குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கையின் போர்க் குற்றம் தமிழ் இனத்தை முற்றாக அழிக்கும் பாசிச வெறியாகவே காண்கிறேன்!

 08 .6. 2011த.ஆ.2042-- இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு போர்க்குற்றம் 21ஆவது நூற்றாண்டில் இலங்கையில் தமிழ் இனத்தை முற்றாக அழிக்கும் பாசிச வெறியாகவே நான் கருதுகிறேன் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்றக் குழு துணைத் தலைவரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான சு.குணசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன்,

“நீரால் பிரிக்கப்பட்டு கூப்பிடு தூரத்தில் அமைந்த இலங்கையில் தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் கொடிய செயலுக்கு உதவியவர்களுக்கு தண்டனை தரும் நோக்கத்தோடு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

21ஆவது நூற்றாண்டில் இலங்கையில் தமிழ் இனத்தை முற்றாக அழிக்கும் பாசிச வெறியாகவே இதை நான் கருதுகிறேன்.

இலங்கையில் நிகழ்ந்துள்ளது போர்க்குற்றம் என்று சிலர் கூறுகிறார்கள்- இதனை இன அழிப்பு போர் குற்றம் என்று எனது கட்சி கருதுகிறது.

இறுதிப் போரில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஆதாரங்களும் இருக்கின்றன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி 2008 ம் ஆண்டு அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர்.

போர் முடிந்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக, இலங்கை அரசு வெளியிட்ட அகதிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 பேர்.

இதன்படி ஒரு லடசத்து 46 ஆயிரத்து 679 பேரைக் காணவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தனது போர் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய பெரிய படுகொலை இரண்டாவது உலகப்போருக்கு பின் உலகில் எங்கும் நடக்கவில்லை.

கடந்த காலங்களில் போர்க்குற்றம் செய்தவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

ஹிட்லரின் தலைமையில் நடைபெற்ற இழிவு மிகுந்த படுகொலைக்காக நூரன்பேர்க் எனும் இடத்தில் விசாரணை மன்றம் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பொஸ்னியா மக்கள் 1995ம் ஆண்டில் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இன அடிப்படையில் இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு 2007ம் ஆண்டு தீர்ப்பும் வழங்கப்பட்டது. முன்னாள் தளபதி ரட்கோ மிலாடிஜ் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைப் போன்றே ருவாண்டாவிலும் போர்க்குற்றவாளிகள் விரசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக தமிழ் மக்களை அழிப்பதற்கு தொடர்ந்த இன அழிப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

2008-2009 ஆம் ஆண்டுகளில் உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகள் அனைத்தும் அந்த மக்கள் மீது போடப்பட்டுள்ளன. 2009 ம் ஆண்டு மே மாதம் 17, 18 தேதிகளில் மட்டுமே 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளைக் கொடியோடு வருமாறு புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் ஐக்கிய நாடுகள் பொறுப்பாளர்களால் வழிகாட்டப்பட்டும், இவரோடு வந்தவர்களோடு சேர்த்து கூண்டோடு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு உலகில் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் கொல்லப்பட்டதில்லை. இலங்கை அரசு ஈழத்தமிழ் மக்களை மட்டும் படுகொலை செய்யவில்லை.

தமிழக மீனவர்களையும் படுகொலை செய்து வருகிறது. போர் முடிந்த பின்னரும் மீனவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

இனவெறி மிகுந்த கொடுமையான இலங்கை அரசு என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. நாடு, எல்லை கடந்து வந்து இனவெறி கொண்டு தமிழ்நாட்டு மீனவர்கள் சுடப்படுகிறார்கள்.

தமிழ் மக்கள் இலங்கையிலும் தமிழக கடற்கரையில் தமிழக மீனவர்களும் கொல்லப்படும் போது மத்திய அரசும் அன்றைய மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

வன்னிப் பிரதேசத்திலே தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. அன்றைய மாநில அரசு போரை நிறுத்தி மக்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ் இனத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டு போர் நடத்திய ராஜபக்ச இனஅழிப்பு போர்க்குற்றவாளியாக அறிவிப்பதற்குரிய முழு பொறுப்பையும் காங்கிரஸ் கட்சி செயல்படுத்த வேண்டும்.

இன்றைய தமிழக முதல்வர் இலங்கை தமிழ் மக்களின் மீது மாறாத அன்பைக் கொண்டவர்.

வன்னிப் பிரதேசத்திலே குண்டுகள் போட்டு மக்கள் அழிக்கப்பட்ட போது தமிழகத்தில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கு நடைபெற்ற கொடுமைகளை அறிந்து இன்றைய தமிழக முதல்வர் நாடாளுமன்றத்தில் தங்கள் அணி வெற்றி பெற்றால், தேவை ஏற்படுமாயின் இராணுவத்தை அனுப்பியேனும் தமிழ் மக்களைக் காப்பாற்றுவேன் என்று உணர்ச்சி பொங்க அறிவித்தார்.

இன்று இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான போராட்டத்திற்கு தமிழக முதல்வர் தான் தலைமையேற்க வேண்டும். தமிழகத்தின் 7 கோடி தமிழ் மக்களும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

இனஅழிப்பு குற்றவாளியான ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை புகழ்மிக்க இந்த அவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.“என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பற்றிய மஹிந்தவின் உத்தியோகபூர்வக் கட்டுக்கதை -திசாராணி குணசேகர. தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள் :


பெரிய பொய்யொன்றில் எப்போதுமே குறிப்பிடத்தக்களவிலான நம்பகத்தன்மையின் வலு இருக்கும்.' ஹிட்லர் (எனது போராட்டம்)
'வரலாற்றை நான் தான் எழுதுவேன் என்பதால் வரலாறு உங்களை தவறாகத் தான் காணும் - 1930களில் மக்களவையில் நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களின் போது பிரித்தானியப் பிரதமர் ஸ்ரான்சி போல்ட்வின்னுக்கு வின்ஸ்ரன் சேர்ச்சில் கூறியதாகக் கூறப்படுவது.
 
 
ஸ்ரீலங்காவிலே ஈழப் போரின் வரலாறு அதில் வெற்றியாளர் ஆகிவிட்ட ராஜபக்ஷ சகோதரர்களால் எழுதப்படுகிறது. (மீள எழுதப்படுகிறது.) இந்த 'வெற்றியாளர் எழுதும் வரலாறு,' சிங்கள மேலாண்மை ரீதியானதும் ராஜபக்ஷ மேலாண்மை ரீதியானதுமான ஒரு கதை கூறலாக இருக்கப் போகிறது. சிங்களவர்களின் முதுகெலும்பற்ற தன்மையும் ராஜபக்ஷவின் வழுவாத தன்மையும் மெய்ப்பிக்கத் தேவையில்லாத பிரதான உண்மைகளாக மிளிரப்போகின்றன.
 
இந்த இழந்ததை மீட்கும் துடிப்பார்வம் கொண்ட வரலாற்றின்படி, ஈழப்போருக்கு, புலிகளின் பிரிவினைவாதப் பயங்கரவாதமும் முக்கிய காரணமாகவும், தமிழ் தீவிர தேசியவாதம் மற்றும் இந்தியஃமேற்குலக சதித்திட்டங்கள் அதனை குறை நிரப்பும் பாத்திரங்களை வகிப்பவையாயும் இருக்கப் போகின்றன. சிங்களம் மட்டும் சட்டம், (கறுப்பு ஜூலை உள்ளிட்டதான), தமிழர்-எதிர்ப்பு கலவரங்கள் அல்லது மொழிவழித் தரப்படுத்தல் முதலியவை இந்தக் கதையில் இருக்க மாட்டாது. ஜனநாயக வழியிலான தமிழர்களின் வன்முறையற்ற எதிர்ப்புகளுக்கு சிங்களவர் காட்டிய வன்போக்கான பதில் வினைகளும் இதில் இடம் பெறப்போவதில்லை. 'சிங்களம் மட்டும் சட்டம்' இற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியான முறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த 300க்கு மேற்பட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மீது சிங்கள கும்பலொன்று மேற்கொண்ட தாக்குதலோடு இந்த பதில் வினைகள் தொடங்கின.
 
ஆயுதம் தரிக்காத இந்த தமிழ்ப் போராட்டக்காரர்கள் உதைக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, காறிஉமிழப்பட்டபோது காவல்துறையினர் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அவர்கள் 'இரத்தவாறான கட்டுக்களுடன்' அன்று மாலை பாராளுமன்றத்திற்குள் வந்தபோது, பிரதமர் ளுறுசுனு பண்டாரநாயக்கா, உரத்த குரலில், 'இதோ போரின் விழுப்புண்கள்' என்று கூறினார், என்று, ஆசு நாராயணனசுவாமியின் 'ஸ்ரீலங்காவின் புலிகள்' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (சிங்கள தீவிரவாதத்தினால் அழிக்கப்பட்ட) பண்டாரநாயக்கா-செல்வநாயகம், டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தங்களும் இதில் குறிப்பிடப்படுவதற்கான தகுதியை பெறமாட்டா.
       
சுதந்திரத்திற்குப் பின்னான ஸ்ரீலங்காவின் கறை படிந்த வரலாறு, இவ்வாறாக வெள்ளையடிக்கப்பட்டு, சிங்கள மேலாண்மை வாத கட்டுக் கதைகளுக்கு ஒத்திசைவதாக ஆக்கப்படும். குறிப்பாக, தமிழர்கள் சந்தர்ப்பவாதிகளாகவும், பேராசை பிடித்தவர்களாகவும், போதியளவு தேசபக்தி இல்லாதவர்களாகவும், மீண்டும் மீண்டும் ஸ்ரீலங்காவை ஆக்கிரமித்து, பௌத்தத்தை அழிக்க முயன்ற அந்நியர்களான சோழர்களின் நவீன வாரிசுகளாகவும் சித்திரிக்கப்படுவார்கள். இந்த 'வெற்றியாளர்களின் வரலாற்றிலே' இனப்பிரச்சினை இருக்காது (மொழிப் பிரச்சினை கூட இருக்காது) வெறுமனே ஒரு பயங்கரவாதப் பிரச்சினையே இருக்கும்.
 
இந்தக் கதையின்படி தமிழர்கள் தங்களுடைய இடங்களை உணர்ந்து அதற்கேற்றபடி இருக்கும் வரை அல்லது இந்த நாட்டினுடைய தலைவர்கள் தமிழர்களுக்கு பல்வேறு அரசியல் சலுகைகளை வழங்க நிர்ப்பந்திக்கும் விதத்திலான கையூட்டுக்கள் பெறுதல், பயமுறுத்தல்கள், இதமான நிர்ப்பந்தங்கள், உள்ளக அல்லது வெளியக சக்திகளினால் அதட்டி அடக்கப்படுதல் முதலியவற்றுக்கு உட்படாமல் இருக்கும் வரை அமைதி செழித்தோங்கும். ராஜபக்ஷக்கள் பொறுப்பில் இருக்கும் வரை இவ்வாறான பேராபத்து ஏற்படாது என இந்த கதை வாதிடுவதோடு ராஜபக்ஷ சகோதரர்களின் இந்த தேசபக்க உறுதிப்பாட்டை நீண்டகாலம் நிலைக்கப் போகின்ற ராஜபக்ஷ ஆட்சியின் தோற்ற மூலக் காரணமாகவும் சித்திரிக்கப் போகிறது.
 
வெள்ளியன்று நிகழ்ந்த வெற்றிக் கொண்டாட்டங்களை, (அரச மற்றும் தனியார்) இலத்திரனியல் ஊடகங்கள் நேரடியாக அஞ்சல் செய்தன. இந்த அஞ்சல்களோடு புதிய சிங்கள மேலாண்மையையும் ஈழப்போரின் ராஜபக்ஷ மேலாண்மை மாற்றுருவையும் தெரியப்படுத்தும் உத்தியோக பூர்வ நேர்முக வர்ணனையும் இணைந்திருந்தது. ஈழப்போருக்கும் புராதன இலங்கை மீதான பல சோழர் படையெடுப்புகளுக்கும் ஒரு தெளிவான இணைப்புக் கோட்டை வரைவதாக இந்த வர்ணனை இருந்தது. இது, புலிகள் மீதான 'ராஜபக்ஷ' வெற்றியை துட்டுகெமுனு,  வலகம்பாகு, விஜயபாகு ஆகிய மன்னர்களின் வெற்றிகளோடு சமப்படுத்துவதற்கு உதவுவதாக இருந்தது. ஈழப்போர் என்பது சிறிலங்காவை ஆக்கிரமித்து சிங்கள-பௌத்த அடையாளத்தை இல்லாதொழிக்க சோழர்கள் திரும்பத் திரும்ப மேற்கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சிதான் என்பது இந்த வர்ணனைகளில் பொதிந்திருந்த செய்தியாக இருந்தது. வரலாற்றினுடைய இந்த மாற்றுருவின் படி நீண்டகாலம் இடம்பெற்ற ஈழப்போரானது, 1983இலோ அல்லது 1976இலோ கூட தொடங்கவில்லை. ஆனால் கிமு 145ம் ஆண்டில் சோழப் படையெடுப்பாளன் எல்லாளன் சிங்கள அரசனான அசேலவைக் கொன்று அனுராதபுரத்தை ஆக்கிரமித்த போதே தொடங்கி விட்டது. அப்போதிலிருந்து சிங்கள சிறிலங்காவானது சோழ ஆக்கிரமிப்பாளர்களுடன் இருப்புக்கான போரில் ஈடுபட்டு வருகிறது. புலிகள் மீதான ராஜபக்ஷவின் வெற்றியானது பல ஆயிரம் ஆண்டுகாலம் நீடித்த பிழைத்திருத்தலுக்கான போராட்டத்தில்; ஈட்டப்பட்ட சிங்களச் சாதனைகளின் உச்சமாகும்.
இந்த மாதிரியான ஒரு மனப் போக்கோடு ராஜபக்ஷ ஆட்சியானது தமிழர்களுக்கு எந்த அதிகாரத்தையும் பகிர்ந்து வழங்கப் போவதில்லை என்பதோடு நிதர்சனமான படைய ஆக்கிரமிப்பிலிருந்து வடக்கை விடுவிக்கப் போவதுமில்லை.
 
இந்த 'வெற்றியாளனின் வரலாறு' புலிகளின் குற்றங்களால் நிரம்பி வழியும். அதுவும் ஒருவகையில் சரிதான். புலிகள்  நாகரீகத்துக்கு விரோதமான நடத்தைகளை மேற்கொள்ளும் போக்கை கொண்டிருந்தார்கள் என்பதோடு ஈழப்போர் பற்றிய எந்த ஒரு வரலாறும் இந்த எண்ணிலடங்காத அட்டூழியங்கள் பற்றி போதியளவில் குறிப்பிடாமல் முழு நிறைவானதாக இருக்கமாட்டாது. இந்த அடடூழியங்கள் ராஜின ராஜசிங்கம் கொல்லப் பட்டதிலிருந்து லக்ஸ்மன் கதிர்காமரின் கொலைவரை, ரெலோமீதான போரிலிருந்து வன்போக்கான முறையில் த.வி.கூட்டணியை ஒழித்துக்கட்டியது வரை, சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததிலிருந்து கைதிகளை கொலை செய்ததுவரை, சிங்கள சிவிலியன்களை படுகொலை செய்ததிலிருந்து தமிழ் சிவிலியன்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதுவரை நீண்டிருக்கின்றன. இயற்கையாகவே சிறிலங்காபடைகளால் நிகழ்த்தப்பட்ட  தவறுகளும் படுகொலைகளும் இந்த வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டுவிடும்.
 
வில்லியம் ஷிறெர் எழுதிய 'இது பேர்லின்: நாஸி ஜெர்மனியில் இருந்து எழுதுகிறேன்.' என்ற நூலில், 2ம் உலகப்  போர் தொடங்கியபின், 1939 நவம்பர் 7ம் திகதி, இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டில், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும், நாஸி மூத்த அதிகாரியான ஹெர்மன் கோயரிங் இற்குமிடையே இடம்பெற்ற பின்வரும் உரையாடல் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஊடகவியலாளர்: எதிரி துறைமுகங்கள் மீது நீங்கள் குண்டுவீச்சைத் தொடங்கப் போகிறீர்களா?
கோயரிங்: நாங்கள் மனிதநேயம் உள்ளவர்கள்.
ஏதோ ஒரு காரணத்துக்காக அங்கிருந்தவர்களிடையே பெரும் சிரிப்பலைகள் தோன்றின. அதற்குப் பதிலடி போல், 'நீங்கள் சிரிக்கக்கூடாது, நான் மனப்பூர்வமாகத்தான் சொல்லுகிறேன். நான் மனிதநேயம் கொண்டவன்.' என்று ஜெனரல் கோயரிங் கூறினார்.
 
போரில் ஜெர்மனி வெற்றி பெற்றிருந்தால், மனிதநேயமுள்ள நாஸிகள், மற்றும் பிரித்தானிய, பிரெஞ்சு, அமெரிக்க 'ஏகாதிபத்திய வாதிகள்' மற்றும் ரஷ்ய காட்டுமிராண்டிகளுக்கு எதிரான அவர்களுடைய மனிதநேயப் போரும் வரலாற்று உண்மைகளாக ஆகியிருக்கும். நாஸிக்களுடைய எண்ணிறந்த குற்றங்கள் பற்றி நாங்கள் நன்கு அறிந்திருப்பதால், ஹிட்லருக்கும் அவரது அடிவருடிகளுக்கும் 'மனிதநேயம்' என்ற அடைமொழியைச் சேர்ப்பது, என்ற எண்ணமே எமக்கு இன்றைக்கும் அருவருப்பாக உள்ளது.
   
ஆனால் போரில் ஜெர்மனி வெற்றி பெற்றிருந்தால், இந்தக் குற்றங்கள் எல்லாம் வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் அல்லது நல்லெண்ணம் மற்றும் வீரச்செயல் என்ற வகையில் தரமுயர்த்தப்பட்டிருக்கும். இந்த வகையில், வெற்றி பெற்ற நாஸிக்கள் தங்களையும் தங்கள் போரையும் மனித நேயமானது என்று கூறியிருந்தால், தகவல் அறியாத உலகத்தினர் சிரித்திருக்க மாட்டார்கள்.
 
ஜனாதிபதி ராஜபக்ஷ, அவரது ஆகப்பிந்திய 'வெற்றிவிழா' பேச்சில், திரும்பத் திரும்ப, 'பூச்சிய-சிவிலியன் இழப்பு'களுடனான 'மனித நேய வலிந்து தாக்குதல்' பற்றிய உத்தியோகபூர்வ கட்டுக் கதையை குறிப்பிட்டார்ளூ 'எமது படையினர் போர்க்களத்திற்குச் செல்லும் போது, துப்பாக்கியை ஒரு கையிலும்;; மனித உரிமைகள் சாசனத்தை மறுகையிலும், அப்பாவிகளான இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவை தங்கள் தோள்களிலும், சிறு பிள்ளைகளுக்கான அன்பை மனதிலும் சுமந்து சென்றார்கள் எனறு கடந்த காலத்தில் நான் கூறியதை இப்போது நினைவு கொள்கிறேன்.'
 
கிடைக்கக் கூடியதாக இருக்கும் அனைத்து அறிக்கைகளின்படியும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வயதான சிவிலியன் பெற்றோர்கள் (இவர்கள் ஒருபோதும் புலிகள் அமைப்பை சேர்ந்திருக்கவில்லை என்பதோடு ஆயுதம் தரிக்காதவர்களாகவும் இருந்தார்கள்) சிவிலியன்களின் அணியோடு இணைந்து அரசுக் கட்டுபபாட்டுப்; பிரதேசத்துக்குள் வந்தார்கள். அவர்கள் ஒரு முகாமில் இருக்கும்போது தான் 'அடையாளம்' காணப்பட்டார்கள். எனினும் ஜனாதிபதி தனது பேச்சில், 'புலிகளின் தலைவர் இறந்தபின் அவரது பெற்றோர் எம்மால் பாதுகாக்கப்பட்டனர்ளூ அவர்கள் எமது பக்கத்திற்கு சுமந்து வரப்பட்டனர்.' (இந்த உண்மையற்ற கூற்றை சிங்களத்தில் மட்டும் அவர் தெரிவித்தார். உத்தியோகபூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பில் சிறிது மாறுதலான விடயம் தரப்பட்டிருந்தது)
 
ஸ்ரீலங்காப் படையினர், புலிகளின் தலைவரது பெற்றோரை (அவர்களை அறிந்திருந்த நிலையில்) தங்களது தோள்களில் காவிக்கொண்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுவந்தார்கள் என்ற இந்த கட்டுக்கதையையே வரலாற்றில் எழுதப்படப்போகிறது. இது உள்ளது உள்ளவாறான உண்மையல்ல. ஆனால் அதுதான் 'வெற்றியாளனின்' உண்மை. அந்த வகையிலே மில்லியன் கணக்கான சிங்கள மக்கள் அறியப்போவதும் நம்பப்போவதும் அதைத்தான்.
 
போருக்குப் பிந்திய அதிகாரத்துக்கான சமரில், ஜெனரல் பொன்;சேகா தோற்றுப்போனார். ராஜபக்ஷ சகோதரர்கள் வென்றனர். போர் பற்றிய வெற்றியாளனது வரலாற்றில் சரத் பொன்சேகாவுக்கு இடமில்லைளூ அங்கீகாரமும் இல்லைளூ அவர் யாரோ அனாமதேயமாக ஆக்கப்படுவார். ஏனெனில், ராஜபக்ஷ கதையின்படி (நாடும் அதன் மக்களும் செய்த புண்ணியத்தால் ஸ்ரீலங்காவில் பிறந்த) மஹிந்த ராஜபக்ஷவால் தான் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அவர் இந்தப் போரை அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோட்டபாயா ராஜபக்ஷவினது உதவியோடும் பெயரில்லாத வகை தொகையான போர் வீரர்களினதும் ஒத்தாசையுடனுமே வென்றிருக்கிறார்.
         
புலிகள் தோற்கடிக்கப்பட்டதை ஜெனரல் பொன்சேகா இல்லாமல் கொண்டாடுவதானது, டென்மார்க் இளவரசர் இல்லாமல் ஹம்லெற் நாடகத்தை நடிப்பது போன்ற யதாhத்தமற்ற செயல் ஆகும். போர்முயற்சியை வழிநடத்திய அரசியல்-படைய மும்மூர்த்திகளில் பொன்சேகாவும் ஒருவர். வெற்றிக்கான அவருடைய பங்களிப்பின் ஒவ்வொரு துளியும் ராஜபக்ஷ சகோதரர்களினது பங்களிப்பை போலவே முக்கியமானதாகும். போருக்கு பின்னதாக தங்களைப் பற்றிய கருத்துக்களைச் செழுமைப்படுத்தவும் தங்கள் குடும்பதிட்டங்களை விரிவுபடுத்தவும் இந்த வெற்றியை பயன்படுத்த வேண்டிய தேவை ராஜபக்ஷகளுக்கு இருந்தது. இது ஜெனரல் பொன்சேகாவைத் தவிர்க்க முடியாத கூட்டாளி என்ற நிலையில் இருந்து சகித்துக் கொள்ள முடியாத போட்டியாளர் என்ற நிலைக்கு மாற்றிவிட்டது. 'வெள்ளை கொடி' வழக்கில், தனது சாட்சியத்தில் ஒருபகுதியாக, போருக்கு பின்னதாக ராஜபக்ஷ சகோதரர்களுடனான தனது கூட்டுக்கு என்ன நடந்ததென்பது பற்றி, தனது தரப்பு விளக்கத்தை ஜெனரல் பொன்சேகா வெளியிட்டார். அவரது தரப்பு கதையானது சர்ச்சையினுடைய உண்மையான அடிப்படையாக, போரை வென்றதற்கான பாராட்டுகள் எப்படிப் பிரிக்கப்பட வேண்டும். என்பது இருப்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்த பாராட்டுகளில் குறிப்பிடத்தக்க பகுதி தனக்கு கிடைக்கவேண்டும் என்று ஜெனரல் பொன்சேகா நினைப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவரது உரிமை கோரல்கள் தங்கள் சொந்த அரசியல் நலன்களுக்கு அச்சுறுத்தலானவை என ராஜபக்ஷ சகோதரர்கள் நோக்கினார்கள்
 
போர்சமயத்திலான மும்மூர்த்திகள் அமைப்பு பின்வருமாறுஉருவானது :
படி ஐ : ஜெனரல் பொன்;சேகா பாதுகாப்பு ஆளணியினர் முதல்வராக நியமிக்கப்பட்டார் .இதை அவர் உண்மையான பதவியுயர்வாக கருதாது, முக்கிய இடத்திலிருந்து முக்கியத்துவமற்ற ஒரு உயர்பதவிக்கு உதைத்துத் தள்ளப்படுவதாகவே கருதினார். 'மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவை இராணுவத் தளபதியாக  நியமிப்பதற்காக ஜனாதிபதி தன்னை ஏமாற்றி, இராணுவத் தளபதி பதவியிலிருந்து அகற்றியதாக திரு. பொன்சேகா தெரிவித்தார். பாதுகாப்பு ஆளணியினர் முதல்வர் பதவியானது முப்படைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரங்களை கொண்டிருக்கும் என்று சொல்லியே அவர் என்னை ஏமாற்றினார். பாதுகாப்பு ஆளணியினர் முதல்வர் சட்டமூலத்தின்படி நடவடிக்கைகளை திட்டமிட்டு அவைகளுக்கு தலைமைதாங்கும் அதிகாரம் அந்த பதவிக்கு இல்லை என்று அவர் கூறினார்'(டெய்லிமிறர் - 26.5.2011)
 
படி ஐஐ : இராணுவத்தினுடைய 60வது வருடாந்த தினத்தைக் கொண்டாடுவதையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியிலே இருந்த, ஜெனரல் பொன்சேகாவின் படம்,அகற்றப்பட்டது. 'திரு. பொன்சேகாவின படம், நடவடிக்கைகள் அறையிலிருந்து அகற்றப்படும் என்றும், அதற்குப் பதிலாக ஜனாதிபதியின் படம் மாற்றீடு செய்யப்படும் என்றும், திரு.பொன்சேகாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலரால், ஜகத் ஜயசூரியவுக்கு வழங்கப்பட்ட இந்த ஆணை பற்றி, தான் வெறுப்படைந்திருப்பதாக திரு.பொன்சேகா கூறினார்.'(மூலம் : மேலே உள்ளது போல்).
 
படி ஐஐஐ : ஜெனரல் பொன்சேகா இராணுவப் புரட்சியொன்றுக்குத் திட்டமிடுவதான வதந்தி ஒன்று, ராஜபக்ஷ சகோதரர்களாலும் அவர்களது விசுவாசிகளாலும் பரப்பப்பட்டது. திரு. பொன்சேகா ' 2009 ஒக்ரோபர் 17ம் திகதி, சுகததாஸ விளையாட்டரங்கில், கிட்டத்தட்ட 2000 இராணுவ வீரர்கள் பங்கு கொண்ட இராணுவ சாகச நிகழ்ச்சிக்கான, ஒத்திகையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, அவர் (பொன்சேகா), இராணுவத்தினருடன் சேர்ந்து, அரசைக் கவிழ்க்கத் திட்டமிடுவதாக, இந்திய தூதுவருக்குத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான ஒரு செயற்பாடு நிகழ்வதைத் தடுக்க இந்திய அரசின் ஆதரவைக் கேட்டார்.' ( மூலம்: மேலே உள்ளது போல்).
 
இறுதியில், ராஜபக்ஷ சகோதரர்கள் தன்னை நம்பவில்லை என்று, ஜெனரல் பொன்சேகா முடிவாகக் கூறினார். 'ஜனாதிபதியுடனும் பாதுகாப்புச் செயலருடனும் இனி இணைந்து வேலைசெய்ய முடியாது என்று தான் உணர்ந்ததாக திரு. பொன்சேகா தெரிவித்தார். இராணுவத்துக்கு 3 வருடங்கள் 7 மாதங்கள் விசுவாசத்துடன் தலைமை தாங்கிய, நாட்டைப் புலிகளிடமிருந்து காப்பாற்றிய ஒருவர் மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்பது குறித்துத், தான் கவலைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 
     தான் தொடர்புபட்ட நிகழ்வுகள் எதையும் பிரசுரிக்கவோ அல்லது ஒளிபரப்புச் செய்யவோ வேண்டாம் என்று, லக்ஸ்மன் ஹுலுகல்லவால் வழங்கப்பட்ட கட்டளையின் நம்பகத் தன்மை பற்றி ஊடகவியலாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தன்னைக் கேட்டதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்புச் செயலரின் அறிவுறுத்தலின் பேரிலேயே, அந்தக் கட்டளை விடுக்கப்பட்டதாக, தான் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். இந்த மாதிரியான கழுத்தறுப்பு வேலைகளால், தான் வெறுப்படைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.' (மூலம்: மேலே உள்ளது போல்).
 
ராஜபக்ஷ மனப்போக்கு என்ன மாதிரியானதெனின், நாட்டைப் புலிகளிடமிருந்து தாங்கள் காப்பாற்றியதால், நாடு தங்களுக்கே சொந்தமானது என்ற வகைப்பட்டதாகும். வெற்றியாளரின் வரலாற்றினுடைய பிரதான நோக்கமாக, நித்தியமானதும் முழுமையானதுமான, ராஜபக்ஷ ஆட்சியை உறுதிப்படுத்துவது இருக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.