குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

15.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பா.ஜ., தலைவர்களுக்கு ஆம் ஆத்மி நோட்டீஸ்

புதுடில்லி: நிதி வசூலிப்பு சம்பந்தமாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை பா.ஜ., தலைவர்கள் கூறி வருவதாக கூறி உள்ள ஆம் ஆத்மி,

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பா.ஜ., தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு
சென்னை: கடந்த ஜூன் மாதம் நடந்த வி.ஏ.ஓ., தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2,342 பணியிடங்களுக்கான நடந்த இந்த தேர்வை 7.62 லட்சம் பேர் எழுதியுள்ளனர்
மதுரையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
புதுடில்லி: மதுரை உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில், குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என லோக்சபாவில் மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார். மேலும் அவர், ரயில் நிலையங்களில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுகாதாரமாக இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் ரயில்வே நிர்வாகம் பரிசோதனை செய்து வருகிறது. புகார்கள், குறைகள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என கூறினார்.
அலிகார் பல்கலை.,யில் பாரதியார் பிறந்தநாள்
லக்னோ: மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை மத்திய பல்கலைகழகங்களில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, உ.பி.,யில் உள்ள அலிகார் பல்கலை.,யில் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கை சின்னத்துக்கு தடை: பா.ஜ.,மனு
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., மனு அளித்துள்ளது.
சிட்னி: பயங்கரவாதியின் அடையாளம் கண்டுபிடிப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உணவகத்தில் பொதுமக்கள் பலரை பயங்கரவாதி ஒருவன் பிணைய கைதியாக பிடித்து வைத்துள்ளான். இந்நிலையில், அந்த பயங்கரவாதியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது அவனது பெயர் ஹாரோன் மோனிஸ் எனவும், இவன் கடந்த 1996ம் வருடம் ஈரானிலிருந்து ஆஸ்திரேலியா வந்ததாகவும், இவன் மீது ஏற்கனவே கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பயண சலுகை வேண்டும்: மூத்த குடிமக்கள் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் 58 வயதான மூத்த குடிமக்கள் நகர பஸ்களில் இலவசமாகவும், புறநகர்ப்பகுதிளில் 50 சதவீத கட்டண சலுகையிலும் பயணம் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உலக அழகியாக தென் ஆப்ரிக்கா பெண் தேர்வு
லண்டன்: தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 22 வயதான ரோலென் ஸ்ட்ராஸ் , 2014ம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹங்கேரியின் எடினா மற்றும் அமெரிக்காவின் எலிசபெத் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றனர்.
பிரதமர் மோடிக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: மதவாத நடவடிக்கைகளை தடுத்துநிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ., அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் விபரீதத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, நல்லாட்சி தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 25ம் தேதியன்று, கிறிஸ்துமஸ் விடுமுறையை மாணவர்கள் விழாவாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உ.பி.,யில் மதமாற்றம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாகரீகத்தை சிதைத்திட முனையும் இத்தகைய பிரச்னைகளில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சகாயத்திடம் 84 பேர் மனு
மதுரை: மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் இரண்டாவது கட்ட விசாரணையை இன்று துவக்கினார். இன்று அவரிடம் மேலூர்,கீழவளவு, புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 84 பேர் புகார் மனுக்களை அளித்தனர். இதனுடன் சேர்த்து 224 பேர் கிரானைட் முறைகேடு குறித்து புகார் மனுக்களைஅளித்துள்ளனர். இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக சம்மன் அனுப்பியதை தொடர்ந்து சகாயம் முன் அரசு அதிகாரிகள் ஆவணங்களுடன் ஆஜராயினர்.
சட்டத்துறை கூடுதல் செயலாளர் நியமனம்
சென்னை: சட்டத்துறை இணை செயலாளராக இருக்கும் கே.வீரமணி கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டில்லியில் எதுவும் மாறவில்லை: நிர்பயாவின் தந்தை
புதுடில்லி: டில்லியில் எதுவும் மாறவில்லை என, கடந்த 2012ம் வருடம் டில்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார். கடந்த 2012ம் வருடம் டிசம்பர் 16ம் தேதி டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர், ஓடூம்பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதனால் டில்லியில் மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாணவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்நிலையில், மாணவியின் தந்தை கூறியதாவது: எனது மகள் மரணத்திற்கு பிறகும் டில்லியில் எதுவும் மாறவில்லை. அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் பயனற்றவையாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி துணிச்சலானவர் என கூறுகிறார்கள். எங்களது மகளுக்கு நியாயம் கிடைக்க உதவுவாரா? எங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்வாரா? என கூறினார்.
நலமாக உள்ளார் பாலச்சந்தர் : குடும்ப வட்டாரம்
சென்னை: பிரபல இயக்குனர் கே. பாலச்சந்தர் உடல் நலம் தேறி வருவதாக அவரது குடும்ப வட்டாரம் தெரிவிக்கிறது. உடல் நலம் சரியில்லாமல் சென்னை ஆஸ்பத்திரியில் கே. பாலச்சந்தர் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவரது உடல் நலமாக இருப்பதாகவும், உடல் நிலை தேறி வருவதாகவும் அவரது மருமகன் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 15,000 கனஅடி நீர்திறக்கப்பட்டது. இதனால், கடந்த, 3ம் தேதி, 105.300 அடியாக இருந்த மேட்டூர் அணை மட்டம், இன்று 97.770 அடியாக சரிந்தது. கடந்த, 13 நாளில் அணை நீர்மட்டம், 8 அடியும், நீர் இருப்பு, 10 டி.எம்.சி.,யும் சரிந்ததுள்ளது. இன்று அணைக்கு வினாடிக்கு, 3,949 கனஅடி நீர் வந்தது. நீர்வரத்து சரிந்த நிலையில், டெல்டா பாசன நீர்திறப்பு காலை, 6 மணி முதல் வினாடிக்கு, 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
லஞ்சம்: அரசு அதிகாரி கைது
வேலூர்: வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிபவர் பாலகிருஷ்ணன், 40. இவரிடம், வளையாம்பட்டுவைச் சேர்ந்த குமார் என்பவர், ரைஸ்மில் கட்ட அனுமதி கேட்டு வந்தார். அப்போது, 50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி தருவதாக பாலகிருஷ்ணன் கூறவே, குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பாலகிருஷ்ணன் லஞ்சம் வாங்கும் போது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.
பெல்ஜியத்தில் பயங்கரவாதிகள் கைவரிசை

பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம், கென்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவன், அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடி்தது வைத்துள்ளான். இதையடுத்து, அப்பகுதியை போலீசார் சீல் வைத்துள்ளனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வௌியேற வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. சிட்னியை தொடர்ந்து, கென்ட்டிலும் நடந்துள்ள இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ., மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு வக்கீலான பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து ஜெ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் சம்பந்தமாக கர்நாடகா ஐகோர்ட்டை அணுகுமாறும் கூறப்பட்டுள்ளது.
மின்கம்பி விழுந்து 10 பேர் பலி?
ஜவுன்பூர்: உத்தரபிரதேச மாநிலம், ஜவுன்பூர் என்ற இடத்தில் ஓடிக் கொண்டிருந்த பஸ் மீது, 11 ஆயிரம் வோல்ட் மின்சக்தி கொண்ட மின்கம்பி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் மின்சாரம் தாக்கி இறந்ததாக அஞ்சப்படுகிறது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா
புதுடில்லி: மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஷ்வர்ராவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அவர் அளித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறி உள்ளார்.
அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கண்டனம்
புதுடில்லி: ரயில்வே துறை சம்பந்தப்பட்ட ஒரு தேர்வில், சொத்துக்குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டு, முதல்வர் பதவியை இழந்தவர் யார் என்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர்.மேலும், இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டனர். அவைத் தலைவர் அனுமதிக்காததால், அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
அபோட்டிடம் பேச வேண்டும்-பயங்கரவாதி
சிட்னி: பிணையக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க பயங்கரவாதி சில நிபந்தனைகளை விதித்துள்ளான். ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபேட்டிடம் பேச வேண்டும் என்றும், ஐ.எஸ்., கொடியை தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவன் நியூசவுத்வேலஸ் போலீசாரிடம் கோரி உள்ளான்.
ஓட்டலுக்குள் குண்டு: பயங்கரவாதி பகீர்
சிட்னி: பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள பயங்கரவாதி, இரண்டு வெடிகுண்டுகளை ஓட்டலின் உள்ளும், இரண்டை வௌியிலும் புதைத்து வைத்துள்ளதாக கூறி உள்ளான். தான் நினைத்தால் எந்த நேரமும் அவற்றை வெடிக்க செய்ய முடியும் என்று அவன் மிரட்டி உள்ளான். இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லோக்சபாவில் அமளி: ஒத்திவைப்பு
புதுடில்லி: கிறிஸ்மஸ் தினத்தன்று பள்ளிகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை கண்டித்து லோக்சபாவில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மதியம் 2.30 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
காங்., தலைவர்கள் மீது மோடி புகார்
தும்கா: ஜார்கண்ட் மாநிலம், தும்கா என்ற இடத்தில் பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 'ஒவ்வொரு நாள் மாலையிலும் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி, அடுத்த நாள் என்ன பொய்யை சொல்லி, வாக்காளர்களை திசை திருப்பலாம் என்று ஆலோசனை நடத்துகின்றனர். நாட்டிற்கே வௌிச்சம் தர பயன்படும் நிலக்கரி, ஜார்கண்ட்டில் இருளில் சிக்கி உள்ளது. ஜார்கண்ட் மாநில அரசு அடிப்படை வசதிகள் எதையுமே இதுவரை செய்யவில்லை. அப்படி என்றால் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பழங்குடி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டால், நாடு மேம்படும், வளர்ச்சி அடையும்,' என்றார்.
அனில்குமார் சின்ஹாவுக்கு அனுமதி
புதுடில்லி: ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்த, சி.பி.ஐ., இயக்குனராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அனில்குமான் சின்ஹாவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. முன்னர், முந்தைய சி.பி,ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்ஹா, 2ஜி வழக்கில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த குறி எங்களுக்கு பெங்களூரு !
பெஙகளூரு: பெங்களூருவில் நாளை தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் டுவிட் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடந்திருப்பது முதல் கட்ட ஆரம்பம் தான் என்றும் தெரிவித்துள்ளனர்.
சிட்னி ஓட்டலில் பயங்கரவாதிகள் பிடியில் பிணைக்கைதியாக ஒரு இந்தியர்
சிட்னி: சிட்னி ஓட்டலில் பயங்கரவாதிகள் பிடியில் பிணைக்கைதியாக ஒரு இந்தியர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார். அந்த நபர் ஐ.டி., துறையில் பணியாற்றி வருகிறார்.
சிட்னியிலும் உபேருக்கு கெட்ட பெயர்
சிட்னி: சிட்னியில் உள்ள ஓட்டலில் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதையறிந்த ஒட்டலின் அருகில் இருந்த பொதுமக்கள், அந்த இடத்தை விட்டு சிதறி ஓடினர். இவர்களில் பலர் உபேர் நிறுவனங்களின் வாகனங்களை பயன்படுத்தினர். இந்த சமயத்தை பயன்படுத்தி, வழக்கமான கட்டணத்தை காட்டிலும் நான்கு மடங்கு கட்டணத்தை உபேர் நிறுவனம் வசூலித்து, காசு பார்த்தது. இதை பல அமைப்புக்கள் விமர்சனம் செய்ததும் சுதாரித்துக் கொண்ட உபேர் நிறுவனம், பின்னர் இலவசமாக மக்களை அழைத்து செல்ல தயாராக உள்ளதாகவும், கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தை திரும்பத் தந்துவிடுவதாகவும் அறிவித்தது. டில்லி கற்பழிப்பு சம்பவத்தால் சர்வதேச அளவில் பெயரை கெடுத்துக் கொண்டுள்ள உபேர் நிறுவனம், சிட்னியிலும் தனது இமேஜை தேவையி்லலாமல் கெடுத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாட்சி கோவில் வெப்சைட் முடக்கம்: விசாரணை
மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் முடக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணையதளம் இன்று அதிகாலை 4 மணியளவில் முடக்கப்பட்டது. குறிப்பாக, தரிசனத்திற்கான இ-புக்கிங் வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து அறிந்த கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மீனாட்சியம்மன் கோவில் இணையதளத்தை, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹோஸ்ட்கேட்டர் என்ற நிறுவனம் பராமரித்து வருகிறது. இதற்காக, மாதம் ஒன்றுக்கு 175 டாலர்கள் அந்நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தப்படுகிறது. இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது குறித்து அந்நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தடைகளை சரி செய்ய அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மூத்த குடிமக்கள் சங்கம் கோரிக்கை
சென்னை: மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை வழங்க வேண்டும் என, அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றம் ஓய்வூதியர்கள் அமைப்பு கோரி உள்ளது. இது தொடர்பான அறிக்கையில், 'மத்திய அரசை போலவே, தமிழக அரசும் 20 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முழு பென்சன் தர வேண்டும். குறைந்தபட்ச பென்சன் தொகையை ரூ.3,500 ஆக நிர்ணயிக்க வேண்டும். 58 வயது நிறைந்த மூத்த குடிமக்கள் மாநகர, நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யவும், புறநகர் பேருந்துகளில் 50 சதவீத கட்டண சலுகையுடன் பயணம் செய்யவும் அனுமதிக்க வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.
கேரள சட்டசபை ஒத்திவைப்பு
திருவனந்தபுரம்: பார் முறைகேட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கேரள நிதி அமைச்சர் மணி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
அமளி: ராஜ்யசபா ஒத்திவைப்பு
புதுடில்லி: ஆக்ரா மதமாற்ற பிரச்னை குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
சிட்னி: அவசர உதவி எண் அறிவிப்பு
சிட்னி: சிட்னியில் பொதுமக்கள் சிலர் பயங்கரவாதிகளால் பிணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை தெரிந்து கொள்ள இந்திய தூதரகம் இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. +61481453550 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தற்போதைய நிலவரம் உள்ளிட்ட தகவல்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயங்கரவாதி தான்:போலீஸ் தகவல்
சிட்னி: சிட்னியில் லின்ட் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை பயங்கரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து மூவர் தப்பி வந்துள்ளனர். தப்பியவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர், ஓட்டலுக்குள் ஒரே ஒரு பயங்கரவாதி மட்டுமே இருப்பதாக நியூசவுத்வேல்ஸ் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மதன்மி்த்ராவிடம் சி.பி.ஐ.., விசாரணை
கோல்கட்டா:சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் சிக்கி, கைதாகி உள்ள மேற்கு வங்க அமைச்சர் மதன்மித்ராவிடம், கோல்கட்டா சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணை நடந்தது. இந்த முறைகேட்டில் மதன்மித்ராவிற்கு தொடர்பு உள்ளது குறித்து தேவையான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், அது தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தூதரகத்தில் பரபரப்பு
சிட்னி: பயங்கரவாதிகள் பிணைய கைதிகளாக பொதுமக்களை பிடித்து வைத்துள்ள ஓட்டலில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. பயங்கரவாதிகளின் நடவடிக்கை காரணமாக, இந்திய தூதரகத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வௌியேற்றப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த தூதரகமும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொடியை பிடி: பயங்கரவாதிகள் மிரட்டல்
சிட்னி: சிட்னியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த பொதுமக்கள் பலரை, பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். பயங்கரவாதிகள் பிடியில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், பிணைக் கைதிகளை, இயக்க கொடியை பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பயங்கரவாதிகள் மிரட்டி உள்ளனர். இதையடுத்து, அவர்கள் பிடியில் சிக்கி உள்ளவர்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி உள்ளனர்.
விரைவில் ஐஎன்எஸ் அரிஹன்ட் சோதனை
புதுடில்லி : இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிஹன்ட் இன்னும் சில நாட்களில் சோதனை செய்யப்பட தயாராக உள்ளது. இந்த சோதனை ஓட்டம் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் இருந்து நடத்தப்பட உள்ளது.
சிட்னியில் அமெரிக்க தூதரகம் மூடல்
சிட்னி : சிட்னியில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் 13 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் சிறைவைத்துள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அமெரிக்க தூதர்களை தொடர்பு கொண்டு ஆலோசித்து வருகிறார்.
சிட்னி துறைமுக பாலம் மூடல்
சிட்னி : சிட்னியில் சிற்றுண்டி விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 13 பேரை துப்பாக்கி முனையில் சிறை வைத்துள்ள சம்பவத்தின் எதிரொலியாக சிட்னி துறைமுக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாமக்கல்:ஜவுளி ஏற்றுமதி குடோனில் தீ விபத்து:பல கோடி பொருட்கள் நாசம்
நாமக்கல்: நாமக்கலில் ஜவுளி ஏற்றும்தி குடோனில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்துக்குள்ளாகியது. தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.கே.கே.டி.டெக்ஸ்டைல்ஸ் என்ற தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால்,பல கோடி ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன.
அரசியல் நிர்பந்தத்துக்கு அடிபணியவில்லை: சி,பி.ஐ., இயக்குநர் அனில்குமார் சின்ஹா
புதுடில்லி:கடந்த 35 ஆண்டுகால அரசுப் பணியில், இதுவரை அரசியல் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து பணியாற்றியதில்லை என சி.பி.ஐ., இயக்குநர் அனில் குமார் சின்ஹா கூறியுள்ளார்.சி.பி.ஐ., இயக்குநர் அனில் குமார் சின்ஹா தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசுகையில்,உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள சில வழக்குகளில், எங்களின் செயல்பாடுகளை நீதிபதிகள் விமர்சிக்கின்றனர். அதை, பாடம் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம்.சாரதா நிதி நிறுவன முறை கேடு வழக்கில், யாருக்கும் இசைந்துபோகும் வகையில் எங்களின் விசாரணை நடைபெறவில்லை. நீதிமன்றத்துக்கு திருப்தி ஏற்படும் வகையில், உண்மையின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகிறோம் என்றார்.
3 ஆண்டிற்குள் கங்கை நதி சுத்தம் : உமா பாரதி உறுதி
அலகாபாத்:கங்கை நதியை இன்னும் 3 ஆண்டுகளுக்குள் சுத்தம் செய்வோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி உறுதிபட தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கங்கையை சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.புனித நதியான கங்கையை சுத்தம் செய்யும் பணிகள் குறித்து விவாதிக்க உத்தரபிரதேச மாநில அரசுடன் ஆலோசனைக் கூட்டத்தை டிசம்பர் 20-ல் நடத்த இருக்கிறேன். கங்கை நதியின் பெரும்பாலான பகுதி உத்தரபிரதேசத்தின் வழியாக பாய்ந்தோடுவதால் நதியை சுத்தம் செய்வதில் அம்மாநில அரசின் ஒத்துழைப்பு முக்கியமானது. புனித நதிகள் நிறம் மாறி வருவது வருத்தம் அளிக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் கங்கையில் பெரும் மாற்றம் தெரியும். இதற்காக '3 ஸ்டெப் பிளான்' ஒன்றை வைத்திருக்கிறோம்.' என்றார் உமா பாரதி.
மெஹதி பிஸ்வாஸ் வீட்டில் தேசிய புலனாய்வு போலீசார் விசாரணை
கோல்கட்டா: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக ட்வீட்டர் இணையதளத்தில் பிரசாரம் செய்த மெஹதி பிஸ்வாஸ் என்பவர் நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை பற்றி கூடுதல் விவரங்களை சேகரிக்க தேசிய புலனாய்வு போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஆதார் அட்டை இருந்தால் தான் வாகனங்களுக்கு பெட்ரோல்
நகரி : ''வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பும் போது, ஆதார் அட்டையை பெட்ரோல் நிரப்பும் ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும்'' என புத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பாராவ் கூறினார்.சித்துார் மாவட்டம், நகரி, புத்துார் மற்றும் ரேணிகுண்டா பகுதிகளில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், வாகனங்களை நிறுத்தி, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களிடம் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனாரா? என, பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.இதுகுறித்து, புத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர், சுப்பாராவ் கூறுகையில், ''வாகன ஓட்டிகள், தவறாமல் ஆதார் அட்டையை, அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது, அங்குள்ள ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும். வாகனங்கள் பயன்படுத்துவோர், 'ஆதார் அட்டை' வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.மேலும், ''அவர்கள் அலைபேசி எண்ணையும் கொடுக்க வேண்டும். அலைபேசியின் மூலம் ஓட்டுனர் உரிமம் காலாவதியாகும் முன், அவர்களுக்கு அலைபேசி மூலம் குறுஞ்செய்தி வரும். எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்,'' என்றார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.