குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

09.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

டைம் பத்திரிகையின் சிறந்த நபர் மோடி

நியூயார்க்:அமெரிக்காவின், 'டைம்' பத்திரிகையின், இந்த ஆண்டின் நபராக, பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இருந்து, 50 பிரபலங்கள் இந்த போட்டியில் பங்கேற்றதில், 50 லட்சம் பேர் ஓட்டளித்த நிலையில், அதிகபட்சமாக, 16 சதவீத ஓட்டுகளைப் பெற்று, இந்த ஆண்டின் நபராக மோடி தேர்வாகியுள்ளார்.இந்தப் போட்டியில், அமெரிக்காவின் பெர்குஷன் நகரில், கருப்பின இளைஞனை போலீஸ் அதிகாரி சுட்டுக் கொன்றதற்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் கூக், பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட பலர் இடம்பெற்றிருந்தனர். இறுதியில், மோடி வென்றுள்ளார். இதற்காக, இந்தியர்கள் அதிகமானோர், டைம் பத்திரிகையின் இணையதளத்தில் ஓட்டளித்தனர் என, அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு தென்மாவட்ட யானைகள் கிளம்பின

திருநெல்வேலி : தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமிற்கு தென்மாவட்டங்களில் இருந்து கோயில் யானைகள் நேற்று இரவு கிளம்பிச் சென்றன.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லிமலை அடிவாரத்தில் பவானிஆற்றங்கரையில் தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடந்தது. இந்த ஆண்டுக்கான முகாம் நாளை டிச.,11ம் தேதி துவங்கி 48 நாட்களுக்கு நடக்கிறது. இதில் தென்மாவட்டங்களில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி 41, மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை, சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயில் யானை கோமதி, இலஞ்சி கோயில் யானை வள்ளி, திருக்குறுங்குடி கோயில் யானைகள், ஆழ்வார்திருநகரி கோயில் யானைகள் என மொத்தம் 9 யானைகள் தென்மாவட்டங்களில் இருந்து கிளம்புகின்றன. நேற்று இரவு நெல்லையப்பர் கோயில் யானை ம.தி.தா.,இந்துபள்ளி வளாகத்தில் இருந்து கிளம்பின. யானைகளுடன் நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞநாராயணன் மற்றும் அந்தந்த கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் யானைப்பாகன்கள் உடன் செல்கின்றனர்.

 

ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ சந்திப்பு

சென்னை: ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையில் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள குடியரசு போர்ச்சுகல், எஸ்தானியா, பல்கேரியா, போலந்து, லக்சம்பெர்க், லத்தீவியா போன்ற நாடுகளின் தூதர்களை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை சந்தித்தார். வர்த்தக, கலாச்சார, அரசியல் உறவுகள் குறித்துபேசினர். வைகோ, தமிழக அரசியல் - தேசிய அரசியல் நிலை குறித்தும், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும், இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்கி விவரித்துப் பேசினார். இலங்கை பிரச்சினையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளின் உதவியும், பங்களிப்பும் மிக அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

 

போக்குவரத்து தொழிலாளர்கள்-போலீசார் மோதல்

சென்னை: சென்னை பல்லவன் சாலையில் போக்குவரத்து அலுவலகத்தை, பல்வேறு கோரிக்கைகளுடன் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேரின் கால்கள் உடைந்தன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்., புகார்

புதுடில்லி: காஷ்மீர் சட்டசபை தேர்தலில், கடந்த 8ம் தேதி பிரசார நேரம் முடிந்த பின்னரும் பிரதமர் மோடி பிரசாரம் செய்ததாகவும், ராணுவத்தின் நடவடிக்கையை அரசியலாக்கியுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.

 

கிரானைட் முறைகேடு குறித்து சென்னையிலும் புகார் தரலாம்: சகாயம்

சென்னை: மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் மதுரையில் விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். அப்போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக புகார் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சென்னையிலும் புகார் மனுக்களை அளிக்கலாம் என சகாயம் கூறியுள்ளார் அறிவியல் நகர், காந்தி மண்டபம் சாலை, கோளரங்க வளாகம், சென்னை-25 என்ற முகவரியிலும், தொலைபேசி எண்கள் 044-2445,4054/34 என்ற நம்பரிலும், பேக்ஸ் மற்றும் இமெயில் மூலமும் புகார் மனுக்களை அளிக்கலாம் என கூறியுள்ளார்.

 

போலீஸ் குடியிருப்பில் நிதி மோசடி: போலீஸ்காரரின் தனிப் போராட்டம்

திருநெல்வேலி : நெல்லை மாநகர போலீஸ் குடியிருப்பு பராமரிப்பு நிதியில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் சஸ்பெண்ட் ஆன போலீஸ் ஏட்டு தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பாரதிநகர் போலீஸ் குடியிருப்பு 1980ல் கட்டப்பட்டது. இதில் 106 வீடுகளும் வணிகவளாகத்தில் 17 கடைகளும் உள்ளன.1997 முதல் தற்போது வரையிலும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் இந்த குடியிருப்பு உள்ளது. 1997 முதல் தற்போது வரையிலும் போலீஸ் குடியிருப்பிற்கு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி வாங்கியது, பராமரிப்புபணிகள் மேற்கொண்டது என கூறி கோடிக்கணக்கில் அரசு பணம் முறைகேடு நடந்துள்ளது. நெல்லையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றிய சங்கரசுப்பிரமணியன் 50, போலீஸ் சங்கத்திற்கு அனுமதி கோரி நடைபயணம் சென்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரும் தற்போது பாரதிநகர் போலீஸ் குடியிருப்பில் வசித்துவருகிறார். அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 97 முதல் 2014 வரையிலும் போலீஸ் குடியிருப்பு பராமரிப்பிற்காக பணம் எதுவும் செலவழிக்கவில்லை என தெரியவந்துள்ளது. எனவே பல்வேறு போலீஸ் கமிஷனர்களின் காலகட்டத்தில் பாரதிநகர் குடியிருப்பு பராமரிப்பிற்காக ஆண்டுதோறும் செலவழிக்கப்பட்டதாக கணக்கு எழுதி மோசடி செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய் குறித்தும் தகவல் கேட்டுள்ளார்.இந்த ஊழலை மறைப்பதற்காக போலீஸ் குடியிருப்பில் இருந்த 106 காவலர் குடும்பங்களும் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் வணிகவளாக கடைக்காரர்களை வெளியேற்றமுடியவில்லை. எனவே இதில் அரசு இந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படியும், இதற்காக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர உள்ளதாகவும் அதுவரையிலும் தமது குடியிருப்பில் இருந்து வெளியேறபோவதில்லை எனவும் தெரிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் சங்கரசுப்பிரமணியன் மட்டும் பாரதிநகர் போலீஸ் குடியிருப்பில் தொடர்ந்து வசித்துவருவது நெல்லை மாநகர போலீஸ்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசு பஸ் நிறுவனத்தில் திடீர் குண்டு வெடிப்பு

திருநெல்வேலி: செங்கோட்டை அரசு போக்குவரத்து நிறுவனத்தில் திடீர் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, புளியரையில் அரசு விரைவு போக்குவரத்து கழக டிப்போ உள்ளது. நேற்று இரவில் 8 மணியளவில், டிப்போவில் உள்ள ஓய்வறையில் குண்டு வெடித்தது.இதனால் பஸ் ஊழியர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போக்குவரத்தில் ஊழியராக பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால், டீசல் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.அவரது துணிமணிகளை வைத்திருந்த பெட்டியில்தான் குண்டு வெடித்துள்ளது. அவருக்கு விவசாய நிலம் இருப்பதாகவும் அங்கு வரும் பன்றிகளை தடுப்பதற்காக நாட்டுவெடிகுண்டுகள் தயாரித்ததாகவும் அவற்றை பாதுகாப்பு கருதி, டிப்போவில் வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.செங்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள நெல்லை எஸ்.பி., போக்குவரத்து நிறுவனத்தில் வெடித்தது நாட்டு வெடிகுண்டுகள் தான் எனவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

 

சுதந்திரம் அனைவருக்குமான உரிமை: சதுர்வேதி

ஓஸ்லோ: நோபல் பரிசு பெறவுள்ள இந்தியாவின் சதுர்வேதி கூறுகையில், சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில் சமரசம் ஏதும் கிடையாது. குழந்தை பருவம் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது மிகவும் முக்கியம். 57 மில்லியன் மக்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. 120 மில்லியன் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் விட நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மலாலாவுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன் என கூறினார்.

 

துணைவேந்தர் அறை முன்பாக அலுவலர்கள் முற்றுகை போர்

திருநெல்வேலி: நெல்லை பல்கலையில் துணைவேந்தர் அறைமுன்பாக உட்கார்ந்து பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அபிசேகப்பட்டியில் உள்ளது. மாலை ஐந்து மணியளவில், துணைவேந்தர் குமரகுரு கிளம்பும் நேரத்தில் பல்கலையின் ஆசிரியர் அல்லாத அனைத்து பணியாளர் சங்கத்தினர் துணைவேந்தரின் அறைமுன்பாக உட்கார்ந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அருணாசலம் உள்பட ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர். பல்கலையில் பாடம் நடத்த வேண்டிய பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத நிர்வாக பணியிடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். இதனால் பல்கலையில் ஆராய்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மேலும் ஓய்வுப்பெற்றவர்களுக்கு பயன்களை தராமல் இழுத்தடிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

ஒரு நாள் பாக்., திரும்புவேன்: மலாலா

ஓஸ்லோ: நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் மலாலா கூறுகையில், எங்கள் பகுதியில் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பிய போது, நிலைமை மாறியது. பள்ளி செல்வது எங்கள் உரிமை. இதற்கு தடை செய்யப்பட்டதால், நாங்கள் போராட வேண்டியுள்ளது. இஸ்லாம் மதம் அமைதி மார்க்கத்திற்கானது. இஸ்லாம் மதத்தில் கல்வி அடிப்படைஉரிமை அல்ல. கடமையாகும். மாணவர்கள் உரிமையை எழுப்ப வேண்டும். பேச வேண்டும் என்பதற்காக நாங்கள் இங்கு இருக்கிறோம். நான் கடவுளுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன். பாகிஸ்தான் எனது வீடு. ஒருநாள் கண்டிப்பாக அங்கு வருவேன் என கூறினார்.

 

பெண் மேயர்- துணைமேயர் லடாய்: அதிகாரிகள் வராமல் புறக்கணிப்பு

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் மேயர் நடத்தும் குறைதீர் கூட்டத்திற்கு கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் வராமல் புறக்கணித்தனர்.திருநெல்வேலி மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் தலைமையில் நடத்தப்படுகிறது. இதில் மாநகராட்சியின் கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர்கள் பங்கேற்பார்கள். நெல்லையில் மேயராக பொறுப்பேற்ற புவனேஸ்வரி, தேர்தலுக்கு முன்பு, துணைமேயர் காலத்தில் அனுமதிக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரோடுபணிகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி அனுமதி மறுத்து மறு டெண்டருக்கு உத்தரவிட்டார். இதனால் நெல்லை மாநகராட்சியின் அ.தி.மு.க.,மேயர் புவனேஸ்வரி, அ.தி.மு.க.,துணைமேயர் ஜெகநாதனுக்கு இடையே பனிப்போர் நிலவுகிறது.மாநகராட்சி கமிஷனர் லட்சுமி மற்றும் உதவிகமிஷனர்கள் யாரிடம் பணியாற்றுவது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த குறைதீர்கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு பொதுமக்கள் மனுகொடுத்தனர். கவுன்சிலர்களும் வந்திருந்தனர். ஆனால் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் வராமல் புறக்கணித்தனர். இதுகுறித்து மேயர் புவனேஸ்வரி கூறுகையில்,

நான் மேயராக பொதுமக்களின் குறைகளை பார்க்க நேரில் சென்றாலும் அங்கும் அதிகாரிகள் வருவதில்லை. இன்றைய குறைதீர்கூட்டம் குறித்து அறிந்தும் அதிகாரிகள் வராமல் புறக்கணிக்கிறார்கள். இதுகுறித்து முதல்வருக்கும், சென்னையில் மாநகராட்சிகளின் அதிகாரிகளிடத்திலும் புகார் தெரிவிப்பேன் என்றார். இதுகுறித்து கமிஷனர் லட்சுமியிடம் கேட்டபோது, மாநகராட்சியில் மக்களை சந்தித்து குறைகளை பெறும் கூட்டத்தை புதன்கிழமை தோறும் நடத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான தேதி இன்னமும் அறிவிக்கவில்லை. மேலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதுதொடர்பான கூட்டத்திற்கு நானும் <உதவிகமிஷனர்களும் சென்றுவிட்டோம் என்றார்.நெல்லை மாநகராட்சியில் பெண் மேயர், துணைமேயர், அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் அரசியலால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

உ.பி.,யை பிரிக்கும் திட்டம் இல்லை

புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலத்தை பிரித்து, புதிய மாநிலத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என, லோக்சபாவில் மத்திய அரசு கூறி உள்ளது.

 

முப்படையில் வீரர்கள் பற்றாக்குறை

புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மூன்று பிரிவுகளில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிகர் ராஜ்யசபாவில் கூறுகையில், 'ராணுவத்தில் 7989 இடங்களும், விமானப்படையில் 1499 இடங்களும், கடற்படையில் 357 இடங்களும் காலியாக உள்ளன. இந்நிலையில், ராணுவத்தில் பணியாற்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், அவர்களின் திறனை நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்,' என்றார்.

 

தப்ப முயன்ற கைதிகள் சுட்டுக்கொலை

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சைபாசா சிறையில் இருந்து பல கைதிகள் தப்ப முயற்சி செய்தனர். இதையறிந்த சிறை பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இந்த முயற்சி .தோல்வியடைந்ததால், தப்ப முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், 5 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை நெடுந்தீவு கடல்பகுதியில் , எல்லை மீறி சென்றதாக கூறி, 5 விசைப்படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

 

ராஜபக்சேக்கு எதிராக போராட்டம்-வைகோ

மதுரை: மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, 'ராஜபக்சே திருப்பதி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,' என்று கூறினார்.

 

கூட்டணி: சாமியின் அடுத்த குண்டு

புதுடில்லி: தமிழக பா.ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க, விலகியுள்ள நிலையில், பா.ம.க.,வும் விலக வேண்டும் என்று பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி கூறி உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், பா,.ஜ., தலைமையில், தமிழகத்தில் கூட்டணி ஏற்பட்டது. ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இக்கூட்டணி எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்னை, ராஜபக்சே ஆதரவு போன்றவற்றில் மோடி அரசுக்கும், ம.தி.மு.க, மற்றும் பா.ம.க,வுக்கு இடையே உரசல் ஏற்பட்டு, அடிக்கடி கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. மோடியை தனிப்பட்ட முறையில் வைகோ தாக்கி பேசி வந்தார். பா.ம,.க, ராமதாசும் அவ்வப்போது, மோடி அரசை குறை கூறி வந்தார். இரு கட்சிகளுமே, தமிழர்கள் பிரச்னையை மையமாக வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்தி வருவதால், மோடி மீதான எதிர்ப்பு அதிகரித்தது. வைகோவின் பேச்சுக்கு பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் எழுந்ததும், அவர் கூட்டணியில் இருந்து விலகினார். இந்நிலையில், பா.ம.க,வும் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என, சுப்ரமணியசாமி கூறி உள்ளார். இது,.பா.ஜ., கூட்டணியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

பார்லி.,யில் புயலை கிளப்பிய கீதை

புதுடில்லி: டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராஜ்யசபாவிலும் இப்பிரச்னை இன்று எதிரொலித்தது. கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இது குறித்து பிரச்னையை கிளப்பினர். இதனால், அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

பங்குவர்த்தகம் கடும் சரிவு

மும்பை : மும்பை பங்குச்சந்தை, ஒரு மாதகால அளவில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 322.39 புள்ளிகள் குறைந்து 27,797.01 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 97.55 புள்ளிகள் குறைந்து 8,340.70 என்ற அளவிலும் உள்ளது.

 

சிமி கைதிகள் குறித்து திடுக் தகவல்

புதுடில்லி: சிறையில் இருந்து தப்பிய 5 சிமி கைதிகளை, நாட்டில் உள்ள அனைத்து மாநில போலீசாரும் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் தென் இந்தியாவில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களை தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

சோனியாவுக்கு கருணாநிதி வாழ்த்து

சென்னை: காங்., தலைவர் சோனியாவுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து கூறி வௌியிட்டுள்ள அறிக்கையில், 'இக்கட்டான அரசியல் சூழ்நிலையிலும், காங்கிரஸ் கட்சியை உயிரோட்டமாக வைத்திருந்து, அரசியலை நடத்தும் தங்களின் ஆற்றலை பாராட்டுகிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ராமலிங்கராஜுக்கு 6 மாத சிறை தண்டனை

புதுடில்லி:கடந்த 2009-ம் ஆண்டு நடந்த, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல் குறித்த வழக்கில், அந்நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் ராமலிங்கராஜுவுக்கு பொருளாதார அமலாக்கப் பிரிவு நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனையும், 10.3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இவரது சகோதரர் ராமராஜு மற்றும் 8 பேருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

நிலையான அரசு: மோடி கோரிக்கை

தன்பாத்: ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திரமோடி, 'ஜார்கண்ட்டில், பா.ஜ.,வின் நிலையான ஆட்சி அமையும் வகையில் மக்கள் ஓட்டு போட வேண்டும். தற்போது எதிர்க்கட்சிகள் நிலைகுலைந்து போயுள்ளன. அவை அரசியலில் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகவே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. லோக்சபா தேர்தலில் கூறியதைத் தான் அவர்கள் இப்போதும் கூறிக் கொண்டுள்ளனர். தாதுவளம் அதிகம் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தை முன்னேற்ற தேவையான கொள்கைகளை மத்திய அரசு வகுக்கும். நீங்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பது என்பது ஜார்கண்ட்டிற்கு மட்டுமல்ல, நாட்டுக்கு செய்யும் நல்ல காரியம் ஆகும்,' என்றார்.

 

ஆம் ஆத்மிக்கு முலாயம் அழைப்பு

புதுடில்லி: சமாஜ்வாடி கட்சி தலைமையில், மோடி அரசுக்கு எதிராக காங்கிரசை தவிர அனைத்து எதிர்கட்சிகளும் அணி திரண்டு வருகின்றன. இந்நிலையில், தங்களின் மெகா கூட்டணியில் வந்து இணையுமாறு, ஆம் ஆத்மி கட்சிக்கு, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

 

கச்சத்தீவு: அ.தி.மு.க., கோரிக்கை

புதுடில்லி: லோக்சபாவில் பேசிய அ.தி.மு.க. எம்.பி.,யும், துணை சபாநாயகருமான தம்பித்துரை, 'தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இதற்காக, பார்லிமென்ட்டில், ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்,' என்று கோரிக்கை வைத்தார்.

 

ஏர்போர்ட்டில் விபத்து: போலீஸ் காயம்

சென்னை: சென்னை விமான நிலைய புதிய கட்டடத்தில், அவ்வப்போது கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள் கழன்று விழுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று காலை, பழைய முனையத்திற்கும், முதிய முனையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு கழன்று விழுந்தது. இதில், அங்கு பணியில் இருந்த அன்வர்பாஷா என்௦ற சி.ஐ.எஸ்.எப்., போலீஸ் கான்ஸ்டபிள் காயம் அடைந்தார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

 

டில்லி கற்பழிப்பு: போலீஸ் திடுக் தகவல்

புதுடில்லி: டில்லியில், உபேர் கார் நிறுவன டிரைவரால் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில், டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் டில்லி போலீசார் விசாரணை நடத்தி, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை நடத்தினர். இதில், அந்த நபரின் நடத்தை சான்றிதழ் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏமாற்றுதல், தவறான தகவல் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முத்தப்போராட்டம்: ஷோபனா எதிர்ப்பு

திருவனந்தபுரம்: பொது இடங்களில் முத்தப் போராட்டம் நடந்து வருவது குறித்து நடிகை ஷேபனா கூறுகையில், 'முத்தம் கொடுப்பது என்பது தனிப்பட்ட விஷயம், அதை பொது இடங்களில் செய்வது ஏன் என்பது தான் எனக்கு புரியாத விஷயமாக உள்ளது. இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் தாங்கள் செய்வது சரி என்று வாதாடலாம். ஆனால், தங்கள் குழந்தைகள் இவ்வாறு செய்யக்கூடாது என்று தான் அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள்,' என்றார்.

 

பா.ஜ., எம்,.பி.,களுக்கு தலைமை கெடு

புதுடில்லி: பா.ஜ., அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் அனைவரும் தங்கள் சொத்து மதிப்பு மற்றும் கடன்கள் குறித்த தகவல்களை நாளைக்குள் (10ம் தேதி) வௌியிட வேண்டும் என, இன்று டில்லியில் கூடிய பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 

காஷ்மீரில் மூன்றாம் கட்ட ஓட்டு பதிவு

ஜம்மு: இன்று காலை துவங்கிய ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு பதிவு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் அதிகமாக தாக்குதல் நடத்திய புல்வாமா மாவட்ட பகுதிகளில் இன்று ஓட்டு பதிவு நடந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகின்றனர்.

 

கோவை விமான நிலைய விரிவாக்கம்

கோவை: கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆய்வில், தமிழக வருவாய்துறை, பாதுகாப்பு துறை மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டனர்.

 

சோனியாவிற்கு மோடி வாழ்த்து

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

 

சென்னை:62பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை:சென்னையிலிருந்து ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்திலியே பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் 62 பயணிகளும் உயிர் தப்பினர்.

 

ஏமன் படகு விபத்து: 70 எத்தியோப்பிய அகதிகள் பலி

சனா:ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து ஏமன் நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில், அதிலிருந்த 70 பேரும் உயிரிழந்தனர். எத்தியோப்பியாவிலிருந்து சட்ட விரோதமாக 70 அதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று, மோசமான வானிலை காரணமாக அல்-மக்கா துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், படகிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாக ஏமன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

தொண்டை எரிச்சலால் அதிபர் ஒபாமாஅவதி

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு தொண்டை எரிச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொண்டை எரிச்சல் இருந்ததால் ஒபாமாவுக்கு, வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் நேற்று பைபர் ஆப்டிக் பரிசோதனை மேற்கொண்டார். இதில் தொண்டையில் மென்மையான திசு வளர்ந்திருந்தது தெரியவந்தது.ஆசிட் ரிப்லக்ஸ்காரணமாக ஏற்பட்ட திசு அழற்சியே ஒபாமாவுக்கு தொண்டை எரிச்சல் ஏற்பட காரணம் என சோதனையில் தெரியவந்தது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர் தெரிவித்தார்.இவ்வாறு வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவின் இயக்குநரும் அதிபரின் மருத்துவருமான ரொன்னி ஜாக்சன் தெரிவித்தார்.

 

இனி நான் ராஜினாமா செய்யமாட்டேன்:கெஜ்ரிவால்

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராஜினாமா எனும் தவறை மீண்டும் செய்யமாட்டேன் என அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.டில்லியில், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது பேசிய கெஜ்ரிவால்: 49 நாட்களில் ராஜினாமா செய்ததது ஒரு தவறான அரசியல் மதிப்பீடு. அந்தத் தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன்.ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதை ஆம் ஆத்மியின் லட்சியம் என்றார்.

 

பிரிட்டன் பார்லி.,யில் கேண்டி க்ரஷ் விளையாடிய எம்.பி.

லண்டன்:பிரிட்டன் பார்லிமென்டில் முக்கிய மசோதா மீதான விவாத நேரத்தில் அந்நாட்டு எம்.பி. தனது ஐபோனில் கேண்டி க்ரஷ் விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டன் பார்லிமென்ட்டில் மிக முக்கியமான ஓய்வூதிய மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது.. நீண்ட நேரம் நடத்த விவாதத்தின் பெரும் பகுதி நேரத்தில் நிகில் மில்ஸ் என்ற எம்.பி. தனது ஐ போனில் கேண்டி க்ரஷ் விளையாடி கொண்டிருந்த காட்சி அந்நாட்டின் பத்திரிகையில் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இது பிரிட்டன் முழுவதும் மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

 

கூடங்குளம்:5வது 6வது அணு உலை:ரஷ்ய தூதர் தகவல்

துடில்லி:கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைக்க பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் கூறினார் . கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3-வது மற்றும் 4-வது உலைகள் அமைப்பதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் புடின் வருகையின்போது கையெழுத்தாக உள்ளது. இரு நாடுகளும் கூடங்குளத்தில் 5-வது மற்றும் 6 -வது அணு உலைகளை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க உள்ளதாக அலெக்சாண்டர் தெரிவித்தார்.

 

ஓரினச்சேர்க்கை:எகிப்தில் 33 பேர் கைது

கெய்ரோ:எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் அருகே அஷ்பகேயாவில் நேற்று முன்தினம் இரவு, அந்நாட்டு போலீசார் ரோந்து சென்ற போது, பொது குளியல் அறையில் 33 பேர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக தெரியவர அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தீய ஒழுக்கம் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தவே அவர்களை கைது செய்ததாக தெரிவித்தார்.

 

சி.ஆர்.பி.எப்., தலைவராகிறார் பிரகாஷ் மிஸ்ரா

புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., அமைப்பின் தலைவராக உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு செயலாளராக பணிபரியும் பிரகாஷ் மிஸ்ரா நியமனம் செய்யப்படுவார் என தெரிகிறது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான குழு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடீசா மாநிலத்தை சேர்ந்த 1977ம் பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர் போலீஸ் டி.ஜி.பி.,யாகவும்பணியாற்றியுள்ளார். இவரது பெயரை, சி.ஆர்.பி.ஆப்., அமைப்பின் தலைவர் பதவிக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு பரிந்துரை செய்தது. சி.ஆர்.பி.எப்., இயக்குநராக பணிபுரிந்த திலிப் திரிவேதி கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் ஒய்வு பெற்றதுமுதல் அப்பதவி காலியாக உள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.