குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பிரித்தானியாத் தமிழ்மக்களுக்கு அவசர வேண்டுகோள்

பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர். இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது.அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள்.

3 லட்சம் தமிழர்களிடம் இருந்து இந்தப் படிவங்கள் பிரித்தானிய அரசுக்கு திருப்பி அனுப்பப்படும்போது, அவர்கள் அடுத்த முறை இப்படிவத்தை அச்சிடும்போது, ஆசியாவுக்கு கீழே உள்ள நாடுகளின் பட்டியலில், தமிழ் என்று அல்லது தமிழீழம் என்று அச்சிடவேண்டிய நிலை தானாகவே தோன்றும். அதனை சுமார் 60 மில்லியன் வேற்றின மக்கள் பார்ப்பார்கள். எமது தமிழ் இனமும் ஒரு தேசிய இனமாக பிரித்தானியாவில் அங்கிகாரம் பெறுவதற்கு இது ஒரு முதல் அடிக்கல்லாக அமையும். எனவே அனைத்துத் தமிழர்களும் இதனைப் பின்பற்றுமாறு அனைவரையும் தாழ்மையோடு வேண்டி நிற்கிறோம்.

பிரித்தானியத் தமிழர்களின் பலம் அப்போது தான் வெளியுலகத்துக்கும், பிரித்தானிய அரசுக்கும் புலப்படும். எமது இனம் தலை நிமிர தமிழர்களே விரைந்து செயல்படுங்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.