குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

10.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ராகுல் புகாருக்கு பா.ஜ., பதிலடி

புதுடில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மோடி குறித்து பேசுகையில், இப்போதைய பிரதமர் அனைத்து அதிகாரங்களையும் தன்கையி்ல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பேசுகையில், 'காங்கிரஸ் ஆட்சியின் போது அனைத்து அதிகாரங்களும் இவர்களிடம் தான் (சோனியா, ராகுல்) இருந்தது. பிரதமரிடம் எந்த அதிகாரமும் இருந்ததில்லை,' என்றார்.

 

நரிக்குறவர் கொலையில் 3 பேருக்கு குண்டர் சட்டம்

திருநெல்வேலி: நெல்லையில் நரிக்குறவ வாலிபரை கொலை செய்த மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி, பேட்டையில் நரிக்குறவர்கள் குழுவாக வசிக்கின்றனர். கடந்த அக்டோபர் 6ம் தேதி, அங்கு வந்த சிலர், கார்த்திக் 21, என்ற நரிக்குறவரிடம் நாய்க்குட்டியை விற்பனைக்கு கேட்டனர். விலை குறைத்து கேட்ட தகராறில், மைலப்புரத்தை சேர்ந்த மூன்று பேர், கார்த்திக்கை வெட்டிக் கொலை செய்தனர். கொலையாளிகளான, மைலப்புரத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் கண்ணன் 23, மாடசாமி மகன் அருண்23, சொர்ணவேல் மகன் கண்ணன் 19 ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு சிறையில் அடைக்க கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார்.

 

மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் காட்டேரி என்ற இடத்தில் இன்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவு காரணமாக அவ்வழியே சென்ற கார் பலத்த சேதமடைந்தது. இதனிடையே, கனமழை காரணமாக குன்னூரில் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

 

வெற்று வாக்குறுதிகளால் வளர்ச்சி வந்து விடாது: சோனியா

ஷாகூன்ஸ்: வெற்று வாக்குறுதிகளால் மட்டுமே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சி வந்து விடாது என காங்கிரஸ் தலைவர் சோனியா ஆவேசமாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, ஷாகூன்ஸ் நகரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வருகிறார். அவ்வாறு வரும் போது, வாக்குறுதிகள் அடங்கிய மிகப்பெரிய பட்டியலையும் அவர் வெளியிடுகிறார். ஆனால் வெற்று வாக்குறுதிகளால் மட்டுமே ஜம்மு காஷ்மீர் மாநிலம் வளர்ச்சியடைந்து விடாது. ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சி தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலை தெளிவாக உள்ளது. கடுமையான உழைப்பின் காரணமாவே மாநிலத்தில் வளர்ச்சியும், சமூக ஏற்றமும் உருவாகுமே தவிர, வெற்று வாக்குறுதிகளால் அல்ல. இவ்வாறு சோனியா பேசினார்.

 

டிச.18-ல் சர்வதேச திரைப்பட விழா

சென்னை: சென்னையில் 12-வது சர்வதேச திரைப்பட விழா வரும் 18-ம் தேதி துவங்கி 25-ம் தேதி வரை நடக்கிறது. விழா அமைப்பாளர் தங்கராஜ் கூறுகையில், 7 தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் சிறந்த படங்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்றார்.

 

102 வயது பாட்டிக்கு இதய ஆபரேஷன்

புதுடில்லி: டில்லியில் 102 வயது பாட்டிக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பானிபட்டைச் சேர்ந்த 102 வயதான மாயா தேவி என்ற அந்த பாட்டி, நெஞ்சு வலி காரணமாக டில்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, பாட்டி தற்போது நலமாக உள்ளார்.

 

வில்லங்க சான்று கட்டணம் ஆண்டுக்கு ரூ.5 அதிகரிப்பு

மேட்டூர்: சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றுக்கான கட்டணம் ஆண்டுக்கு, 5 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக வீடு, நிலம் வாங்க விரும்புபவர், சம்பந்தபட்ட நிலத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகத்தில் பணம் செலுத்தி, வில்லங்க சான்று பெறுவது வழக்கம். இதற்காக, ஒரு ஆண்டுக்கு, 5 ரூபாய், மனுவுக்கு, ஒரு ரூபாய், தேடுதல் கட்டணம், 10 ரூபாய், கம்யூட்டர் பிரிண்ட் கட்டணம், 100 ரூபாய் என, 116 ரூபாய் வசூலிக்கப்படும். இதில், 5 ரூபாயாக இருந்த ஒரு ஆண்டுக்கான கட்டணம் இன்று முதல், 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை, 10 ஆண்டுக்கான வில்லங்க சான்று பெற இதுவரை, 50 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள், இனி, 100 ரூபாயும், அத்துடன் வழக்கம் போல மனு, தேடுதல் கட்டணம், கணினி பிரிண்ட் கட்டணம், 111 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும்.

 

எனது போராட்டம் ஓயாது: மலாலா

ஆஸ்லோ: உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்லும் வரை, தனது போராட்டம் ஓயாது என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தெரிவித்தார். நோபல் பரிசு வழங்கும் விழாவில் பேசிய அவர், "நான் ஒரு தனி பெண்ணாக இங்கு காட்சியளிக்கலாம். ஆனால் எனது குரல் 66 மில்லியன் பெண் குழந்தைகளின் குரலை ஒலிக்கின்றன. சில நேரங்களில் மக்கள் கேட்கிறார்கள் ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று? ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், அவர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்பது தான். என் முன்பாக இரண்டு தேர்வு உள்ளது. ஒன்று அமைதி. மற்றொன்று பேச்சு. நான் பேசுவதை தேர்ந்தெடுத்துள்ளேன். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ஏராளமான குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. ஏராளமான குழந்தைகள் வறுமையின் காரணமாக கல்வி கற்க இயலாமல் போகிறது. எனது கிராமத்தில் இதுவரை பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளி இல்லை. எனது குறிக்கோள் எனது சகோதரிகளும் கல்வியறிவு பெற வேண்டும் என்பதே. இங்கிருந்து தான் நான் துவங்க வேண்டும். உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வியறிவு பெறும் வரை, எனது போராட்டம் ஓயாது. இவ்வாறு மலாலா பேசினார்.

 

அமைதியின் பிரதிநிதி நான்: சத்யார்த்தி

ஆஸ்லோ: அமைதியின் பிரதிநிதியாக தான் இந்த விழாவில் பங்கு கொள்ள வந்துள்ளதாக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். நோபல் பரிசு வழங்கும் விழாவில் பேசிய அவர், "இந்த விழாவில் உரையாற்றுமாறு விருது வழங்கும் குழுவினர் என்னை கேட்டுக்கொண்டனர். ஆனால் அவ்வாறு என்னால் செய்ய முடியாது. ஏனெனில் அமைதியின் பிரதிநிதியாகவும், அப்பாவிகளின் அழுகையின் பிரதிநிதியாகவும், கண்ணுக்கு புலப்படாதவர்களின் பிரதிநிதியாகவும் நான் இங்கு வந்துள்ளேன். நமது குழந்தைகளின் கனவுகளையும், அவர்களது கருத்தையும் பகிர்ந்து கொள்பவராக இங்கு வந்துள்ளேன்". இவ்வாறு சத்யார்த்தி பேசினார்.

 

சத்யார்த்தி, மலாலாவுக்கு நோபல் பரிசு

ஆஸ்லோ: இவ்வாண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவைச் சேர்ந்த, கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா ஆகியோருக்கு இன்று வழங்கப்பட்டது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, விருது பெறுபவர்கள் குறித்த தகவல்கள் விரிவாக கூறப்பட்டன. பாகிஸ்தானில் குழந்தைகளின் கல்விக்காக போராடியதற்காக மலாலாவுக்கும், இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களை மீட்டு கல்வி அளித்து வருவதற்காக கைலாஷ் சத்யார்த்திக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு 1.4 மில்லியன் டாலர் பரிசுத்தொகை கொண்டது. இந்த தொகை, குழந்தைகளின் நலனுக்காகவும், கல்விக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது. விழாவின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

 

பாலஸ்தீன அமைச்சர் பலி

காசா சி்ட்டி: இஸ்ரேலிய வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீன அமைச்சர் ஜியாத் அபி பலியானார். வெஸ்ட்பேங்க், துர்முசியா கிராமத்தில் நடந்த தாக்குதலில் அமைச்சர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பி.சி.சி.ஐ., தேர்தல் ஒத்திவைப்பு

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு விசாரணை முடியாததால், இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டின் தேர்தலை ஒத்திவைக்க, சுப்ரீம் கோர்ட் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு, 35 பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் மீதான விசாரணை தற்போது நடக்கிறது. இதில், பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன் ஆதாயம் தரும் வகையில் இரு பதவிகள் வகித்தது குறித்து சுப்ரீம் கோர்ட், கடும் கருத்துக்களை, தெரிவித்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை அணியின் நிர்வாகியும், சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது, சீனிவாசனின் தலையீடு இருக்கக் கூடாது என தெரிவித்தது. தவிர, சென்னை அணியின் உரிமையாளரா அல்லது மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவரா என்பது குறித்து சீனிவாசன் தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கு இன்று சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஏ.கே.பட்னாயக் அடங்கிய சிறப்பு 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாசன் தரப்பில் சில உறுதிமொழிகள் நீதிபதிகள் முன் வைக்கப்பட்டது. இதில், பி.சி.சி.ஐ., தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மீண்டும் தலைவராக பொறுப்பேற்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளிக்கும் பட்சத்தில், ஐ.பி.எல்., ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கமாட்டார். சூதாட்ட வழக்கு முடியும் வரை ஐ.பி.எல்.,லில் இருந்து சீனிவாசன் ஒதுங்கி இருப்பார், என தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணையை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. தவிர, விசாரணை நடந்து கொண்டிருப்பதால், இம்மாதம் 17ம் தேதி நடக்கவிருந்த பி.சி.சி.ஐ., தேர்தல், அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

மோடி மீது காங்., புகார்

புதுடில்லி : ஸ்ரீநகர் தேர்தல் பிரசாத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி, ராணுவ விவகாரத்தை தனது தேர்தல் பிரசாரத்தில் பேசியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளனர்.

 

அரசு முடிவு:வழக்கறிஞர்கள் வரவேற்பு

புதுடில்லி : தற்கொலை முயற்சியை தண்டனை சட்டத்தில் இருந்து நீக்கும் மத்திய அரசின் முடிவிற்கு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த முடிவு வரவேற்கதக்கது எனவும், இது நீண்ட நாளைய கோரிக்கை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்தியா மீது முஷாரப் குற்றச்சாட்டு

கராச்சி : கார்கில் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. வங்கதேசம் உருவாக்கப்பட்டதில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவுடனான நட்புறவு என்பது இரு நாடுகளும் முன்வந்தால் மட்டுமே சாத்தியமாகும். நட்பிற்காக இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்கும். இந்தியாவுடனான நட்புறவை நான் தான் விரும்பவில்லை என மக்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் நான் ஆட்சி பொறுப்பில் இருந்த போது காஷ்மீர் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தியா தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால் நாங்களும் அந்த வகையிலேயே எதிர்கொள்வோம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.

 

தற்கொலை முயற்சி குற்றமல்ல : அரசு

புதுடில்லி : தற்கொலை முயற்சியை குற்றமாக கருதும் சட்டப்பிரிவு 309ஐ நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 18 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களும் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 

பலாத்கார வழக்கு:முதியவருக்கு 10 ஆண்டு சிறை

ஊட்டி : 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீலகிரி மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

 

பள்ளி சுவர் இடிந்து மாணவி பலி

ஒசூர் : ஓசூர் தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3ம் வகுப்பு மாணவி ரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

கஞ்சா பையுடன் நைஜீரியர் கைது

திருப்பூர் :திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 5 கிலோ கஞ்சா பையுடன் சுற்றித் திரிந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

மோடி மீத ராகுல் தாக்கு

ராஞ்சி : ஜார்கண்டில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் மோடி அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துக் கொள்ள நினைப்பதாகவும், ஜனநாயக விதிகளை சிதைத்து வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

 

காங்.,செய்ததை எவராலும் செய்ய முடியாது

ஜம்மு : காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, கடந்த 6 மாதங்களில் நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாரபட்சம் பாராமல் காங்கிரஸ் அனைத்து தரப்பினரின் வளர்ச்சியையும் உறுதி செய்தது. கனவுகளை வெளிப்படுத்த அனைவராலும் முடியும். ஆனால் கடந்த காலங்களில் காங்கிரஸ் நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியதை எவராலும் செய்து விட முடியாது என தெரிவித்துள்ளார்.

 

வருத்தம் தெரிவித்தார் கல்யாண்

புதுடில்லி: பிரதமர் நரேந்திரமோடி குறித்த தனது பேச்சு, மற்றவர்களை புண்படுத்தியிருக்குமானால், தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக திரிணாமூல் காங்., எம்.பி., கல்யாண் இன்று லோக்சபாவில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் நிலவி வந்த இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.

 

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை : இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

 

டி.எம்.சி., எம்.பி., மீது கண்டன தீர்மானம்

துடில்லி: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.ல,யான கல்யாண் பானர்ஜி, லோக்சபாவில், பிரதமர் நரேந்திரமோடியை ஒருமையில் அழைத்து பேசியதால், பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றைய லோக்சபா கூட்டத்தில், இது குறித்த கண்டன தீர்மானத்தை பாஜ எம்.பி. எஸ்.எஸ். அலுவாலியா கொண்டு வந்தார்.

 

டில்லி மாஜி எம்.எல்.ஏ., தர்ணா

புதுடில்லி : ஆம் ஆத்மியின் டில்லி முன்னாள் எம்.எல்.ஏ., ஹீனா ஆனந்த், தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆம் ஆத்மி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். டில்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு கட்சி சீட் வழங்காததால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்.

 

ரசாக் தூக்கு தண்டனை: சுப்ரீம்கோர்ட் தடை

புதுடில்லி : 1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி அப்துல் ரசாக் மெமோனின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தனக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக அப்துல் ரசாக் தாக்கல் செய்த. மறு சீராய்வு மனுவிற்கு பதிலளிக்க மகாராஷ்டிர சிறப்பு படை மற்றும் சிபிஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

ஓ.பி.எஸ்.படத்துடன் வந்த திமுகவினர்

ஆத்தூர்: ஆத்தூர் நகர்மன்ற கூட்டம் தலைவர் உமாராணி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு வந்த தி.மு.க., கவுன்சிலர்கள், கையோடு முதல்வர் பன்னீர்செல்வம் படத்தை எடுத்து வந்தனர். பின்னர், கூட்ட அரங்கில் இருந்த ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு பன்னீர்செல்வத்தி்ன் படத்தை வைக்க வேண்டும் என்று கூறினர். இதற்கு தே.மு.தி.க.,வினரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தலைவர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் அதை ஏற்கவில்லை. இதனால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது.

 

மோடிக்கு கறுப்பு கொடி: வைகோ

மதுரை: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, 'இலங்கையில், தமிழர்கள் கட்டிய 1500 கோவில்களை இடித்து தள்ளியவர் ராஜபக்சே. அவர் இப்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி தான் காரணம். எனவே, பிரதமர் மோடி இனி தமிழகம் வரும்போதெல்லாம் நாங்கள் கறுப்பு கொடி காட்டுவோம்,' என்றார்.

 

தலைவர் பதவி வேண்டும்:சீனிவாசன் அடம்

புதுடில்லி : ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று ஆஜராகி பதிலளித்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன், பிசிசிஐ.,யின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தால், இவ்வழக்கில் நான் குற்றமற்றவன் என அறிவிக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடர்பான எந்த விவகாரங்களிலும் தலையிடாமல் விலகி இருக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை : சிலிண்டருக்கான மானியம் வழங்க ஆதார் அட்டை, வங்கி கணக்கை கட்டாயமாக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் மீது டிசம்பர் 22ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2013ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும், ஜனவரி மாதம் சென்னை ஐகோர்ட்டும் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பின

திருநெல்வேலி: தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி, வழிகின்றன. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.2 (143) அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 151 (156) அடியாகவும் உள்ளது. இரு அணைகளுக்கும், வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது. அணைகள் நிரம்பிவிட்டதால், அணைக்கு வரும் நீர் முழுதுமாக வௌியேற்றப்படுகிறது. இதனால், தாமிரபரணியில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், ஆற்றின் கரையோரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

சத்யாத்ரிக்கு பா.ஜ., வாழ்த்து

புதுடில்லி : அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியாவின் கைலாஷ் சத்யாத்ரிக்கு பா.ஜ.,வின் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கைலாஷ் சத்யாத்ரி இத்தனை ஆண்டுகள் ஆற்றிய சேவைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் தான் இந்த நோபல் பரிசு என தெரிவித்துள்ளார்.

 

சத்யாத்ரி, மலாலாவிற்கு இன்று நோபல் பரிசு

நியூயார்க் : கைலாஷ் சத்யாத்ரி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோருக்கு இன்று நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. இவர்கள் இருவரும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

 

நைட்டி அணிந்து வெளியே வந்தால் அபராதம்

மும்பை : மகாராஜ்டிராவின் நேவி மும்பை அருகே உள்ள கோதிவாளி கிராமத்தில், நைட்டி அல்லது மேக்ஸி போன்ற இரவு நேரடி உடைகளை அணிந்து பெண்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி வரும் பெண்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த புதிய கட்டுப்பாட்டை அந்த கிராமத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு வகுத்துள்ளது. பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாட்டை எதிர்த்து பலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

உலகின் ஆபத்தான நாடு பாகிஸ்தான்

வாஷிங்டன் : உலகின் மிக ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தான் 8வது இடத்தில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் முதலில் இடத்தில் ஈராக் உள்ளது. ஆபத்தான நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தெற்காசிய நாடுகள் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஆகும். கடந்த 30 நாட்களில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள், கொலைகள், குற்றச்சம்பங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

இன்சூரன்ஸ்.,ல் எப்.டி.ஐ.,:இன்று அறிக்கை தாக்கல்

புதுடில்லி : இன்சூரன்ஸ் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பான அறிக்கையை பார்லிமென்ட் குழு இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய உள்ளது.

 

அமெரிக்க தூதராகும் முதல் இந்தியர்

நியூயார்க் : இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தூதராக நியமிக்கப்படும் முதல் அமெரிக்க வாழ் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கார் மோதி தந்தை-மகள் பலி

எட்டயபுரம் : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் கனகவேல்(68). இவர் தனது மகள் கவிதா(38) உடன் மொப்பட்டில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கனகவேலும் அவரது மகள் கவிதாவும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மதிமுக.,வினர் 500 பேர் கைது

திருத்தணி : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் திருப்பதி வருகையை கண்டித்து, திருத்தணி அருகே தடுக்கப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட மதிமுக.,வினர் 500 பேரை போலீசார் கைதுள்ளனர். ராஜபக்ஷேவின் உருவபொம்மையையும் எரித்து மதிமுக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதிமுக., சாலை மறியல் போராட்டம் காரணமாக திருப்பதி-சென்னை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

கோவை : பெண் படுகொலை;கணவன் தலைமறைவு

கோவை: கோவை ஆவாரம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நவீன்பிரசாத் (27) இவரது மனைவி சி்ந்துபிரியா(25). இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஐந்து மாதங்களான நிலையில் சி்ந்து பைரவி கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை சிந்துபைரவி தன்னுடைய வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.அதே நேரத்தில் கணவர் நவீன்பிரசாத் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

பெங்களூரு : டாக்ஸி டிரைவர்களுக்கு போலீசார் காலக்கெடு

பெங்களூரு: பெங்களூரு நகரில் டாக்ஸி ஒட்டிவரும் டிரைவர்கள் தங்கள் பற்றிய குறிப்புகளை வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறியதாவது: புதுடில்லியில் தனியார் வாகன ஒட்டுநர் இளம்பெண் ஒருவரிடம் நடத்திய பாலியல் வன் கொடுமையை அடுத்து பெங்களூருவில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகரில் செயல்பட்டு வரும் அனைத்து வாடகை கார் டிரைவர்களும் தங்களைபற்றிய குறிப்புகளை போலீசார் வசம் தெரிவிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதிவரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு 25 சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார்.

 

திருப்பதி: தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திரா போலீசார் தாக்குதல்

திருப்பதி: திருப்பதியில் தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திரா போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க.,, சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக தமிழக பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் திருப்பதி மற்றும் திருமலையில் குவிந்துள்ளனர். இந்நிலையில் திருமலையில் அதிபர் ராஜபக்ஷே இன்று அதிகால 2.30 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற தமிழக பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தியதுடன் பத்திரிகையாளர்களையும் கைது செய்துள்ளனர்.

 

பூட்டோ கொலை தீவிரவாதி பலி: பாக்.,போலீசார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானி்ன் முன்னாள்பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் தீவிரவாத இயக்கம் செயல்பட்டுள்ளது. என பாக் போலீசார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி அருகே தீவிரவாத இயக்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இத்தாக்குதலில் பெனாசிர் படுகொலைக்கு காரணமான தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கியமானவர்களில் ஒருவனான பர்தூஸ் கான் கொல்லப்பட்டான். இது குறித்து பாக் போலீஸ் அதிகாரியான உஸ்மான் பஜ்வா கூறியதாவது. கடந்த 2007-ம் ஆண்டு ராவல் பிண்டியில் அக்டோபர் மாதத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பொது மக்கள் 139 பேர்கள் பலியாயினர். இச்சம்பவம் நிகழ்ந்த இரண்டு மாதத்திற்கு பின்னர் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ குண்டு வெடிப்பில் பலியானார்.இச்சம்பவத்திற்கு காரணமான பர்தூஸ்கான் தற்போது நடைபெற்ற தாக்குதலில் பலியானான். இவன் தாலிபான் இயக்கத்தின் முக்கியமானவர்களில் ஒருவனாக திகழ்ந்தவன் என்றும் போலீஸ் அதிகாரிதெரிவித்துள்ளார்.

 

மோசடி புகாரில் சிக்கிய நீலம்பூர் ஊராட்சித்தலைவர் டிஸ்மிஸ்: கோவை கலெக்டர் உத்தரவு

கோவை : கோவை நீலம்பூர் ஊராட்சித் தலைவரை 'டிஸ்மிஸ்' செய்து, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.நீலம்பூர் ஊராட்சிக்கு உட்பட்டகிராமங்களில், நடப்பாண்டில் குடிநீர் குழாய் பதித்தது, சாக்கடை வடிகால் அமைத்தது, குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள், ஊராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன.இப்பணிகளை மேற்கொண்டதில், அரசு மற்றும் ஊராட்சி விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் மீறியதால், ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஊராட்சி அலுவலகத்தில் இருமுறை தணிக்கை நடத்தப்பட்டது. தணிக்கை அறிக்கையில், ஊராட்சித் தலைவர் லதா முறைகேட்டில்ஈடுபட்டதும், சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காமல், போலி ரசீதுகள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, 1994ம் ஆண்டு,தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு எண் 205ன் படி, ஊராட்சித் தலைவர் லதாவை, தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.பதவி நீக்க உத்தரவிட்டதை உறுதி செய்து, தமிழ்நாடு அரசின் அரசிதழில், எண் 258ல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 'டிஸ்மிஸ்'உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 

பா.ம.க., பிரமுகர் வீடு உட்பட ஆறு இடங்களில் வருமான வரி சோதனை

ஓசூர் : ஓசூரில், பா.ம.க., பிரமுகர் உட்பட, ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் முக்கிய தொழில் அதிபர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொழில் அதிபர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில்லை என்றும், வீட்டுமனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் நபர்கள், அரசை ஏமாற்றும் நோக்கில், முறையாக ஆவணங்களை பின்பற்றுவதில்லை என்றும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.இதையடுத்து, வருமான வரித்துறை ஆணையர் அருளப்பன் உத்தரவின் பேரில், மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், 20க்கும் மேற்பட்டோர், ஓசூரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகளில், நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.ஓசூர் அரசனட்டியை சேர்ந்த, பா.ம.க., பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான முனிராஜின் வீட்டிலும், மோரனப்பள்ளில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவில் வசித்து வரும், குருநாதன் என்ற ரியல் எஸ்டேட் அதிபரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.ஓசூரில் மொத்தம், ஆறு இடங்களில், காலை, 8 மணி முதல் இரவு, 8 மணி வரை நடந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், கைப்பற்ற ஆவணங்களின் மதிப்பு என்ன என்பது குறித்து விளக்கம் கொடுக்க, வருவானவரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

 

ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

மதுரை:சிலம்பு, பழநி ரயில்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை மற்றும் ஒரு முன்பதிவு சேர் கார் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. சென்னையில் புறப்படும் சிலம்பு ரயிலில் 2015 பிப்., 28 வரையும், மானாமதுரையில் புறப்படும் சிலம்பு ரயிலில் 2015 மார்ச் 1 வரையும், சென்னை சென்ட்ரலில் புறப்படும் பழநி ரயிலில் 2015 பிப்., 28 வரையும், பழநியில் புறப்படும் ரயிலில் 2015 மார்ச் 1 வரையும் இப்பெட்டிகள் இணைக்கப்படும்.

 

3 மாநிலங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி! உளவுத்துறை எச்சரிக்கை

புதுடில்லி: சிறையிலிருந்து தப்பிச்சென்ற சிமி பயங்கரவாதிகள், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.