குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

07.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பயத்துடன் பன்னீர் ஆட்சி செய்கிறார்: அன்புமணி

திருப்பூர்: பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ், மண்ணெண்ணை மானியத்தை ரத்து செய்வது பொது விநியோக திட்டத்தை பாதிக்கும். ஒகேனக்கல் பகுதியை உரிமை கொண்டாடும் கர்நாடகாவிற்கு ஒரு அடி நிலத்தையும் விட்டு கொடுக்கமாட்டோம்.

முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் இருந்தாலும் பயத்துடனேயே ஆட்சி செய்கிறார். கூட்டணியில் யார் இருக்க வேண்டும் என்பதை விட, யார் இருக்க கூடாது என மக்கள் பெரிதும் கவனிக்கிறார்கள் என கூறினார்.

 

மன்னிப்பு கோரினார் ரஜினி சகோதரர்

திருச்சி: இன்று காலை திருச்சி வந்த நடிகர் ரஜினியின் சகோதரர், கர்நாடகா புதிய அணை கட்டுவதில் தவறில்லைஎனவும், இதனால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை எனவும் கூறியிருந்தார். இந்த தகவல்டிவிக்களில் வெளியானது. இதனையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக சத்யநாராயணா கூறியுள்ளார்.

 

செம்மரக்கட்டை கடத்திய 5 பேர் கைது; 3 வாகனங்கள் பறிமுதல்

வேலூர்: செம்மரக்கட்டை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 டன் உயர் ரக செம்மரக்கட்டைகளும், 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில், அணைக்கட்டு-வேப்பங்குப்பம் சாலையில் மாலை 6 மணியளவில் புதுசநத்தம் மலை கிராமத்தில், டாடா சுமோ வாகனத்தில் செம்மரம் கடத்துவதை அறிந்த போலீசார் அங்கு வந்தனர். அதிகாரிகளை பார்த்த கடத்தல்காரர்கள் தப்பி சென்றனர். போலீசாரிடம் கோவிந்தசாமி என்ற டிரைவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், மேலும் 2 வாகனங்களில் செம்மரம் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று, அந்த வாகனத்தை பிடித்தனர். வாகனத்திலிருந்த 2 டன் செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்திய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். செம்மரம் கடத்தலுக்கு பயன்பட்ட 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள், வேப்பங்குப்பம் வழியாக பெங்களூரு கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் உயர் ரகத்தை சேர்ந்தவை என போலீசார் கூறினர்.

 

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்-பாதுகாப்பு படையினர் மோதல்

ஊட்டி: தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள வயநாடு அருகேயுள்ள திருநெல்லி வனப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான தங்கும் விடுதியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவோயிஸ்ட்கள் சேதப்படுத்தினர். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

 

மாதிரி கிராமமாக மாற்றுவேன்: சபாநாயகர் உறுதி

இந்தூர்: பிரதமர் மோடியின் கிராம தத்தெடுப்பு திட்டத்தின்படி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ம..பி., மாநிலம் இந்தூர் அருகேயுள்ள போட்லாட் கிராமத்தை தத்தெடுத்து கொண்டார். இந்த கிராமத்தை ஒரு வருடத்திற்குள் மாதிரி கிராமமாக மாற்றுவேன் என கூறியுள்ளார். இங்கு அடிப்படை வசதிகள் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும் என கூறிய அவர், இந்தூரில் உள்ள மற்ற கிராமங்களும் மாதிரி கிராமமாக மாற்றப்படும் எனவும், மாதிர கிராமமாக மாற்ற மக்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார். ரூ.35 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்.

 

காஷ்மீரின் நூர்போரா கிராமத்தில் கையெறி குண்டுவீச்சில் சி.ஐ.எஸ்.எப்., ஜவான் காயம்

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நூர்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு மூலம் வீசி தாக்கியதில், மத்திய ரிசர்வ் போலீஸ் ஜவான் ஒருவர் காயமடைந்தார். இங்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இடுகாட்டில் தங்கிய கர்நாடக அமைச்சர்

பெலகாவி: மூட நம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த கர்நாடக சுங்கத்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி, 100 பேருடன், நேற்று இரவு இடுகாட்டில் தங்கினார். மேலும் அங்கேயே அவர்கள் இரவு உணவையும் எடுத்துக்கொண்டனர். மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தும் அவர், இடுகாட்டில் பேய்கள் இருக்கும் என்ற கருத்தை பொய்யாக்கவே தான் இங்கு தங்கியதாக கூறினார்.

 

அமெரிக்கா தாக்குதலில் அல்கொய்தா முக்கிய தலைவர் பலி

டேரா இஸ்மாயில் கான்: பாகிஸ்தானில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் மற்றும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் தாக்குதலில் ஒமர் பரூக் என்பவர் கொல்லப்பட்டதாகவும், இவர் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். அல்கொய்தா அமைப்பில் முக்கிய பதவி தரப்பட்ட முதல் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒமர் பரூக் எனவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

திருப்பதியில் இலங்கை அதிகாரிகள் ஆய்வு

திருப்பதி: திருப்பதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே விரைவில் வர உள்ளார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், திருப்பதியில் இலங்கை அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஆந்திர போலீசாரும் இருந்தனர்.

 

இந்தி கற்பிக்க பொன்.ராதாகிருஷ்ணன் யோசனை

நாகர்கோவில்: அனைத்து பள்ளிகளிலும், இந்தி மொழியை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் எனவும், பல மொழிகள் கற்பிக்கப்படுவது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

 

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்கள்: ராணுவம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், தாக்குதல் நடத்துவதற்காக சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என லெப்டினன்ட் ஜெனரல், சுபத்ரா சாகா கூறியுள்ளார். மேலும் அவர், பயங்கரவாதிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் எனவும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என கூறினார்.

 

இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு 1000 டன் குடிநீர் சப்ளை

மாலே: இந்தியாவிலிருந்து 1000 டன் குடிநீரை ஏற்றிச்சென்ற இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல் மாலத்தீவு தலைநகர் மாலேவை சென்றடைந்தது. அந்நாட்டில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால், அங்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் கோரிக்கைப்படி, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

 

பார்லி., முன் போரட்டம் நடத்த முடிவு

திருத்துறைப்பூண்டி: கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்க வலியுறுத்தி, வரும், 15ம் தேதி, பார்லிமென்ட் முன், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் கூறுகையில், 'கர்நாடக அணைகள் நிரம்பிய பின்னரே, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக அரசு, காவிரியில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணை, குடிநீருக்காவும், மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகவும் என அறிவித்திருப்பது, தமிழக விவசாயிகளை ஏமாற்றும் வேலை. அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என, விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ஏற்கெனவே அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே, அணை கட்டும் முயற்சியை கைவிட வலியுறுத்தி, வரும், 15ம் தேதி , பாராளுமன்றம் முன், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்,' என்றார்.

 

மாநில அரசுகளுக்கு இடம்-மோடி

புதுடில்லி: திட்டக்கமிஷனில் மாநில அரசுகளின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். முதல்வர்கள் மாநாட்டில் பேசிய அவர், தற்போதுள்ள திட்டக்கமிஷன் மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம். அதில், பிரதமர், முதல்வர்கள் ஒரு குழுவாகவும், பிரதமர், கேபினட் அமைச்சர்கள் ஒரு குழுவாகவும், பிரதமர், அதிகாரிகள் ஒரு குழுவாகவும் செயல்பட வேண்டியது முக்கியம். இந்த டீம் இந்தியா மூலம், திட்டக்குழுவில் மாநிலங்களுக்கும் இடம் கிடைத்து, அவை தங்களின் தேவைகள் குறித்து முடிவெடுக்க முடியும்,' என்றார்.

 

ஜுன் 21-உலக யோகா தினம்-சுஷ்மா

புதுடில்லி: ஜுன் 21ம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. மிக விரைவில் அறிவிப்பை வௌியிட உள்ளது என, வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று தெரிவித்தார். இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு சர்வதேச அளவில் 170 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அதிகாரப் பரவல்-அருண்ஜெட்லி பேட்டி

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த முதல்வர்கள் மாநாடு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, 'திட்டக்குழுவில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை பெரும்பாலான முதல்வர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.ஒரு திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றதாக இருக்க முடியாது. எனவே, திட்டக்கமிஷனில் மாநிலங்களுக்கு அதிகாரப் பரவல் மூலம், அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கு, திட்டக் கமிஷனில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம்,' என்றார்.

 

திட்டகமிஷனுக்கு பதில் டீம் இந்தியா

புதுடில்லி: மத்தியில் பா.ஜ., பதவி ஏற்றவுடன், திட்டக்கமிஷனின் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும் என முடிவெடுத்தது. இந்நிலையில், திட்டக்கமிஷனில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மாநில முதல்வர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இன்று பிரதமர் மோடியின் இல்லத்தில் முதல்வர்கள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பெரும்பாலான முதல்வர்கள், திட்டக்கமிஷனில் மாநில அரசுகளுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, திட்டக்கமிஷனின் தற்போதைய செயல்பாடுகளுக்கு பதில் டீம் இந்தியா என்ற பெயரில் மூன்றடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். பிரதமர், முதல்வர்கள் அடங்கிய ஒரு குழு. பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அடங்கிய ஒரு குழு. மூன்றாவதாக பிரதமர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு என, மூன்று குழுக்கள் கொண்டதாக திட்டக்கமிஷனை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெட்லி கூறி உள்ளார்.

 

பி.எஸ்.எப்.,பிற்கு உள்துறை உத்தரவு

புதுடில்லி: காஷ்மீர் எல்லை பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள், காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஊடுருவி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்து, ஊடுருவலை தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த மோதலில், 11 ராணுவத்தினர் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும், தொடர்ந்து ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சி .மேற்கொண்டுள்ளதாகவும், எனவே, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் எல்லை பாதுகாப்பு படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

 

டில்லியில் பெடரர், ஜோகோவிச்

புதுடில்லி: ஐ.பி.டி.எல்., டென்னிஸ் தொடரில் பங்கேற்க சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இன்று இந்தியா வந்தனர். இந்திய டென்னிஸ் வீரர் பூபதி உருவாக்கிய, முதலாவது சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.,) தொடர் நான்கு சுற்றுகளாக நடக்கிறது. இதில் இந்தியன் ஏசஸ், சிங்கப்பூர் ஸ்லாமர்ஸ், யு.ஏ.இ., ராயல்ஸ், மணிலா மாவெரிக்ஸ் என நான்கு அணிகள் பங்கேற்கின்றன. மணிலா, சிங்கப்பூரில் முதலிரண்டு சுற்றுகள் நடந்தன. மூன்றாவது சுற்று டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங்கில் முதலிரண்டு இடங்களில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இன்று டில்லி வந்தனர். இவர்களுக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பெடரர், இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா, செர்பியாவின் அனா இவானோவிச் உள்ளிட்டோர் அடங்கிய இந்தியன் ஏசஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். ஜோகோவிச், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, குரோஷியாவின் மரின் சிலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ள யு.ஏ.இ., ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். நாளை நடக்கவுள்ள போட்டியில் இந்தியன் ஏசஸ், யு.ஏ.இ., ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் ஜாம்பவான்களுக்கான ஒற்றையரில் பெடரர், ஜோகோவிச் மோத இருப்பது இந்திய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தவிர, கலப்பு இரட்டையரில் பெடரர், சானியா மிர்சா ஜோடி சேர உள்ளனர்.

 

பழமையான இரும்பு உலை கண்டுபிடிப்பு?

விருத்தாசலம்: விருத்தாசலத்தை அடுத்த நடிகப்பட்டு என்ற இடத்தில், வனத்துறைக்கு சொந்தமான முந்திரிகாடு உள்ளது. இந்த காட்டிற்குள் நுழைந்து, அங்குள்ள இரும்பு வளம் கொண்ட மண்ணை சில மர்ம நபர்கள் அள்ளிச் செல்வதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, வருவாய்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் வரலாற்று பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், தனது குழுவினருடன் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'கி,பி., 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் இந்த இடத்தில் இரும்பு உலை செயல்பட்டிருக்கலாம். கி.பி.12ம் நூற்றாண்டில், சேந்தமங்கலத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த கோப்பெரும்சிங்கன் என்ற பல்லவ மன்னன்,போர் தளவாடங்களை இங்கு அமைக்கப்பட்ட இரும்பு உலையில் தயார் செய்திருக்கலாம். முந்திரிகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரியை சோதனை செய்தபோது, அதில் 65 சதவீதம் என்ற அளவில் இரும்பு கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், அதை சுத்தப்படுத்தும் போது, 96 சதவீதம் என்ற அளவில் இரும்பு கிடைத்துள்ளது. எனவே, இங்கு இரும்பு உலை செயல்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என்றார்.

 

தடுப்பணை: ரஜினியின் சகோதரர் பேட்டி

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட், அங்குள்ள ராகவேந்திரா கோவிலில், வௌ்ளி ரத தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'காவிரியின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,' என்று கூறினார்.

 

விஞ்ஞானிகளுக்கு பிரணாப் பாராட்டு

புதுடில்லி: இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட் 16ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளின் இந்த சாதனை நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முலாயம்சிங்- லாலு இன்று சந்திப்பு

பாட்னா: ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் லாலு , இன்று உ.பி. ,மாநிலம் சென்றார். இங்கு அவர் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கை சந்தித்து பேசுகிறார்.

 

100 பயங்கரவாதிகளை வீழ்த்தினோம்: ராணுவம்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் ராணுவ லெப்டினன்ட் சுபரதா ஜகதா கூறுகையில், 2013-ல் 62 பேர் - 2014 ல் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

 

மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கோரிக்கை

கோவை: கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா,.பாண்டியன், 'ஆந்திர, கேரள மற்றும் கர்நாடக அரசுகளின் தடுப்பணை கட்டும் முயற்சிகளை மத்திய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் சகாயம் ஐ.ஏ.எஸ்., குழுவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரி உள்ளார்.

 

லஷ்கர் இ தொய்பா சதி திட்டம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதலுக்கு லஷ்கார் இ தொய்பா பயங்கரவாத அமைப்பே காரணம் என, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது வழக்கமான ஊடுருவல் இல்லை என்றும், தேர்தலை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட ஊடுருவல் மற்றும் தாக்குதல் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தஞ்சையில் தே.மு.தி.க, ரயில் மறியல்

தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு தடுப்பணை கட்ட முயற்சி எடுத்துள்ளதை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

 

பாகிஸ்தான் பின்னணி அம்பலம்

ஜம்மு: ஊரி பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர்கள் பதுங்கியிருந்த இடங்களை ராணுவத்தினர் சோதனையிட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்கள், உணவு, மருந்து பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை சோதித்ததில், அவை அனைத்தும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. மேலும்,கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தான் ராணுவத்தால் வழங்கப்பட்டவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சகா செய்தியாளர்களிடம் கூறினார்.

 

பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

புதுடில்லி:முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டில்லி சென்றுள்ள முதல்வர் பன்னீர்செல்வம், வங்கியில் பணம் செலுத்தும் நேரடி மானிய திட்டத்தை மாநில அரசுகளின் மூலமாகவே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 

பெண்ணை சிறுத்தை விரட்டியதால் பீதி

வால்பாறை: வால்பாறை, குரங்குமுடி பகுதியில், தனியார் காபி எஸ்டேட்டில் பணிபுரியும் ராஜாமணி என்ற பெண், இன்று காலை குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு, கோழிகளை பிடித்து உண்பதற்காக பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று, ராஜாமணியை விரட்டியது. அலறி அடித்தபடி ஓடிய அவர், தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பீதி நிலவுகிறது

 

ஏர் இந்தியாவில் சிக்கன நடவடிக்கை

புதுடில்லி: தொர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிக்கும்படி கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், ஏர் இந்தியா அதிகாரிகள் குழு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவை சந்தித்தது. அந்த கூட்டத்தில், ஏர் இந்தியாவி்ன் தற்போதைய செலவினங்களில் 10 சதவீதத்தை குறைக்க வேண்டும் என்றும், பயணிகள் வசதிக்கான செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

டில்லி கற்பழிப்பு: டிரைவர் கைது

புதுடில்லி: டில்லியில், காரில் வைத்து பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்த புகாரில், போலீசார் அந்த காரின் டிரைவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரை, உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

 

முதல்வர்கள் மாநாடு துவங்கியது

புதுடில்லி: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், முதல்வர்கள் மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் திட்டக்குழுவை மாற்றியமைப்பது தொடர்பாக முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஒபாமா வருகை: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகை தர உள்ளார். அவரின் வருகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, டில்லி நகரம் முழுவதும் சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

காஷ்மீர்: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

ஸ்ரீநகர்: இந்திய நிலைகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்துள்ளனர். இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

ராகுல் பேச்சு சிறுபிள்ளைத்தனம்-பா.ஜ.,

புதுடில்லி: பிரதமர் மோடி செல்லும் மாநிலங்களில் எல்லாம் மதமோதல்கள் நடக்கின்றன என, காங்.,துணைத் தலைவர் ராகுல் பேசியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., பயங்கரவாத தாக்குதல்களை அடிப்படையாக வைத்து ராகுல் பேசியுள்ள இந்த பேச்சு, சிறுபிள்ளைத்தனமானது,' என்று கூறி உள்ளது.

 

விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு

பெங்களூரு: இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜி சாட் 16, பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்திலிருந்து ஏரியான் 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படது. இதையடுத்து, ஜிசாட் 16 விஞ்ஞானிகள் குழுவை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டி உள்ளார். இது குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ள மோடி, 'வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜிசாட் 16 செயற்கைகோள், நாட்டின் மிகப் பெரிய சொத்து ஆகும். இந்த வெற்றியின் பின்னணியில் இருந்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பெங்களூரு:மீண்டும் ஏடிஎம் கொள்ளை

பெங்களூரு : பெங்களூருவில் ஏ.டி.எம்., மையத்திற்கு சென்ற பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி, அவரது மொபைல் மற்றும் பர்சை மாணவர்கள் இருவர் கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

 

மோடிக்கு ஆதரவு தர மம்தா நிபந்தனை

கோல்கட்டா : அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டால் மோடி அரசுக்கு தனது முழு ஆதரவையும் அளிக்க தயாராக இருப்பதாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் முயற்சியை தான் அனுமதிக்க முடியாது எனவும், பா.ஜ., நாட்டை விற்க நினைக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

 

ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு

சென்னை : இலங்கை அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிடும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிசம்பர் 10ம் தேதி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்கு பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும்ராஜபக்ஷே இந்தியா வருவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ள அக்கட்சிகள், ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

 

டாகாவிற்கு நேரடி பஸ் வசதி துவக்கம்

புதுடில்லி: வங்க தேச தலைநகர் டாகாவிற்கு செல்வதற்கான நேரடி பஸ் வசதி வரும் 10-ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது. இந்த பஸ் வசதி அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகர் வழியாக டாகா செல்லும் வகையி்ல் பயண திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. விரைவில் இந்தியா-வங்க தேசம் இடையே ரயில் பாதை பயணத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட உள்ளது. விழாவில் மத்திய அரசி்ன் சாலை போக்கு வரத்து துறை, மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் அசாம், மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் 25-ம் தேதி புதுடில்லியில் இருந்து நேபாளத்திற்கு துவக்கப்பட்ட பஸ் பயணத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

ஏமனில் பிணைய கைதிகள் படுகொலை

வாஷிங்டன்: ஏமன் நாட்டில் கடத்தி செல்லப்பட்ட அமெரிக்கா மற்றும் .ெதென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்களை அல்குவை தா இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து அமெரிக்காவின் பதுகாப்பு துறை செயலாளர் சக்ஹாகெல் கூறியிருப்பதாவது: கடந்த ஒராண்டிற்கு முன்னர் அமெரிக்காவை சேர்ந்த லூக் சோமர்ஸ் மற்றும் தென் ஆப்ரிகாவை சேர்ந்த பியர்ரி கோர்கி ஆகியோர் அல்குவைதா இயக்கத்தினரால் கடத்தி செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

சாலை விபத்தில் என்.டி.ஆர் பேரன் பலி

ஐதராபாத்: .தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் என்.டிஆரின் பேரன் நந்தமுரிஜானகிராமன் பலியானார். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவின் மகன் நந்தாமுரி ஹரிகிருஷ்ணா. தெலுங்கு தேச கட்சி தலைவர்களி்ல் முக்கிய பிரமுகராக விளங்கி வருகிறார். இவரது மகன் ஜானகி ராமன் .இவர் என்.டி.ஆர்.ஆர்ட்ஸ் என்ற பெயரில் சினிமா படங்களை தயாரித்து வந்தார். இந்நிலையில் இவர் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு காரை ஒட்டிச் சென்றார் அப்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நலகொண்டா மாவட்டம் அகுபமலா என்ற கிராமம் அருகே வரும் போது டிராக்டர் ஒன்றுடன் கார் மோதியது. பலத்த காயமடைந்த ஜானகிராமன் மீட்கப்பட்டு அருகி்ல் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பலியானார்.

 

வரும் 10-ம் தேதி ரஷ்ய அதிபர் இந்தியா வருகை

புதுடில்லி: வரும் 10-ம் தேதி ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார். இது குறித்து மத்திய வெளியறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது: வரும் 10-ம் தேதி ரஷ்ய அதிபர் புடின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா-ரஷ்யாவின் 15-வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் மும்பையில் வைரம் பட்டை தீட்டும் தொழில் பூங்கா அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி ரஷ்யாவின் எண்ணெய் வயல்களில் முதலீடுசெய்வது குறித்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிகே படத்தை பார்க்க பிரதமர் மோடிக்கு நடிகர் அமிர் கான் கோரிக்கை

புதுடில்லி: பிரதமர் மோடி, பல வேலைகளுக்கு மத்தியில் தீவிரமாக இருந்தாலும், நான் நடித்த பிகே படத்தை பார்த்தால் பார்த்தால் நன்றாக இருக்கும் என பாலிவுட் நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.

 

நள்ளிரவில் அதிகாரிகள் சிறைபிடிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் உள்ள நரசிம்மபல்லவன் என்பவருக்கு சொந்தமான குடோனில் 603 சிலிண்டர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உணவு திருட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், தாசில்தார், டி.எஸ்.ஒ., உள்ளிட்ட அதிகாரிகள் குடோனை ஆய்வு செய்து சீல் வைத்தனர். இதனையடுத்து அதிகாரிகளை குடோன் காம்பவுண்டிற்குள் வைத்து, குடோன் உரிமையாளர்கள் மெயின் கேட் வாசலுக்குபூட்டு போட்டனர். இதனையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டை உடைத்து அதிகாரிகளை விடுவித்தனர்.

 

32வது நிமிடத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஜிசாட்-16

பெங்களூரு: பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட்ட ஜிசாட்-16 செயற்கைக்கோள், 32வது நிமிடத்தில் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

 

இன்று முதல்வர்கள் மாநாடு: மம்தா, ஒமர் புறக்கணிப்பு

புதுடில்லி: திட்டக்கமிஷனுக்கு பதில் புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்ய டில்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு துவங்கும் இந்த மாநாட்டில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முதல்வர் ஒமர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு பதில் பிரதிநிதி ஒருவர் பங்கேற்பார்கள் என இரு மாநிலஅரசு அறிவித்துள்ளது. இதனிடையே, திட்டகமிஷனை கலைப்பதற்கு ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திட்டக்கமிஷன் கலைக்கப்படுவதற்கு பீகார் முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பார் என கூறினார்.

 

விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-16 செயற்கைக்கோள்

பெங்களூரு: தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட் 16 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3,181 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோளில் 48 சாதனங்கள் உள்ளன. இஸ்ரோ உருவாக்கிய செயற்கைகோளில் மிகப்பெரிய செயற்கைகோள் இதுவாகும். டிவி, ரேடியா சேவைகள், பெரிய அளவிலான இண்டர்நெட் சேவை, தொலைபேசி சேவை ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு இந்த செயற்கை கோள் உதவும்.

 

6 வயது சிறுமியை கற்பழித்த 60 வயது முதியவர்

புதுடில்லி: டில்லியின் அமன் விகார் பகுதியில், 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் கற்பழித்துள்ளார். அவர் அந்த சிறுமியின் உறவினர் என தெரியவந்துள்ளது. சிறுமி கடைக்கு சென்ற போது, முதியவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனதுதாயாரிடம் கூறியுள்ளார். தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளியைதேடி வருகின்றனர்.

 

பழம்பெரும் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(91) நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இருமல் மற்றும் சளி தொல்லை காரணமாக அவதிப்படுவதாகவும், அவருக்கு ஆன்டி பயாடிக் மருந்து செலுத்தப்படுவதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

 

உ.பி., அதிக பலனடைய வேண்டும்: அகிலேஷ்

லக்னோ: பிரதமர் மோடி மற்றும், ராஜ்நாத் , பாரிக்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் உ.பி.,யில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதால், மாநிலம் அதிக பலனடைய வேண்டியது அவசியம் என முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.மேலும் அவர், மாநிலத்தில் சமாஜ்வாடி ஆட்சி உள்ளது. இதனால் பலனடைய முன்னெடுத்து செல்ல வேண்டும். மக்களுக்கும் அதிக பலன்கள் கிடைக்க வேண்டும். டில்லியில் இன்று முதல்வர்கள் மாநாடுநடைபெறுகிறது. இதில் பல மாநில முதல்வர்கள் பங்கு பெற உள்ளனர். மாநாட்டிற்கான அஜென்டா கிடைத்துள்ளது. மாநாட்டில் எனதுகருத்தினை எடுத்து வைப்பேன் என கூறினார்.

 

பயங்கரவாத பிரச்னையை அரசியலாக்குகிறார் ராகுல்: பா.ஜ., பதிலடி

புதுடில்லி: பயங்கராத பிரச்னை குறித்து பிரதமர் மோடியை ராகுல் விமர்சித்ததது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., காங்கிரஸ் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாகவும், பயங்கரவாத பிரச்னையை அரசியலாக்க ராகுல் முற்படுவதாகவும் கூறியுள்ளது.

 

மோடி ஆட்சியில் பயங்கரவாத செயல் அதிகரிப்பு: ராகுல்

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், மோடி ஆட்சிக்கு வந்ததும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில், காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால் மோடி ஆட்சியில் பயங்கரவாதிகள் வருகின்றனர் என கூறினார்.

 

மோடி ஆட்சியில் பயங்கரவாத செயல் அதிகரிப்பு: ராகுல்

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், மோடி ஆட்சிக்கு வந்ததும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில், காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால் மோடி ஆட்சியில் பயங்கரவாதிகள் வருகின்றனர் என கூறினார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.