குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

02.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கடல் வழியாக வந்த பயங்கரவாதிகள்?

புதுடில்லி: குஜராத் அருகே, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கப்பலை வழிமறித்த இந்திய கடலோர காவல்படை, அந்த கப்பலில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. போர்பந்தர் அருகே, கடலில் வந்து கொண்டிருந்த அந்த கப்பல், இந்திய கடலோர காவல்படையின் வருகையை பார்த்ததும் அப்பகுதியில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தது.

இதனால் இந்திய கடற்படை வருவதை கண்ட அவர்கள், கப்பலை வெடி வைத்து தகர்த்துக் கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய படையினர், கப்பலில் இருந்தவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

 

பாக்.,படை குவிப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடில்லி: காஷ்மீர் சாம்பா பகுதியில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய வீரர்கள் சரமாரியாக தாக்கினர். இதை தாங்க முடியாத பாக்.வீரர்கள், வௌ்ளை கொடிகாட்டி சமாதானத்திற்கு அழைத்தனர். இதையடுத்து, சம்பா எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். தகவல் அறிந்த உளவுத்துறை இந்திய ராணுவத்தை எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த படை குவிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

 

கட்டுமான துறையினர் வேலை நிறுத்தம்

சென்னை: சிமிண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, வரும் ஜனவரி 6ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய கட்டுமானம் சம்பந்தப்பட்ட 69 அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில், கட்டுமான பொறியாளர்கள், கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது

 

பெண் மர்ம மரணம்: நித்திக்கு சிக்கல்

திருச்சி: பிடதி. நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் துறவி பயிற்சி மேற்கொண்டிருந்த, திருச்சி, குட்டப்பட்டு கிராமத்தைச் சேரந்த அர்ஜூனன் மகள் சங்கீதா, மர்மமான முறையில் மரணம் அடைந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர், சங்கீதாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், திருச்சி, ராம்ஜிநகர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரை, கர்நாடகா போலீசாருக்கு ராம்ஜிநகர் போலீசார் அனுப்பி உள்ளனர்.

 

ஜெ.,யுடன் அதிகாரிகள் சந்திப்பு

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், உள்துறை செயலாளர் அபூர்வவர்மா, முதல்வரின் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வௌியாகி உள்ளன.

 

போலீஸ் ஸ்டேஷன் முன்பு கழுத்தை அறுத்த வாலிபர்

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் செல்வராகவன். ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் மனைவியை பிரிந்து திருப்பரங்குன்றத்தில் வசித்து வருகிறார். இன்று போலீஸ் ஸ்டேஷன் வந்த அந்த நபர் தனது கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டார். ரத்தம் சொட்டிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

 

திருப்பூர் ஸ்கேன் சென்டருக்கு எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குனர் கேசவன், ஸ்கேன் சென்டருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், திருப்பூரில் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்ற சோதனை செய்யப்படுவதாக புகார் வருகிறது. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களில ஈடுபடுவோர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

நாகர்கோவில்: பா.ஜ.க., வர்த்தக பிரிவு பொறுப்பாளருக்கு வெட்டு

நாகர்கோவில்: பா.ஜ.க., வர்த்தக பிரிவு பொறுப்பாளராக இருப்பவர் முத்துராமன். இவர் காரில் சென்று கொண்டிருந்த போது, தாடி வைத்த சில மர்ம நபர்கள் மறித்தனர். கையில் இருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் கால் மற்றும் கையில் லேசான காயத்துடன் தப்பினார். தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமீபத்தில் இவர் போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

 

ரயில் பயணிகள் மும்பையில் வன்முறை

மும்பை: மும்பை, திவா ரயி்ல்வே நிலையத்தில் ரயில்சேவைகள் இன்று அதிகாலை முதல் தாமதமாக நடந்து வந்தன. இதனால் ஆத்திரமடைந்த ரயில் பயணிகள் ரயில்வே ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தி, வன்முறையில் இறங்கினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

விவசாயிகளுக்கு எதிரானது பா.ஜ.,:காங்.,

திருவாரூர் : விவசாயிகளுக்கு எதிரான அரசு மத்திய பா.ஜ., அரசு. அதனால் தான் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை அவசர சட்டமாக கொண்டு வர நினைக்கிறது. இந்த அரசு விவசாயிகளின் உரிமையை பறிக்க பார்க்கிறது. இது விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 3வது முறையாக உயர்த்தியது மக்கள் விரோத செயல் என திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டி உள்ளார்.

 

ஜெ., வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர், மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுவை விசாரிக்க தனி பெஞ்ச்சை ஐகோர்ட் நியமித்துள்ளது. நீதிபதி குமாரசாமியை தனி பெஞ்ச் நீதிபதியாக ஐகோர்ட் தலைமை நீதிபதி வகேலா நியமித்துள்ளார். மேல்முறையீட்டு மனுவுக்கான அனைத்து ஆவணங்களையம் ஜெயலலிதா தரப்பினர் ஏற்கனவே கர்நாடகா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இன்று மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. நீதிபதி குமாரசாமி விடுப்பில் உள்ளதால், நீதிபதி பில்லப்பா விசாரணை நடத்தினார். அப்போது அடுத்த விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டர்.

 

கற்பழிப்பு: ரயில்வே போலீஸ் கைது

புதுடில்லி: டில்லி சாந்தினிசவுக் பகுதியில் சென்ற பெண் ஒருவரை, ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் கற்பழித்ததாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, டில்லி போலீசார், ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிளை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சரக்கு விற்பனையில் கலக்குது வேலூர்

சென்னை: தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மதுக்கடைகளுக்கு, விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை டாஸ்மாக் அதிகாரிகள் நிர்ணயிக்கின்றனர். இந்த வகையில், கடந்த 2014ம் ஆண்டில், தமிழகத்திலேயே வேலூர் மாவட்டம் தான் சாதனை புரிந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1016 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. அனைத்து பண்டிகை நாட்களிலும் அதிகமான அளவில் மது விற்பனை செய்து, வேலூர் மாவட்டம் கூடுதல் சாதனை புரிந்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனையில், முதன்முதலாக ஆயிரம் கோடி ரூபாய் தாண்டி சாதித்த பெருமையும் வேலூர் மாவட்டத்தை சேருகிறது.

 

பாக். ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர், சம்பா பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றன. கடந்த மூன்று தினங்களாக நடந்து வரும் இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்புபடை வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். மூன்று பாக்.,படையினர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தாக்குதலை பொறுத்துக் கொள்ள வேண்டாம், திருப்பி கடுமையாக தாக்குங்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் பரிகர் கூறியதை தொடர்ந்து, இந்திய ராணுவம் இருமடங்கு பலத்துடன் தாக்கியது. இதில் நிலைகுலைந்து போன பாக்.ராணுவத்தினர், வௌ்ளைகொடியை ஆட்டி தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சினர். இதையடுத்து, தாக்குதலின் வேகத்தை ராணுவம் குறைத்தது. இந்த நேரத்தை பயன்படுத்தி, சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று வீரர்களின் உடல்களை எடுத்துக் கொண்டு பாக்.வீரர்கள் ஓடினர். பின்னர், இந்திய நிலைகள் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளனர். இதையடுத்து, பாகிஸ்தான் நிலைகள் மீது எல்லை பாதுகாப்பு படையினர் மீண்டும் தாக்குதலை துவங்கி உள்ளனர்.

 

ஜெ., மேல்முறையீடு இன்றுமுதல் விசாரணை?

பெங்களூரு:சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர், மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுவை விசாரிக்க தனி பெஞ்ச்சை நேற்று கர்நாடகா ஐகோர்ட் நியமித்துள்ளது. மேலும், நீதிபதி குமாரசாமியை தனி பெஞ்ச் நீதிபதியாக ஐகோர்ட் தலைமை நீதிபதி வகேலா நியமித்துள்ளார். மேல்முறையீட்டு மனுவுக்கான அனைத்து ஆவணங்களையம் ஜெயலலிதா தரப்பினர் ஏற்கனவே கர்நாடகா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி குமாரசாமி விடுப்பில் உள்ளதால், நீதிபதி பில்லப்பா விசாரணை நடத்துவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

மாநிலங்கள் வளர்ச்சி முக்கியம்-வெங்கையா

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, 'நிதி ஆயோக் மூலம் மாநிலங்கள் வளர்ச்சி அடையும். மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் மட்டுமே, நாடு வளர்ச்சி பெறும்,' என்று கூறி உள்ளார்.

 

மும்பையில் பயங்கரவாதி கைது: திடுக் தகவல்

மும்பை: மும்பை குடியிருப்பு பகுதியில் அனீஸ் அன்சாரி என்ற பயங்கரவாதியை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அனீஸ் அன்சாரி அறையில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் கூறி உள்ளதாவது: பெஷாவர் சம்பவம் போல், மும்பையில் உள்ள அமெரிக்கன் பள்ளியிலும் ஒரு தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை விட முடியும். எதிரிகளை காயப்படுத்த இதைத் தவிர சிறந்த வழி எதுவும் இல்லை. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஊதிய உயர்வு: பேச்சுவார்த்தை குழு அமைப்பு

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு தரப்பிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைப்பது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. தற்போது, அரசுடன் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 11 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் சென்னை, விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், 8 கோட்ட நிர்வாக இயக்குனர்கள், மேலாளர்கள், நிதித்துறை கூடுதல் செயலர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 12வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

 

யானையை கண்டித்து மக்கள் சாலைமறியல்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேயிலை தொழிலாளர்கள் குடியிருப்பில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் நுழைந்த காட்டு யானை, வீடுகளை சேதப்படுத்தியது. யானையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள், இச்சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

துணைவேந்தர் வழக்கை விசாரிக்க குழு

புதுடில்லி : விஷ்வ பாரதி பல்கலைக்கழக துணைவேந்தர் சுஷன்தா தத்தாகுப்தா மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க புதிய குழு ஒன்றை அமைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

தூசி தட்டப்படும் ராபர்ட் வத்ரா வழக்கு

சண்டிகர் : காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா மீதான நிலஅபகரிப்பு வழக்கில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கேம்கா அரியானா அரசுக்கு எழுதி கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மாறன் சகோதரர்களுக்கு மீண்டும் சம்மன்?

புதுடில்லி : ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கப்பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக மாறன் சகோதரர்களுக்கு அனுப்பப்படும் 2வது சம்மன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பா.ஜ.,விற்கு 24 பிடிபி எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு

ஸ்ரீநகர் : காஷ்மீரில் ஆட்சி அமைக்கப் போவது என்ற பதற்றமும், குழப்பமும் ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தலில் அதிக இடங்களில் (28 இடங்கள்) வெற்றி பெற்ற பிடிபி.,யை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.,களில் 24 பேர் பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 3 பேர் மட்டுமே பா.ஜ.,விற்கு எதிராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

மோடி தான் எங்கள் கேப்டன்: பா.ஜ.,

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.,வின் பிரசார பயணத்தை பிரதமர் மோடி, ஜனவரி 10ம் தேதியன்று துவக்கி வைக்க உள்ளார். ராம்லீலா மைதானத்தில், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் இந்த பிரசாரம் துவக்கப்பட உள்ளதாகவும், ஆம்ஆத்மி கட்சியை குறிவைத்தே இந்த பிரசாரம் இருக்கும் எனவும் பா.ஜ.,வின் டில்லி செய்திதொடர்பாளர் ஹரிஷ் குரானா தெரிவித்துள்ளார். மேலும் மோடி தான் எங்கள் அணியின் கேப்டன், அவரை முன்னிறுத்தியே எங்களின் பிரசார பயணம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரோ: தற்காலிக தலைவராக நாயக் நியமனம்

புதுடில்லி: இஸ்ரோவின் தற்காலிக தலைவராக ஷைலாஷ்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இஸ்ரோ தலைவராகபணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் பணி ஒய்வு பெற்றதை யடுத்து புதிய தற்காலிக தலைவராக ஷைலாஷ்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். ம.பி., மாநிலம் பரோடாவில் உள்ள எம்.எஸ்., பல்கலை கழகத்தில் புவியியல் துறையில் பணிபுரிந்துள்ளார். கடந்த 2000-மாவது ஆண்டு வரை இஸ்ரோவில் பணிபுரிந்துள்ளார். அதன்பின்னர் ஐதராபாத்தில் இருக்கும் தேசிய கடல் தகவல் சேவை மையத்தின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். முன்னதாக இஸ்ரோவின் புதிய தலைவர் பதவிக்கு சதிஷ்தவான் விண்வெளி மைய இயக்குனர் எம்.ஒய்., பிரசாத், மற்றும் விண்வெளி செலுத்து மைய இயக்குனர் கிரண்குமார் ஆகி.யோரின் பெயர்கள் பரிசீலி்க்கப்பட்டன.

 

இளம் பணக்காரர்கள் பட்டியல் : சீன பெண் முதலிடம்

பீஜிங்: இளம்.பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவன இணை நிறுவனர் டஸ்டீன் மாஸ்கோவிட்ஸை பின்னுக்கு தள்ளினார் சீன பெண் கீபெரன்னாஹோய்திங். சீனாவில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் புகழ்பெற்று விளங்கும் லோகன் பிராப்பர்ட்டி நிறுவனத்தின் தலைவர் ஜிஹைபெங்கி்ன்மகளாவார். லோகன் நிறுவனத்தில் கீ பெரன்னாஹோய்திங்கிற்கு 85 சதவீத பங்குகள் உள்ளன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் 8 ஆயிரத்து 200 கோடியாகும்.

 

அணுசக்தி நிலையங்கள் பட்டியல்: இந்தியா - பாக்., நாடுகள் பரிமாற்றம்

புதுடில்லி: இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை, இரு நாடுகளும், நேற்று, பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. இந்தியா, பாகிஸ்தான் இடையே, கடந்த, 1988ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கடந்த, 1991 முதல், இரு நாடுகளும், தங்களின் அணு மின் நிலையங்கள், அணு சக்தியால் இயங்கும் பிற அமைப்புகள் குறித்த பட்டியலை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், ஜன., 1ம் தேதி, இந்தப் பட்டியல், இருநாடுகளின் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும். அந்த வகையில், நேற்று, இந்த பட்டியல் பரிமாறப்பட்டது. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அல்லது போர் நடைபெறும் போது, அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளானால், இருநாடுகளுக்கு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

32 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு

புதுடில்லி: ஆட்சேபகரமான விதத்தில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட, 32 இணையதளங்களை, மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ், மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர். முடக்கப்பட்ட இணையதளங்களில் பெரும்பாலானவை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆதரவான செய்திகளை கொண்டிருந்ததாக, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய அந்த இணையதளங்களின் செயல்பாடு குறித்து ஆராய்ந்த, பயங்கரவாத எதிர்ப்பு படையினர், அதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், அந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில், இணையதளங்களுக்கு தணிக்கை உண்டு. சீனாவில் இணையதளங்களை தணிக்கை செய்யும் அமைப்பு, பேஸ்புக், கூகுள் போன்ற இணையதளங்களை கூட, சில நேரங்களில் தடை செய்து விடுகிறது. ஆனால் இந்தியாவில், இணையதள தணிக்கை முறை இல்லை.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.