குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 30 ம் திகதி செவ்வாய் கிழமை .

மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?

காத்­மண்­டுவில் நடை­பெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது, னா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு, னா­தி­பதி மகிந்தவுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, வாழ்த்துக் கூறி­யது, தமிழ்­நாட்டு அர­சி­யலில் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, ஜனா­தி­பதித் தேர்­தலில் இந்­தியா, எதி­ர­ணியின் பொது­ வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தான ஒரு கருத்து இலங்கை அர­சியல் வட்­டாரங்­களில் நிலவி வரு­கி­றது.

ஒரு பக்­கத்தில் மஹிந்த ராஜ­பக்ச­வுக்கு வாழ்த்துக் கூறி­ய­தற்­காக கல்­லெறி வாங்கும் இந்­திய மத்­திய அர­சாங்கம் இன்­னொரு பக்­கத்தில் எதி­ர­ணியின் பொது ­வேட்­பா­ளரை ஆத­ரிப்­ப­தான ஊகங்­க­ளுக்­குள்­ளேயும் சிக்­கி­யி­ருக்­கி­றது.

இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில், இந்­தி­யாவின் நிலைப்­பாடு என்ன என்ற கேள்வி அண்மை நாட்­க­ளா­கவே இருந்து வரு­கி­றது. ஆனால் இந்­தியா, ஒரு­போதும், வெளிப்­ப­டை­யாக எந்­த­வொரு வேட்­பா­ள­ரையும் ஆத­ரிப்­ப­தாக கூறப்­போ­வ­தில்லை.

இது இன்­னொரு நாட்டின் உள்­நாட்டு விவ­காரம் என்றும், அதில் இந்­தியா தலை­யி­டாது என்றும் மிக இலா­வ­க­மாக நழுவிக் கொள்ளும். அதற்­காக, இந்த தேர்­தலில் இந்­தி­யா­வுக்கு எந்த எதிர்­பார்ப்பும் இல்லை என்றோ, எந்­த­வொரு வேட்­பா­ள­ரையும் ஆத­ரிக்க முனை­யாது என்றோ கரு­து­வ­தற்­கில்லை.

இந்­தி­யாவின் நலன்­களைப் பாது­காக்­கத்­தக்க வேட்­பாளர் யார் என்­பதைக் கருத்தில் கொண்டு, அவரை ஆத­ரிக்க இந்­தியா முனையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

வெளிப்­ப­டை­யாக இல்­லா­விட்­டாலும், இர­க­சி­ய­மான முறை­யி­லேனும் இந்­தியா ஏதோ ஒரு வேட்­பா­ளரை ஆத­ரிக்கும்.

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணியில் தான், இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் அஜித் டோவல் கடந்­த­ வாரம் இரண்டு நாள் பய­ண­மாக இலங்­கைக்கு வந்­திருந்தார்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்­னமும், சுமார் ஒரு மாதம் வரையே உள்ள சூழலில், இந்­திய தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் அஜித் டோவல் இலங்­கைக்கு வந்து, முக்­கிய அர­சியல் தரப்­பு­க­ளுடன் பேசி­யுள்­ளது கவ­னிக்­கத்­தக்­க­தொரு விடயம்.

அஜித் டோவலின் பய­ணத்தின் அடிப்­படை நோக்கம், காலியில் நடந்த கடல் பாது­காப்புக் கருத்­த­ரங்கில் பங்­கேற்­பது தான் என்­பதில் ஐய­மில்லை. ஆனால், அந்த நோக்­கத்­துக்கு அப்­பாலும் அவர், இலங்­கையில் சந்­திப்­பு­களை நடத்­தி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதித் தேர்தல் நடக்­க­வுள்ள நேரத்தில், பல்­வேறு தரப்­பி­ன­ரையும் இந்­தி­யாவின் மிக முக்­கி­ய­மா­ன­தொரு அதி­காரி சந்­தித்துப் பேசி­யதை அவ்­வ­ளவு இல­கு­வாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளான மஹிந்த ராஜபக்ச, மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரை மட்­டு­மன்றி, இலங்கை அர­சி­யலில் முக்­கி­ய­மான சக்­தி­க­ளான ஐ.தே.க., தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகி­ய­வற்­றையும் அஜித் டோவல் சந்­தித்­தி­ருந்தார்.

ஐ.தே.க. குழு­வி­ன­ருடன் நடத்­திய சந்­திப்பின் ஒரு பகு­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் தனி­யா­கவும் 10 நிமி­டங்கள் பேசி­யி­ருக்­கிறார் டோவல்.

அது­போல, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வையும் சந்­தித்­துள்ளார்.

வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாது­காப்­புச் ­செயலர் கோத்­த­பாய ராஜபக்ச ஆகி­யோரை தனி­யா­கவும் சந்­தித்­தி­ருக்­கிறார்.

இந்தச் சந்­திப்­புகள் அனைத்­திலும் இரண்டு விட­யங்­களும் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­கி­றது.

ஒன்று பாது­காப்பு ரீதி­யான விட­யங்கள், அடுத்­தது அர­சியல் ரீதி­யான விட­யங்கள்.

இலங்­கையில் சீனத் தலை­யீ­டுகள் பற்­றிய இந்­தி­யாவின் கவ­லைகள், அது­பற்­றிய இலங்கைத் தரப்­பு­களின் நிலைப்­பா­டுகள் மற்றும் அணு­கு­மு­றைகள் என்ன என்­பதை அறிந்து கொள்­வது டோவலின் முத­லா­வது நோக்­க­மாக இருந்­தது.

அடுத்து, அர­சியல் ரீதி­யான நிலை­மைகள், அதில் ஏற்­படக்கூடிய மாற்­றங்கள், அதன் தாக்­கங்கள் எப்­ப­டி­யா­ன­தாக இருக்கும் என்­பது டோவல் கவனம் செலுத்­திய இரண்­டா­வது விட­ய­மாகும்.

இந்த இரண்டு அடிப்­படை விட­யங்­க­ளும் தான், இந்­தியா யாரை ஆத­ரிப்­பது என்­பதை தீர்­மா­னிக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. இலங்­கையில் சீனாவின் தலை­யீடு இந்­தி­யா­வுக்குப் பெருந்­த­லை­வ­லி­யாக மாறி­யி­ருக்­கி­றது.

முன்னர் பொரு­ளா­தார ரீதி­யாக இருந்த தலை­யீ­டுகள் இப்­போது இரா­ணுவத் தலையீ­டு­க­ளாக மாறத் தொடங்­கி­யுள்­ளதை, இந்­தி­யாவின் சமீ­பத்­திய கருத்­துகள் உணர்த்­து­கின்­றன.

சீன நீர்­மூழ்­கி­களின் வரு­கைக்குப் பின்னர், தான் இந்­தியா இது­பற்றி வெளிப்ப­டை­யாக கொஞ்சம் பேசத் தொடங்கியுள்­ளது.

இந்­திய பாரா­ளு­மன்­றத்தில் வெளி­ வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சமர்ப்­பித்த அறிக்­கையின் மூலம் மட்­டு­மன்றி, காலி கடல் பாது­காப்பு மாநாட்டில், தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் அஜித் டோவல் சூச­க­மாக வெளி­யிட்ட கருத்­து­களும், இந்­தியப் பெருங்­கடல் பகு­தியில் சீனாவின் இரா­ணுவத் தலை­யீ­டு­களை இந்­தியா விரும்­ப­வில்லை என்­பதை எடுத்துக் காட்­டு­கி­றது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சி தான் சீனாவின் பொரு­ளா­தார வலைக்குள் இலங்கையை கொண்டு சென்று வீழ்த்­தி­யது.

இந்­தியா பல­முறை எச்­ச­ரித்தும் கூட, சீனாவின் பக்­கத்தில் இருந்து இலங்கை அர­சாங்­கத்தை வெளியே கொண்டுவர முடி­ய­வில்லை.

சீனாவின் நிழலில் இருப்­ப­தான துணிச்­சலில், இந்­தி­யாவுக்கு கொடுக்­கின்ற வாக்­கு­று­தி­களைக் கூட அலட்­சியம் செய்து வந்­தி­ருக்­கி­றது ராஜபக்ச அர­சாங்கம்.

இந்­த­நி­லையில், மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்­சிக்கு வந்தால், இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்து விடும் என்ற கவலை இந்­தி­யா­வுக்கு ஏற்­ப­டு­வது இயல்­பான ஒன்று தான்.

இந்த அடிப்­படைக் கார­ணத்தை வைத்துத் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இந்­தியா ஆத­ரிப்­ப­தான கருத்து, உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, அஜித் டோவல் சந்­தித்­ததை வைத்து இந்த ஊகம் இன்­னமும் வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால், அஜித் டோவல் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தது வழ­மைக்கு மாறா­ன­தொரு விட­ய­மல்ல என்­பதே இந்­திய ஆய்­வா­ளர்­களின் கருத்­தாக உள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் இரு­த­ரப்­பி­ன­ரையும் சந்­திப்­பது வழக்­க­மா­னது தான்.

இதில் பார­பட்சம் காட்­டப்­ப­ட­வில்லை என்று இந்­தியத் தரப்பு கூறு­கி­றது. எவ்­வா­றா­யினும், மஹிந்த ராஜபக்ச எப்­ப­டிப்­பட்­டவர், அவ­ரது அணு­கு­மு­றைகள் என்ன என்­பதை இந்­தியா நன்­க­றியும்.

அது­போ­லவே, எதி­ர­ணியில் உள்ள சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க போன்­ற­வர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள், அவர்­களின் அணு­கு­மு­றைகள் எப்­ப­டிப்­பட்­டவை என்­ப­தையும் இந்­தியா அறியும்.

ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன எப்­ப­டிப்­பட்­டவர், அவர் எப்­ப­டி­யான அணு­கு ­மு­றை­களை கைக்­கொள்வார், அவ­ரது கொள்கை என்ன என்­பதை இந்­தியா அவ்­வ­ள­வாக அறிந்­தி­ருக்­க­வில்லை.

எனவே, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்பை நிச்­சயம் அஜித் டோவல் வேறு­பட்­ட­தொன்­றாகத் தான் அணு­கி­யி­ருப்பார் என்­பதில் சந்­தே­க­மில்லை. -இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள் குறித்த அவ­ரது கருத்து, நிலைப்­பாடு என்ன?

* வெற்றி பெற்றால் இந்­தி­யா­வு­ட­னான அவ­ரது உற­வு­களின் தன்மை எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்கும்?

* 13வது திருத்­தச்­சட்டம் தொடர்­பான நிலைப்­பாடு என்ன?

* தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­களில் அவ­ரது நிலை என்ன?

என்று அறிந்து கொள்­வதில் அஜித் டோவல் ஆர்வம் காட்­டி­ய­தாக தக­வல்கள் கூறு­கின்­றன.

இந்த விட­யங்கள் எதி­லுமே, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச இந்­தி­யாவைத் திருப்­திப்­ப­டுத்தக் கூடிய வகையில் நடந்து கொண்­டவர் அல்ல.

மஹிந்த ராஜபக்சவின் அர­சாங்­கத்தில் இருந்து வந்­தி­ருக்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இருந்து, பெரி­ய­தொரு மாற்­றத்தை இந்­தியா எதிர்­பார்க்­காது போனாலும், குறிப்­பி­டத்­தக்க விட­யங்­களில், இந்­தி­யா­வுக்கு சார்­பான நிலை அவ­ரிடம் தென்­ப­டு­கி­றதா என்­பதை எதிர்­பார்க்கும்.

சீனா விட­யத்தில் இனி­மேலும் நெருக்­க­மா­வ­தில்லை என்றும், இந்­தி­யா­வுடன் உறவை வலுப்­ப­டுத்­து­வ­தென்றும் எதி­ரணித் தரப்பில் இந்­தி­யா­வுக்கு வாக்­கு­று­திகள் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­கி­றது.

ஆயினும், 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, தமிழ் மக்­க­ளு க்கு அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­பது போன்ற விட­யங்­களில், மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்­தி­யா­வுக்குத் திருப்­தி­ய­ளிக் கும் விதத்தில் நடந்து கொள்ளத் தயா­ரி ல்லை என்றே அறி­யப்­ப­டு­கி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன எப்­போதும் தமிழர் பிரச்­சினை விட­யத்தில், ஆக்­க­பூர்­வ­மாக செயற்­பட்ட ஒரு தலை­வ­ரல்ல.

சிங்­களத் தேசி­ய­வாத நிலைப்­பாட்­டையே அவர் வெளிப்­ப­டுத்தி வந்­தவர். அதை­விட இப்­போது அவர் சிங்­களத் தேசி­ய­வாத அமைப்­பு­களின் ஆத­ரவுப் பிடி­யிலும் சிக்­கி­யுள்ளார் என்­பதால், தேர்தல் நேரத்தில் எந்த வாக்­கு­று­தி­யையும் வழங்கக் கூடிய நிலை­யிலும் இல்லை.

எவ்­வா­றா­யினும், இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், மஹிந்த ராஜபக்சவை விட வும், மைத்­தி­ரி­பால சிறி­சேன, சற்று சாத­க­மா­னவர் என்றே கணிப்­ப­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், தமிழர் பிரச்­சினை மற்றும் 13வது திருத்தம் என்­பன அதற்கு இரண்­டா­வது பட்­ச­மா­கவே இருக்கும். இந்தியாவின் முதல் கரிசனை என்பது அதன் பாதுகாப்புத் தான்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு மைத் திரிபால சிறிசேன சாதகமானதொரு நபராகவே கருதப்படுவார். சீன சார்பில் இருந்து விடுபடவும், இந்திய உறவை மேம்படுத்தத்தக்க ஒருவராகவும் அவர் இருக்கிறார்.

இவை மைத்திரிபாலவுக்கு இந்தியா ஆதரவு கொடுப்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

அதேவேளை, இந்தியாவுக்கு இன்னொரு சிக்கலும் உள்ளது. வெளிப்படையாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முயன்றால், ஒருவேளை மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்று விட்டால் ஆபத்தாகவும் அமைந்து விடும்.

சரத் பொன்சேகாவை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்ததன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.

அதுபோலவே, மூன்றாவது தடவையும் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு விட்டால், இந்தியாவை தூர விலக்கி விட்டு, அவர் சீனாவின் பக்கம் சாய்ந்து கொள்வாரோ என்ற பயமும் இந்தியாவுக்கு இருக்கவே செய்யும்.

எனவே, இந்தியா இப்போது, மதில் மேல் பூனையாகவே விரும்பும். அதுவே இந்தியாவுக்குப் பாதுகாப்பானது.