குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

14.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கணவரோடு சிதையில் எரிந்த மூதாட்டி

பாட்னா: பாட்னா, சகர்சா மாவட்டம், பர்மானியா கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கவஹாதேவி. இவரின் கணவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரின் உடலை உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்று, சிதையில் வைத்து நெருப்பு மூட்டினர்.

அப்போது, கவஹா தேவி சிதையின் மீது விழுந்து, கணவரோடு பலியானார். இந்நிலையில், தனது தாயார் மாரடைப்பு காரணமாக இறந்ததாகவும், அதனால் தந்தையோடு சேர்த்து அவரையும் தகனம் செய்ததாகவும் அவரது மகன் கூறி உள்ளார்.

 

காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவலை வெளியிட புதிய இணையதளம்: ரவிசங்கர் பிரசாத்

புதுடில்லி: காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவலை அறியவும், அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

 

உண்மையின் அடிப்படையில் செயல்பாடு: சி.பி.ஐ., இயக்குநர்

புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குநர் அனில் குமார் சின்ஹா தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 35 ஆண்டுகால அரசுப்பணியில் இதுவரை அரசியல் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து பணியாற்றியதில்லை. சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் உள்ள சில வழக்குகளில் எங்களை நீதிபதிகள் விமர்சிப்பதை ஒரு பாடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கிறோம். சாரதா சிட்பண்டு மோசடியில், எங்களின் பணியை வழக்கம் போல் மேற்கொள்கிறோம். யாருக்கும் ஒத்துப்போகும் வகையில் விசாரணை நடைபெறவில்லை. கோர்டிற்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில், உண்மையின் அடிப்படையில் தான் நாங்கள் செயல்படுகிறோம் என கூறினார்.

 

தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனை

சென்னை: கல்வித்தரத்தை பாதிக்கும் வகையில் விதிகளை மீறி செயல்படும் பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று, அண்ணா பல்லை., கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தரமான கல்லூரிகளாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அவர், ஒரு காலத்தில் <உடனடி வேலை வாய்ப்பு அளிக்கும் படிப்பாக கருதப்பட்ட பொறியியல் படிப்பு, இன்று வேலைக்கே வாய்ப்பே இல்லாத கல்வியாக மாறிவிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. பொறியியல் கல்லூரி தரம் குறைந்துவிட்டதால், 1,98 லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், 1.87 லட்சம் பொறியியல் முதுநிலை பட்டதாரிகளும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் தவிக்கின்றனர் என கூறியுள்ளார்.

 

பணியாளரை விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்ட துணைத்தலைவர்

சியோல்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து தென் கொரியாவின் இஞ்சியோன் நகருக்கு சென்ற கொரியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த, விமானத்தின் துணைத்தலைவர் சோ ஹூன், பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கியது தொடர்பாக, உணவு வகைகளை பரிமாறும் பிரிவின் தலைவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டார். இதனால் விமானம 20 நிமிடம் தாமதாக கிளம்பியது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தென் கொரிய விமான நிறுவனம் விசாரணை நடத்தியதில், துணைத்தலைவர் மீது தவறு இருப்பத தெரியவந்தது. இதனையடுத்து அவர் பதவி நீக்கப்பட்டார். இதனையடுத்து தனது செயலுக்காக சோ ஹூன் பொது மக்களிடமும், பணியாளரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

 

பேஸ்புக்கில் மாற்றுக்கருத்தை பதிவு செய்ய வாய்ப்பு

வாஷிங்டன்: பேஸ்புக் இணையதளத்தில் டிஸ்லைக் பட்டனைசேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அந்த இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.

 

குடிபோதையில் போலீசாரை கார் ஏற்றி கொன்ற டிரைவர்

புதுடில்லி: டில்லியின் கலிந்தி கஞ்ச் பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஒட்டிவந்து போலீசார் மீது ஏற்றினார். இதில் 2 போலீசார் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உ.பி., மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹேமந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

 

கொள்ளையடிக்க முயன்ற 8 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் அவிநாசி அருகே, கொலை செய்து கொள்ளையடிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். ரஜினிகாந்த் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சோதனை செய்த போது, வெள்ளியம்பாளையம் பகுதியில் வேனில் ஆயுதங்களுடன் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

நடிகர் விஜய் விழாவில் தள்ளுமுள்ளு; போலீசார் தடியடி

திருநெல்வேலி: கத்தி படம் வெளியான 50வது நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

 

ஐ.எஸ்.,க்கு ஆதரவாக செயல்பட்ட பொறியியல் பட்டதாரி குறித்து திடுக் தகவல்!

பெங்களூரு: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட பொறியியல் பட்டதாகி குறித்து திடுக் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மெக்தி, ஆள் சேர்க்கும் பணியில் மட்டும் விரும்பியதாகவும், போரிட விரும்பவில்லை எனவும், இவர் சமூக இணையதளங்களில் பல கணக்குகள் வைத்திருந்ததாகவும், இதில் பலர் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

போட்டியே இல்லாத தி.மு.க,., மா.செ.,க்கள்

சென்னை: தி.மு.க., உள்கட்சி தேர்தலில், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடக்கிறது. இதில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மாவட்ட செயலாளராக அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக சுந்தர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக ஏ.வ,.வேலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

சமூக வலைதளங்கள்:அரசு எச்சரிக்கை

புதுடில்லி: மத்திய அரசு அதிகாரிகள், சமூக வலைதளங்களை கவனத்துடன் கையாள வேண்டும் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கையில், 'சமூக வலைதளங்களில் கருத்தை பதிவு செய்யும் போது முழுமையான அடையாளத்தை வௌிப்படுத்த வேண்டும். முக்கியமான தகவல்கள், ரகசியங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள கூடாது என்பது உள்ளிட்ட பல எச்சரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

வைகோவுக்கு இப்போதான் புரிஞ்சது-காங்

மேட்டுப்பாளையம்: ராஜிவ் சிலை திறப்பு விழாவிற்காக ஊட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, இப்போது தான் காங்கிரஸ் கட்சியை புரிந்து கொண்டுள்ளார். இலங்கை பிரச்னையில் இரு கட்சிகளும் ஒரே நோக்கோடு உள்ளன. ஆனால், பிரபாகரன் விஷயத்தில் தான் வைகோ தொடர்ந்து தவறு செய்கின்றார். அந்த விஷயத்தை விட்டுவிட்டால் எங்களுக்குள் இடைவௌியே இருக்காது,' என்று கூறி உள்ளார்.

 

மத்திய அரசுக்கு இ.கம்யூ., கோரிக்கை

சென்னை: முல்லை பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டம் திட்டத்திற்கான சூற்றுச்சூழல் ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வற்புறுத்தி உள்ளது. மத்திய அரசின் அனுமதி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிரானது என அக்கட்சி கூறி உள்ளது.

 

காஸ்டேங்கர் லாரி வெடித்து 10 பேர் பலி

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம், பீல்பூர் கிராகமத்தின் அருகே, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காஸ் டேங்கர் லாரி திடீரென வெடித்ததில் 10 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் காயம் அடைந்தனர். மேலும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 7 வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. விபத்திற்கான காரணம் தெரியவில்லை,.

 

கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு கோரிக்கை

புதுடில்லி: கறுப்பு பணத்தை கண்டறிவதற்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த குழு, 'வணிக வளாகங்களில் (மால்கள்) கோடிக்கணக்கான அளவில் பணப் புழக்கம் உள்ளது. இது குறித்து சோதனை நடத்த வேண்டியது தேவை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது,' என்று கூறி உள்ளது.

 

உம்மன் சாண்டி வருகை ரத்து

ஊட்டி: ஊட்டியில் ராஜிவ் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊட்டியில் காலநிலை மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் இறங்க முடியாத சூழல் நிலவியதாகவும், அதனால், உம்மன் சாண்டியின் ஊட்டி வருகை ரத்து செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின. இந்நிலையில், முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள சூழ்நிலையில், தமிழக வருகையை உம்மன் சாண்டி தவிர்த்திருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

பெற்றோரை நினைத்து ஒமர் உருக்கம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நான்காம் கட்ட ஓட்டு பதிவு நடந்து வருகிறது. முதல்வர் ஒமர் ஓட்டு போட்டார். பின்னர் அவர் கூறுகையில், 'உறுப்பு மாற்று சிகிச்சைக்காக எனது பெற்றோர் பிரிட்டன் சென்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இன்று அறுவை சிகிச்சை நடக்கிறது. நான் அங்கு இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது,' என வருத்தத்துடன் கூறினார். ஒமரின் தந்தையான பரூக் அப்துல்லாவிற்கு 77 வயதாகிறது. முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

டோனி நேரம் முடிந்தது-இயான் சாப்பல்

சிட்னி: ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, தோற்றது. இருப்பினும், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற விராத் ஹோக்லி, இரண்டு இன்னிங்ஸ்லும் சதம் அடித்து, அசத்தினார். இந்நிலையி்ல், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் ஒரு பேட்டியில் கூறுகையில், '.டெஸ்ட் போட்டிகளுக்கு டோனி தலைமையேற்கும் நேரம் முடிவுக்கு வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு விராத் ஹோக்லி தலைமையேற்று நடத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்,' என்று கூறி ள்ளார்.

 

ஜனாதிபதிக்கு ஆஞ்சியோ டெஸ்ட்

புதுடில்லி: கடும் வயிற்று வலி காரணமாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை சோதித்த டாக்டர்கள், அவரது இதய நாளங்களில் அடைப்பு இருப்பதாக சந்தேகித்தனர். இதையடுத்து, அவருக்கு ஆஞ்சியோ டெஸ்ட் நடத்தப்பட்டது. தற்போது அவர் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அரசு விழிக்குமா? கருணாநிதி கேள்வி

சென்னை: கேரளாவில் புதிய அணைகளை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தள்ளது. இது வேதனை தருகிறது. புதிய அணை கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், இந்த அனுமதி தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் அனைத்து கட்சி குழுவுடன், டில்லி சென்று பிரதமரை சந்தித்து, எடுத்துக் கூற வேண்டும். தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டால் தான் நல்ல முடிவு கிடைக்கும்,' என்று கூறி உள்ளார்.

 

டில்லி டிரைவர்களுக்கு பயிற்சி

புதுடில்லி: தலைநகர் டில்லியில் அவ்வப்போது அரங்கேறி வரும் கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க பகீரத முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், டில்லியில் டாக்ஸிகளை ஓட்டும் டிரைவர்களுக்கு பாலிவ பாகுபாடுகளை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்ச்சி பயிற்சியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவையையும் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

வேலூர் கலெக்டர் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூர்: வேலூர் கலெக்டர் ஆபீசுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள கலெக்டர் ஆபீசில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

ஜோதிட மோகம்: கணவரை கொன்ற மனைவி

பெரியபாளையம்: கணவருக்கு இரண்டாவது மனைவி கட்டும் யோகம் இருக்கிறது என்று ஜோசியர் கூறியதால் மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி, கணவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் 70. இவரது மனைவி விஜயலட்சுமி 60. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், பிரச்னைக்கு தீர்வு காண ஜோசியரிடம் விஜயலட்சுமி சென்றார். அப்போது, ஜாதகப்படி, கதிர்வேலுக்கு இரண்டாம் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக ஜோசியர் கூறினார். ஏற்கனவே கணவர் மீது எரிச்சலில் இருந்த விஜயலட்சுமி, கணவர் தூங்கும் போது அரிவாளை எடுத்து போட்டுத் தள்ளிவிட்டார். தற்போது கொலை வழக்கில் சிக்கி உள்ள அவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மின்கட்டண ஷாக்; வழக்கு தொடரப்போறாங்க

சென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் நுகர்வோர்கள் ஷாக் அடைந்தனர். இந்நிலையில், முதல் 500 யூனிட்டுகளுக்கான கூடுதல் கட்டணத்தை தமிழக அரசு மான்யமாக அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அரசாணையோ, உத்தரவோ இதுவரை வௌியாகாத நிலையில், மின் கட்டண உசென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் நுகர்வோர்கள் ஷாக் அடைந்தனர். இந்நிலையில், முதல் 500 யூனிட்டுகளுக்கான கூடுதல் கட்டணத்தை தமிழக அரசு மான்யமாக அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அரசாணையோ, உத்தரவோ இதுவரை வௌியாகாத நிலையில், மின் கட்டண உயர்வு அறிப்பை எதிர்த்து மின்நுகர்வோர் கோர்ட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.ிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் ஏற்கத்தக்கதல்ல. மோசமான சைகை காண்பித்தது தவறான செயல்,'' என்றார்.

 

முடிஞ்சா புடிச்சுக்கோ... போலீசுக்கு சவால்

மேலூர்: மேலூரை அடுத்துள்ளது கீழையூர். இங்குள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நேற்று நள்ளிரவில் சிலர் புகுந்துள்ளனர். பின்னர், கல்லாவில் உள்ள பணம், சரக்கு பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அப்போது, அங்கிருந்த டேபிளில், 'உனக்கு பட்டை நாமம்... முடிந்தால் எங்களை பிடித்து பார்... நாங்க மொத்தம் மூணு பேர்...' என்று எழுதி வைத்துவிட்டு சென்றனர். மறுநாள் கடையைச் திறந்த ஊழியர்கள், கல்லா காலியாக கிடப்பதோடு, போலீசுக்கு கொள்ளையர்கள் சவால் விட்டதையும் பார்த்து, அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த போலீசார், மூன்று கொள்ளையர்களையும் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

 

உம்மண் சாண்டிக்கு கறுப்பு கொடி

ஊட்டி: ஊட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜிவின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஊட்டி வந்தார். அவர் வருகையை கண்டித்து, பெரியார் திராவிட கட்சி சார்பில் கறுப்பு கொடி ஆர்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக 16பேரை போலீசார் கைது செய்தனர்.

 

டில்லியில் கற்பழிப்பை தடுக்க புதிய திட்டம்

புதுடில்லி: நாட்டின் தலைநகரான டில்லியில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் கற்பழிப்பு குற்றங்கள் நடந்து வருகின்றன. டில்லி நிர்வாகமும், போலீசாரும் கடும் முயற்சி எடுத்தும், கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கற்பழிப்புகளை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்துள்ளது. இதற்காக, எதிரிகளை கண்காணிக்க ராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தரைமட்டத்தில் இருந்து 200 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானங்கள், அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை கொண்டவை. இந்த கேமிராக்கல், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கம்ப்யூட்டர்களில் இணைக்கப்பட்டு, டில்லி நகர வீதிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

போதை மருந்து சீரழிக்கிறது:மோடி

புதுடில்லி: மான் கி பாத் நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று ரேடியோவில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பல இளைஞர்கள் இன்றைக்கு போதை மருந்துகளுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் இளைஞர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. இளைஞர்களை போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தனி ஒருவரால் முடியாது. போதை மருந்துக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். போதை மருந்து பழக்கம் என்பது மனரீதியான, சமூக ரீதியான ஒரு விஷயம். எனவே, அதை அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். பல டிவி சேனல்கள் போதை மருந்து பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த நிகழ்ச்சிகளை ஔிபரப்புகின்றன. அவற்றிற்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். போதை மருந்தால் கிடைக்கும் வருமானம் பயங்கரவாதிகளுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் செல்கிறது. போதை மருந்து விற்பனையில் கிடைக்கும் வருமானம், நமது வீரர்களின் உயிரை பறிக்க பயன்படுகிறது. இந்நிலையில் போதை மருந்துக்கு விடை கொடுக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் இளைஞர்களுக்கு வேண்டும். ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை மற்றவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்,' என்றார்.

 

யாருக்கு ஓட்டு: ஒமர் கருத்து

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நான்காம் கட்ட ஓட்டு பதிவு இன்று நடந்து வருகிறது. மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா இன்று ஓட்டு போட்டார். பின்னர், மக்கள் இம்முறை யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 'நான் கடந்த காலங்களில் ஆற்றிய பணி குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன் அடிப்படையில் ஆதரவு அளிப்பார்கள். காஷ்மீர் வாக்காளர்கள் புத்திசாலிகள்,' என்றார்.

 

கற்பழிப்பு: கோர்ட்டுகளுக்கு புது உத்தரவு

புதுடில்லி: கற்பழிப்பு குறித்த வழக்குகளை வேகமாக விசாரிக்க உதவும் வகையில், அவற்றிற்கென விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என, ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு மத்திய அரசு கூறி உள்ளது. மேலும், இது குறித்த வழக்குகளை தினசரி விசாரித்து, முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

டிச.18ல் ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3

சென்னை: இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 என்ற விண்கலம், வரும் 18ம் தேதியன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது. விண்வௌி அறிவியலில் இந்தியா பெற்றுள்ள தொழில்நுட்பங்களை கொண்டு, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியின் முதற்படியாக இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

புதிய அணை ஆய்வுக்கு கண்டனம்

சென்னை: முல்லை பெரியாறு அணையில், புதிய அணை ஒன்றை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான ஆய்வுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டித்து அறிக்கை வௌியிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அவர் கூறி உள்ளார்.

 

மின் கட்டண உயர்வைக் கண்டித்து 17, 18 தேதிகளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மேடடுப்பாளையம்: மின்கட்டண உயர்வைக் கண்டித்து 17, 18 தேதிகளில் மாவட்டத் தலைநகர்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார். ராஜிவ் சிலை திறபபு விழாவுக்காக ஊட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தீவிரவாதி பிரபாகரனை ஆதரிப்பதை வைகோ கை விட்டால், இலங்கை பிரச்னையில் அவருக்கும் காங்கிரசுக்கும் இடையே பெரிய இடைவௌி ஏதும் இல்லை. தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை எதிர்ப்போம். முல்லை பெரியாறு அணைப் பகுதியில் தமிழக ஊழியர்களை பணி செய்ய விடாமல் கேரள வனத்துறையனர் தடுப்பது குறித்த ஊட்டி வரும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியுடன் பேசுவேன் என்றார்.

 

ஆம்ஆத்மி பாடல்களை ஒளிபரப்பக் கூடாது

புதுடில்லி : ஆம்ஆத்மி கட்சி தொடர்பான பாடல்களை ஒளிபரப்ப வேண்டாம் என அனைத்து ரேடியோ சேனல்களையும் டில்லி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டில்லி மூத்த போலீஸ் அதிகாரி, கடந்த சில நாட்களாக போலீசார் பற்றிய தவறான கருத்துக்களை ஆம்ஆத்மி கட்சி பாடல்கள் மூலம் பரப்பி வருகிறது. இதனால் அவர்கள் கட்சி சார்ந்த பாடல்களை ஒளிபரப்ப வேண்டாம் என ரேடியோக்களை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

 

ஐஎஸ்.,க்கு ஆள்சேர்த்தவருக்கு 5 நாள் சிறை

பெங்களூரு : டுவிட்டர் வலைதளத்தின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்த பெங்களூரு இன்ஜினியர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

மோடி இன்று ரேடியோவில் உரை

புதுடில்லி : பிரதமர் மோடி இன்று ஆல்இந்தியா ரேடியோவில் காலை 11 மணிக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் தனது மான் கி பாத் திட்டம் குறித்து பேச உள்ளார்.

 

சர்வதேச யோகா தினம் : பிரதமருக்கு சத்குரு பாராட்டு

ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா சபை அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார், அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "வாழ்க்கை எப்படி இயங்குகிறது என்னும் அடிப்படை விஷயத்தை புரிந்து கொள்ள யோகா வாய்ப்பளிக்கிறது. மதங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னரே, மனிதன் இயற்கை விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்குள் மட்டுமே வாழ முடியும் என்னும் வரையறைகளை உடைத்து, அதையும் மீறி அவன் வளர முடியும் என்று நமக்கு உணர்த்தியது யோகா.

 

மகத்தான இந்த யோக அறிவியலை அதன் தூய்மை மாறாமல் வழங்குவது இந்தத் தலைமுறையினரின் பொறுப்பு. உள்வளர்ச்சிக்காக, நல்வாழ்விற்காக, முக்திக்காக வரும் தலைமுறைக்கு நாம் அளிக்கக்கூடிய அற்புதமான வரம் யோகா. ஜுன் 21ம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்கக் கோரி அதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்ட பிரதம மந்திரி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்."

 

உளவுத்துறை தலைவரானார் தினேஷ்வர்

புதுடில்லி : மத்திய உளவுத்துறை அமைப்பின் தலைவராக தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது தலைவராக இருந்து வரும் சையத் ஆசீப் இப்ராஹிமின் பதவிகாலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதால் புதிய தலைவரை மத்திய அரசு நியமித்துள்ளது.

 

விழுப்புரம்:75 நாட்டுதுப்பாக்கிகள் பறிமுதல்

விழுப்புரம்:கல்வராயன் மலைப்பகுதியில்75 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்.இதுவரை 268 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

ஜனவரியில் சுஷ்மா சுவராஜ் இஸ்ரேல் பயணம்

புதுடில்லி:மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜனவரி மாதம்(2015) இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

 

வைகோ குறித்து வெங்கையா நாயுடு தகவல்

சென்னை:ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவை நாங்கள் யாரும் சீரியசாக எடுத்துகிறது இல்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கூறியுள்ளார்.இது குறித்து அவர் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதித்ததற்காக கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்த வைகோவை நாங்கள் யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை என்றார்.

 

விவகாரத்து செய்கிறார் தாய்லாந்து இளவரசர்

பாங்காங்க்: தாய்லாந்து மன்னராக பூமிபுல் அதுல்யாதேஜ் (87) உள்ளார். இவரது மகன் இளவரசர், வெஜிராலோங்கோர்ன், இவரது மனைவி இளவரசி ,ஷிரிராஷ்மி. ஷிரிராஷ்மியின் உறவினர்கள் அரண்மனை அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் புரிந்ததாக புகார் எழுந்ததால் மன்னர் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து மனைவி ஷிரிராஷ்மியை விவகாரத்து செய்ய இளவரசர் வெஜிராலோங்கோர்ன் முடிவு செய்துள்ளார்.

இருவரும் பிரிய உள்ளதால் இளவரசி பட்டத்தை துறக்க ஷிரிராஷ்மிக்கு மன்னர் பூமிபுல்அதுல்யாதேஜ் அனுமதி வழங்கியுள்ளார்.

 

ஆப்கனில் சுப்ரீம் கோர்ட் அதிகாரி சுட்டுக்கொலை

காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டு சுப்ரீம் கோர்ட்டின் மூத்த அதிகாரி அதிகுல்லா ராவுபி நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் காபூலில் உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த நபர்கள் அவரை சரமாரியாக சுட்டுக்கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இலங்கை தேர்தலில் யாருக்கு ஆதரவு? இலங்கை எம்.பி., தகவல்

ராமேஸ்வரம்:இலங்கை அதிபருக்கான பொதுத் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8 தேதி நடக்க இருக்கிறது. இதில் அதிபர் ராஜபக்சேவும், மைத்திரிபால சிரிசேனவும் போட்டியிடுகின்றனர்.இவர்களினல் யாரை ஆதரிப்பது என தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என ராமேஸ்வரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இலங்கை எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரன் கூறியுள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.