குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

06.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மத்திய அரசுக்க கருணாநிதி கண்டனம்

சென்னை : மானிய விலையில் மண்ணெண்ணை வழங்குவதை ரத்து செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் அடுத்தட்டு மக்களே மண்ணெண்ணையை பயன்படுத்துகிறார்கள்.

மத்திய அரசின் இந்த முடிவால் ஏழை மக்களும்,கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் இத்தகைய பிற்போக்கு முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். திமுக.,வின் இந்த வலியுறுத்தலை மத்திய அரசுக்கு மாநில அரசும் வலியுறுத்த முன்வரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

நாகாலாந்து கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

புதுடில்லி: நாகாலாந்து கவர்னர் பத்மநாபா பாலகிருஷ்ணா ஆச்சார்யாவுக்கு, கூடுதல் பொறுப்பாக, அசாம் மாநில கவர்னர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அசாம் கவர்னராக இருக்கும் ஜேபி பட்நாயக்கின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஆச்சார்யாவுக்கு, அசாம் மாநில கவர்னர் பொறுப்பு கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

பிசினஸ் வகுப்பில் பயணம் செய்வது எனது கனவு: கெஜ்ரிவால்

அபுதாபி: சாதாரண மனிதனும் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய வேண்டும் என்பதே, இந்தியா குறித்த தனது கனவு என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமையன்று விமானத்தில் பிசினஸ் வகுப்பில் சென்றார். கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என தன்னை கூறிக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்துள்ளதன் மூலம் அவரது உண்மையான முகம் வெளிப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்நிலையில், அபுதாபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சாதாரண மனிதர்களும் விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய வேண்டும் என்பதே இந்தியா குறித்த தனது கனவு என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப புரட்சி வேலை வாய்ப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. இது ஊழலை குறைப்பதற்கும் உதவி புரிகிறது. இந்தியாவில் அதிகளவில் கோர்ட்டுகள் உருவாக்கப்பட்டு விரைவில் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

 

அமித்ஷா பேரணியில் கலந்து கொண்ட இளைஞருக்கு சூடு

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியில் பங்கு கொண்டதாக, இளைஞர் ஒருவரை தாக்கி, அவருக்கு திரிணமுல் காங்கிரசார் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஷ்னு சவுத்ரி என்ற அந்த நபரின் வீட்டுக்குச் சென்ற திரிணமுல் காங்கிரசார், அமித்ஷா பேரணியில் கலந்து கொண்டதற்காக அவரை தாக்கி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, அவரது உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு போட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை திரிணமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

 

ஜி சாட் 16 நாளை ஏவப்படுகிறது

பெங்களூரு: இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜி சாட் 16, பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்திலிருந்து ஏரியான 5 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக, ஜி சாட் 16 ஏவுவது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (டிசம்பர் 7) காலை 2.10 மணியளவில் ஜி சாட் 16 செயற்கைக்கோள் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

மோடி அரசுக்கு ஆதரவளிக்கத் தயார்: மம்தா அறிவிப்பு

கோல்கட்டா: மத்திய அரசு ஆக்கப்பூர்வமானதாகவும், நேர்மையானதாகவும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டால், மத்தியில் மோடி தலைமையிலான அரசுக்கு முழு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சேலம் சிறையில் பெங்களூரு போலீசார்

சேலம்: ஏ.டி.எம்., கொள்ளையன் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பெங்களூரு போலீசார் சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏ.டி.எம்., மையத்தில் பெண் ஒருவரை தாக்கி பணத்தை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்றார். இதே போல், ஆந்திராவில் நடந்த ஏ.டி.எம்., மைய கொள்ளையில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த இரு சம்பவங்களிலும் ஒரே நபரே சம்பந்தப்பட்டிருப்பதாக பெங்களூரு போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், அந்த நபர் வேறு வழக்குகளில் சிக்கி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக பெங்களூரு போலீசார் இன்று சேலம் வந்தனர். அந்த நபர் குறித்த தகவல்களை தருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நிரந்தர எதிரி யாருமில்லை; ஒமர் அப்துல்லா

ஜம்மு : அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்த நண்பரும் இல்லை என ஜம்மு- காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார். அவரது இல்லத்தில் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவர் மேலும் கூறியதாவது; ஜம்மு காஷ்மீரில் நான் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை நான் தோளில் சுமந்து சென்றேன். ஊழல் ஒழிப்பு தொடர்பாக பல அமைப்புகள் உருவாக்கினோம். ராகுல் எனக்கு நல்ல நண்பர். ஆனால் அரசியலில் யாரும் எதிரியுமல்ல. நண்பருமல்ல. அரசியலில் எங்களுக்கு பா.ஜ., மீது பயமில்லை. ஆனால் மோடி மீது நாங்கள் நம்பிக்கை வைக்க முடியாது. காஷ்மீரில் 4 அரசியல் கட்சிகள் இடையே போட்டி உள்ளது.

 

திருவாரூர் லோக் அதாலத் கோர்ட்டில் ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு தீர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் இன்று லோக்அதாலத் கோர்ட் நடந்தது. வழக்குகளை உடனடியாக பேசி தீர்க்கும் இந்த கோர்ட்டில் இன்று மொத்தம் 9 ஆயிரத்து 982 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. வாகன விபத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட பல பிரிவுகளான வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இத்தகவலை மாவட்ட நீதிபதி ஜாகீர் உசேன் தெரிவித்தார். நிலுவையில் இருக்கும் வழக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் இது போன்று லோக்அதாலத் கோர்ட் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது.

 

மனப்போராட்டத்தில் ஆஸி., அணி; ரிக்கி பாண்டிங்

அடிலெய்டு: ''பிலிப் ஹியுசின் மரணத்திற்கு பின் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் நடக்கவுள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணியினர் மிகப்பெரிய மனப்போராட்டத்தை எதிர் கொள்வர்,'' என, ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில், சியான் அபாட் வீசிய 'பவுன்சர்' தாக்கியதில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், சிகிச்சை பலனின்றி கடந்த நவ., 27ல் மரணமடைந்தார். இவரின் உடல் கடந்த 3ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இந்த சோகத்தில் கேப்டன் கிளார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். இந்நிலையில், வரும் 9ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் துவங்குகிறது. சோகத்திலிருந்து மீண்டு கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில்,'' பிலிப் ஹியுசின் மரணத்திற்கு பின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. சோகத்திலிருந்து மீண்டு இம்மாதிரியான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என எந்தவொரு வீருருக்கும் தெரியாது. இதனால் எங்கள் அணி வீரர்கள் மிகப்பெரிய மனப்போராட்டத்தை எதிர் கொள்ள உள்ளனர். இருப்பினும், இதிலிருந்து விடுபட்டு சிறப்பாக செயல்படுவர் என நம்புகிறேன்,'' என்றார்.

 

பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம்

ஜம்மு : காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி தல்பீர் சிங், ஜனநாயகத்தை பாதிக்கும் எந்த ஒரு தீயசக்தியையோ அல்லத பயங்கரவாதத்தையோ நாட்டிற்குள் நுழைய நமது ராணுவம் அனுமதிக்காது என்பதை இந்த நாட்டிற்கு உறுதி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

பா.ஜ., மீது மம்தா குற்றச்சாட்டு

கோல்கட்டா : மத்திய அரசு அரசியல் நோக்கத்திற்காக சிபிஐ.,யை பயன்படுத்தி வருகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

 

அசாம்-தாக்கா இடையே பஸ் போக்குவரத்து

புதுடில்லி : அசாமின் கவுகாத்தியில் இருந்து மேகலயாவின் ஷில்லாங் வழியாக தாக்காவிற்கு வழக்கமான பயணிகள் பஸ் போக்குவரத்தை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பா.ஜ., அரசு மீத ராகுல் குற்றச்சாட்டு

ராஞ்சி : ஜார்கண்டின் ராஞ்சி பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வந்தோம். நில கையகப்படுத்தும் மசோதாவை கொண்டு வந்து ஏழை மக்களுக்கு தங்களின் நிலத்திற்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்தோம். காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். இது கண்டனத்திற்குரியது. அவர்களது குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி, நல்ல காலம் விரைவில் வரும் என்றும், 100 நாட்களில் கறுப்பு பணத்தை கொண்டு வருவோம் என்றும் கூறினார். ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. 6 மாதம் ஆட்சியி்ல் இதுவரை உங்கள் வங்கி கணக்கில் ஒரு ரூபாயாவது செலுத்தினார்களா? இந்தியாவில் 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. ஆனால் அவர் சென்று பேசி உள்ள 650-700 கிராமங்கள் மட்டுமே என தெரிவித்துள்ளார்.

 

ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் இணைவு

புதுடில்லி : ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., அசோக் கவ்கான், ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஆத்மி ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி என தெரிவித்துள்ளார்.

 

பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்

பரமக்குடி : பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் பயணிகள் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

மும்பை சினிமா ஸ்டுடியோவில் தீ

மும்பை : மும்பையில் உள்ள சித்ரா என்ற சினிமா ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

கனவாகி போன ராம்பாலின் ஆசை

புதுடில்லி : அரியானாவில் கொலை வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வரும் சாமியார் ராம்பால், தனது ஆசிரமத்தை வடஇந்தியாவின் நம்பர் ஒன் ஆசிரமமாக கொண்டு வர ஆசைப்பட்டாராம். மேலும் தான் தலைசிறந்த ஆன்மீக குருவாக விளங்கவும் ஆசைப்பட்டதாக அவரது ஆசிரம தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது ஆசிரமத்தை விரிவுபடுத்துவதற்காக விவசாயிகளிடம் இருந்து 56 ஏக்கர் நிலத்தை வாங்கி, விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளாராம்.

 

உ.பி., கிராமத்தை தத்தெடுத்தார் ராஜ்நாத்

லக்னோ : பிரதமரின் சர்சத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா திட்டத்தின் கீழ் உ.பி.,யின் லக்னோ அருகில் உள்ள பென்டி என்ற கிராமத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தத்தெடுத்துள்ளார்.

 

உலக முதலீட்டாளர் மாநாடு அமைச்சர் தகவல்

கோவை : கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 2015ம் ஆண்டு மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். வெளிமாநில முதலீட்டாளர்கள், கோவை தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் செய்ய அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அங்கு தொழில்கள் சிறப்பாக உள்ளது. அதே போன்ற நிலை இங்கும் உருவாக வேண்டும். குறிப்பாக தென்மாவட்டங்களில் தொழில்களில் முதலீடு செய்ய முன்வரவேண்டும். இனி வரும் காலங்களில் இதற்கென பிரத்யேகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகை முறையாக சென்று சேராமல், அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இதனால் வெளிமாநில அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. இதனை தடுக்க வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதை கைவிட வேண்டும். அவ்வாறு அழைத்து வர வேண்டும் என்றால் இடைதரகர்கள் இல்லாமல் நேரடியாக அம்மாநில தொழில்துறையுடன் தொடர்பு கொண்டு தொழிலாளர்களை முறைப்படி அழைத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க குண்டுவெடிப்பு குற்றவாளி பலி

இஸ்லாமாபாத் : அமெரிக்க குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அல் குவைதா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, நியூயார்க்கில் பதுங்கி இருந்த போது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

மீனவர்களுக்கு உதவ புதிய சாப்ட்வேர்: தூத்துக்குடி இன்ஜினியர் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி : இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டினால் மீனவர்களை மொபைல் போனில் எச்சரிக்கை செய்யும் புதிய சாப்ட்வேரை, தூத்துக்குடி இன்ஜினியர் ரெசிங்டன் அறிமுகம் செய்தார். புதிய சாப்ட்வேர் அறிமுகம்:இந்திய- இலங்கை மீனவர்கள் தங்களது கடல் எல்லைகளை தாண்டி மீன் பிடிப்பதால் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு எல்லைக்கோடு குறித்து தெரிவதில்லை. இதன் காரணமாக எல்லை மீறுவது நடந்து வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு மீனவர்கள் தங்களது கடல் எல்லையை தாண்டும் போது, அவர்களது மொபைல் போனில் எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் டவுன் லோடு செய்திருந்தால், அது எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். மீனவர்கள் உஷாராகி, எல்லை மீறாமல் மீன் பிடிக்க முடியும். இதற்கான சாப்ட்வேரை தூத்துக்குடி, பெரைரா தெருவை சேர்ந்த இன்ஜினியர் ரெசிங்டன் கண்டறிந்துள்ளார். இதனை அவர் நேற்று அறிமுகம் செய்தார். ரெசிங்டன் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஏழு லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களது தீராத பிரச்னை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான தீர்வு வேண்டும், என இரவு பகல் பாராது அயராது பாடுபட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் கண்டறிந்துள்ளேன். இந்திய- இலங்கை கடல் எல்லை: இந்த இரு நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைக் கோடு வங்காள விரிகுடா,மன்னார் வளைகுடா,பாக் வளைகுடா ஆகியவற்றை கொண்டதாகும். எல்லைக்கோடு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் 1974 ல் வரையறை செய்யப்பட்டது.1,095 கி.மீ., நீளம் கொண்டது. கடலளவில் 591 நாட்டிக்கல் மைல் கொண்டது. இது கடலில் கண்ணுக்கு புலப்படாத கோடு, என்பதால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.டவுன்லோடு செய்யலாம்: கூகுள் பிளே ஸ்டோரில் இந்த எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், போல் இதனை மீனவர்கள் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பின்னர், எந்த பயமும் இன்றி கடலில் மீன் பிடிக்கலாம். எச்சரிக்கை செய்யும்: மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்னரை கி.மீ., தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை படகு அடையும் போது, மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்புடன், ஒலி எழுப்பும். அதனை தாண்டி அந்த படகு இலங்கை எல்லைக்கோட்டை தாண்டும் போது,சிவப்பு வண்ணத்தில் "வெளியே' என எச்சரிக்கையுடன், ஒலியினை எழுப்பும். இந்த சாப்ட்வேரில் ஒரு திசை காட்டும் கருவி உள்ளது. இது வேலை செய்ய எவ்வித இணையதள வசதியும்,மொபைல் சிக்கனலும் தேவையில்லை. மொபைல் ஆப் லைனில் இருந்தாலும் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைலில் பதிவு செய்யும்: ஜி.பி.எஸ்.கருவியில் அட்சரேகை, தீர்க்கரேகை அடிப்படையில் மேப்கள் இருப்பதால், சாமானிய மீனவர்களுக்கு தெரிவதில்லை. புதிய சாப்ட்வேரில் மேப் வசதியுள்ளது. அனைத்து கட்டளைகளும் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படகு எல்லை தாண்டியற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த சாபட்வேரில் மீனர்களால் அங்கீகரிக்கப்பட நபருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும், அவர்களது மொபைல் போனில் எல்லை தாண்டியது பதிவாகிவிடும். மீட்பு பணிக்கு உதவும்:ஆபத்து நேரங்களில் மீனவர்கள் இந்த சாபட்வேரை மொபைல் திரையில் தொட்டால் போதும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும்.அதில் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ., கோடுடன் வருவதால் பொய்தகவல்களை அனுப்ப முடியாது. மேலும் படகு இருக்கும் இடத்தை துல்லியமாகவும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியவரின் மொபைல் எண்ணும் அதில் இருக்கும். இதன் மூலம் நடுக்கடலில் தத்தளிப்பவர்கள் குறித்த தகவலை எளிதில் கரையில் உள்ளவர்களுக்கு தெரிவித்து, மீட்க வழி செய்யும், இதில் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படுவதால், அதற்கு மட்டும் மொபைல் போனில் சிக்னல் தேவைப்படும். இது மீனவர்களை காக்கும் வரப்பிரசாதமாக அமையும், என அவர் தெரிவித்தார்.

 

லோக் அதாலத் கோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: தமிழகம் முழுவதும் நி<லு<வையில் இருக்கும் வழக்குகளை விசாரித்து முடிவு எடுக்க லோக் அதாலத் கோர்ட் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான வழக்குகள் பைசல் செய்யப்படும் .

 

மோடிக்கு சீன அரசு அழைப்பு

புதுடில்லி : 2015ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்திய பிரதமர் மோடி சீனா வர வேண்டும் என அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சீன அரசு விடுத்துள்ள அழைப்பு குறிப்பில், பிப்ரவரி மாத மத்தியில் இருந்து மார்ச் மாதம் வரை பட்ஜெட் கூட்டத்தொடரில் மோடி பிஸியாக இருப்பார் என சீன அரசு அறியும். அதனால் பிப்ரவரி மாதத்திற்கு முன் மோடி, சீனா வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்:மோடி

ஹசாரிபாக் : ஜார்கண்டில் ஹசாரிபாக் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய மோசமான தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த ஜார்கண்ட் வீரர் சங்கல்ப் குமார் சுக்லாவின் தியாகம் போற்றுதலுக்குரியது. பயங்கரவாதிகள் இந்தியாவின் ஜனநாயகத்தை சிதைக்க முயல்கிறார்கள் என பேசினார்.

 

சட்டசபையில் ஜனநாயக மரபு இல்லை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக ராமதாஸ், தமிழக சட்டசபையில் ஜனநாயக மரபு இல்லை. ஜனநாயக மரபுகளின்படி நடக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

கருகிய பயிர்களுடன் முற்றுகை போராட்டம்

மேலூர் : மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள், தண்ணீர் கேட்டு கருகிய பயிற்களுடன் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த சதி

புதுடில்லி : இந்தியாவில் டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.

 

கிரானைட் முறைகேடு:போனிலும் புகார் தரலாம்

சென்னை : கிரானைட் முறைகேடு விவகாரம் தொடர்பாக சகாயம் குழுவிடம் போனிலும் புகார் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 044- 24454054 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

 

சீன மாஜி பாதுகாப்பு தலைவர் கைது

பீஜிங் : ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட சீனாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை தலைவர் ஜோயூ யாங்காங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பணம் பெற்றுக் கொண்டு ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

நாளை முதல்வர்களை சந்திக்கிறார் மோடி

புதுடில்லி : திட்டக்குழுவை மாற்றி அமைப்பது தொடர்பாகவும், திட்டகமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார்.

 

சீனாவில் நிலநடுக்கம்:5 பேர் காயம்

பீஜிங் : சீனாவின் தென்மேற்கு பகுதியான யுனானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய பார்லி., சிறப்பு கூட்டுக்குழு கூட்டத்தில் புட்டினின் உரை ரத்து

புதுடில்லி : டிசம்பர் 11ம் தேதியன்று இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், அன்று இந்தியாவின் பார்லி., சிறப்பு கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றுவார் என கூறப்பட்டிருந்தது. ஆனால், புட்டினின் அலுவல் நெருக்கடி காரணமாக தற்போது இந்திய பார்லி.,யின் அவர் உரையாறறறும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை

ராய்பூர் : சட்டீஸ்கரில் உடன் படிக்கும் மாணவியின் பெயரை கையில் பச்சை குத்திய 13 வயது மாணவனை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். அந்த மாணவன் கடைசியாக தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில், நான் போகிறேன். அடுத்த பிறவியிலும் உங்களுக்கே மகனாக பிறக்க விரும்புகிறேன் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஜார்கண்டில் இன்று மோடி பிரசாரம்

ராஞ்சி : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஜார்கண்டின் ஹசாரிபாக் பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

 

புலனாய்வுத்துறை தலைவராகிறார் தினேஷ்வர்

புதுடில்லி : புலனாய்வுத்துறை சிறப்பு இயக்குநராக இருந்து வரும் தினேஷ்வர் சர்மா, புலனாய்வு துறையின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

திருப்பதியில் ரூ.220 கோடிக்கு முடி ஏலம்

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 2014-2015ம் ஆண்டில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்பட்ட முடி ரூ.220 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று உண்டியல் காணிக்கை வசூலும் ரூ.900 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழக தேர்தலை குறிவைக்கும் அமித்ஷா

புதுடில்லி : பா.ஜ., தலைவர் அமித்ஷா, டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகம் வர உள்ளார். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக மீது ஊழல் புகார்களும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கும் இருப்பதால், தமிழக சட்டசபை தேர்தலை குறிவைத்து அமித்ஷாவின் தமிழக வருகை இருக்கும் என கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் பா.ஜ., காலூன்றுவதற்கு தமிழகம் மிக முக்கியமான இடமாக பா.ஜ., கருதுவதாகவும், தேர்தலுக்குள் தமிழகத்தில் பா.ஜ.,விற்கு வலுவான அஸ்திவாரத்தை ஏற்படுத்தவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பா.ஜ., வில் கோடி கணக்கானவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும், பிற கட்சிகளில் இருந்து பா.ஜ.,வில் சேர விரும்பும் தலைவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை பா.ஜ., பக்கம் இழுக்கும் முயற்சிகளுக்கு அடித்தளம் அமைக்கவே அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

 

நீதிபதிகள் வயதை உயர்த்தும் எண்ணமில்லை

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 68 ஆக உயர்ந்தும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். அதே சமயம் 24 ஐகோர்ட்களின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 65 ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாகவும், அது தொடர்பான சட்ட திருத்த மசோதா 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி லோக்சபாவில் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அனைத்து கோர்ட்களிலும் லோக்அதாலத்

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்களிலும் இரண்டாவது தேசிய லோக்அதாலத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து விரைவில் துவக்கி வைக்க உள்ளார். கோர்ட்டுகளில் அதிகளவிலான வழக்குகள் தேங்கி கிடப்பதை குறைப்பதற்காக இத்திட்டத்தை கொண்டு வர தலைமை நீதிபதி திட்டமிட்டுள்ளார்.

 

பஞ்சாப் அரசுக்கு மனிதஉரிமை கழகம் நோட்டீஸ்

புதுடில்லி : பஞ்சாப்பின் குர்தஸ்பூர் மாவட்டத்தில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 60 பேருக்கு கண்பார்வை பரிபோன விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அரசுக்கு தேசிய மனிதஉரிமைகள் கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் மீது மாநில தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட நீதிபதி ஆகியோர் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளித்து, அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

 

புர்துவான் குண்டுவெடிப்பு:முக்கிய குற்றவாளி ஷநூர் ஆலம் கைது

புதுடில்லி:மேற்குவங்க மாநிலம் புர்துவான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, அசாமில் முக்கிய குற்றவாளி ஷநுார் ஆலமை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர்.

 

இன்று டிசம்பர்-6:பலத்த பாதுகாப்பு

சென்னை:இன்று டிசம்பர்-6.பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் ரயில்கள்,வழிபாட்டுதலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னையில் 18 ஆயிரம் போலீசார், பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர்.24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

அதிபர் ஒபாமாவை சந்திக்கிறார் இளவரசர் வில்லியம்

லண்டன்:பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், மற்றும் அவரது மனைவி கேத்தே ஆகியோர், அடுத்த வாரத்தில் 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்கள். வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோயி பிடென் ஆகியோரை சந்தி்க்கிறார்கள். கடந்த 2011ல் லண்டனில் ஒபாமா, வில்லியம்ஸ் மற்றும் கேத்தே தம்பதியரை சந்தித்தார். அதன் பின்னர் தற்போது, வில்லியம்ஸ் மற்றும் கேத்தே தம்பதி முதல்முறையாக அமெரிக்கா சென்று ஒபாமாவை சந்திக்கிறார்கள்.

 

ஜிசாட்-16செயற்கைகோள் ஒத்திவைப்பு:இஸ்ரோ

புதுடில்லி:தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-16, மோசமான வானிலை காரணமாக 2வது முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

விசாரணை கைதிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க முடியாது

புதுடில்லி:விசாரணை கைதிகள், தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக டில்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதை டில்லி உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந்தேதி விசாரித்து, தள்ளுபடி செய்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தம், அரசியல் சட்டத்தின்படி செல்லுபடியாகத்தக்கதுதான் என அந்த கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியது.இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீடு செய்யப்பட்டது.அதை தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு நேற்று விசாரிக்க மறுத்து விட்டது.இது தொடர்பாக தலைமை நீதிபதி தத்து குறிப்பிடுகையில், குற்றவாளி என முடிவு செய்து, தண்டனை விதிக்கப்பட்டால் சரி. ஆனால் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைப்பதே, ஒருவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க போதுமானதல்ல என்றார்.

 

பிலிப்பைன்ஸை அச்சுறுத்தும் ரூபி புயல்

மணிலா:பிலிப்பபைன்ஸ் நாட்டில், இவ்வார இறுதியில் ரூபி புயல் வலுவடைந்து தாக்குதல் ஏற்படலாம் என வானிலலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதால்,அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறது.

 

அமெரிக்கா: புதிய ராணுவ அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் அறிவிப்பு

வாஷிங்டன்:அமெரிக்காவின் புதிய ராணுவ அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக ஒபாமா அறிவித்தார்.அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமைச்சரவையில், ராணுவ அமைச்சரவையில் பணியாற்றி வந்தவர் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சக் ஹேகல்.அமெரிக்காவின் ராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கைகளிலும், ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதிலும் ஒபாமாவுக்கும், சக் ஹேகலுக்கும் தீவிரமான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சக் ஹேகல், கடந்த மாதம் 24 ஆம் தேதி பதவி விலகினார். அவரது ராஜினாமாவை ஒபாமா உடனடியாக ஏற்றுக்கொண்டார்.இந்த நிலையில் புதிய ராணுவ அமைச்சராக 60 வயது ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில்,அதிபர் ஒபாமா, அறிவித்தார்.

 

விவசாயக் கடன் ரத்து: ஆந்திர முதல்வர்

ஐதராபாத்:ஆந்திர மாநிலத்தில் முதல் கட்டமாக ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வங்கிக் கடனை ரத்து செய்வதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு ஐதராபாதில் நேற்று அறிவித்தார்.இது குறித்து அவர் மேலும் பேசுகையில், தேர்தலின் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடனை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி தற்போது ஒவ்வொருவருக்கும் ரூ. 1.50 லட்சம் வரை விவசாயக் கடன் ரத்து செய்ய உள்ளோம். இதில் முதல் கட்டமாக, வரும் 10-ம் தேதியிலிருந்து விவசாயிகளின் வங்கிக் கடன் ரூ. 50 ஆயிரத்தை ரத்து செய்கிறோம். இதன் மூலம் 22.79 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் பயனாளிகளின் பட்டியல் வரும் 6-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.

 

பொலாவரம் திட்டம்: மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமனம்

புதுடில்லி:மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ்குமார், பொலாவரம் திட்ட தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தினேஷ்குமார்,1983ல் ஆந்திராவில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக தேர்வானார்.ஜவுளித்துறை அமைச்சக மேம்பாட்டு கமிஷனராக பணியாற்றினார்.

 

மே.வங்க சட்டசபையில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு

மகோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபையில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டும் தான் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி வந்தால், கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறினார்.

 

அண்ணாமலை பல்கலை நிர்வாகி, பதிவாளர் பதவி நீட்டிப்பு

சென்னை: அண்ணாமலை பல்கலை நிர்வாகி, பதிவாளர் பதவிக் கால அளவை மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பது தொடர்பான, பல்கலையின் சட்டத்தை திருத்தம் செய்ய, சட்ட முன்வடிவு, நேற்று, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.அண்ணாமலை பல்கலைக்கு, 2013ம் ஆண்டு, செப்., 25ம் தேதி, அண்ணாமலை பல்கலை சட்டத்தின் படி, துணைவேந்தரின் பணிகளை ஆற்ற, நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் நிர்வாகியாக ஓர் ஆண்டுக்கு மட்டுமே, பணியாற்ற முடியும்.முறைப்படி துணைவேந்தரை பணியமர்த்த, இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்பதால், நிர்வாகியின் பதவிக்கால அளவை, மேலும் ஓர் ஆண்டுக்கு அல்லது தேவை இல்லாமல் போகும் வரை நீட்டிக்க அரசு, முடிவெடுத்துள்ளது.அண்ணாமலை பல்கலை பதிவாளரும், ஓர் ஆண்டுக்கு மட்டுமே, பணியாற்ற முடியும் என்பதால், புதிய பதிவாளர் தேர்வு செய்யப்படும் வரை, அவரது பணியும் ஓராண்டிற்கு அல்லது தேவை இல்லாமல் போகும் வரை, நீட்டிக்க அரசு முடிவெடுத்துள்ளது.இதற்கு ஏதுவாக, அண்ணாமலை பல்கலை சட்டத்தின் உட்பிரிவில் திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசு முடிவெடுத்து, கடந்த, செப்., 19ம் தேதி அவசர சட்டம் கவர்னரால் பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்த சட்ட முன் வடிவை, உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன், நேற்று, சட்டசபையில் தாக்கல் செய்தார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.