குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வெளிநாட்டு வினோதங்கள்

பதவி இழந்த மோப்பநாய்

அமெரிக்காவின் ஓரேகான் கடற்கரை நகரில் உள்ள கேனான் பீச் போலீஸ் பிரிவில் காஷ் என்ற 2 வயதான பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய் பணிபுரிந்துவந்தது.

ஆனால் சமீப காலமாக காஷின் வேலைகள் சரியாக இல்லை. அடிக்கடி மிரண்டது, உயரமான பொருட்களை கண்டால் பயந்தது. அதோடு குரைப்பதிலும் பிரச்சினை இருந்தது. சத்தத்தை கேட்டால் நடுங்கிவிடும். போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதில் தயக்கம் காட்டியது.

அதன் சுபாவமோ அப்படிப்பட்டது இல்லை. ஆனால் அதனை நாங்கள் கேனான் பீச் போலீசுக்கு ஏற்றவாறு பழக்க நினைத்தோம் என்று போலீஸ் அதிகாரி கூறினார். மோசமான வேலை காரணமாக காஷை வேலையை விட்டு போலீஸ் அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இப்போது அது தனது உண்மையான உரிமையாளரிடம் சென்றுள்ளது.

 

காற்று மாசை உறிஞ்சும் ரோபோக்கள்

காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி, அதனை எரிபொருளாக மாற்றவும், தாவரங்களை வளர்க்கவும் பயன்படும் வகையில் ரோபோக்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகிறார்கள். ஹாங்காங் தெருக்களில் ஏராளமான நியான் விளக்கு போர்டுகள் இருக்கும். இந்த ஒட்டுண்ணி வகை ரோபோவை நியான் விளக்கு பலகையில் பொருத்திவிட வேண்டும். இரவில் அந்த விளக்குகள் எரியும்போது அதில் இருந்து கிடைக்கும் வெப்பத்தால் காற்றில் உள்ள கார்பனை பாலிமர் பெயிண்ட் மூலம் உறிஞ்சிவிடும்.

 

அந்த கார்பன் மின்சாரம் தயாரிக்க பயன்படும். அதுமட்டுமின்றி பாலிமர் பெயிண்ட் சூடாகும்போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும். அது ரோபோவின் இறக்கைகளில் தாவரங்கள் வளருவதற்கு உதவியாக இருக்கும். எனவே ரோபோக்கள் இந்த மிகச்சிறிய பண்ணைகளை விரைவில் இரட்டிப்பாக்கிவிடும். இதன்மூலம் முக்கிய இலக்கான கார்பன்-டை-ஆக்சைடு காற்றில் குறையும். இப்போது இந்த ரோபோ அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கூட பரிசோதனையில் உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.