குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

ஐ.நாவில் பதட்டத்துடன் அதட்டிப் பொய்பேசியதாக வெறுப்பைச் சம்பாதித்தசவேந்திர சில்வா

 கிளிநொச்சியில் இராணுவ ஆட்சியாம் ஆர்பாட்டம் நடத்தவும்   தடையாம்! வியாழன், 23 .06. 2011 ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு அருகேயுள்ள ஐ.நா. தேவாலய நிலையத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் நேற்று திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன.

இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது.

இந்த ஆவணப் படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். 

இந்நிகழ்வுக்கு ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவுக்கும் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபை அழைப்பு விடுக்கவில்லை.

எனினும் இவர்கள் அங்கு அழையா விருந்தாளிகளாக நுழைந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.

போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்களுக்கு சாட்சியாக உள்ள ஒருவர் என்ற வகையில் கருத்துகளை வெளியிடப் போவதாக கூறி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தக் கூட்டத்தைக் குழப்பியுள்ளார்.

சனல் 4 தயாரித்த இந்த ஆவணப்படம் போலியானது என்றும் இது இலங்கையின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் காட்டுப்பகுதி ஒன்றில் புலிகளின் நிலைகள் மீது விமானங்கள் குண்டு வீசும்போது பிடிக்கப்பட்டு விமானப் படையினால் வெளியிடப்பட்ட காணொளிப் பதிவு ஒன்றை, பொதுமக்கள் மீது குண்டு வீசப்படுவது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொய்யான தகவல்களின் மூலம் அனைத்துலக சமூகத்தை தவறாக வழிநடத்த அனைத்துலக உதவி நிறுவனங்கள் முற்படுவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

அழையா விருந்தாளியாக நுழைந்த இவர்கள்  நிகழ்ச்சிநிரலுக்கு அப்பால் இந்த நிகழ்வில் பரப்புரைகளைச் செய்தது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளை வெறுப்படைய வைத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் இராணுவ ஆட்சியாம் ஆர்பாட்டம் நடத்தவும் தடையாம் 
வியாழன், 23 .06.2011 15:36 .

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை கண்டுபிடித்துத் தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாம் இலங்கையர் என்ற அமைப்பு இன்று கிளிநொச்சியில் ஆர்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆர்பாட்டத்தை நடத்தவிடாது தடுப்பதற்கென ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த தமது அமைப்பின் இரு தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக நாம் இலங்கையர் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரட்ன அத தெரண தமிழிணையத்திற்குத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

"கிளிநொச்சி நகர மத்தியில் நாம் ஆர்பாட்டம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டோம். ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த நாம் இலங்கையர் அமைப்பின் தமிழ் இளைஞர்கள் இருவரை இராணுவத்தினர் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன் நாம் ஆர்பாட்டத்திற்கென அழைத்திருந்த தமிழ் தாய்மார் மற்றும் சிலரை பஸ்ஸில் ஏற்றி ஆர்பாட்டத்தை தடுக்க இராணுவத்தினர் முயற்சித்தனர்.

கிளிநொச்சியில் முழுமையான இராணுவ ஆட்சி நிலவுவதாகவும் இங்கு ஆர்பாட்டம் செய்ய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ உயர் அதிகாரி எம்மிடம் கூறினார். இராணுவ அட்சி இல்லை.

ஜனநாயகத்தை ஏற்படுத்தி சிவில் நிர்வாகம் நடைபெறுவதாக கூறப்படும் கிளிநொச்சியில் சட்டவிரோத இராணு ஆட்சியை அறிவிப்பது, ஜனநாயக உரிமைகளை மீறுவது எப்படி? காணாமல் போனவர்களை விடுதலை செய்யவும், கைது செய்யப்பட்ட எமது இளைஞர்கள் இருவரை விடுதலை செய்யவும்.

அத்துடன் கிளிநொச்சி மற்றும் வடக்கு பகுதியில் இராணுவ ஆட்சியை இல்லாதொழித்து ஜனநாயகத்தையும் சிவில் ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்". என்று உதுல் பிரேமரட்ன அத தெரண தமிழிணையத்திற்கு தொலைபேசி ஊடாகத் தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.