குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

13.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடியை கைது செய்யலாமா? :மம்தா ஆவேசம்

கோல்கட்டா : கோல்கட்டாவில் கட்சி தொண்டர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாரதா சிட்பண்ட் ஊழலில் என்னை தொடர்பு படுத்தி பேசும் பிரதமர் மோடி, சகாரா நிறுவன தலைவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளாரே.

அப்படியானால் அவரை கைது செய்யலாமா? என பேசி உள்ளார். அவருடன் பிரதமர் எடுத்துக் கொண்ட படம் நிரூபிக்கப்பட்டால் பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும் எனவும் மம்தா வலியுறுத்தி உள்ளார்.

 

குழந்தைகளை கண்டுபிடிக்க இணையதளம்

புதுடில்லி : நாடு முழுவதும் மாயமான குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக ஐடி துறை புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கி வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

கோவையில் பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல்

கோவை: கோவ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பன்றிக்காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பன்றிக்காய்ச்ல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் கேரளா சென்று வந்ததாகவும், பின்னர் பன்றிக்காய்ச்சல் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் கூறினர்.

 

ஜனாதிபதி பிரணாப்பிற்கு உடலநலக்குறைவு

புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 11-ம் தேதி தனது 79-வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் வேணு ராஜாமணி கூறுகையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று மாலை கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து டில்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை இன்று நாள் மட்டும் சிகிச்சைக்காக தங்க வேண்டும் என அறிவுரை கூறினர்.

 

மகளுக்கு போதை மருந்து விற்றவரை கண்டுபிடித்த பெண்

மும்பை: தனது மகளுக்கு போதை மருந்து விற்றவரை, தொண்டுநிறுவன உதவியுடன், பெண் ஒருவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மும்பையில் 16 வயது கல்லூரி பெண் ஒருவருக்கு போதை மருந்துபழக்கம் இருப்பதை அவரது தாயார் கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக பெண், வாட்ஸ் ஆப் மூலம், போதை மருந்து விற்கும் நபருடன் பேசியதும் தெரியவந்தது. தனது மகளை போதை மருந்து பழக்கத்தில் இருந்து மீட்க முடிவு செய்த தாயார். இதற்காக தொண்டு நிறுவன உதவியை நாடியுள்ளார். இதன் பின்னர், இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற தொண்டு நிறுவன ஊழியர்கள், போதை மருந்து விற்றவனை பிடித்து விசாரித்தனர்.

 

தாயை கவனிப்பதற்காக படிப்பை நிறுத்திய சிறுமி

பெங்களூரு: உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயாரை கவனித்து கொள்ள பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட சிறுமியை அதிகாரிகள் மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா சவனபுரா கிராமத்தை சேர்ந்தவர் சென்னமல்லப்பா-நஞ்சனம்மா தம்பதியினரின் மகள் சவுபாக்கியலட்சுமி(12). கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னமல்லப்பா காலமானார். நஞ்சனம்மா சர்க்கரை மற்றும் இதய நோய்காரணமாக அவதிப்பட்டு வந்தார். தாயாரின் உடல் நிலை மற்றும் குடும்ப வறுமை காரணமாக சவுபாக்கியலட்சுமி பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனதுதாயாரை கவனித்து வந்தார். இது குறித்து தகவல் பத்திரிகையில் வெளியானது. இதனையடுத்து பொது மக்கள் பலர் இவர்களுக்கு நிதியுதவி அளித்தனர். அதிகாரிகளும், நஞ்சனம்மாவை சந்தித்து அறிவுரை கூறி, சவுபாக்கியலட்சுமியை 5ம் வகுப்பில் சேர்த்தனர்.

 

மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி: கானா முடிவால் தி.மு.க.,வினர் கலக்கம்

திருநெல்வேலி: மகன் மீது திடீர் பாசம் கொண்டதால், கட்சியினரை கழற்றிவிட்டார் கருப்பசாமிபாண்டியன். நெல்லை மாவட்ட உட்கட்சி தேர்தலில் பரபரப்பு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,செயலாளராக கருப்பசாமிபாண்டியன் செயல்பட்டார்.இவர் அ.தி.மு.க.,வில் இருந்து வந்ததால், நீண்டகாலமாக மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் ஒரு தரப்பினர் எப்போதும் இவருக்கு எதிர்அணியாகவே செயல்பட்டனர். நெல்லை மாவட்டம் கட்சி அடிப்படையில் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டங்கள் எனவும் மாநகர பகுதி தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த கருப்பசாமிபாண்டியன், தாம் கலெக்டராக இருந்துவிட்டு இனி தாசில்தாரை போல ஒரு சிறிய மாவட்ட பொறுப்பிற்கு பொறுப்பேற்க மாட்டேன். பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கடைசியாக நடந்த தி.மு.க.,நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்தார். கட்சியில் அவரது ஆதரவாளர்களாக மாநகர செயலாளர் அப்துல்வகாப், மேற்கு மாவட்டத்தில் சிவபத்மநாபன், கிழக்கில் ஞான திரவியம் உள்ளிட்டவர்கள் செயல்பட்டனர். இந்நிலையில் தற்போது நடந்துவரும் தி.மு.க.,மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் போட்டியிட இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மனுக்கள் தாக்கல் துவங்கியது. இதுவரை இல்லாமல், கருப்பசாமிபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் பதவியை தமது மூத்த மகன் சங்கருக்கு வாங்கித்தருவதற்காக அறிவாலயத்திற்கு வந்துள்ளார். இவருடன் எப்போதும் உடன் இருந்த மாநகர செயலாளர் அப்துல்வகாப், மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு மனுசெய்தார். தம்முடன் கட்சிப்பணியாற்றியவருக்கு பொறுப்பு வாங்கித்தராமல், அதே பொறுப்பிற்கு கருப்பசாமிபாண்டியன் மகனுக்கு மனுசெய்துள்ளார். மாநகர செயலாளர் பொறுப்பிற்கு மாணவரணி செயலாளர் அருண்குமார், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,ஏ.எல்.சுப்பிரமணியன் மகன் லட்சுமணன், தற்போதைய இளைஞரணி செயலாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் மனுசெய்துள்ளனர். இதனால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாவட்ட செயலாளருக்கு ஆவுடையப்பன் மனுதாக்கல் செய்துள்ளார். மாவட்ட செயலாளர் பதவியை இழந்துள்ள நிலையில் அந்த பொறுப்பிற்கு தமது மகனை கொண்டுவர கருப்பசாமிபாண்டியன் திடீரென காய்நகர்த்தியுள்ளது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

லண்டனில் விமான நிலைய சேவைகள் பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டன.ஹீத்ரு, காட்விக், ஸடான்ஸ்டெட் விமான நிலையங்களின் சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர், விமான நிலைய சேவை துவங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

அ.தி.மு.க., நிர்வாகி கொலையில் குற்றவாளி கைது

சென்னை: சென்னை நெசப்பாக்கம் சூளைப்பள்ளம் பல்லவன் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் என்ற புல்லட் விஸ்வநாதன். இவர் அ.தி.மு.க.வின் 128வது வட்ட ஜெ., பேரவை செயலாளராக இருந்தார். கடந்த மாதம் 18ம் தேதி இவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேகேநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில்4 பேர் சரணடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சசிகலா என்ற பெண்ணை போலீசார் தேடி வந்தனர். இவரை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

சென்னை: முல்லைப்பெரியாறு அருகே கேரளா புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப்பெரியாறு அணையில், கேரளா புதிய அணை கட்டுவதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு இருக்கும் நிலையில், புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வன உயிரின வாரிய நிலைக்குழு அனுமதி அளித்திருப்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறும் செயல். எனவே ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் எந்தவொரு கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்கக்கூடாது என கூறியுள்ளார்.

 

பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர்

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவிலிருந்து சிக்மங்களூருவுக்கு அரசு சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர். பஸ் அந்தே அகரே என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது, பின் பக்க டயர் கழன்று ஓடியது.இதனை பார்த்த டிரைவர், பஸ்சின் வேகத்தை படிப்படியாக குறைத்து, சாலை ஓரத்தில் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இதற்கு டிரைவருக்கு பயணிகள் அனைவரும் நன்றி தெரிவித்து கொண்டனர். இதன் பின்னர், டிரைவர் அளித்த தகவலின் பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து பஸ் டயரை பொருத்தினர். இதன் பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக பஸ் கிளம்பி சென்றது.

 

வாரிசுகளுக்கு பதவியில்லை: ஸ்டாலின் முடிவு!

சென்னை: தி.மு.க.,வில் இருக்கும் பலர், தங்கள் வாரிசுகளுக்கு மாவட்ட செயலாளர் பதவி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், வாரிசுகள் யாருக்கும் பதவி வழங்கக்கூடாது என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ம.பி., அமைச்சருக்கு குவியும் வாழ்த்து

போபால்: குழந்தைகள் உரிமைக்காக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் ம.பி., மாநில பா.ஜ.,வினர், இந்த பரிசு, தொழில்துறை அமைச்சராக இருக்கும் கைலாஷ் விஜயவார்கையாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தவறாக நினைத்துக்கொண்டு, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். போன், எஸ்.எம்.எஸ்., மூலம் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

மே. வங்க அமைச்சர் மித்ராவுக்கு வரும் 16ம் தேதி வரை சி.பி.ஐ., காவல்

கோல்கட்டா: சாராதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மே. வங்க அமைச்சர் மித்ராவை வரும் 16ம் தேதி வரை சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

உளவுத்துறை பிரிவு தலைவராக தினேஷ்வர் சர்மா நியமனம்

புதுடில்லி: உளவுத்துறை பிரிவு தலைவராக தினேஷ்வர் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

முத்த சர்ச்சையில் சிக்கினார் கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடக அமைச்சர் ஒருவர் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கர்நாடக வீட்டுவசதி துறை அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் இளம் பெண் ஒருவரை முத்தமிடும் போட்டோக்கள் வாட்ஸ்-அப்பில் பரவிவருகிறது. இது அம்மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

தாவூத் மீதான தாக்குதலை முறியத்தது யார்?

புதுடில்லி : பாகிஸ்தானின் கராச்சியில் பல ஆண்டுகளாக பதுக்கி இருக்கும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை சுட்டுக் கொல்வதற்காக சூப்பர் பாய்ஸ் என்ற படை, 2013ம் ஆண்டு இந்தியாவால் ஏற்படுத்தப்பட்டு, கராச்சிக்கு சென்றது. ஆனால் தாக்குதல் நடத்த இருந்த கடைசி நிமிடத்தில் அவர்களுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பால், தாவூத் இப்ராஹிம் மீது தாக்குதல் நடத்தாமல் திரும்பி வந்துள்ளனர்.

 

இணையதளங்கள் கண்காணிக்கப்படும்:அமைச்சர்

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதித்ததற்காக பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்துள்ள வைகோவை நாங்கள் யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை என்று சென்னையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆந்திராவில் தமிழக பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது. பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இணையதளங்கள், சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும். இந்து மதத்துக்கு மீண்டும் திரும்புவது தவறு எனில் மதமாற்றமும் தவறானதே என்றார்.

 

மோடியை விமர்சிக்க பாக்.,க்கு உரிமையில்லை

புதுடில்லி : பாகிஸ்தான் தேசிய குழு உறுப்பினர் அவிஸ் அகமது கான் லெகரி கூறிய கருத்திற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் வெங்ககைய்ய நாயுடு, பிரதமர் மோடி பற்றி விமர்சனம் செய்ய பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது எனவும், இந்தியாவின் தலைமை குறித்து கருத்து தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஆஸ்காருக்கு பரிந்துரை

புதுடில்லி : இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் ஆஸ்கார் விருதுக்காக மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோச்சடையான் உள்ளிட்ட 3 படங்களுக்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

மதன்மித்ரா அமைச்சராக தொடர்வார்:மம்தா

கோல்கட்டா : மேற்குவங்க போக்குவரத்து துறை அமைச்சராக மதன்மித்ராவே தொடர்வார் என்றும், அவர் இல்லாத நாட்களில் தான் அந்த துறையை கூடுதலாக கவனிக்க உள்ளதாகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

மோடிக்கு மம்தா சவால்

கோல்கட்டா : கோல்கட்டாவில் கட்சி தொண்டர்களிடையே பேசிய மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் பிரதமர் மோடி என்னை கைது செய்து கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.

 

மோடி ஓட்டுவங்கி அரசியல் செய்கிறார்:மணிசங்கர்

புதுடில்லி : வளர்ச்சி என்ற பெயரால் பிரதமர் மோடி ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் விதிமுறைகளின்படி பார்லி., நடத்தப்படவில்லை எனவும், முறையற்ற வார்த்தைகளை அவை உறுப்பினர்கள் பேசுவதை பிரதமர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

 

ஈராக் ஹெலிகாப்டர் மீது ஐஎஸ் தாக்குதல்

சமாரா : ஈராக்கில் சமாரா பகுதி அருகே ஐஎஸ் பயங்கரவாதிகள் ஹெலிகாப்டர் ஒன்றின் மீத தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் இரண்டு விமானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதம்

தூத்துக்குடி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட முத்துநகர் எக்ஸ் பிரஸ் ரயில், மீளவிட்டான் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பழுது சரி செய்ய சுமார் ஒரு மணி நேரம் என்பதால், பயணிகள் தவிப்பில் உள்ளனர்.

 

சரத்பவார் உடல் நலம்: அமித் ஷா விசாரித்தார்

மும்பை: முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங். தலைவருமான சரத்பவார் (74), டில்லியில் பார்லி. குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். நேற்று டில்லி ஜான்பாத் இல்லத்தில் தங்கியிருந்த போது தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மயங்கிவிழுந்தார். உடனடியாக விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு மும்பை பிரிஜ்கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.

 

ஜனவரி 7 தேமுதிக செயற்குழுக் கூட்டம்

சென்னை : தேமுதிக.,வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஜனவரி 7ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜ., உடனான கூட்டணி நிலவரம், தமிழக சட்டசபை தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

 

இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்:காங்.,

பானாஜி : கோவாவில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் லுயிஜின்ஹோ, நீண்ட காலமாக கட்சி பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள், அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு, அவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நம்மிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, மக்களின் மனதில் இடம்பிடிக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

காசநோய் துணை இயக்குநர் சஸ்பெண்ட்

ஊட்டி : லஞ்சம், ஊழல் புகார்களின் எதிரொலியாக நீலகிரி மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஆனந்தன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

பன்னீர்செல்வம் யாருக்கு முதல்வர்?:விஜயகாந்த் கேள்வி

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது பேசிய முதல்வர் பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் என குறிப்பிட்டு பேசி உள்ளனர். ஜெயலலிதா மக்களின் முதல்வர் என்றால், ஓ.பன்னீர்செல்வம் யாருக்கு முதல்வர்? அவர் தமிழக மக்களுக்கு முதல்வர் இல்லையா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

பொது சிவில் சட்டம்: சதானந்தா உறுதி

புதுடில்லி : பொது சிவில் சட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரச நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

டிச., 19 மதுரையில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை : மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் டிசம்பர் 19ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

 

சென்னையில் உ.வே.சா.,வீடு இடிப்பு

சென்னை : சென்னையில் தமிழ் தாத்தா என புகழப்படும் உ.வே.சாமிநாத ஐயர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டுள்ளது. 2012 ம் ஆண்டு இவ்வீட்டின் உள்பகுதி இடிக்கப்பட்டதற்கு தமிழறிர்ஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த வீட்டை நினைவு இல்லமாக அரசு பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

13 சிற்றாறுகளை இணைக்க வேண்டும் ; ராமகோபாலன்

மயிலாடுதுறை: சீர்காழியில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், கதிர்காம சுவாமிகள் 52 வது குருபூஜை விழாவில் பங்கேற்றார். இந்நேரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள 13 சிற்றாறுகள் இணைக்கப்பட வேண்டும். இது மிக நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்.

 

பாட்னா நகராட்சி கமிஷ்னர் சஸ்பெண்ட்

பாட்னா : பாட்னா ஐகோர்ட் உத்தரவின் பேரில் நகர நகராட்சி கமிஷ்னரை சஸ்பெண்ட் செய்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் பணம் பெற்றுக் கொண்டு, சட்ட விரோதமான கட்டிடங்கள் கட்ட அனுமதி அளித்தது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

நான் ஒரே மாதிரிதான் இருப்பேன்:கோஹ்லி

அடிலெய்டு : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, எனது பணியை நான் சிறப்பாக செய்தேன். இந்த தோல்வியால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. 2வது டெஸ்ட்டில் தோனி மீண்டும் அணிக்கு திரும்பினாலும் இப்போது போலவே அணி வீரர்களுடன் பேச விரும்புகிறேன். நான் என்ன கணித்திருந்தேனோ அது நடந்திருக்கிறது. கார்ன், பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருவந்தார் என தெரிவித்துள்ளார்.

 

மொழிபெயர்ப்பாளராக இருந்தான்:கமிஷ்னர்

பெங்களூரு : ஐஎஸ் உடன் தொடர்பு இருப்பதாக பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள மெஹ்தி மன்சூர் பிஸ்வாஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக போலீஸ் கமிஷ்னர் எம்.என்.ரெட்டி, பிஸ்வாஸ் ஐஎஸ் குறித்து அரபு மொழியில் உள்ள செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி செய்து வந்துள்ளான். ஆனால் பயங்கரவாதி அமைப்பின் முக்கிய தலைவர்களுன் டுவிட்டர் அக்கவுன்டுடன் இவனுக்கு தொடர்பு இருந்துள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஐஎஸ் அமைப்பிற்காக போராட ஈராக் மற்றும் சிரியாவிற்கு இவன் பலரை அனுப்பி உள்ளான். இதுவரை அவனுடன் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஎஸ் அமைப்புடன் தனக்கு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான் என தெரிவித்துள்ளார்.

 

என் மகனுக்கு ஐஎஸ்., உடன் தொடர்பில்லை

கோல்கட்டா : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக டுவிட்டர் மூலம் ஆள் சேர்த்து வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 24 வயது மெஹ்தி மெஹ்பூப் பிஸ்வாஸ் என்பவரது தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மகனுக்கு ஐஎஸ் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை. அவனது இமெயில் முடக்கப்பட்டுள்ளது. எந்த பயங்கரவாத அமைப்புடனும் என் மகனுக்கு தொடர்பு இருக்கும் என்று கூறுவதை என்னால் நம்ப முடியாது. என் மகன் எங்களுடன் சில் மாதங்கள் தங்கி இருந்தான். அப்போது அவனுக்கு இது போன்ற வேலைகளுக்கு நேரம் இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.

 

ஆட்டோ வைத்து பொருட்கள் கொள்ளை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த கள்ளாங்காட்டுவலசு பகுதியில் பூட்டி இருந்த இரண்டு வீடுகளின் கதவை உடைத்த மர்ம நபர்கள், ஆட்டோ வைத்து வீட்டில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெளியே சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கனவுகள் நிறைவேறும் காலம் வந்துவிட்டது:மோடி

ஜம்மு : காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 30 ஆண்டுகளாகியும் காஷ்மீர் மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது அவைகள் நிறைவேறும் காலம் வந்து விட்டது. எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காதவர்களின் கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும். உங்கள் முகங்களில் தெரியும் சந்தோசம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற சிந்தனையையே அரசியல் தலைவர்கள் விட்டு விட்டனர். துப்பாக்கிச்சூடுகள் வழக்கமாகி விட்ட போதிலும் மக்கள் அதனை துணிவுடன் எதிர்கொள்கிறீர்கள். ஒருபக்கம் பாகிஸ்தானின் தாக்குதல் இருந்தாலும் இங்கு தோட்டாக்களுக்கு பயப்படாத முகங்களை பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் ரூ.14,958 கோடி கறுப்புபணம்

புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் 339 இந்தியர்களுக்கு ரூ.14,958 கோடி கணக்கில் வராத பணம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இவற்றிற்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் வரி செலுத்தப்பட வேண்டி இருக்கும் எனவும், இதனால் இந்த பணத்தை பணமோசடி சட்டப்பிரிவின் கீழ் பறிமுதல் செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டிற்கு சிறப்பு புலனாய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 

கோல்கட்டா கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு

கோல்கட்டா : சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர் மதன் மித்ரா இன்று, அலிபூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனால் கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் 2 கோடியே 80 லட்சம் வழக்குகள் நிலுவை

சென்னை : இந்தியாவில் உள்ள கோர்ட்டுகளில் 2 கோடியே 80 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், போதிய கட்டமைப்பு தொழில்நுட்ப வசதிகள் இல்லாததே இதற்கு காரணம் என சென்னையில் வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் பேசிய சுப்ரீம் கோர்ட் நீதிபதி கலிபுல்லா தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஒரு கோடி வழக்குகளை விசாரிக்க 8 நீதிபதிகளே உள்ளதாகவும், மேற்கத்திய நாடுகளில் 10 லட்சம் வழக்குகளை விசாரிக்க 50 நீதிபதிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்டப்பஞ்சாயத்துகளை விடுத்து, மக்கள் கோர்ட்டிற்கு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். இவ்விழாவில் தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நீதிபகளும், வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

 

புடின் வருகை:அமெரிக்கா அதிருப்தி

வாஷிங்டன் : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்தது தொடர்பாக அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது. மேலும் ரஷ்யாவின் வர்த்தக ஒப்பந்தமும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை, வழக்கமானது தான் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே சமயம், இது அமெரிக்க அதிபர் ஒபாமாவில் இந்திய வருகையை எந்த விதத்திலும் பாதிக்காது எனவும், திட்டமிட்டபடி அவர் இந்தியா வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாலுமிகள் மது அருந்த தடை

கனடா : கப்பல் மாலுமிகள் கப்பலில் வேலைநேரத்தின் போது மது அருந்த, கனடா கடற்படை தடை விதித்துள்ளது. மேலும் சிறப்பு கொண்டாட்டங்களின் போது மட்டுமே மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

டிச.,15, ராஜ்யசபாவில் இன்சூரன்ஸ் மசோதா

புதுடில்லி : இன்சூரன்ஸ் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தும் திருத்தப்பட்ட சட்டமசோதா, ராஜ்யசபாவில் வரும் திங்கள்கிழமை( டிசம்பர் 15) அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ராஜ்யசபாவில் ஒப்புதல் பெற்ற பின்னர் இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

உரிஅடித்தல் சாகச விளையாட்டாக அறிவிப்பு

மும்பை : கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஒருவர் மீது ஒரு ஏறி, பிரமீடு அமைத்து உரிஅடிக்கும் விளையாட்டை சாகச விளையாட்டாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இது மகாராஷ்டிராவின் பாரம்பரிய விளையாட்டு எனவும், பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க இம்முடி எடுக்கப்பட்டுள்ளது எனவும், அதை பாதுகாப்பான முறையில் விளையாட வேண்டும் எனவும் மகாராஷ்டிர சட்டசபையில் நேற்று பேசிய மகாராஷ்டிர கல்வித்துறை அமைச்சர் வினோத் தவேதி தெரிவித்துள்ளார்.

 

தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கட்டண உயர்வு மக்களையும், சிறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும். அரசு, மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, அந்த விலை சுமையை மக்கள் மீது சுமத்த நினைக்கிறது என திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டி உள்ளார்.

 

டில்லி தேர்தல்:பா.ஜ.,விற்கு பெரும்பான்மை

புதுடில்லி : அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ள டில்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.,விற்கு பெரும்பான்மை கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டில்லியிலும் மோடி அலை வீசுவதால் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களுக்கான சட்டசபையில், 45 இடங்களை பா.ஜ., கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.,விற்கு 38 சதவீதம், ஆம்ஆத்மிக்கு 27 சதவீதம் என்ற அளவிலேயே ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தெலுங்கானா:70 இன்ஜி., கல்லூரிகள் மூடல்

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 60 முதல் 70 இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. கல்லூரியை ஆய்வு செய்ய அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததற்காக அக்கல்லூரிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

பாக்., செயல்பாடு:அத்வானி வேதனை

புதுடில்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு நமது அண்டை நாடு முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிடுவதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. ஆனால் அது இதுவரை நடக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது என பார்லி., தாக்குதல் நினைவு தினத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

 

பார்லி., தாக்குதல்:தலைவர்கள் அஞ்சலி

புதுடில்லி : 2001ம் ஆண்டு பார்லிமென்ட் கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தினமான இன்று, அதில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பார்லி., வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வீரர்களின் படங்களுக்கு அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

பா.ஜ., தலைவர்களுக்கும் தொடர்பு: மம்தா

கோல்கட்டா : சாரதா சிட்பண்ட் ஊழலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மட்டும் பா.ஜ., அரசு கைது செய்து வருகிறது. ஆனால் இதில் பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களுக்கும் தொடர்புள்ளது என குற்றம்சாட்டி உள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடியால் முடிந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.

 

பயங்கரவாதிகளால் முதியவர் கடத்தி கொலை

சோபூர் : காஷ்மீரின் சோபூரில் முகமுடி அணிந்த 4 பயங்கரவாதிகள் ஹைகம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்து, 62 வயதாகும் சர்பன்ச் குலாம் முகம்மது என்பவரை கடத்திச் சென்றுள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் வலுகட்டாயமாக சர்பன்சை இழுத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட சர்பான்சை போலீசாரும், ராணுவத்தினரும் தேடி வருந்தனர். இந்நிலையில் அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

மோடி,அமித்ஷா மீது திரிணாமுல் தாக்கு

கோல்கட்டா : சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் மேற்குவங்க அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., தேரிக் ஓபிரையன், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கைது செய்து விட்டு, திரிணாமுல் காங்கிரசை அவர்கள் கட்சியுடன் இணைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

 

அனைவருக்கும் வேலைவாய்ப்பு:வசுந்தரா

ஜெய்பூர் : ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நிதித்துறையில் அதிகளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், பிரதமர் மோடி முதல்வராக இருந்த போது எவ்வாறு அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தினாரோ அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்துவார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

ஒரு கொசுவர்த்தி 100 சிகரெட்டுக்கு சமம்

புதுடில்லி : கொசுவர்த்தியில் இருந்து வெளிப்படும் புகையை சுவாசித்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து ஏற்படும் என புனேவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சுதீப் சால்வி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மூடப்பட்ட அறையில் ஏற்றி வைக்கப்பட்ட கொசுவர்த்தியில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பது 100 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமம் என சீனா மற்றும் தைவான் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

 

அமெரிக்க பள்ளி அருகே துப்பாக்கிச்சூடு

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் வடமேற்கு ஓரிகான் பகுதியில் உள்ள பள்ளியின் அருகே இளைஞர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

எண்ணெய் கசிவு:சுந்தரவன காடுகளுக்கு ஆபத்து

புதுடில்லி : இந்திய-வங்கதேசத்தை ஒட்டிய இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 350,000 லிட்டருக்கும் அதிகமான எண்ணெய் கசிந்துள்ளது. இதனால் இந்தியாவின் சுந்தரவன காடுகளுக்கும், அங்கு வாழும் வனவிலங்குகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்காக இந்திய கடற்படையும், எல்லை பாதுகாப்பு படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுந்தரவன காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுந்தரவன காடுகளுக்கான கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

எபோலா பலி 6583 ஆக உயர்வு

நியூயார்க் : மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டும் எபோலா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 6583 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

விசா ஆன் அரைவல் திட்டத்திற்கு வரவேற்பு

புதுடில்லி :மத்திய அரசு அறிவி்த்துள்ள விசா ஆன் அரைவல் திட்டம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகவரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியிருப்பதாவது. மேற்கண்ட திட்டத்தின் படி கடந்த நவம்பர் மாதம் 2 ஆயிரத்து 968 பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்தியாவிற்கு வந்தவர்களை காட்டிலும் 62.7 சதவீதம் அதிகமாகும். மேலும்இத்திட்டத்தின்படி கொரியா நாட்டை சேர்ந்தவர்கள்(837) முதலிடத்திலும் தொடர்ந்து சிங்கப்பூர்(467), நியூசிலாந்து( 427) நாட்டவர்களும் இடம் பிடித்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

 

ரயில்வே தேர்வுகள் ஆன்லைனிற்கு மாற்றம்

புதுடில்லி: இனிமேல் வருங்காலங்களில் ரயில்வே தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: காகிதங்கள் மூலமாக நடத்தப்பட்டு வரும் தேர்வு முறை தோல்வியடைந்திருப்பதாகவும், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியாவது, நம்பகத்தன்மை குறைந்து வருவது போன்ற காரணங்களால் ஆன்லைன் தேர்வு முறை நடத்த ரயி்ல்வே நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

52 வகை மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு விதிப்பு

புதுடில்லி: மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் சர்க்கரை, ரத்தகொதிப்பு உட்பட பல்வேறு வகையான மாத்திரைகளின் விலைகளை கட்டு்ப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து ஒரே வகையான மூலப்பொருட்களை உபயோகப்படுத்தி எத்தனை நிறுவனங்கள் மருந்துகள் தயாரித்த போதிலும் அவைகள் அனைத்தும் பொதுவான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியது. ஏற்கனவே விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய மருந்து விலை நிர்ணய குழுமம் சுமார் 450 வகை மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் தற்போது வலி நிவாரணி , தோல் நோய்க்கான மருந்துகளை விலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

பா.ஜ., அமைச்சருக்கு நோபல் பரிசு?: பாராட்டிய சகாக்கள்

போபால்: நோபல் பரிசு பெற்றதாக கருதி அமைச்சரை பாராட்டிய சகாக்களால் ம.பி., யி்ல் குழப்ப நிலை நிலவியது. உலக அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவி்ன் கைலாஷ்சத்யார்திக்கும், பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலாவுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. இந்நிலையில் ம.பி.,அரசியலில் அமைச்சருக்கு நோபல் பரிசு கிடைத்ததாக பெரும் பரபரப்பு உண்டானது சம்பவம் நிகழ்ந்துள்ளது. ம.பி.,யில் பா.ஜ., அரசில் அமைச்சராக இருப்பவர் கைலாஷ் விஜயவர்கியா.உண்மையான நோபல் பரிசு பெற்றவரின் பெயரும் இவரின் பெயரும் ஒன்று போல் இருப்பதால் அமைச்சரின் சகாக்கள் இடையே குழப்ப நிலை நிலவியது. அமைச்சர்களி்ன் குழப்பநிலை மற்றும் அறியாமை பத்திரிகைகளில் பட்டவர்த்தனமாகியுள்ளது குறிப்பாக மாநில சட்டத்துறை அமைச்சர் குசும் மெக்தலே தொலைக்காட்சி அளித்த பேட்டி ஒன்றில் கைலாஷூக்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு எனது பராட்டுக்கள். அவர் எங்களது அமைச்சரவையில் அங்கம் வகிப்பது எங்களுக்கு பெருமைக்குரிய ஒன்றாகும். என கூறியுள்ளார்.

 

மூன்று கோடி ரூபாய் நகை, பணத்துடன் கூட்டுறவு சங்க பெண் செயலர் ஓட்டம்

குறிச்சி: கோவை, மலுமிச்சம்பட்டியில் உள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நகை, பணத்தை மோசடி செய்த பெண் செயலர் தலைமறைவானார்.மலுமிச்சம்பட்டி, இந்திரா நகரில், செட்டிபா-ளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது.தலைவராக, செட்டிபாளையத்தைச் சேர்ந்த, முருகேசன், செயலராக, ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த, கீதா, 45, உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர்.அடகு வைத்த நகைகளுக்கு, பணம் செலுத்தியபிறகும், நகைகள், திருப்பி தரப்படவில்லை என்றும், வங்கியில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக, மோசடி நடந்திருப்பதாகவும், வங்கி இயக்குனர்களுக்கு புகார் போனது.இது குறித்து, செயலர், கீதாவிடம், இயக்குனர்கள் விசாரித்தபோது, 'இன்னும், பத்து நாளில், நகைகள் திருப்பி தரப்படும்' என்றார்.இது குறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில், நேற்று வெளியானது. இதைப் பார்த்ததும், வங்கியில், நகை அடகு வைத்தவர்களும், பணம் போட்டவர்களும், வங்கி முன் கூடினர்.கோவை மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர், கவுரவராஜ் தலைமையிலான அதிகாரிகள், மலுமிச்சம்பட்டிக்கு வந்து பார்த்தபோது, வங்கி செயல்படாமல், பூட்டி இருந்தது தெரியவந்தது.தலைவர், தன்னிடம், சாவி இல்லை என, தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் முன்னிலையில், வங்கியின் பூட்டை உடைத்து, ஆவணங்களை சரிபார்த்தபோது, ரொக்க இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சா-லையில், மறியலில் ஈடுபட்டனர்.மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்துடன், செயலர் கீதா, ஓட்டம் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

கட்சியின் பலத்தின் அடிப்படையிலேயே கூட்டணி: அமித் ஷா

புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியில் பா.ஜ., தலைவர் அமித் ஷா கூறுகையில், சிவசேனாவுடன் நாங்கள் கூட்டணியை முறிக்கவில்லை. அக்கட்சியுடன் கூட்டணி தொடர பல சலுகைகளை வழங்கினோம். ஆனால் கடைசி நேரத்தில் எதுவும் நடைபெறவில்லை. தேர்தலுக்கு பின் நாங்கள் மும்பை மாநகராட்சியில் ஆதரவளித்தோம். அக்கட்சியை சேர்ந்த அமைச்சரை நீக்கவில்லை. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுடன் எந்த பிரச்னையுமில்லை. மீடியாக்கள் தான் தவறாக செய்தி வெளியிடுகின்றன. கட்சியின் பலத்தின் அடிப்படையில் தான் கூட்டணி அமையும். கட்சியின் பலம் அதிகரிக்கும் போது, அது கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.