குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு தடைகளை விதிக்கக் கூடிய அபாயம்

19.06.2011--- இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு தடைகளை விதிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறான அச்சுறுத்தல்களின் போது ஆதரவளிக்கக் கூடிய சில நாடுகளின் பூரண ஆதரவினை அரசாங்கம் இன்னமும் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 17ம் அமர்வில் இலங்கைக்கு போதியளவு ஆதரவு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமர்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இந்த நிலைமைகள் குறித்த சிரேஸ்ட தலைவர்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஒன்பது நாடுகள் மட்டுமே பகிரங்கமான ஆதரவினை வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதிகளவான நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை அமெரிக்கா சமர்ப்பிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இந்த தீர்மானத்திற்கு ஏனைய நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சர்வதேச ரீதியில் இலங்கை பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக குறித்த அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.