, மத்திய அரசு, புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நான் ந்னறி தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு படையினருக்கும், புலனாய்வு அமைப்பிற்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. இதனால் தான் புத்தாண்டு தினத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டில்லியில் குற்றங்கள் 99% அதிகரிப்பு
புதுடில்லி : 2014ம் ஆண்டு டில்லியில் குற்றங்கள் 99.22 சதவீதம் அதிகரித்துள்ளதாக டில்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு 73,902 ஆக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டு 1,47,230 ஆக அதிகரித்துள்ளது.
மேக் இன் இந்தியாவால் வேலைவாய்ப்பு
புதுடில்லி : திறமையை வளர்த்தல் மற்றும் மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களால் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க மிகவும் உதவும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கடற்படை விழிப்புடன் உள்ளது: ஐ. ஜி.,
புதுடில்லி : நேற்று இந்திய எல்லைக்குள் குஜராத் கடல்பகுதி வழியாக :டுருவ முயன்ற பாக்., பயங்கரவாதிகள் வந்த படகை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி குறித்து கடற்படை ஐஜி, குல்தீப் எஸ்.ஷியோரன் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், முதலில் அது பாக்., படகு என எங்களுக்கு தெரியவில்லை. அதனால் வழக்கமான முறைப்படி அந்த படகை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. அவர்களை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்ய முயற்சித்தோம் அதுவும் முடியாமல் போனது. அந்த படகில் 4 பேர் இருந்ததை பார்த்தோம். அவர்களை பார்க்கும் போது மீனவர்கள் போன்று தெரியவில்லை. அதனாலேயே சந்தேகித்து அவர்களை பிடிக்க முயற்சித்தோம். நமது கடற்படை விழிப்புடன் உள்ளது. நேற்றைய சம்பவம் தொடர்பான விவகாரம் விசாரணையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மாற்ற உதவுங்கள்:மோடி
மும்பை : மும்பையில் 102வது அறிவியல் மாநாட்டில் உரையாற்றி மோடி, ஆயிரக்கணக்கான குழந்தைகளும், இளைஞர்களும் அறிவியலை ஆவலுடன் கற்க வேண்டும். என்னை விட வேறு யாருக்கும் இந்த அளவிற்கு ஆதரவு அளித்திருக்க மாட்டீர்கள். அதன் காரணமாக கேட்கிறேன், இந்தியாவை மாற்ற எனக்கு உதவுங்கள். வளமான இந்தியாவை உருவாக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம்மால் அது முடியும் என நம்புவோம் என தெரிவித்துள்ளார்.
நாம் தான் முன்னோடிகள்: பிரதமர் பெருமிதம்
மும்பை : நாட்டின் வறுமையை ஒழிக்க அறிவியலும் தொழில்நுட்பமும் உதவுகின்றன. உலகின் முன்னோடிகள் நாம் தான் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ளோம். எப்போதெல்லாம் உலகம் தனது கதவுகளை அடைத்ததோ, அப்போதெல்லாம் நமது ஆராய்ச்சியாளர்கள் வைராக்கியத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துள்ளனர். அறிவியல் வளர்ச்சி தான் மனிதனை வளர்ச்சி பெற வைத்தது. நவீன இந்தியா வடிவமைக்கப்பட்டதற்கு அறிவியல் பெரிதும் உதவி உள்ளது என மும்பையில் நடைபெற்ற 102வது அறிவியல் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வேதங்கள் பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும்:மோடி
மும்பை : மும்பை பல்கலை வளாகத்தில் நடைபெறும் 102வது தேசிய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி பேசுகையில், இது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம். இதற்காக பல்கலைகழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியலும் தொழில்நுட்பமும் அரசின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. மனித இனத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. அண்டங்களைப் பற்றியும், உலகின் பல விஷயங்களைப் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருவதே அதற்கு சான்று. இதே போன்று நமது வேதங்களில் சொல்லப்பட்டு விஷயங்கள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். நூற்றாண்டு பழமையான இந்த மாநாட்டில் உரையாற்றுவது நெகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கயாவில் ஜப்பான் நாட்டு பெண் பலாத்காரம்
கயா : பீகாரின் கயா குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக வந்த 21 வயது ஜப்பான் நாட்டு மாணவி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. ஏடிஎம்., மையத்திற்கு சென்ற மாணவியிடம் துப்பாக்கியை காட்டி, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.75,000 எடுத்து தருமாறு மர்ம கும்பல் மிரட்டி உள்ளது. இதற்கு அப்பெண் மறுத்துள்ளார். இதனால் அவரை கடத்திச் சென்ற அக்கும்பல், அப்பெண்ணை 15 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பி வந்து, வாரணாசியில் இருந்த சில ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் உதவியுடன் அவர் கயாவில் தான் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளார். போலீசில் அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் பா.ஜ.,ஆட்சிக்கு வாய்ப்பு
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடைபெறும் அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.,வின் நரசிம்ம ராவ், காஷ்மீரில் ஆட்சி அமைக்க பா.ஜ.,விற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது. அது தொடர்பான மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இருப்பினும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. காஷ்மீரில் ஆட்சி அமைக்க முடியும் என பா.ஜ., நம்புகிறது. அதேசமயம் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைப்பது என்பது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்சில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்சில் இரு வேறு இடங்களில் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்தினர் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதலை பயன்படுத்தி ஊடுருவ திட்டம்
ஜம்மு : எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூடு தாக்குதலை பயன்படுத்தி, இந்திய எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பயங்கரவாத அமைப்புக்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏர்ஏசியா விமான பாகங்கள் கண்டுபிடிப்பு
ஜகர்த்தா : சமீபத்தில் 162 பேருடன் சென்ற ஏர்ஏசியா நிறுவன பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்திற்குள்ளான ஏர்ஏசியா விபத்தின் இரண்டு பெரிய பாகங்கள் கடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளை குறிவைக்கும் பாக்.,
ஜம்மு : எல்லையில் 20 எல்லைக்கட்டுப்பாட்டு நிலைகளுடன், குடியிருப்பு பகுதி்களையும் குறி வைத்து பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதால், அங்கு பயங்கரமான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் படைகள் தாக்கியதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கறுப்பு பணத்தை குறைக்க மோடி 'ஐடியா'
புதுடில்லி : கறுப்பு பண புழக்கத்தை குறைக்க ரொக்கமாக இல்லாமல் டிடி.,ஆகவோ அல்லது செக் மூலமாகவோ பணபரிவர்த்தனை செய்ய கணக்காளர்களை வலியுறுத்துமாறு இந்திய வங்கிகளுக்கு பிரதமர் மோடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இதன்படி அனைத்து பண பரிவர்த்தனைகளும் அரசின் நேரடி கண்காணிப்பின் மூலமே நடைபெறுவதால் நாடு முழுவதும் கறுப்பு பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வங்கி கணக்குகள் மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் எளிமையாகப்பட வேண்டும் எனவும், இது வங்கிகள் மூலம் பணபரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1100 கோடி கான்ட்ராக்டிற்கு 100 கோடி லஞ்சம்
மும்பை : மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் பா.ஜ.,வைச் சேர்ந்த கிரிஷ் மகாஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நீர்வளத்துறைச் சேர்ந்த கான்ட்ராக்டர்கள் பலர் ரூ.1100 கோடி மதிப்பிலான கான்ட்ராக்ட்களை பெறுவதற்காக ரூ.10கோடி லஞ்சம் கொடுக்கிறார்கள். அதில் ரூ.10 கோடியை முதல் தவணையில் தரவும் அவர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் இந்த பேச்சு குறித்து அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என தேசியவாத காங்கிரசும், அமைச்சர் கூறிய தகவல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.
முன்னாள் இஸ்ரோ தலைவர் வசந்த் கவுரிகர் மரணம்
புனே:முன்னாள் இஸ்ரோ தலைவரும் இந்திய ராக்கெட் விஞ்ஞான வல்லுனர்களில் ஒருவருமான வசந்த் கவுரிகர் நேற்று உடல்நல குறைவு காரணமாக புனேயில் உள்ள தீன்ஆனந்த் மங்கேஷ்கர் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 81.
பள்ளத்தில் வாகனம் விழுந்து :6 ராணுவத்தினர் பலி
கவுகாத்தி: அருணாச்சல் பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மலையில் உருண்டுவிபத்திற்குள்ளானதில் 6 வீரர்கள் பலியாயினர். அருணாசல பிரதேச மாநிலம் மேற்குகெமங்க் மாவட்டத்தில் சீசா மலைப்பகுதியில் இருந்து பலூக்பங்க் நகர் நோக்கி ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கிடுகிடு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 6 ராணுவ வீரர்கள் பலியாயினர். இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். இவர்கள் தேஸ்பூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நக்சல்களை ஒடுக்க புதிய திட்டம் தயார்
புவனேஸ்வர்:ஒடிசா- சத்தீஸ்கர்- ஆந்திர எல்லை நெடுகிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை மத்திய அரசு தீவிரப்படுத்தவிருக்கிறது.சத்தீஸ்கரிலும், ஆந்திரத்திலும் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு ஒடிசாவின் எல்லையோர மாவட்டங்களில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல்கள் கூறுவதையடுத்து, அவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த புதிய வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு தயாரித்திருக்கிறது.இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ஆபரேஷன் ஆல் அவுட் என பெயரிடப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு:அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
நியூயார்க்:புற்றுநோய் செல்களின் உயிரியல் கடிகாரத்தை மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அந்த மூலக்கூறு '6-தியோ-2 (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) என்று அழைக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."டீஆக்சொகுனோசைன் குறைந்த அளவில் கொடுத்த போதும் பலதரபப்ட்ட புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் பரவலான முறையில் இந்த மூலக்கூறு செயல்படுகிறது என்று டெக்ஸாஸ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜெரி ஷேய் என்பவர் தெரிவித்தார்.இந்த மருந்தை எலிகளில் பரிசோதனை செய்து பார்த்தபோது, லிவர், கிட்னி, ரத்தம் என்று எதிலும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
கட்சிக்கு நிதி திரட்ட தொடங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடில்லி:ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சிக்கு நிதி திரட்டும் இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார். நான் நேர்மையான கட்சிக்கு நிதி உதவி செய்கிறேன். சவாலான இயக்கம் என்று பெயர் கொண்ட இந்த இயக்கத்திற்கு தானே ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து தொடங்கிய கெஜ்ரிவால், நன்கொடை அளிக்குமாறு தனது சகோதரர், சகோதரி, நடிகை குல் பனாக் உள்பட 11 பிரபலங்களுக்கு சவால் விடுத்தார்.
பயங்கரவாதிகள் எதற்காக வந்தனர்?
ஆமதாபாத்:*பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்கு, குஜராத்தின் துறைமுகங்கள் அல்லது மும்பை ஆழ்கடலில் உள்ள எண்ணெய் துரப்பன மேடையாக கூட இருந்திருக்கலாம். குறிப்பாக, குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள தொழிற்சாலைகளை தகர்க்க, அவர்கள் வந்திருக்கலாம்.
*இம்மாதம் 26ல், டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பங்கேற்க உள்ள நிலையில், அதை
சீர்குலைக்க, இந்த பயங்கரவாதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம்.
* மும்பையில், 2008 நவ., 26ல், பாக்., பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற தாக்குதலை, மீண்டும் நிகழ்த்த, இந்த பயங்கரவாதிகள் வந்திருக்கலாம்.
*மூழ்கிய பயங்கரவாதிகள் போல, ஏற்கனவே, ஒன்றிரண்டு குழு, பயங்கர ஆயுதங்களுடன், அரபிக் கடலில் பயணித்து, இந்திய கடற்கரை நகரங்களுக்குள் பதுங்கியிருக்கலாம்; அவர்கள், குறிப்பிட்ட நாளில் தாக்குதல் நடத்த திட்டமிருக்கலாம்.
படகு பயணம் செய்த பயங்கரவாதிகள் யார்?
ஆமதாபாத்:*பயங்கரவாதிகள் பயணம் செய்த படகு, ஆழ்கடலில் மூழ்கியுள்ளதால், அதை மீட்டால் தான், பயங்கரவாதிகள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாகும். அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஏனெனில், கடலில் ஆழம் அதிகமான பகுதியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால், அந்த படகை கண்டுபிடிப்பதே, மிகுந்த சிரமம் தான்.
*பயங்கரவாதிகள் பயணம் செய்த படகு, தீப்பிடித்து எரிந்து மூழ்கியுள்ளதால், அதில் எத்தனை பேர் இருந்தனர், அவர்களின் வயது விவரம், கொண்டு வந்த ஆயுதங்கள் பற்றிய தகவல் போன்ற எதையும், பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
6 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் தாக்குதல்
ஆமதாபாத்:மும்பையில் பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த, 10 பயங்கரவாதிகள், மும்பை ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவரை கொன்று, அந்த படகில் ஏறி, மும்பை கடற்கரையில் இறங்கி, தனித்தனியாக பிரிந்து, தாஜ் ஓட்டல் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், இரு நாட்களுக்கும் மேலாக நடத்திய தாக்குதலில், வெளிநாட்டினர் உட்பட, 164 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கொடூர தாக்குதல் நடத்திய, ஒன்பது பயங்கரவாதிகளும், வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் சிக்கிய, அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி, 2012 நவ., 21ல், புனே நகரின் எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
தமிழக அரசின் வருவாய் குறைய என்ன காரணம்?
சென்னை:பழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. வரி சார்ந்த,10 ஆயிரம் வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதை முடிவுக்கு கொண்டு வந்தால்,12 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும். இதில், அரசு கவனம் செலுத்தவில்லை.இனி வரும் காலம், வரி வசூல் கொட்டும் காலம் என, கூற முடியாது. பண்டிகைகள் பெரிதாக இல்லை. எனவே, எதிர்பார்த்த இலக்குபடி வரி வருவாய் கிடைப்பது சாத்தியம் இல்லை என்கின்றனர், வரி ஆலோசகர்கள். அரசுத் துறை உயர் நிலை அதிகாரிகள், தங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக, அரசிடம் உண்மையான விவரங்களை தெரிவிக்காமல், 'வருவாய் இலக்கை நோக்கிச் செல்கிறோம்; வளர்ச்சி வேகம் சரியாகச் செல்கிறது' என, ஆவணங்களின்படி கணக்கு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.