குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

11.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதமாற்ற பிரச்னை: பிரதமருக்கு கோரிக்கை

புதுடில்லி: மதமாற்றம் குறித்த பிரச்னையில் பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு, விளக்கம் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. பி.எல். புனியா கோரிக்கைவிடுத்துள்ளார்.

சென்னை - அரக்கோணம் மின்சார ரயில்சேவை பாதிப்பு
வேலூர்: குடிபோதையில் கார்டு சிக்னல் தர மறுத்ததால், சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வேலூர் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு, குடிபோதையில் இருந்ததால், ரயிலுக்கு சிக்னல் கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த ரயில் திருவள்ளூரையடுத்த செஞ்சி பனப்பாக்கம் என்ற இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையிலிருந்து, கோவை வழியாக கேரளா செல்லும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண சலுகையை அறிவித்தார் ஓ.பி.எஸ்.,
சென்னை: வீடுகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் கூடுதல் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
ஈரோடு: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, ஈரோடு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் பாபு, 37. விசைத்தறி உரிமையாளர். கடந்த, 7ம் தேதி டூவீலரில் சாவடிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க, உறவினர்கள் முன் வந்தனர். தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டன.
சட்டசபையில் மொபைல் போன் பயன்படுத்த பா.ஜ., அதிரடி தடை
பெங்களூரு: பெலகாவியில் நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில், மொபைல் போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட குளறுபடிகளால், எச்சரிக்கை அடைந்துள்ள பா.ஜ., தனது அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், சட்டசபைக்குள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஸ் மீது 3 லாரிகள் அடுத்தடுத்து மோதல்; 50 பேர் தப்பினர்
திருத்தணி: தாம்பரத்திலிருந்து திருத்தணி வந்த தனியார் பஸ், ரகுநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது, அவ்வழியே வந்த 3 மணல் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக, பஸ் மீது மோதின. இதனால் பஸ் மற்றும் லாரிகள் சேதம் அடைந்தன. பஸ்சிலிருந்த 50 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 5 பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லோக்சபாவிலிருந்து சமாஜ்வாடி வெளிநடப்பு
புதுடில்லி: கட்டாய மதமாற்றம் தொடர்பான விவாதத்தின் போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பாராட்டி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபாவிலிருந்து சமாஜ்வாடி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
மதமாற்ற விவாதம்: நாயுடு பதில்
புதுடில்லி: மதமாற்ற பிரச்னை குறித்த விவாதத்திற்கு பதில் அளித்து லோக்சபாவில் பேசிய பார்லி. விவகாரத்துறை அமைச்சர் வெங்கையநாயுடு கூறுகையில், 'மதமாற்றம் என்பதை இந்த அரசு எந்த வடிவத்திலும் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், எதிர்கட்சிகள், இப்பிரச்னையை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றன. மதமாற்றம் என்பது ஒரு மாநிலத்தில் நடப்பது மட்டுமல்ல. நாடு தழுவிய ஒரு பிரச்னையாகும். எனவே, இந்த பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை இந்த அவை உருவாக்க வேண்டும்,' என்றார்.
எமர்ஜென்சி குறித்து பிரணாப்
புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 'தி டிரமாடிக் டிகேட்: தி இந்திரா காந்தி இயர்ஸ்' என்ற புத்தகத்தில், எமர்ஜென்சி நிலை குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், சித்தார்த்த சங்கர் ரேயின் தூண்டுதலால் தான், இந்திரா எமர்ஜென்சியை கொண்டு வந்தார் என்று குறிப்பிட்டுள்ள பிரணாப், இதற்காக இந்திரா பெரும் விலையை பின்னர் கொடுக்க வேண்டியிருந்தது,' என்று கூறி உள்ளார்.
சனிப்பெயர்ச்சி: குச்சனூரில் ஏற்பாடு
சின்னமனூர்:தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோயில் உள்ளது. வரும் டிச.,16ல் சனி பெயர்ச்சி நடைபெற உள்ளது.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சனிப்பெயர்ச்சி விழா வரும் 16ல் நடக்கிறது. அன்று பகல் 2:43 மணிக்கு, துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். இதனால் தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.பக்தர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகிறது.
பாரதியார் பிறந்தநாள் விழா
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பாரதியாரின் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் பாரதியாரின் 133 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதியார் நினைவு அறக்கட்டளை,ரோட்டரி சங்கம், நேரு யுவகேந்திரா,செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், இந்த விழா நடந்தது. கோவில்பட்டி சப் கலெக்டர் கண்ணபிரான், பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியார் வேடமணிந்த பள்ளி மாணவர்களின் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பாரதியாரின் கோஷங்களை மாணவர்கள் எழுப்பி,தேசியக்கொடி ஏந்தி வந்தனர்.
மதமாற்றம்: லோக்சபாவில் விவாதம்
புதுடில்லி: ஆக்ராவில் நடந்த மதமாற்றம் குறித்து லோக்சபாவில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, விவாதம் நடந்தது. முதலில், காங்கிரஸ் தரப்பில், ஜோதிர்ஆதித்ய சிந்தியா பேசினார். தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். சமாஜ்வாடி கட்சியின் முலாயாம்சிங் பேசுகையில், 'நாட்டில் ஒருமைப்பாடு அவசியம். இதுபோன்ற ஒரு விவாதம் தேவைதானா என்பது குறித்த யோசிக்க வேண்டும்,' என்றார்.
இந்திய உறவிற்கு முன்னுரிமை-புடின்
புதுடில்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் செய்தியாளரிடம் ரஷ்ய அதிபர் புடின் பேசுகையில், 'வாஜ்பாய் காலத்தில் இருந்தே எனக்கு மோடியை தெரியும். இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷ்யா எப்போதுமே முன்னுரிமை கொடுக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சிறந்த முறையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு அதிகரித்துள்ளது. இந்தியாவுடன் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த ரஷ்யா விரும்புகிறது. புதிய வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே உருவாகி உள்ளன,' என்றார்.
ரஷ்யா இந்தியாவின் நட்பு நாடு-மோடி
புதுடில்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், செய்தியாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், 'புடின், வாஜ்பாய் ஆகியோர் கடந்த 2002ம் ஆண்டில் இந்திய ரஷ்ய கூட்டு சந்திப்பை ஏற்படுத்தினர். இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவின் அதிபர் புடின், இருநாட்டு உறவுகளுக்கு பாலம் அமைத்தவர் ஆவார். பல்வேறு இக்கட்டான நிலையில் ரஷ்யா இந்தியாவிற்கு உதவி செய்துள்ளது. ரஷ்யாவுடனான வௌியுறவுக் கொள்கை எந்த சூழ்நிலையிலும் மாறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புதுறையில் சிறந்த நட்பு நாடாக ரஷ்யா விளங்குகிறது. இந்தியா, ரஷ்யாவிடையே நட்புறவு சிறப்பாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. கூடங்குளத்தில், 2,3 அணு உலைகள் செயல்படுத்தப்படும். அதற்கு ஒத்துழைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது,' என்றார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: வாக்குமூலம் பதிவு
புதுடில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோரிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் கடந்த நான்கு தினங்களாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அவர்கள் அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கதுறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலசரக்கு கடையில் கொள்ளை
வாடிப்பட்டி: சமயநல்லூர் பஸ் நிலையம் எதிரே உள்ள பலசரக்கு கடையில், நேற்று நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள், தகர கூரையை பெயர்த்து, உள்ளே இறங்கி, கல்லாவில் இருந்த 3.50 லட்சம் ரூபாயை கொள்ளையடி்ததுச் சென்றுள்ளனர். சமயநல்லூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லிங்கா ரிலீசுக்கு தொடரும் சிக்கல்
மதுரை: லிங்கா படத்திற்கு தடை இல்லை என, ஐகோர்ட் மதுரை கிளை கூறி உள்ளது. இது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கோர்ட் கிளை, 'இந்த வழக்கு தொடர்பாக, மனுதாரர் 4 வாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும். மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், பாதுகாப்பிற்காக 10 கோடி ரூபாய் தரும் வகையில், 10 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை லிங்கா படக்குழுவினர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதில், 5 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 5 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதமாகவும் அளிக்க வேண்டும். நாளை பகல் 12 மணிக்குள் இத்தொகை செலுத்தப்பட்டுவிட்டால், லிங்கா படத்தை வௌியிடுவதற்கு தடை இல்லை,' என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மின்ரயில் சோதனை ஓட்டம்
தூத்துக்குடி: விருதுநகர்-நெல்லை-தூத்துக்குடி ரயில் மார்க்கம் தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது.இதில், இன்று பாதுகாப்பு சோதனை ஓட்டம் நடந்தது. சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார், 'மின்மயமாக்கல் திருப்தி அளிக்கிறது. ஒரு சில குறைகள் இருந்தாலும் அவை நிவர்த்தி செய்யப்படும். ஒரு வாரத்தில் இந்த சோதனை ஓட்டம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்,' என்றார்.
காஷ்மீரில் பரிக்கர் ஆய்வு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பரிகர், பாதுகாப்பு குறித்த அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, பாக்., ஆதரவுடன் தாக்குதல் நடந்துள்ளது,' என்றார். முன்னதாக, பயங்கரவாதிகளின் தாக்குதலின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
கோவை மாநகராட்சி பள்ளியில் மோதல்
கோவை: கோவை மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் நடந்தது. இதில் பள்ளியில் பொருட்கள் நொறுக்கப்பட்டன. ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினர் மீது அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.
நெல்லை: தி.மு.க., தேர்தல் ரத்து
திருநெல்வேலி: நெல்லை நகர பகுதி கிளை செயலாளர் பதவிக்கான தேர்தல் இன்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில், மாவட்ட செயலாளரின் எதிர் கோஷ்டியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இன்று நடக்க இருந்த தேர்தலை ரத்து செய்துள்ளதாக கட்சியின் தேர்தல் அதிகாரி நரேஷ் அறிவித்துள்ளார்.
கிரானைட் வழக்கு ஒத்திவைப்பு
மேலூர்: பட்டா இடங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்குவது தொடர்பாக, மதுரை மாவட்ட கலெக்டர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வந்தது. இந்த விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதி மகேந்திரபூபதி ஒத்திவைத்தார்.
பலசரக்கு கடையில் கொள்ளை
வாடிப்பட்டி: சமயநல்லூர் பஸ் நிலையம் எதிரே உள்ள பலசரக்கு கடையில், நேற்று நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள், தகர கூரையை பெயர்த்து, உள்ளே இறங்கி, கல்லாவில் இருந்த 3.50 லட்சம் ரூபாயை கொள்ளையடி்ததுச் சென்றுள்ளனர். சமயநல்லூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதமாற்றம்: வெங்கையநாயுடு விளக்கம்
புதுடில்லி: மதமாற்ற பிரச்னை குறித்து லோக்சபாவில் விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் இந்த விஷயத்தில் பதில் அளிக்க கோரியும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்து பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையநாயுடு, 'மதமாற்ற பிரச்னை குறித்து விவாதிக்க, எதிர்கட்சிகளை காட்டிலும், நாங்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளோம். இது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்,' என்றார். இப்பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் பேசிய அமைச்சர் நக்வி, 'எங்களுக்கும் மதமாற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதிர்கட்சிகள் வேண்டும் என்றே எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றன,' என்றார்.
மதமாற்ற பிரச்னை: லோக்சபாவில் அமளி
புதுடில்லி: மதமாற்றம் நடந்தது தொடர்பாக ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டன. இப்பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில், லோக்சபாவிலும் இன்று இப்பிரச்னை எழுந்தது. அவையை நடத்தவிடாமல், எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால், அவை தொடங்கியதில் இருந்து அமளி நிலவியது.
ஜெ., மனு: சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
புதுடில்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனுவிற்கான ஆவணங்கள் பெங்களூரு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், முன்கூட்டியே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முன்கூட்டியே விசாரிக்க முடியாது என கூறி, ஜெயலலிதாவின் கோரிக்கையை நிராகரித்தனர்.
பதான் வழக்கை முடிக்கிறது சி.பி.ஐ.,
புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலம், பதானில் சகோதரிகள் இருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. விசாரணையின் முடிவில், சகோதரிகள் இருவரும் கற்பழிக்கப்படவில்லை என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கை முடிக்க சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.
கேரள அமைச்சர் மீது வழக்கு பதிவு
திருவனந்தபுரம்: பார் உரிமம் தொடர்பான மோசடி புகாரில், கேரள நிதி அமைச்சர் கே.எம்.மணி மீது, கேரள அரசின் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலூர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மேலூர்: மேலூர் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி, படித்து வருகின்றனர். இந்த விடுதியில் குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படைவசதிகள் முறையாக செய்யப்படவில்லை என கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முன் அவர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.
மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்: கருணாநிதி
சென்னை: சட்ட பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தால், தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்ப்பார்கள் என்பதால், அவர்களை எல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி கூண்டோடு வெளியேற்றி விட்டார்கள் என்பதும் புரிகிறது. அதனால் என்ன? சட்டமன்றம் இல்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கிறது மகத்தான மக்கள் மன்றம். மக்கள் மன்றத்தில் நமது கருத்துகளை மடை திறந்த வெள்ளமென மனந்திறந்து எடுத்துரைப்போம். இவ்வாறு தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சர்க்கரைஆலை தொழிலாளர்கள் ஸ்டிரைக்
மயிலாடுதுறை : நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு கிராமத்தில் உள்ள கிராம கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரசு ஊதிய முறையை அமல்படுத்தக்கோரி 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜூரங்கன் குழுவின் அறிக்கையின்படி 1.4.2008 தேதியிட்டு ஊதிய தொகை வழங்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சர்க்கரை ஆலை வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
2014ல் டுவிட்டர் ஹீரோக்கள்:ரஜினி,மோடி
புதுடில்லி : 2014ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் முன்னணியில் உள்ளனர். நவம்பர் 13ம் தேதி இலங்கை உடனான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் அடித்ததற்காக ரோஹித் சர்மாவும், ஏப்ரல் 22ம் தேதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு லோக்சபா தேர்தலுக்காக மேற்கொண்ட பிரசாரங்களால் பிரதமர் மோடியும், மே 4ம் தேதி டுவிட்டரில் இணைந்த இரண்டு நாட்களிலேயே 200,000 க்கும் அதிகமான ரசிகர்களை கவர்ந்ததன் மூலம் ரஜினிகாந்தும் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 27 பேர் விடுவிப்பு
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்தனர். அவர்கள் சென்ற 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காலை 9 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜூன் 21 உலக யோகா தினம்:ஐ.நா., அறிவிப்பு
புதுடில்லி : ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட உள்ளதாக ஐ.நா.,விற்கான இந்திய தூதர் அசோகே கே முகர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் யோகா தினத்தை பிற சர்வதேச தினங்களைப் போன்று கொண்டாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். செப்டம்பர் மாதம் ஐ.நா., பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்திய யோகாவை உலக நாடுகளும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார். மோடியின் இந்த கோரிக்கைக்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மோடியின் இந்த கோரிக்கையை ஏற்ற ஐ.நா., ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கப்பல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி
புதுடில்லி: இந்தியாவில் பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு உபயோகத்திற்காக பயன்படும் வகையில் தயாரி்க்கப்பட்ட கப்பல் ஒன்று முதன்முறையாக வெளிநாட்டிற்கு வரும் 20-ம் தேதி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கப்பல் மொரிசியஸ் நாட்டிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இலங்கைக்கு தேவைப்படும் கப்பல்களை தயாரித்து அளிக்கும் பணியை கோவா மாநிலத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சர்சைக்குள்ளான அமைச்சரின் பயணம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் நிதியமைச்சரின் திருப்பதி பயணம் அம் மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசில் நிதியமைச்சராக இருந்து வருபவர் சுதிர் மங்குன்திவார். இவர் நாக்பூரில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு விமானம் மூலம் வார இறுதி நாட்களி்ல் பயணம் செய்ததாக கூறப்படு்கிறது. இது குறித்து செய்தி சேனல்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டது. அமைச்சரின் பயணம் குறித்து தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் அமைச்சரின் பயணத்திற்கான சிறப்பு நிதி எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பினார்.இது குறித்து பதில்அளித்த மாநில முதல்வர் தேவேந்திரபட்நாவிஸ் அமைச்சரின் விமான கட்டணம் பா.ஜ., சார்பில்வழங்கப்பட்டது எனதெரிவித்தார். முதல்வரின் பதிலில் திருப்தியடையாத எதிர்கட்சிகள் மாநிலம் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஆடம்பர வாழ்க்கையி்ல் ஈடுபட்டு கொண்டிருப்பதாக குற்றம் சாட்டின.
புதுச்சேரியில் தேசிய நூலக மாநாடு
புதுச்சேரி: 17-வது தேசிய நூலக மாநாட்டை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புதுச்சேரியி்ல்துவக்கி வைத்தார். புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், மற்றும் டில்லி டெல்நெட் நிறுவனம் ஆகியவை இணைந்து இம் மாநாட்டை நடத்துகிறது. மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரி்க்கா, பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சிறப்பு பொருளாதார மண்டலம் தமிழகத்திற்கு முதலிடம்
சென்னை: நாடு முழுவதும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக அதிகாரி ஏ.கே.சவுத்ரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 36 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனைத்து வசதிகளுடன் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
பாக்., உளவாளிகள் 33 பேர் கைது : அமைச்சர்
புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 33 பாக்., உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள தாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரி பாய் பார்த்திபாய் சவுதரி பார்லிமென்ட்டில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையில், ஐ.எஸ்.ஐ.,உளவு அமைப்பு உதவியுடன் உளவு பார்த்ததாக சுமார் 33 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் பாகிஸ்தானிற்காக உளவு வேலை பார்த்ததாக ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 1990-முதல் 2013 வரை 21ஆயிரம்
புதுடில்லி: கடந்த 23 ஆண்டுகளில் காஷ்மீரில் இதுவரை 21 ஆயிரம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பார்லி.யில் கூறினார்.
காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் அடிக்கடி ஊடுருவி தாக்குதல் நடத்தும் சம்பவம் அன்றாடமாகி வருகிறது. இதற்கு இந்திய ஜவான்களும் பதிலடி கொடுத்து அவர்களை என்கவுன்டர் மூலம் சுட்டுதள்ளி வருகின்றனர். இந்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சவுத்ரி அளித்த பதில் வருமாறு,
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு டிசம்பர் காலம்வரையிலான காலங்களில், பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் இதுவரை 21 ஆயிரத்து 562 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது போன்ற என்கவுன்டர்களில் 16 ஆயிரத்து 757 அப்பாவி மக்களும், 1425 போலீசார் பலியாகியுள்ளனர்.
பலியான அப்பாவி மக்கள், போலீசாரின் உறவினர்களுக்கு தேவையான நிவாரண நிதியை அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வில்லங்க சான்று கட்டணம் உயர்வு
சென்னை: தமிழகம் முழுதுவதும் உள்ள பதிவுத்துறை வில்லங்க சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம் மனு மற்றும் தேடுதல் கட்டணம் ரூ 15லிருந்து ரூ30 எனவும் ஆண்டுக்கான கட்டணம் ரூ.5லிருந்து ரூ.10 எனவும் உயர்த்தியுள்ளது. மேலும் 87-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் கம்ப்யூட்டர் வழி கட்டணங்களையும் அரசு உயர்த்தியுள்ளது. இதுவரையில் தேடுதல் கட்டணம் ரூ.140 மற்றும் ரூ.15 என பெறப்பட்டது. தற்போது ரூ.280 மற்றும் ரூ.30 என அதிகரித்துள்ளது. தொடர்ந்து வழி காட்டு மதிப்பையும் அரசு உயர்த்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அலுவலகங்களி்ல் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் அரசு வழி காட்டி மதிப்பு மற்றும் உச்ச மதிப்பு ஆகியவற்றை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இவையனைத்தும் இம் மாத இறுதி்க்குள் இறுதி செய்யப்பட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல்அமுல் படுத்தப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.