குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

01.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நிலையான ஆட்சி: பா.ஜ., உறுதி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நிலையான ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என பா.ஜ., கூறி உள்ளது. மேலும், 'பா.ஜ., தலைவர்கள் கவர்னரை சந்தித்துள்ளனர். ஆட்சி அமைப்பது குறித்து பிற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆட்சி அமைப்பதில் நாங்கள் அவசரப்படவில்லை. நிலையான ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயலாற்றி வருகிறோம்,' என்று கூறப்பட்டுள்ளது.

 

ஆட்சி அமைக்க அவசரப்படவில்லை:பா.ஜ.,

ஸ்ரீநகர் : காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மாநில கவர்னரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தலைவர்கள், ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. காஷ்மீரில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அதனால் ஆட்சி அமைப்பதற்கு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளோம். அதே சமயம் ஆட்சி அமைக்க நாங்கள் அவசரப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

 

காவிரியில் அணை: வைகோ எதிர்ப்பு

சென்னை: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறுகையில், 'நரேந்திரமோடி அரசு இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை. இந்நிலையில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுனால், தமிழகத்தில் 3 கோடி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சென்னைக்கு குடிநீர் கிடைக்காது. காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பது ஆபத்தானது. மீத்தேன் திட்டத்தால் குடிநீர் பாதிக்கப்படும்.உணவுக்கு விவசாயிகள் கையேந்தும் நிலை ஏற்படும்.,' என்றார்.

 

டில்லி தேர்தல்: நட்சத்திர பேச்சாளர் ஷீலா

புதுடில்லி : டில்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் இருப்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் போது வெளியிட உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதல் வேட்பாளர் பட்டியலில் தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கும் 8 பேரின் பெயர்களும் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

 

ஜெ., வழக்கில் அடுத்தது என்ன?

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பின்னர் ஜாமினில் வௌிவந்துள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கர்நாடக ஐகோர்ட் தனி பெஞ்ச் ஜெ., உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவி்டடது. இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். மிக விரைவில் விசாரணை துவங்க உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து, ஜெ.,யின் வக்கீல்களில் ஒருவரான குமார், ஒரு பேட்டியில் கூறுகையில், 'அடுத்ததாக, இந்த வழக்கை விசாரிக்க கர்நாடகா ஐகோர்ட் தனி பெஞ்ச் ஒன்றை அமைக்கும். ஜனவரி 12ம் தேதி முதல் வழக்கு விசாரணை துவங்கலாம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, விசாரணை தினமும் நடக்கும். வரும் ஏப்ரல் மாதத்தில் விசாரணை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது,' என்றார்.

 

பாக்.,கிற்கு ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

டில்லி: ஜம்மு காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்திய தரப்பில் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டதால், பாக்., திணறி வருகிறது. இதைத் தொடர்ந்து, வெள்ளை கொடி காட்டி, தாக்குதலை நிறுத்துமாறு கோரியது. இருப்பினும் இன்று அதிகாலை பாக். மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையி்ல், 'எல்லை தாக்குதல் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாகிஸ்தான் இனியாவது தனது போக்கை மாற்றிக் கொள்வது நல்லது,' என்றார்.

 

திட்டக்குழுவுக்கு 'நிதி ஆயோக்' என புதுபெயர்

புதுடில்லி: திட்டக்குழுவுக்கு மத்திய அரசு, நிதிஆயோக் என புதுப் பெயரை சூட்டி உள்ளது. இதற்காக, கடந்த 1950ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மோடி அரசு பொறுப்பேற்ற நிலையில், திட்டக்குழு சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டக்குழுவிற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது.

 

தாக்குதல் சம்பவ நேரடிஒளிபரப்பிற்கு தடை

புதுடில்லி: பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும் போது அதனை முறியடிப்பதற்காக நடத்தப்படும், பதில் தாக்குதல்கள், பாதுகாப்பு செயல்பாடுகளை சம்பவ இடத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய டிவி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை முறைப்படி அமல்படுத்துவதற்காக கேபிள் டிவி ஒளிபரப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

 

ஐஎஸ் ஆதரவு தளங்கள் முடக்கம்

புதுடில்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கர அமைப்பு உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவான வாசகங்களை பதிவு செய்திருந்த 32 இணையதளங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதற்காகவே இந்த இணையதளங்கள் இயக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

நள்ளிரவில் வங்கிக்குள் புகுந்த ஜீப்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் பந்தலூரில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடி விட்டு குடியோதையில், வாலிபர்கள் சிலர் ஜீப்பில் வந்துள்ளனர். நிலைதடுமாறிய அவர்கள் ஜீப்பை அப்பகுதி கூட்டுறவு வங்கிக்குள் விட்டுள்ளனர். இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வங்கி கட்டிடம் சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பாஸ்கான் ஆலை திறப்பு பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: மூடப்பட்ட பாஸ்கான் ஆலையை திறப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. சென்னை இருங்காட்டு கோட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடந்த 6-வது சுற்றுப் பேச்சு வார்த்தை யில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை இதனையடுத்து வரும் 9-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி : ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து, பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அணிந்து புறப்பட்டு பக்தர்களுடன் பரமபத வாசலை கடந்தார்

 

இந்திய துணைத்தூதருக்கு பாக்., சம்மன்

புதுடில்லி: பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் ஜவான் ஒருவர் பலியானதை தொடர்ந்து, இந்திய தரப்பில் கடுமையான பதிலடி தரப்பட்டது. இதில் 4 பாக்., வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

இம்ரான் கான் ரகசிய திருமணம்

இஸ்லாமாபாத்:பாக்., முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.'டான்' நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும், ரெஹம் கான் இம்ரான் கான் இடையே நடைபெற்ற 'நிக்காஹ்' குறித்து, இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.எனினும், தான் மறுமணம் புரிந்து கொண்டதாக வெளியான தகவலை, இம்ரான் கான் மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை என, அவரது நெருங்கிய நண்பரும், பத்திரிகையாளருமான, ஷாஹீத் மசூத் தெரிவித்துள்ளார்.குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, இம்ரான் கான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இவர் ஏற்கனவே, இங்கிலாந்தை சேர்ந்த ஜெமீமா ஸ்மித்தை காதலித்து, 1995ம் ஆண்டு கரம்பிடித்தார். இத்தம்பதியர், 2004ம் ஆண்டு, 'தலாக்' சொல்லி, பிரிந்தனர்.இவர்களுக்கு, சுலைமான் இசா மற்றும் காசிம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இது தவிர, வேறொரு தொடர்பு மூலம், டைரியன் என்ற பெண்ணும், இம்ரான் கானுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.இம்ரான் கானுக்கு கொஞ்சமும் சளைக்காத ஜெமீமா, ஹாலிவுட் நடிகர் ஹக் கிரான்ட் உடன் சில ஆண்டுகள் நெருக்கமாக இருந்து, 2010ல் பிரிந்தார்.அடுத்து, நடிகர் ரசல் பிராண்டுடன் இணைந்த, ஜெமீமா கான், கடந்த ஆண்டு செப்டம்பரில், அவரையும் கழற்றி விட்டு விட்டார்.அதோடு, தம் பெயரில் இருந்த கான்ஐ நீக்கி, குடும்ப பெயரான ஸ்மித்ஐ சேர்த்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.