குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 9 ம் திகதி வியாழக் கிழமை .

கனேடிய நாடாளுமன்றில் கன்னி உரை நிகழ்த்திய ராதிகா!

 11 .06. 2011    . கனேடிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்ற ராதிகா சிற்சபைஈசன் நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையை தமிழிலும் நிகழ்த்தியுள்ளார். ராதிகா சிற்சபைஈசன் கடந்த மே மாதம் 2 ம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஸ்கார்பரோ-ரூச் ரிவர் என்ற தொகுதியில் புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத்தில் அவர் தனது கன்னி உரையை நிகழ்த்தும் போது,

“நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழர் என்ற வகையில் இந்த மதிப்பிற்குரிய அவையில் எனது தாய் மொழி தமிழிலில் பேசுவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும், எளிமையாகவும் உணர்கிறேன்.

 

தமிழர்களாகிய நாம் ஒடுக்கு முறைகளில் இருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம். கனடா எம்மை இரு கரம் கொண்டு எம்மை வரேவேற்றது.

நாமும் கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்காற்றி வருகிறோம்.

இன்று இந்த அவையிலே தமிழ்மொழியில் பேசப்பட்டதை, இந்த மைல்கல் எட்டப்பட்டதை உலகெங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவர்.

கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தபடி இது.

தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும். அவர்கள் கனடாவின் உயர் தலைமைப் பொறுப்புக்களில் முன்னேறுவர்” என்றார்.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

2008 இல் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 4,900 வாக்குக்களை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.