குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பொய் சாட்சியத்தால் சிறை சென்றவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என அறிவிப்பு!

ஒகியோ: போலீசார் பாராட்ட வேண்டும் என்பதற்காக 12 வயதுச் சிறுவன் சொன்ன பொய் சாட்சியத்தால், கொலை வழக்கில் சிக்கி இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்தவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று உலகமறிய அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் இந்த உணர்ச்சிகரமான நிகழ்ச்சி நடந்ததுள்ளது.1975-ம் ஆண்டில் ஹரால்ட் பிராங்க்ஸ் என்பவரை 2 பேர் அமிலத்தை வீசி தாக்கினர். அவர்களில் ஒருவர் துப்பாக்கியாலும் சுட்டார். இந்தத் தாக்குதல் முடிந்த பிறகு அந்த 2 பேரையும் மூன்றாமவர் காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பவைத்தார். அதற்குப் பிறகு ஹரால்ட் பிராங்க்ஸ் இறந்துவிட்டார். போலீஸார் இந்தக் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். ஹரால்டை தாக்கியதாகவும் கொன்றதாகவும் தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசுத்தரப்பின் முக்கிய சாட்சி 12 வயதுச் சிறுவன் எட்டி வெர்னான். சம்பவத்தை நேரில் பார்த்த அவனுடைய சாட்சியத்தின் பேரில் ரோனி பிரிட்ஜ்மேன் (17) அவனுடைய அண்ணன் வைலி பிரிட்ஜ்மேன் (20), ரிக்கி ஜாக்சன் (19) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 3 பேருக்கும் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டுக்குப் பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 27 வருட சிறைவாசத்துக்குப் பிறகு 2003-ல் ரோனி பிரிட்ஜ்மேன் ஜாமீனில் விடுதலையானார்.

 

இந்தச் சம்பவத்தை 2011-ல் சீன் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் நிருபர் கைல் ஸ்வென்சன் மீண்டும் புலனாய்வு செய்தார். அவர் கண்டுபிடித்த தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தன. உடனே ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவிகளுக்கு உதவும் வழக்கறிஞர்கள் குழு  இந்த வழக்கை மீண்டும் நடத்தியது. கடந்த மாதம் எட்டி வெர்னான் தன்னுடைய சாட்சியத்தைத் திருத்த விரும்புவதாக அறிவித்தார். சம்பவம் நடந்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அந்தத் தாக்குதலைப் பார்க்கவே இல்லை என்றும், அப்போது பஸ்ஸில் போய்க்கொண்டிருந்ததாகவும் போலீஸாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்ததால் சாட்சி சொல்ல முன்வந்ததாகவும் தெரிவித்தார். அந்த மூவரின் பெயரை போலீஸாரிடம் தெரிவித்தது தான்தான் என்றும், பதிலுக்கு வழக்கு விவரங்களைப் போலீஸார் தன்னிடம் கூறி நீதிமன்றத்தில் எதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததாகவும் கூறினார்.

 

இந்நிலையில் வைலி பிரிட்ஜ்மேனும் கடந்த நவம்பர் 21-ல் விடுதலை செய்யப்பட்டார். அவரை, ஜாமீனில் ஏற்கெனவே விடுதலையாகியிருந்த தம்பி ரோனி பிரிட்ஜ்மேன் கட்டித்தழுவி வரவேற்றார். ஜாக்சன் விடுதலையான 2 மணி நேரத்துக்கெல்லாம் வைலி பிரிட்ஜ்மேன் விடுதலையாகியிருந்தார். சிறையில் இருந்த மூவரும் 41 லட்சம் டாலர்களை, அனாவசியமாக சிறையில் வைக்கப்பட்டதற்காக அரசிடமிருந்து இழப்பீடாகக் கோரலாம். அவர்கள் அப்படி மனுச் செய்தால் அதை எதிர்த்து நாங்கள் வழக்காட மாட்டோம், நஷ்ட ஈடு பெற உதவுவோம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் தெரிவித்தனர். படுமோசமான அநியாயத் தீர்ப்பினால் மூவருடைய வாழ்க்கையுமே பாழாகிவிட்டது என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் மேரி மெக்ராத் அனுதாபம் தெரிவித்தார்.

 

எங்களுடைய இளமை, வாழ்க்கை, மகிழ்ச்சி எல்லாமே கொள்ளைபோய்விட்டது என்று சோகம் கொப்பளிக்கக் கூறினார் ரோனி பிரிட்ஜ்மேன். என்னுடைய அண்ணன் இறந்த பிறகு எங்கள் குடும்பத்தில் இன்னொரு ஆண் இருக்கமாட்டார். நானும் என்னுடைய உடல்நிலை காரணமாக வாரிசே இல்லாமல் போய்விடுவேன். இன்னொரு ரோனி பிரிட்ஜ்மேனுக்கு வாய்ப்பே இல்லை என்று வாய்விட்டு அழுதார் அவர். இந்த வழக்கில் உண்மையை வெளியே கொண்டு வந்ததற்காக சீன் பத்திரிகையின் நிருபர் கைல் ஸ்வென்சனை மனதாரப் பாராட்டி நன்றி தெரிவித்தார். இனி பழைய கதையைப் பேசி பயனில்லை. 40 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. இனி அடுத்த பிரிட்ஜ்மேன், வைலி பிரிட்ஜ்மேன், ரிக்கி ஜாக்சனுக்காக நாம் காத்திருக்கக் கூடாது. குற்றவியல் நடைமுறைச் சட்ட அமலில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். இனி எஞ்சியிருக்கிற காலத்தில் பிறருடன் சமாதானமாகவும் அன்போடும் வாழ்வதைப்பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று ரோனி பிரிட்ஜ்மேன் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.