குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

08.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பகவத் கீதை: சுஷ்மாவின் கருத்துக்கு கருணாநிதி எதிர்ப்பு

சென்னை: பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கருத்துக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மதச்சார்பற்ற நாடு என அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மதங்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

 

கூட்டணியிலிருந்து வைகோ விலகியது நல்லது: எச்.ராஜா

சென்னை: பா.ஜ., கூட்டணியிலிருந்து வைகோ விலகியது நல்லது என பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். மேலும் அவர், ம.தி.மு.க.,விற்கும் பா.ஜ.,விற்கும் இடையே கொள்கை ரீதியிலான முரண் உள்ளது. வைகோவின் இந்த முடிவு பா.ஜ.,விற்கு நல்லது தான். திருமணம் ஒத்துவராவிட்டால் விவகாரத்து செய்வது நல்லது தான். கூட்டணியில் இருந்து கொண்டே பிரதமரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

 

மேற்கு வங்க அமைச்சருக்கு சி.பி.ஐ., நோட்டீஸ்

கோல்கட்டா: சாரதா சிட் பண்டு மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ரா சி.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் புதன்கிழமை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

ஜெயிலிலிருந்து தப்பிய பயங்கரவாதிகள், இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்:உளவுத்துறை எச்சரிக்கை

புதுடில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலில் இருந்து தப்பிச்சென்ற பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சார்பில், நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

 

கார் டிரைவர் மீது கொள்ளையடித்ததாக வழக்கு: டில்லி போலீஸ்

புதுடில்லி: இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார் டிரைவர் ஷிவ்குமார் யாதவ், போலியான நன்னடத்தை சான்றிதழ்கள் வைத்திருந்ததாகவும், அவர் மீது கொள்ளையடித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் டில்லி போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

 

முதல்வருடன் ஐரோப்பிய யூனியன் தூதர்கள் சந்திப்பு

சென்னை: சென்னை வந்துள்ள ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, பொறியியல், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை செய்தனர். இதன்பிறகு பேட்டியளித்த இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் ஜோவோ கிராவின்ஹோ, தமிழகம் இந்தியாவின் முக்கிய மாநிலம். மக்கள் தொகை மற்றும் பொருளாதார ரீதியாக தமிழகம் முக்கிய மாநிலம் என கூறினார்.

 

காஷ்மீர் தாக்குதலில் தொடர்பில்லை: பாகிஸ்தான் மறுப்பு

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எங்களுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீரில் 4 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தஸ்னிம் அஸ்லம், இந்தியாவின் குற்றச்சாட்டுக்களை தீவிரமாக ஆராய்ந்தோம். இதன் பிறகு, இந்தியாவின் குற்றச்சாட்டுக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் முனைப்போடு செயல்படுகிறது. பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

 

கருணாநிதியுடன் ஐரோப்பிய யூனியன் தூதர்கள் சந்திப்பு

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை ஐரோப்பிய யூனியன் தூதர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர் மற்றும் நீதி விசாரணை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது

 

பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க சோனியா முடிவு

புதுடில்லி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மற்றும் சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிறந்த நாள் கொண்டாடுவதை தவிர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு நாளை 68 வயதாகிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு சோனியாவின் பிறந்த நாள் வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மற்றும் சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க சோனியா முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

 

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இந்தியா எங்களின் நிலையான நண்பன்: ரஷ்ய தூதர் கருத்து

புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதையும் செய்ய மாட்டோம் என , இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாக்கின் கூறியுள்ளார். மேலும் அவர், இரு நாடுகளும் நிலையான நட்பையும் உறவையும் கொண்டிக்கிறது. பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்தது, இந்தியாவை பாதிக்காது. ரஷ்ய அதிபர் புடின் இந்திய வருகையின் போது, பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது என கூறினார்.

 

ராமலிங்க ராஜூவுக்கு 6 மாத சிறை

ஐதராபாத்: சத்யம் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ராமலிங்க ராஜூ மற்றும் ராமராஜூ ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் டிசம்பர் 23ம் தேதி இறுதித்தீர்ப்பு வழங்கப்படுகிறது.

 

சீனிவாசன் வழக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கினை, சுப்ரீம் கோர்ட் நாளைக்கு ஒத்தி வைத்தது.ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் குழு, 35 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பித்தது.இதன் மீதான விசாரணை தற்போது நடக்கிறது.இதில், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மீது 'பெட்டிங்', 'பிக்சிங்' புகார் இல்லாத நிலையில், ஆதாயம் தரும் வகையில் பல பதவிகள் வகித்தது குறித்து சுப்ரீம் கோர்ட், கடும் கருத்துக்களை, தெரிவித்து வருகிறது.இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஏ.கே.பட்னாயக் அடங்கிய சிறப்பு 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.பி.சி.சி.ஐ., தரப்பில்,' சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீது நடவடிக்கை எடுப்போம்,' என்று கூறப்பட்டது.அப்போது கோர்ட் கூறியது:தலைவர் பதவியில் இருப்பவர், எவ்வித பிரச்னையிலும் சிக்கிக் கொள்ளாமல், விலகி இருக்க வேண்டும். இவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருப்பது முக்கியம். இரு பதவியில் இருக்க வேண்டிய நிலை வந்தாலும், அவற்றை தவிர்த்து இருக்க வேண்டும்.பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன், ஐ.பி.எல்., அணி நடத்துகிறார். இவர் ஆதாயம் தரும் வகையில் செயல்படவில்லை என்பதை ஏற்பது கடினமாக உள்ளது. இவர் எப்படி, தனது சொந்த அணியின் மீதே, தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு கேள்விகள் கேட்ட கோர்ட், முடிவில், வழக்கு விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தது.

 

மாவோயிஸ்டுகள் ஊடுறுவல் வதந்தி

சேலம்: மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக சங்கர் பொறுப்பேற்ற பின், முதன்முதலாக, சேலம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கேரள எல்லைபகுதியில் இருந்து மாவோயிஸ்டுகள், தமிழக எல்லை பகுதிகளுக்கு வந்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவல். எல்லை பகுதிகளில் தமிழக சிறப்பு அதிரடி படையினருடன் , தமிழக போலீஸார் இணைந்து, தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள எல்லை பகுதியை ஓட்டிய கிராமங்களில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காயங்களுடன், யாராவது வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் கூறி உள்ளோம், மேலும் எல்லை ஓரங்களில் உள்ள செக்போஸ்டுகளை அதிகப்படுத்தி படுத்தியுள்ளோம். இதனால் குற்ற சம்பவங்கள் தடுக்கபடும், ' என்றார்.

 

மாஜி அமைச்சரிடம் விசாரணை

புதுடில்லி: நிலக்கரி ஊழல் வழக்கு குறித்து, முன்னள் மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

 

சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்டு, சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால், அதற்கு மறுத்த சுப்ரீம் கோர்ட், அதுபோன்ற வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறியிருந்தது. இந்நிலையில், இன்றைய விசாரணையில், நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த விசாரணையை சி.பி.ஐ., மிக மந்தமாக நடந்து வருகிறது என, சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

 

தமிழக அமைச்சரவையில் மாற்றம்?

சென்னை: தமிழக அமைச்சரவையில் நாளை மாற்றம் இருக்கும் என்றும், முந்தைய அ. தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வகித்த சிலருக்கு இம்முறை அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நான் வாஜ்பாயின் செல்லப்பிள்ளை-வைகோ

சென்னை: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நெய்வேலி, என்.எல்.சி.,ஐ தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடந்தபோது, நான் வாஜ்பாயை நேரில் சந்தித்து, தமிழகத்தின் வாழ்வாதரமான அந்த நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டு, தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டார். அவருடன் நான் நெருங்கி பழகியவன். என்னை தனது செல்லப்பிள்ளை என்றே அனைவரிடமும் கூறி வந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியை அவர் நடத்தி சென்ற வழிமுறை இப்போது இல்லை. அதனால் தான், நாங்கள் கூட்டணியில் இருந்து வௌியேற வேண்டியிருந்தது,' என்றார்.

 

சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழக அரசின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதி துவங்கியது. மொத்தம் மூன்று நாட்கள் என அறிவிக்கப்பட்ட இந்த தொடரில், மூன்றாம் நாளான இன்று, கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மீது விவாதம் நடந்தது. தி.மு.க., வெளிநடப்பு செய்தது. இதைத் தொடர்ந்து, சட்டசபையை தேதி குறிப்பி்டாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

 

மாஜி அமைச்சர் கொலை வழக்கில் தீர்ப்பு

புதுடில்லி: ரயில்வேதுறை மாஜி அமைச்சர் எல்.என்., மிஸ்ரா கொலை வழக்கில், நான்கு பேரை குற்றவாளிகள் என டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

 

மெஜாரிட்டி கொடுங்கள்: மோடி கோரிக்கை

ஸ்ரீநகர்: காஷ்மீர், ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 'எங்கள் கட்சி (பா.ஜ.,) மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் வகையில் ஆதரவு கொடுங்கள். அனைத்து வகைகளிலும் வளர்ச்சி வேண்டும் என நீங்கள் விரும்பினால், எங்களுக்கு ஆதரவளியுங்கள். காஷ்மீர் மக்கள், பயங்கரவாதிகளின் ஏ.கே.47 துப்பாக்கிகளை எதிர்கொள்ள ஓட்டு இயந்திரங்களை இப்போது பயன்படுத்த வேண்டும். ஓட்டு போடுவதில் ஆர்வம் காட்டி, துப்பாக்கி குண்டுகளை புறக்கணிக்க வேண்டும். கடும் மிரட்டல்களையும் மீறி, ஓட்டு பதிவில் கலந்து கொள்வதன் மூலம், காஷ்மீர் ஜனநாயகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது. காஷ்மீரில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படும்,' என்றார். முன்னதாக, பயங்கரவாதிகளுடனான சமீபத்திய துப்பாக்கி சண்டையில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

 

ம.தி.மு.க., விலகல்; தமிழிசை கருத்து

சென்னை: ம.தி.மு.க., விலகல் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்; கூட்டணியில் இருந்த போது தொகுதிகளை விட்டு கொடுத்தோம். சகோதர உணர்வுடன் தான் இருந்தோம். ஆனால் உலகம் முழுவதும் மோடியை பாராட்டும் போது மோடியை வேண்டுமென்றே வைகோ விமர்சனம் செய்தார். இதனால் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டது. இவ்வாறு தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார்.

 

டாக்ஸி நிறுவனத்திற்கு தடை

புதுடில்லி: டில்லியில் நடந்த சம்பவத்தில் உபேர் என்ற தனியார்ர டாக்ஸி நிறுவனத்தின் காரில் சென்ற பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,டில்லியில் கார்களை இயக்க, குறிப்பிட்ட உபேர் நிறுவனத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது.

 

ம.தி.மு.க. விலகல்: எச்.ராஜா கருத்து

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகி உள்ளது குறித்து பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், ' கூட்டணி விலகல் தொடர்பாக பா.ஜ., செயலர்களில் ஒருவரான எச்.ராஜா கூறுகையில், நாட்டை துண்டாடும் முயற்சிக்கு நாங்கள் துணை போக மாட்டோம். பா.ஜ., சித்தாந்தம், ம.தி.மு.க., சித்தாந்தம் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. ஒற்றுமை இருக்கும் என நினைத்து தான் நாங்கள் ம.தி.மு.க,வை சேர்த்தோம். கல்யாணம் முடிக்கும் போது எல்லாம் சரியாக இருக்கும் என நம்பித்தான் முடிக்கிறோம். ஒத்துவரவில்லையெனில் விவாகரத்து தான் முடிவு. பிரிந்து செல்வதால் பாதிப்பு ஒன்றும இல்லை,' என்றார்.

 

அமைச்சர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் இன்று வௌிநடப்பு செய்தனர். இது குறித்து தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சட்டசபையில், அரசின் பல்வேறு திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை எடுத்துரைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், திட்டமிட்டு எங்களை பேசவிடாமல் செய்துவிட்டனர். இதற்கு, சபாநாயகரும் உடந்தையாக இருந்தார் என்பது தான் வேதனை. நானும், முதல்வர் பன்னீர்செல்வமும் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் வைத்தியலிங்கம், எழுந்து, என்னை பார்த்து கையை நீட்டி, அமைச்சர் என்பதை மறந்து, தரம் தாழ்ந்து பேசினார். இதையெல்லாம் கண்டித்து தான் நாங்கள் வௌிநடப்பு செய்தோம்,' என்றார்.

 

வாஜ்பாய் அணுகுமுறை இல்லை-வைகோ

சென்னை: பா.ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க,., வௌியேறுவதற்கான காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், 'வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது, கூட்டணி கட்சிகளிடம் இருந்த அணுகுமுறை, தற்போது நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணியில் இல்லை. எனவே, தமிழகத்தில், கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகுகிறது,' என்று தெரிவித்தார்.

 

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகல்

சென்னை: இலங்கை அரசுடன் தொடர்ந்து நட்புறவு பாராட்டி வரும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ., தலைமையிலான தே. ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க,. விலகுவதாக கட்சியின் பொது செயலர் வைகோ சென்னையில் இன்று மதியம் தெரிவித்தார்.

 

சுஷ்மாவுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார். இதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், 'பல்வேறு மொழிகள், கலாச்சார பாரம்பரியங்கள், இனவேறுபாடுகள் இந்தியாவில் இருப்பதால்தான் இது பன்முகம் கொண்டு பரந்து விரிந்த நாடாக உள்ளது. இங்கு சமத்துவமும், சமதர்மமும் போற்றப்பட வேண்டும்,' என்று கூறி உள்ளார்.

 

காஷ்மீர் தேர்தலால் மாற்றம்: மோடி ஆருடம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், சம்பாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, இந்த தேர்தல் காஷ்மீரில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. காஷ்மீர் மாநில மக்கள், வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்பு, அடிப்படைவசதிகள் ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர் என்பது எனக்கு தெரியும். இளைஞர்கள் வேலை கேட்கின்றனர். விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கேட்கின்றனர். குழந்தைகள் நல்ல கல்வியை கேட்கின்றன. வயதானவர்கள் நல்ல மருத்துவ கவனிப்பு தேவை என்கின்றனர். எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் பிரச்னைகளை தீர்க்கப்பட்டு வருகின்றன. அப்பா, மகன் அல்லது அப்பா, மகள் என்று தான் காஷ்மீரை ஆண்டு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்ததில்லை. அவர்களுக்கு இந்த முறை ஓட்டு போடாதீர்கள். இவ்வாறு மோடி கூறினார்.

 

டில்லியில் தங்குகிறார் புடின்?

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடின், வரும் 10ம் தேதி இந்தியா வருகிறார். அவருடன் உயர்மட்டக்குழுவும் வருகிறது. இந்திய, ரஷ்யாவின் 15வது ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளும் புடின், ஒரு நாள் டில்லியில் தங்க முடிவு செய்துள்ளதாக, இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கதகின் கூறி உள்ளார்.

 

ஜெ., ஆவணங்கள் இன்று தாக்கல்

பெங்களூரு: பெங்களூரு ஐகோர்ட்டில், ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனு மீதான வரும் 18ம் தேதி நடக்க உள்ள நிலையில், அதற்கான ஆவணங்களை ஜெயலலிதா தரப்பினர் இன்று பெங்களூரு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். ஜெயலலிதா மற்றும் அவர் தரப்பினர் வக்கீல்களான செந்தில், அசோகன், பரணிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர், பெங்களூரு ஐகோர்ட் பதிவாளரிடம் 44 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

 

சிறுத்தை: வால்பாறை மக்கள் கோரிக்கை

வால்பாறை: கடந்த சில மாதங்களாக, வால்பாறை குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இன்றுகாலை, வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை, பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று பிடித்துச் சென்றது. இதனால், சிறுத்தை பீதி அதிகரித்துள்ளது. இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வால்பாறை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

ராஜ்சபாவில் எதிர்கட்சிகள் அமளி

புதுடில்லி: அமைச்சர் நிரஞ்சன் ஜ்யோதி சாத்வியின் சர்ச்சை பேச்சு குறித்த அமளி ராஜ்யசபையில் இன்றும் எதிரொலித்தது. இப்பிரச்னை காரணமாக கடந்த வாரம் முழுவதும் ராஜ்யசபா முடக்கப்பட்ட நிலையில், இன்று ராஜ்யசபா கூடிய நிலையில், எதிர்கட்சிகள் மீண்டும் அதே பிரச்னையை கிளப்பின. அமைச்சர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவை துணைத் தலைவர் இருக்கை முன் கூடி, கூச்சலிட்டனர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது.

 

அமெரிக்காவில் இளவரசர் வில்லியம்ஸ்

நியூயார்க்: இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம்ஸ், தனது மனைவி கேதேயுடன் அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க், மன்ஹாட்டனில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஓட்டலில். இந்த அரச தம்பதி தங்கி உள்ளனர். இந்த ஓட்டலில் தான், கடந்த 1990களில், வில்லியம்சின் தாயார் இளவரசி டயானா தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மோடி பிரசாரம்: பலத்த பாதுகாப்பு

ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திரமோடி, ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், பயங்கரவாதிகள் மிரட்டல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பிற்காக 4 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அ.தி.மு.க., பிரமுகர் காரில் தீ

கோவை: கோவை, குனியமுத்தூர், ஞானபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரபு, 32. இவர், அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண் பாசறையின் மாநில துணை செயலாளராக இருக்கிறார். இவரின் கார், இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்த குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கீதை தேசிய நூலாக வேண்டும்-சுஷ்மா

புதுடில்லி: டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியது அவசியம்,' என்றார். மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்தபோது, கீதையை தான் பரிசாக கொடுத்தார் என்றும் சுஷ்மா குறிப்பிட்டார்.

 

டில்லி டாக்ஸி.,யில் பெண் கற்பழிப்பு : ராஜ்நாத் வீடு முற்றுகை

புதுடில்லி: டில்லி டாக்ஸி.,யில் பெண் கற்பழிப்பு தொடர்பாக ஆம் அத்மி கட்சியினர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் வீட்டை முற்றுகையிட்டனர். இதனனையடுத்து போலீசார் ஆம் ஆத்மி தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.

 

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே பெருங்குளத்தூரில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

கூடங்குளத்தில் மீண்டும் மின்உற்பத்தி

கூடங்குளம் : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அலகுகள் உள்ளன. இவற்றில் முதலாவது அலகில் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், ஆய்வு பணிகள் மற்றும் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆய்வுகள் நிறைவடைந்து நேற்று இரவு 10 மணி முதல் மீண்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி வரை இதன் மின்உற்பத்தி 400 மெகாவாட்டை எட்டி உள்ளது. டிசம்பர் 11ம் தேதி இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், கூடங்குளம் அணுஉலையை நேரில் பார்வையிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு

ஊட்டி: கேரள வனப்பகுதியில், நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்நது, நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் போலீசார் 7 குழுக்களாக பிரி்நது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

டிரைவரைத் தாக்கி வாடகை கார் கடத்தல்

பழநி: தேனியிலிருந்து பழநிக்கு செல்ல வாடகை காரை அமர்த்திய 4 பேர், வழியில் காரை நிறுத்தச் சொல்லி, கார் டிரைவரைத் தாக்கி விட்டு அவரிடமிருந்த 25 ஆயிரம் ரூபாயைப் பறித்துக் கொண்டு, காரையும் கடத்திச் சென்று விட்டனர். இது குறித்து காரின் உரிமையாளரும் டிரைவருமான முத்துசாமி, போலீசில் புகார் செய்துள்ளார்.

 

ராஜ்நாத் சிங் வீடு முற்றுகை

புதுடில்லி : டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டு, ஆம்ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டி உள்ள அவர்கள், டில்லியில் பெண்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவி்த்து முழக்கங்கள் இட்டனர்.

 

மூன்றடுக்குகளைக் கொண்டதாக மாறுகிறது மத்திய திட்டக் கமிஷன் - ஜேட்லி தகவல்

டில்லி:மத்திய திட்டமிக் கமிஷனை மாற்றியமைக்க பெரும்பாலான மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் அது பாரபட்சம் காட்டுவதாக மோடி முதல்வராக இருந்தபோதே குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அவர் பிரதமரானதுமே திட்டக் கமிஷனை ஒழிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தக் கட்டம் வந்துள்ளது.இதுதொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் நடந்து வருகின்றன. அனைத்து ஆலோசனைகளும் முடிவடைந்த பின்னர், அனைவருடைய கருத்துக்களையும் அறிந்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார் ஜேட்லி.

 

உரிமைகளை மீட்கப் போராட வேண்டும்: நீதிபதி கற்பக விநாயகம்

புது டில்லி:உரிமைகளை மீட்கப் போராட வேண்டும் என்று மின்சாரம், பெட்ரோலிய, எரிவாயு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரான நீதிபதி கற்பக விநாயகம் கேட்டுக் கொண்டார்.டில்லியில், அனைத்திந்திய மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கழகத்தின் முதல் தேசிய மாநாடு நேற்று நடந்தது.அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,நாம் பிறருக்கு உதவிட, கடவுள் நமக்கு உதவிடுவார். நேற்று என்பது உடைந்துபோன பானை. நாளை என்பது மதில்மேல் பூனை. இன்று என்பது கையில் கிடைத்த வீணை. அந்த வீணையை விட்டுவிடக்கூடாது. உரிமைகளை மீட்கப் போராட வேண்டும் என்று நீதிபதி கற்பக விநாயகம் பேசினார்.

 

சமுதாயத்துக்கு தொண்டு நிறுவனங்கள் தேவை:ஜனாதிபதி

குர்கான்:சமுதாயத்துக்கு தொண்டு நிறுவனங்கள் தேவை என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.குர்கானில் அமைந்துள்ள பாரத சேவாஸ்ரம சங்கத்தின் முதியோர் இல்லம், புதிய பள்ளிக் கட்டடத்தை நேற்று திறந்து வைத்து பிரணாப் முகர்ஜி பேசுகையில்,அரசு சார்பில் மக்கள் நலனுக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் சில இடங்களில் மக்களின் தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி ஏற்படுகிறது. அத்தகைய இடைவெளியைக் குறைக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

தெலங்கானாவில் 2019-ல் ஆட்சி: சந்திரபாபுநாயுடு

ஐதராபாத்:தெலங்கானாவில் 2019-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி ஆட்சியை பிடிக்கும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்ட நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டாலும் இரு மாநில விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடந்த முறை முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர் களுக்கு ஊதியம்கூட வழங்க முடியாக நிலையில் இருந்து, மாநிலத்தை தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக மாற்றினேன். தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிடையே எழும் கருத்து வேறுபாட்டினால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெலங்கானா அரசு உணர வேண்டும்.தெலங்கானா மக்கள் தெலுங்கு தேச கட்சியைத்தான் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றார் சந்திரபாபு நாயுடு.

 

சீனாவின் மூத்த அரசியல் தலைவர் கைது

பீஜிங்:ஊழல் குற்றச்சாட்டின்பேரில் சீனா வின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஜுஹூ யாங்காங் கைது செய்யப்பட்டார். அவரது வயது 72.அவரது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.84,000 கோடி மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பொதுவாக சீன அரசியலில் ஓய்வுபெற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது, கைது நடவடிக்கை மேற்கொள்வது கிடையாது. அந்த மரபை மீறி ஜுஹூ யாங்காங் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும் பத்தினரிடம் இருந்து ரூ.84,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

நைஜீரியா:200 கைதிகள் தப்பி ஓட்டம்

வாரி:நைஜீரியாவில்உள்ள சிறையிலிருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.வாரி நகரில் அமைந்துள்ள சிறையில்நேற்று முன்தினம் காலையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கிருந்த காவலர்களை மிரட்டி சிறைக் கைதிகளை விடுவித்ததாக அச்சிறைச்சாலையின் துணைக் கண்காணிப்பாளர் இப்ராஹிம் கம்பாரி தெரிவித்தார். தப்பிய கைதிகளில் 10 பேர் போலீசிடம் பின்னர் சிக்கினர் என்று அவர் மேலும் கூறினார்.

 

100 நாள் வேலைத் திட்டம்; தவறுகளை களைய வேண்டும்:கருணாநிதி

சென்னை;100 நாள் வேலைத்திட்டத்தில் இருக்கும் தவறுகளை களைந்துவிட்டு முறையாக இத்திட்டம் செயல்பட எல்லாவித முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,கடந்த 2005ல் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், கிராம்ப்புற மக்களுக்காக ஆண்டுக்கு 100 நாள் வேலை தரும் நோக்கத்தோடு துவக்கப்பட்டது.இந்த ஆண்டில், இத்திட்டத்தில் பணி புரிந்தோருக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.மேலும் நாள் 1 நாள் சம்பளம் ரூ.143 வழங்குவதற்கு பதிலாக பல இடங்களில் 100 ரூபாய் தான் கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.இதனால் மத்திய அரசு மக்களின் மனதை புரிந்து கொண்டு,இத்திட்டத்தில் நடக்கும் தவறுகளை களைந்து முறையாக இத்திட்டம் செயல்பட எல்லா முயற்சிகளையும் எடுக்க முன்வர வேண்டும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

குன்னூரில் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குன்னூர்: குன்னூரில் கடும் பனிப்பொழிவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடும் பனிப்பொழிவு உள்ளது. காலை, மாலை நேரங்களில் பனியும், பகலில் வெயிலும் வாட்டி எடுக்கிறது.குன்னூர் சிம்ஸ்பார்க்கில், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

'இடைத்தரகர்களை நம்பாதீங்க': ராணுவ அதிகாரி எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதைஆய்வு செய்த ராணுவ தேர்வு அதிகாரி கர்னல் பிரவீன் கூறியதாவது:ராணுவத்தில் சேர, உடல்தகுதி தேர்வில் 2,800 பேர் தேர்வாகியுள்ளனர். ஆறு நிமிடத்தில் 1,600 மீட்டர் துாரம் ஓடவேண்டும். எழுத்து தேர்விற்கு ஒன்பது, 10ம் வகுப்பு பாடங்களை படித்தால் போதும். இளைஞர்கள் அதிகளவில் புரோக்கர்களிடம் ஏமாறுவதாக தகவல் வருகிறது. தேர்வுக்கு வரும் இளைஞர்கள், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.